Showing posts with label ஷமிதாப். Show all posts
Showing posts with label ஷமிதாப். Show all posts

Wednesday, February 11, 2015

ஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா? - த இந்து விமர்சனம்

வாய் பேச முடியாத டேனிஷ் (தனுஷ்) என்னும் இளைஞ னுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல். வாய்ப்பு தேடி மும்பைக்கு வருகிறார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து உதவி இயக்குநர் அக்‌ஷரா (அக்‌ஷரா ஹாசன்) உதவ முன்வருகிறார். ஆனால், பேசமுடியாத நடிகரை பாலிவுட் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
பேச இயலாதவர் இன்னொருவர் குரலால் ‘பேச’ தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஆனால் அதற்கு ஒரு குரல் வேண்டுமே? பல குரல் களைப் பரிசீலித்துத் திருப்தி அடை யாத அக்‌ஷராவும் டேனிஷும் மும்பை கல்லறைத் தோட்டத்தில் முதியவர் அமிதாப் சின்ஹாவின் (அமிதாப் பச்சன்) கம்பீரமான குரலைக் கண்டு பரவசம் அடைகிறார்கள். சினிமா கனவு நிறைவேறாமல் விரக்தியில் குடிகாரனாக அலையும் அமிதாபைச் சம்மதிக்கவைக்கிறார்கள். ஷமிதாப் என்ற பெயருடன் அறிமுகமாகிறார் டேனிஷ். அமிதாபின் கம்பீரக் குரலா லும் தன் நடிப்புத் திறமையாலும், ஒரே படத்தில் பெரிய நட்சத்திரமாகி விடுகிறார் ஷமிதாப்.
மூவரின் திறமையான நாடகத் தால் நிஜ வாழ்விலும் இந்த இரவல் குரல் தொடர்கிறது. வெற்றியும் தொடர் கிறது. கனவு போன்ற இந்த வளர்ச்சிக்குக் குறுக்கே வருகிறது ஈகோ யுத்தம். டேனிஷின் நட்சத்திர அந்தஸ்து தன் குரலால்தான் கிடைத் தது என்று அமிதாப் நினைக்க, தன் திறமையால் தான் எல்லாமே நடக்கிறது என டேனிஷ் மமதை கொள்ள, வெற்றிக் கூட்டணி உடைகிறது. டேனிஷின் நட்சத்திர பிம்பம் சரியத் தொடங்குகிறது. இருவரில் யார் ஈகோ ஜெயித்தது?
திரைக்கதை தனுஷை சுற்றி நகர்ந்தாலும் அமிதாபின் குரல்தான் படத்தின் நிஜக் கதாநாயகன்.
திரையுலகில் இருக்கும் போட்டி, பொறாமை, சுயநலம், நட்சத்திர போதை எனப் பல அம்சங்களையும் இப்படம் கையாள்கிறது.
தனுஷுக்கு அக்‌ஷராவின் உதவி கிடைக்கும் விதம், அவருக்கான மாற்று ஏற்பாடுகள் நடக்கும் வேகம் எல்லாம் மசாலா சினிமாவுக்கே உரிய சுதந்திரங்கள். படத்தின் ஆதார மையத்தை பாதிக்காததால் இவற்றை மன்னித்துவிடலாம். இரவல் குரல் என் னும் ரகசியத்தை மூவரும் காப்பாற்று வதற்கான காட்சிகள் சுவாரஸ்ய மானவை.
‘உன் எடையைவிட என் குரல் கனமானது’ என்று அமிதாப் கெத்து காட்டுவதும் மது, தண்ணீர் ஆகிய வற்றை வைத்துப் பேசும் வசனங் களும் அரங்கை அதிர வைக் கின்றன. டேனிஷுக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்படும் நெருக்கத்தின் போது டேனிஷும் அமிதாபும் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் ரகளை. ஈகோ யுத்தம் மெல்ல மெல்ல முறுக் கேறிக்கொண்டே போகும் விதம் நம்பக மாக உள்ளது. இருவரின் பிரிவும் அதனால் இருவரும் படும் அவஸ்தை களும் சரியாகவே சித்தரிக்கப் பட்டுள்ளன.
படத்தின் முதல் பாதி விறுவிறுப் பாக, புத்துணர்ச்சியுடன் நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. உருக்க மான காட்சிகளை அமைப்பதில் வல்லவரான பால்கி தன் முத்தி ரையை முதல் பாதியில் நன்கு பதித் திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் உருக்கம் எல்லை மீறி மிகை உணர்ச்சியாகிவிடுகிறது. மனதை கனக்கச் செய்யும் முடிவுதான் நல்ல படத்துக்கு அடையாளம் என்று யார் சொன்னது?
எனினும் அமிதாப், தனுஷ் நடிப்பு, இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு ஆகியவை இந்த குறை களை மறக்கச் செய்துவிடுகின்றன. ‘சீனி கம்’ படத்தில் அத்தனை பாடல் களுக்கும் தனது பழைய தமிழ் டியூன் களை பயன்படுத்திய ராஜா, இதில் அப்படிச் செய்யவில்லை. இரண்டே நிமிடம் மட்டும் வரும் ‘ஆசைய காத்துல தூது விட்டு’ டியூன் தவிர, மற்ற பாடல்கள் புதுசு.
நடிப்பில் அசத்துகிறார் தனுஷ். உடல் மொழியால் பேசும் கலை அவருக்கு நன்கு வசப்படுகிறது. ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்ச்சிகளை உணர்த்தும் காட்சிகள் அவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றுகின்றன. அமிதாபை முதலில் சந்திக்கும்போது அவரிடம் நடித்துக் காட்டுவது, அவராலேயே அவமானப்படுவது, அவரைப் பிரிந்த பிறகு உணர்ச்சியைக் கொட்டுவது, உண்மையைச் சொல்லிவிட வேண் டும் என்பதற்கான காரணங்களை அடுக்குவது ஆகிய காட்சிகளில் அபாரம்.
பேசாமல் தனுஷ் ஸ்கோர் செய்ய, பேச்சின் மூலமாகவே அமிதாப் ஸ்கோர் செய்கிறார். தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏமாறும் காட்சிகளிலும், தனுஷை சீண்டும் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார். தன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று குமுறும் இடத்தில் மலைபோல உயர்கிறார். கடைசி காட்சியில் பேசாமலேயே நெகிழவைக்கிறார்.
இரண்டு வலிமையான நடிகர்களு டன் அக்‌ஷரா ஹாசன் (அறிமுகம்) தன் இருப்பை திரையில் வெற்றிகரமாகப் பதிவுசெய்திருக்கிறார். படத்தொகுப் பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம்.
திரைக்கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது, நடிகர்களுக்காகத் திரைக்கதை அமைப்பது என்ற இரண்டு வகைகளில் ஷமிதாப் இரண்டாவது வகை. அபார நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை தொய்வையும் மிகையான காட்சிகளையும் மீறிப் படத்தை ரசிக்கவைக்கின்றன.

