பிரைவேட் பேங்க், பிரைவேட் ஃபைனான்ஸ் , களில் கஸ்டமர் ட்யூ சரியாகக்கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் சீசர் ஏஜெண்ட் தான் ஹீரோ , அவர் ஒரு முறை வில்லனின் வண்டியை சீஸ் செய்கிறார் , அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
ஹீரோவா சீயான் விக்ரம் . நல்ல சுறுசுறுப்பான நடிப்பு , ஆக்ஷன் காட்சிகளில் கம்பீரம் , ஸ்டைல் காட்டி இருக்கிறார் , ஆனால் 1980 களில் வருவது போல் இன்னமும் அவர் 4 நண்பர்கள் , நாயகி பின் சுற்றுவது , பல்பு வாங்குவது என டெம்ப்ளேட் காட்சிகளில் நடிப்பது சலிப்பு . போதாததுக்கு ஜெமினி பட ஓ போடு ஸ்டைல் ,மேனரிசத்தை இதிலும் காட்டுவது அலுப்பு
ஹீரோயினா கோல்டு ஃபிஷ் , லெமனா வந்த தமனா, காமனா எல்லாருக்கும் எளிதில் பிடிச்சுப்போகும் கலக்கல் கலர் , ஆனா அந்த வாய் தான் சரி இல்லை , சரி , நாம எந்தக்காலத்துல வாயை ரசிச்சோம்?பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் , காலம் காலமாக சினிமாக்களில் நாயகியின் தோழியாக வருபவர் நாயகியை விட அழகாக இருப்பார் , இதிலும் டிட்டோ
ரஜினி , விஜய் க்குப்பின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலைக்காட்டி ரசிகர்களை கெடுக்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் நல்லது, டாக்டர் ராம்தாசின் வேண்டுகோளுக்குப்பின் பாபா வுக்குப்பின் ரஜினி தம் அடிக்கும் சீன்களில் நடிப்பதில்லை , ஆனால் விஜய் இப்போ புதுசா தம் சீன் வெச்சுடறார்
வில்லனாக வரும் பாபுராஜ் பற்றி ஒரு சுவராஸ்ய தகவல் , புதுப்பாட்டு பட நாயகி வாணி விஸ்வநாத் தோட ஒரிஜினல் புருசன் இவர். ஆனால் அதிக வாய்ப்பில்லை
சூரி படம் பூரா ஹீரோ கூடவே சுற்றும் ரோலாக இல்லாமல் 5 சீன் மட்டும் வருவது ஆறுதல் , அதிலும் 2 மரண மொக்கை ஜோக்ஸ் அதுவும் அரதப்பழசானவை
ஆர்ட் டைரக்டர் கேரளா வாசி போல ,. மோகன் லால் ஹீரோவாக நடிச்ச ஜனதா கேரேஜ் தெலுங்குப் படத்தில் யூஸ் பண்ணின செட்டையே காப்பி அடிச்சுட்டார்
ஸ்ரீமன் , பிரியங்கா நடிப்பு ஓக்கே ரகம்
பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை , பின்னணி இசை செம ,. எடிட்டிங் உள்ளேன் ஐயா சொல்லுது
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் மொத்தப்படத்தையும் காப்பாத்தப்போகும் துருப்புச்சீட்டு என்பதை இயக்குநர் உணர்ந்தே இருக்கிறார்

