புதுடெல்லி: ஷூ வில் ரகசிய கேமிரா பொருத்தி இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வழக்கறிஞர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்ற சனிக்கிழமை டெல்லியில் உள்ள சாகத் டிஎல்எப் என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் இளைஞர் ஒருவர் ஒவ்வொரு பெண்களையும் பின் தொடர்ந்து செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.
இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அந்த வணிக வளாக மேலாளர் அவரைப் பிடித்து விசாரித்தார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார் மேலாளர் பாதுகாவலர்கள் துணையுடன் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இளைஞர் தனது வலது கால் ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்கள் பின்னாடி சென்று ஆபாசமாகப் படம் எடுத்தது தெரியவந்தது. அவர் நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக உள்ளார் என்பதும் அவரது பெயர் ஆஷிஸ் சர்மா என்றும் தெரியவந்துள்ளது. ஆஷிஸ் சர்மா பரிதாபாத்தை சேர்ந்தவராவார்.
ரகசிய கேமிராமூலம் எடுத்த இந்த வீடியோக்களை அவர் தனது மொபைல் போனிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரகசிய கேமிராக்களையும், 16 ஜிபி மெமரி கார்டையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
thanx-vigatan