thanx - the hindu

  •  Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    வரவேட்கபடவேண்டிய புது முயற்சி. வித்தியாசமான திரை கதை. வாழ்த்துக்கள்.
    Points
    16840
    about 13 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
       
    • ஹலோ, மைக் 1, மைக் 2, மைக் 3, ஓவர் ஓவர்...
      Points
      2395
      about 14 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
      • நம்ம மோகன் (மைக்) சார் கத மாதிரிலா இருக்குது
        Points
        360
        about 16 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
        • அப்படியே மோகன் - சுரேந்தர் விஷயம்.....
          about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
          • AS  
            நல்ல படம். கண்டிப்பாக.
            about 19 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
            • Subhash  
              3 ah? Seriously?? Intha padathuku neenga tharalama 4.5 kudukalaam..
              about 22 hours ago ·   (10) ·   (11) ·  reply (0) · 
              • Subhash  
                3 ah? Seriously?? Intha padathuku neenga tharalama 4.5 kudukalaam..

              Saturday, January 24, 2015

              ஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் டாப் ? - இயக்குநர் பால்கி பேட்டி

              அமிதாப் பச்சனின் 69 -வது பிறந்தநாள். நேரில் வாழ்த்துச் சொல்லப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவருக்குப் பிடித்தமான ஏதோ ஒன்றை அவர் மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை வாங்கிப் பரிசளிப்பது வழக்கம். அந்தமுறை ஜெயா பச்சனும் வெளிநாட்டில் இருந்தார்.
              அமிதாப் பூக்களை மிகவும் நேசிப்பார். ஆனால் அந்த நேரம் அதை வாங்குவது கடினமான சூழலாக இருந்தது. விலை உயர்ந்த ஒயின் வாங்கலாம் என்று யோசனை எழுந்தது. அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருந்த இடத்தில் இருந்து அவரைச் சென்று அடைய எப்படியும் இரண்டு மணி நேரப் பயணம் தேவைப்பட்டது.
              காரில் யோசித்துக்கொண்டே புறப்பட்டேன். அவரை வாழ்த்தும்போது காரில் அமர்ந்து யோசித்த அந்த ஐடியாவைக் கூறினேன். அதுதான் ‘ஷமிதாப்’. நான் அன்று அவருக்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசும் இந்தக் கதைதான்’ - முகத்தில் வெளிச்சம் பரவப் பேச ஆரம்பித்தார் பால்கி.