நச் டயலாக்ஸ்
1 சந்தர்ப்பம் ,சூழ்நிலை ,நேரம் இந்த 3ம்தான் ஒரு மனுசனோட வாழ்வைத்தீர்மானிக்கும் #Sketch
2 எனக்குப்பிறகு என் இடத்துக்கு யார் வரனும்னு நான்தான் முடிவு பண்ணுவேன் #sketch
3 கீர் வெச்ச வண்டி பொண்டாட்டி மாதிரி,நாம சொல்றதை கேட்கும் ,கீர் இல்லாத வண்டி வெப்பாட்டி மாதிரி ,அது பாட்டுக்கு போகும் #sketch சூரி பன்ச்
4 அது அய்யர் வீட்டுப்பொண்ணு,உனக்கெல்லாம் செட் ஆகாது
எப்டி சொல்றே?
பொண்ணோட ஷேப்பை வெச்சே அது தயிர் சோறா?கறி சோறா?னு கண்டுபிடிச்சிடுவோமில்ல? #Sketch
6 இப்பவெல்லாம் பொண்ணுங்களுக்கு அடிக்கறவனை விட அடி வாங்கறவனைத்தான் பிடிக்குது #Sketch
7 எல்லாரும் எல்லா இடத்துலயும் எல்லா நேரத்துலயும் ஜெயிச்சுட்டே இருக்க முடியாது,உலகத்துல எங்கேயாவது எப்பவாவது தோல்வியை ஒவ்வொருத்தனும் சந்திச்சே ஆகனும் #Sketch (very good dialogue)
9 ஒருத்தன் யார் கிட்ட தொழில் கத்துக்கிட்்டான்கறது முக்கியம்"இல்ல,எப்டி தொழில் பண்றான்?கறதுதான் முக்கியம் #Sketch
10 ஒருத்தர் மேல அதிகமா ஆசை வெச்சாலும் அன்பு வெச்சாலும் பாதிப்பு"நமக்குதான் #Sketch
11 கடவுள் கொடுக்கற வாழ்க்கையை வாழ தயார் ஆகறவ நான் இல்ல,எனக்குப்பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழ்வேன் #Tsk
12 எதுக்கு எனக்கு வாட்ச் கிப்ட்?எனக்கு வாட்ச் கட்ற பழக்கம் இல்லைனு தெரியாதா?
எப்போ என்னை மிஸ் பண்றதாத்தோணுதோ அப்போ கட்னா போதும் #Sketch
13 அடுத்தவனுக்கு கிடைச்சிடுச்சே நமக்கு இன்னும் கிடைக்கலையே னு மனுசன் ஆசைப்படாத (பொறாமைப்படாத)ஒரே விஷயம் சாவு தான் #Sketch
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஓப்பனிங்"சாங் லுக் லைக் ஜெமினி யின் ஓ போடு + பிரபு தேவா வின் காத்தடிக்குது #sketch
2 மாநிறமா இருக்கற நாம பவுடர் போட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு,கலர் ல லெமனா இருக்கற தமனா எதுக்கு ரோஸ் பவுடர் 2 கோட்டிங் அடிச்சிருக்கு? #Sketch
3 சேது,அந்நியன்,ஐ மாதிரி படங்களில் கலக்கிய விக்ரம் இன்னும் அரதப்பழசான 4 பிரண்ட்ஸ் ,ரவுடி,ஹீரோயினை கரெக்ட் பண்ண பின்னாலயே சுத்தும் மாமூல் கதைல நடிப்பது ஏனோ? #sketch
4 இந்த நடிகைங்க எல்லாம் முதுகை காட்றக்காக டாட்டு குத்திக்கறாங்களா? டாட்டுவைக்காட்றக்காக முதுகை காட்றாங்களா? தமனா ஓப்பனா #Sketch
5 May be = இருக்கலாம் .ஆனா போலீஸ் ஆபிசர் அடிக்கடி may be இருக்கலாம் கறாரு.மேஜர் சுந்தர்ராஜன் ரசிகரோ? #sketch
சபாஷ் டைரக்டர்
1 நாயகி தமனா அணிந்து வரும் ஒவ்வொரு காட்சி புடவையும் கண் காட்சி , அழகு , பெண்களை கவரும் , கிட்டத்தட்ட 27 வகையான வெரைட்டி சேலைகள் , ஜாக்கெட்கள் , ஜாக்கெட் டிசைனும் சூப்பர்
2 ஆக்சன் ஸ்டண்ட் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பு
3 \ க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
4 பின்னணி இசை அதகளம்

லாஜிக் மிஸ்டேக்ஸ் திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 விக்ரமின் நண்பர்கள் இருவர் வரிசையாக கொலை செய்யப்படுகின்றனர் , நண்பர்கள் சாகும் தருவாயில் அட்லீஸ்ட் விக்ரமுக்கு ஒரு மெசேஜ் கூடவா அனுப்ப மாட்டார்கள் , இன்னார் தான் கொலையாளி என ?
2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கான ஒரு க்ளூ அந்த செல் ஃபோன் உடைக்கும் காட்சியில் லேசாக தெரிந்து விடுகிறது
3 நாயகி காட்டும் காதலுக்குப்பின்னான கெத்து அழகு , ஆனால் அவர் ஹீரோவை அவ்வளவு தூரம் அலைய வைப்பது , ஒரு ரவுடி அவ்வளவு தூரம் இறங்கி வந்து அலைவது நம்பும்படி இல்லை
4 க்ளைமாக்சில் போடும் நீதிக்கதை , வசனம் எடுபடவில்லை

5 வாலு பட இயக்குநரின் 2ம் படம் என்பதை நம்ப முடியலை , காமெடி அதில் ஒர்க் அவுட் ஆன அளவு இதில் ஆகலை
சி.பி கமெண்ட் -ஸ்கெட்ச் − ஸ்லோவான திரைக்கதைதான்.ஆனா ஸ்லோ & ஸ்டெடி வின் த ரேஸ் பார்முலா.ஆக்சன் த்ரில்லர்.க்ளைமாக்ஸ்"ட்விஸ்ட் பிரமாதம் .பிஜிஎம் பட்டாசு .விகடன் 43 , ரேட்டிங் 3 / 5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 43
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3.75 / 5
ஸ்கெட்ச் @கேரளா திருவல்லா "சிலங்கா தியேட்டர் 63 பேர்