Showing posts with label வேழம் (தமிழ்) 2022 - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம். Show all posts
Showing posts with label வேழம் (தமிழ்) 2022 - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம். Show all posts

Sunday, September 11, 2022

வேழம் (தமிழ்) 2022 - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்



 பாம்பே  ஐஸ்க்ரீம்  அப்டினு  சேட்டுங்க  ஒரு  வண்டில  ஐஸ்க்ரீம்  விற்பாங்க . அந்த  ஐஸ்க்ரீம்  டாப் ல  செர்ரிப்பழம் வெச்சுக்கொடுப்பாங்க . அழகான  பெண்ணின்  அழகை  மீண்டும்  கூட்ட மூக்குத்தி  இடுவதைப்போல  ஐஸ்க்ரீம்க்கு டெக்ரேட்  பண்ண  அந்த  செர்ரிப்பழம்  வைக்கறதாத்தோணும். ஐஸ்க்ரீமை  விட  அந்த  ரெட்  கலர்  செர்ரிப்ப்ழம்  செம  டேஸ்ட்டா  இருக்கும்.


 அந்த  மாதிரிதான் சில  சமயம்  மெயின்  கதையை  விட  சைடு  கதை  மனம்  கவர்வதா  அமையும், மலையாளத்தில்  துல்கர்  நடித்த  சார்லி  பட்த்தின்  தமிழ்  ரீமேக்கான  மாறா  படத்தில்  மெயின்  லவ்  ஸ்டோரியான  ஹீரோ  - ஹீரோயின்  கதையை  விட  அதில்  வரும்  வயதான  தம்பதி  லவ்  ஸ்டோரி  செமயா  இருந்தது . அந்த  ,மாதிரி  க்ரைம் த்ரில்லர்  கதையான  இதில்  அந்த  க்ரைம்  கதையை  விட  அதில்  வரும்  இரு வேறு  காதல்  கதைகள்  ரசிக்கத்தக்கதாக  அமைந்து  இருக்கு   

ஸ்பாய்லர் அலெர்ட் 


சம்பவம் 1 -  ஹீரோயினின்  தோழி அவள்  வீட்டிலேயே  பாலியல்  வன்கொடுமை  செய்யப்பட்டு கொலை  செய்யப்பட்டு  கிடக்கா , அது  கேங்க் ரேப்  என  அறியப்படுது 


சம்பவம் 2 -   ஒரு  மினிஸ்டரோட  மகன் கொலை  செய்யப்பட்டு   ரோட்ல  வீசப்பட்டுக்கிடக்கான். போலீஸ்  தீவிரமா  அந்த  கேசை  துப்பு  துலக்குது 


சம்பவம்3 - நீலகிரி  ல  சீரியல் கில்லரின்  கொலைகளால்  ஊரே  அரண்டு  கிடக்கு, ஜனங்க  நைட்   டைம்ல  வீட்டை  விட்டு  வெளீல  வரவே  பயப்படறாங்க

சம்பவம் 4 -  ஹீரோ  ஹீரோயின்  இரண்டு  பேரும்  ஜாலியா  பைக்ல  ராத்திரி  டைம்ல  ரைடு  போறாங்க. டி வி  நியூஸ்  எல்லாம்  பார்ப்பாங்களா? இல்லையா? தெரியாது .  லூஸ்  மாதிரி  அன் டைம்ல  ரோட்ல  போய்  யார்  கிட்டேயோ  மாட்டிக்கறாங்க . இதுல  ஹீரோயின்  கொல்ல்ப்படறா. ஹீரோவுக்கு  செம  அடி , ஆனா  உயிர்  பிழைக்கறார்


சம்பவம் 5  - ஹீரோயினைக்கொலை  செஞ்சது  யாரு?னு  கண்டுபிடிக்க  ஹீரோ  5  வருசமா  ட்ரை  பண்றார் , முடியல. அப்போ  அவருக்கு  இன்னொரு  தோழியின்  அறிமுகம்  கிடைக்குது.  வாலண்ட்ரியா  வந்து  பிரப்போஸ்  பண்ணுது 


