பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு அடைந்ததைப்பார்த்து ஆளாளுக்கு இப்போது காமெடி ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே.உள்ளத்தை அள்ளித்தா,ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்,தெனாலி,பஞ்ச
தந்திரம்,வசூல்ராஜா எம் பி பி எஸ்,தமிழ்படம்,இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்று பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மினிமம் கேரண்டி காமெடி ஸ்கிரிப்ட்டுக்கு எப்போதும் உண்டு.ஆனால் நம்ம டைரக்டர்கள் இன்னும் மதுரை,வன்முறை,காதல் என்றே சுற்றி சுற்றி வருகிறார்கள்.
கவுண்டமணிக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுதிய வீரப்பன் (பி எஸ் வீரப்பா அல்ல) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதற்குப்பிறகு வாலி படம் மூலம் விவேக் காமெடி ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தார்.வடிவேலு சிங்கமுத்து உட்பட சிலரை பணியில் அமர்த்தி கலக்கினார்.(இப்போ 2 பேருக்கும் லடாய்).
காமெடி ஸ்கிரிப்ட் எழுதுவதில் இப்போது ஒரு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் 10 பேர்களை ஒருவர் கூட உபயோகப்படுத்துவதில்லை.அவர்களைப்பற்றியஒரு அறிமுகம்.
டாப் 10 ஜோக் ரைட்டர்ஸ்
1. தஞ்சை தாமு. -தமிழ்ப்பத்திரிக்கை உலகிலேயே வார்த்தை ஜாலம் எனும் மாய சக்தியால் மிகச்சிறந்த ஜோக்குகளை எழுதி முன்னணியில் இருப்பவர்.தஞ்சாவூர்க்காரர்,பி எஸ் என் எல் இல் பணி புரிபவர்.வயது 47.கவிஅரங்கம்,நகைச்சுவை மன்றப்பேச்சு என வாரா வாரம் சனி ஞாயிறுகளை காமெடிக்காக ஒதுக்குபவர்.கலைஞர் டி வி யில் எல்லாமே சிரிப்புதான் ஸ்டேண்ட் அப் காமெடியில் 12 எப்பிசோடு கலக்கியவர்.இவர் ஒரு கவிஞரும் கூட.தா.முகமது இக்பால் என்பது சொந்தப்பெயர்.விகடன் அட்டைப்படங்களில் ஜோக்கால் அலங்கரித்தவர்.இவரது செல் எண்
9443508846
2.வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி
தாமுவின் வாரிசு என இவரை சொல்லலாம்.3 வருடங்களில் இவரது வளர்ச்சி பிரம்மாண்டமானது.விகடன்,குங்குமம் இதழ்களில் இவரது ஜோக் வராத வாரமே இருக்காது.சொல் விளையாட்டு,வார்த்தை ஜாலம்,நையாண்டி என கலந்துகட்டி அடிப்பவர்.வயது 36,காலைக்கதிர் வாரக்கதிர் இதழில் 53 அட்டைப்படக்கவிதைகள் எழுதி சாதனை படைத்தவர்.ஒரு ஜோக் எழுத்தாளர் கவிதையிலும் கலக்க முடியும் என முதன்முதலாக நிரூபித்தவர்.இவரது செல் எண் 9245148312
3. வி சாரதிடேச்சு,திருவல்லிக்கேணி,சென்னை
ஜோக் எழுத்தாளர்களில் எல்லோருக்கும் சீனியர்.ஆனந்த விகடனில் 1992,1994,1998 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு வாரமும் 14 ஜோக்ஸ் ( 2 முழுப்பக்கங்கள்)வெளிவந்தது இவருக்கு மட்டும்தான்.இவர் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். துறைமுகத்தில் அக்கவுண்ட் செக்ஷனில் பணிபுரிகிறார்.வயது 58.செல் எண் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.கொஞ்சம் ரிசர்வ் டைப்.
4.கரடிகுளம் ஜெயாபாரதிப்பிரியா
இவர் தமிழ்ப்பத்திரிக்கை உலகில் 9800 ஜோக்ஸ் பிரசுரம் கண்டு எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்திலும்,தர வரிசையில் 4ஆம் இடத்திலும் உள்ள்ளார்.இவர் இப்போது எழுதுவது இல்லை.இவரைப்பற்றிய தகவல்களும் சரியாகக்கிடைக்கவில்லை.
5.அம்பை தேவா,தூத்துக்குடி
விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர்.(ராவணன் படத்தில் உசுரே போகுது பாட்டு வருமே).இவர் சீனியர்.எல்லோருக்கும்.1972 இல் இருந்து எழுதுகிறார்.இவரது ஜோக்குகள் நறுக் சுருக் என 3 வரிகளில் முடிந்து விடும்.நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர்.இவர் கட்டுரை,ஜோக்ஸ் வராத பத்திரிக்கைகளே இல்லை எனலாம்.துறைமுகத்தில் க்ளர்க் பணி.வயது 55.இவரது செல் எண் 9842343232.
இந்தக்கட்டுரை இடப்பற்றாக்குறையின் காரணமாக தொடரும் போட்டு இப்போதைக்கு முடிக்கிறேன்.புது இயக்குநர்கள் காமெடி ஸ்கிரிப்ட் எழுத இவர்களை பயன்படுத்திக்கொண்டால் அது ஒரு புதிய ரத்தத்தை நகைச்சுவைக்குப்பாய்ச்சியதாக இருக்கும் என நகைச்சுவை எழுத்தாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் ஜோக் ரைட்டர்ஸ் இப்போது 200 பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களது திறமை ஒரே வட்டத்துக்குள் சுருங்கி விடக்கூடாது.வாய்ப்புக்கிடைத்தால் அவர்கள் கலக்குவார்கள் என்பது நிச்சயம்.