               

              ‘பா’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?
              படம் மட்டும் இயக்கினால் போதும் என்றால் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் இயக்கிக்கொண்டே போகலாம். நல்ல படம், அதுவே வித்தியாசமான படம் என்ற பார்வையோடு சினிமாவை அணுகும்போது அதற்காகச் சில காலம் தேவைப்படுகிறது.
              அமிதாப், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் இவர்களைக் கடந்து நீங்கள் யோசிப்பதே இல்லையே ஏன்?
              இவர்களைவிடச் சிறந்தவர்கள் யார் இருக்கிறார்கள் காட்டுங்கள். நான் அவர்களுடன் இணைந்து படம் பண்ணத் தயாராக இருக்கிறேன்.
              தனுஷ் வாய் பேசாதவர், அவருக்குப் பின்னணிக் குரல் கொடுப்பவர் அமிதாப் பச்சன் என்றும், ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே உருவாகும் தொழில் போட்டிதான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறதே?
              இல்லை. நானே கதையைச் சொல்லிவிட்டால் பிறகு படத்தில் என்ன இருக்கப்போகிறது. இரண்டு நபர்களுக்கிடையே உள்ள ஈகோதான் திரைக்கதை. மற்றொருவரது உதவி இல்லாமல் தனி நபராக யாரும் எந்த ஒரு வெற்றியையும் அடைய முடியாது என்கிற கருவை அடிப்படையாக வைத்துக் கதை நகரும்.
              இது மூன்று ஹீரோக்கள் படம். அமிதாப், தனுஷ், அக்ஷரா இவர்கள்தான் அந்த மூன்று ஹீரோக்கள். 

               
              ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அக்ஷரா ஹாசனுக்கு என்ன கதாபாத்திரம்?
              அக்ஷராவைத் திரைப்பட நிகழ்ச்சியொன்றில் முதன்முதலாகப் பார்த்தேன். இந்தக் கதையை எழுதும்போதே அவரை நினைத்துதான் எழுதி முடித்தேன். ஒரு பக்கம் கமல், மற்றொரு பக்கம் சரிகா, இரண்டு திரை மேதைகளின் மகள். அவரது நடிப்பு பற்றி வேறு என்ன சொல்ல?
              இந்தக் கதைக்குள் எப்படி தனுஷை இழுத்தீர்கள்?
              தனுஷ் மாதிரி நடிகர் கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான். பாலிவுட்டில் ரன்வீர் மாதிரி இங்கே தனுஷ். அவரது பங்களிப்பு படத்துக்குப் பெரிய பலம். படத்தில் ஒருவர் பெரிய வயதில் பெரிய ஆள், இன்னொருவர் சிறிய வயதில் பெரிய ஆள். அந்த இருவரும்தான் அமிதாப்பும் -தனுஷும்.
              ‘பிகே’ மாதிரியான பாலிவுட் சினிமாக்கள் கவனிக்க வைக்கிறதே?
              நூறு கோடியில் படம் எடுத்து அதில் 300, 400 கோடிகள் வரை சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிடும் இயக்குநர் நான் அல்ல. எந்த ஒரு காரணத்துக்காகவும் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்துக் கொடுப்பதும் ஓர் இயக்குநரின் முக்கியமான பணி இல்லையா? இதுதான் என் பாணி. 
               

              இளையராஜாவை இலகுவாக அணுகித் தொடர் வெற்றி கண்டு வருகிறீர்களே?
              மரியாதையையும், தொழிலையும் எப்போதும் ஒன்றாக ஆக்கிவிடக் கூடாது. எனக்கு இப்படித்தான் வேண்டும் என்று அவரிடம் சண்டை போடுவேன். அவரும் சண்டை பிடிப்பார். எனக்கும், அவருக்கும் படத்தில் தேவையான விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். எப்போதும் அவரது பாடல்களைப் போலவே, இந்தப் படத்தில் அவரது பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. அவர்தான் ராஜா.
              தமிழிலும் படத்தைக் கொண்டு வந்திருக்கலாமே?
              எனக்கு ஒரு படத்தை மொழிமாற்றம் செய்வது பிடிக்காது. நல்ல கதை தோன்றினால் நேரடியாகத் தமிழிலேயே ஒரு படத்தை இயக்கிவிட்டுப் போகலாம் என்று நினைப்பவன், நான். அடுத்துகூட அப்படி நடக்கலாம். 

              இயக்குநர் பால்கி



               நன்றி - த இந்து