 அந்தக்காதலை  ஹீரோ  ஏத்துக்கிட்டாரா? இல்லையா? காதலி  கொலை  செய்யப்பட்ட  வ்ழக்கு  என்னாச்சு ? இதை  எல்லாம்  அமேசான்  பிரைம்ல  கண்டு  களிக்கவும் 


ஹீரோவா அசோக் செல்வன் . தாடி  வெச்சிருந்தா  சோக  செல்வன் . தாடி  இல்லாதப்ப  அசோக  செல்வன்  ஃபார்முலாப்படி  நடிச்சிருக்கார் . இருவித  நடிப்பும்  குட் .,ஆனா  முகத்தில்  கோபம்  சரியா  வர  மாட்டேங்குது . இரு  ஹீரோயின்களிடமுமான  கெமிஸ்ட்ரி  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கு 


 முதல்  காதலியா   ஐஸ்வர்யா  மேனன். அழகான முகம். பாந்தமான  நடிப்பு .  ஒரு  கொலை  செய்யும்  காட்சியில்  அவர்  ஆவேசம்  ஒண்டர்ஃபுல் 


 2 வது  காதலியா  ஜனனி  அய்யர்  பிரமாதமான  கண்கள் . அவரது  கண்களே  பாதி  நடிப்பைப்பூர்த்தி  பண்ணிடுது . அதிக  காட்சிகள்  வருவது  ஐஸ்வர்யா  மேனன்  என்றாலும்  அதிகம்  கவர்வது  என்னவோ  ஜனனி  அய்யர்  தான் 


போலீஸ்  ஆஃபீசராக  ஷ்யாம்  சுந்தர் . புதுமுகம்  போல  கவனிக்க  வைக்கும்  நடிப்பு 


பாடல்கள்  2  சூப்பரா  வந்திருக்கு  இசை  ஒளிப்பதிவு  எடிட்டிங்  குட் 


பின் பாதி  திரைகக்தைல  ஓவர்  லோடட்  ட்விஸ்ட் அண்ட்  ட்ர்ன்ஸ்


அந்தக்காலத்துல  அரசாங்கம்  குழந்தை  குடும்பக்கட்டுப்பாடு  பற்றிய  விளம்பரத்தில்  ஒன்றுக்கு  மேல்  இப்போது  வேண்டாம் இரண்டுக்கு  மேல்  எப்போதும்  வேண்டாம்னு  சொல்வாங்க , அது[போல  த்ரில்லர்  கதைகளிலும்  ஒரு  ட்விஸ்ட்  2  ட்விஸ்ட்  இருந்தாப்போதாதா? ஏகபப்ட்ட  ட்விஸ்ட்  எதுக்கு ? 


சபாஷ்  டைரக்டர் 


1  ஹீரோ - ஹீரோயின் 1  - ஹீரோயின்2   காதல்  காட்சிகள்  மனசுக்கு  இதம் . டூயட்  சீன்களில்  ஒளிப்பதிவு  லொக்கேஷன்கள்  கலக்கல்  ரகம் . ஊட்டி  கோவை  நீலகிரி  குன்னூர்  போன்ற  இடங்களின்  படப்பிடிப்பு  செம 


2  காதலி கொலை  செய்யப்பட்டு  5  வருடங்கள்  ஆகியும்  ஹீரோ  அவரை  மறக்காமல்  இருப்பதாக   வரும்  அவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  அபாரம் 


3  இடைவேளை ட்விஸ்ட்  வரும்போது  வரும்  பிஜிஎம் 



நச் டயலாக்ஸ்


 1 மிருகங்களில்  கொடூரமான  மிருகம்  மனுசன் தான்


2   ஒரு விஷயத்தை  மனசுக்குள்ளேயே  நினைச்சுக்கிட்டு  தீவிரமா  தேடிட்டே  இருந்தா  அதுவே  உன்னைத்தேடி ஒரு  நாள்  வரும் 


