Showing posts with label ஷேர் மார்க்கெட்- செபி. Show all posts
Showing posts with label ஷேர் மார்க்கெட்- செபி. Show all posts

Saturday, January 28, 2023

ஷேர் மார்க்கெட்- செபி அறிவித்த அதிர்ச்சி தகவல் - 44,000 கோடி இழப்பு

 


செபி  அறிவித்த  அதிர்ச்சி  தகவல்

 

ஷேர்  மார்க்கெட்டில் ஆப்சன் டிரேடிங்  மூலம்  பணத்தை  இழந்தவர்கள்  அதிகம் . 2022 ஆம் ஆண்டில்  மட்டும்  44,000  கோடி  ரூபாய்  மக்கள்  ப்ணம்  இழப்பு  ஆகி  இருப்பதாக  செபி  அறிவித்திருக்கிறது

 

ஷேர்  மார்க்கெட்டில்  தனிப்பட்ட  ஒரு  கம்பெனி  ஷேர்  வாங்குவதில்  இவ்வளவு  ரிஸ்க்  இல்லை .  உதார்ணமாக ஸ்டேட் பேங்க் ஆஃப்  இண்டியா , ஆக்சிஸ்  பேங்க்  போன்ற  ஷேர்களை  குறிப்பிட்ட  விலைக்கு  வாங்கி  லாங்க்  டெர்ம்  இன்வெஸ்ட்மெண்ட்  ஆகவோ  ஷார்ட்  டெர்ம்  இன்வெஸ்ட்  ஆகவோ  வைத்திருந்தால்  உங்கள்  முதலீட்டுக்கு  பெரிய  ஆபத்து  இல்லை ,

 

 ஆனால்  குறிப்பிட்ட  ஷேர்  இவ்வளவு ஏறும்  அலலது  இவ்வளவு  இறங்கும்  என  பெட் ( பந்தயம் )  கட்டுவது  ஆபத்தானது . அதே  போல நிஃப்டி  ஃபியூச்சர்  மேல்  பந்தயம்  கட்டுவதும்  ஆபத்தானது. இது  சூதாட்டம்  போன்றது

 

 ஆப்சன்  டிரேடிங்கில்  பணம்  சம்பாதித்தவர்கள்  வெறும் 10%  பேர்தான் , மீதி 90% பேர்  நட்டம் தான்  பண்ணி  இருக்கிறார்கள்  என  செபி  அறிவித்து  இருக்கிறது

உதாரணமாக 100  பேர்  ஆப்சன்  டிரேடிங்கில்  இறங்கி  பந்தயம்  கட்டுகிறார்கள்  எனில்  அதில்  90 பேருக்கு  நட்டம், மீதி  10  பேர்  தான்  லாபம் சம்பாதித்து இருக்கிறார்கள் , அதிலும்  அந்த  10%  பேரில்  5 % பேர்   எக்ஸ்பர்ட்ஸ் 44,000  கோடியில் 50% அதாவது  22,000  கோடி  ரூபாய்  பணம்  அந்த  5%  ஆட்களிடம்  போய்  இருக்கிறது  என  செபி  எச்சரித்து  உள்ளது

 

மியூசுவல்  ஃபண்டிலோ , தனிப்பட்ட  ஷேரிலோ பணத்தை  முதலீடு  செய்வதே  பாதுகாப்பானது .  பந்தயம்  கட்டுவது  ஆபத்தானது

 

 ஜெரோதா , மோதிலால்,  போன்ற  முன்னணி  ஷேர்  புரோக்கிங்  கம்பெனிகள்  10 லிஸ்ட்  எடுத்து  அதில்  உள்ள  டேட்டாக்கள்  படி  செபி  அறிவித்துள்ள  தகவல் ஆப்சன்  டிரேடிங்கில்  பணத்தை  இழந்த  90%  பேரில்  சராசரியாக  ஒவ்வொருவரும்  ரூ ஒரு  லட்சத்து  20,000  முதல்  பணத்தை  இழந்துள்ளனர்




 

2019ஆம்  ஆண்டில்  இந்த  ஆப்சன்  டிரேடிங்கில்  இறங்கியவர்கள் 7  லட்சம்  பேர், ஆனால்  கோவிட்  வந்தபின்  2022ல்  46  லட்சம்  பேர்  இந்த  ஆப்சன்  டிரேடிங்கில்  இறங்கி  உள்ளனர் . இது  கிட்டத்தட்ட 500%  அதிகம்

 

இது  லாட்டரி  டிக்கெட்  வாங்குவது  போலத்தான் , பேராசை  பெரு  நஷ்டம்  என்பதை  மறக்க  வேண்டாம்.இது  போல்  வியாபரம்  நடப்பதில்  செபி  அமைப்புக்கு லாபம்  தான், ஆனால்  பொதுமக்கள்  ப்ணம் நட்டம்  ஆகக்கூடாது  என்ற    நல்ல  எண்ணத்தில்  செபி  இந்தத்தகவலை  பகிர்ந்திருக்கிறது

 

எனவே  ஆன்  லைனில்  வ்ரும் விளம்பரங்களை  நம்பி  முன்  அனுபவம்  இல்லாமல்  யாரும்  ஆப்சண்  டிரேடிங்கில்  இறங்கி  பணத்தை  இழக்க  வேண்டாம்

 

 லாங்க்  டெர்ம்  இன்வெஸ்ட்மெண்ட்  அல்லது  ஷார்ட்  டெர்ம்  இன்வெஸ்ட்மெண்ட்  தனிப்பட்ட  ஷேர்களில்  பணத்தை  முதலீடு  செய்யுங்கள்