3  உனக்கு  என்  மேல  லவ்  இல்லைனு  தெரியும், ஆனா  உனக்கு  என்னைப்பிடிக்கும்னும் தெரியும் 


4  உலகத்துல  வெறுப்பையும், வன்முறையையும்  தோற்கடிக்க  முடியும்னா  அது  காதலால் மட்டும் தான்  முடியும் 


5   கொஞ்ச  நாள்  போகட்டும், உன்  மனசு  மாறும், 

 அஞ்சு  வருசமா  உன்  மனசு  மாறலை, என்  மனசு  மட்டும்  எப்படி  மாறும் ?



லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   ஒரு  காதலி  கிட்டே  உன்  காதலன்  செத்துட்டான்னு  வசனமா  சொன்னா  நம்புவாளா? டெட் பாடியைப்பார்க்கனும்  அல்லது  புதைச்ச  இடத்தை  காட்டுங்கனு  கேட்க  மாட்டாளா?


2  காதலி  செத்துட்டானு  கேள்விப்பட்ட  காதலன்  அஞ்சு  வருசமா    சோகமா  இருக்கறப்ப  காதலன்  செத்துட்டான்னு  கேள்வ்ப்பட்ட  காதலி  ஒருத்தி  உடனே  இன்னொரு  மேரேஜ்க்கு  ஒத்துக்குவது  எப்படி ? அட்லிஸ்ட்  3  வருசமாவது  மனம்  மாற  அல்லது  சோகம்  கரைய  டைம்  எடுத்துக்க  மாட்டாளா? 


3  ஹீரோயினைக்கொலை  பண்ணும்  ஆள்  ஹீரோவுக்கு  மட்டும்  கருணை  காட்டுவது  எதுக்கு ? கம்முனு  போகாம  அவனது  குரலை  அடையாளம்  காட்டிட்டுப்போவது  ஏன் ? அவன்  பாட்டுக்குப்போய்  இருக்கலாமே? 


4  இப்போ  சொல்லப்போறது  கொஞ்சம்  சங்கடமான  விஷயம்  தான் . ஒரு  பெண்ணை  4  பேர்  கேங்  ரேப்  பண்றாங்க   சுடிதார்  போட்டிருக்கும்  அந்தப்பெண்னை  முதல்  ஆள்  ரேப்  பண்ணிட்டு  மீண்டும்  டிரஸ்  பண்ணி  விட்டுட்ட்டுப்போக  2 வது  ஆள்  டிரசை  எல்லாம்  ரிமூவ்  பண்ணிட்டு  மீண்டும்  டிரஸ்  பண்ணி  கவர்  பண்ணிட்டுப்போவானா ? நிர்வாண்மா  உடலைக்காட்ட  சென்சார்  மறுக்கும்னா  அந்த  சீனை  ப்ளர்  பண்ணி  காட்டி  இருக்கலாமே? 


5  வில்லனாக  வருபவர்  வெறும்  சொத்துக்காக  அப்படி  எல்லாம்  பண்ணுவதை  நம்ப  முடியலை . அவர்  பணம்  சம்பாதிக்க  அதை  விட  ஈசியான  வழிகள்  இருக்கே ? அவரு  அசராங்க  உயர்  பதவில  வேற  இருக்காரு 



சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - போஸ்டர்  டிசைன்  சரி  இல்லாத  த்ரில்லர்  படங்களில்  இதுவும்  ஒண்ணு . வேழம்னா  பலமான  யானைனு  அர்த்தமாம். அவ்ளோ  பலம்  இல்லை . ரேட்டிங்  2.5 /5   ஆமேசான்  பிரைம்ல  இருக்கு