Showing posts with label வேலையில்லா பட்டதாரி. Show all posts
Showing posts with label வேலையில்லா பட்டதாரி. Show all posts

Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

ஹீரோ  எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  ஒரு வே லை இல்லா பட்டதாரி . எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  அவரோட அப்பா எப்போ பாரு அவரை தண்டச்சோறு , தண்ட டிஃபன் , தண்ட டின்னர் அப்டி-னு திட்டிட்டே  இருக்காரு . எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  அவரோட அம்மா அவருக்கு சப்போர்ட். பொதுவாவே அரசியல் வாழ்க்கைலயும் சரி , குடும்ப வாழ்க்கைல யும் சரி அம்மா சப்போர்ட் இருந்தாவே  போதும் . வாழ்க்கை பிரகாஷ மயம் தான் . 


ஹீரோவோட  தம்பி  எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி   வேலைக்குப்போய்  கார் எல்லாம் வாங்கி  ஹீரோவை வெறுப்பேத்துறார் .  எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  ஹீரோவுக்கு பக்கத்து  வீட்டில்  ஒரு ஃபிகர் . இது வரை  ஏனோ தானோ -னு பார்த்துட்டு  இருந்த தமிழன் இப்பொ தான்  நிமிர்ந்து உக்கார்றான் . 

 ஹீரோ  டப்பாவான  ஒரு லூனா மாதிரி வண்டியை வெச்சுக்கிட்டு அந்த பக் வீட்  ஃபிகரை எப்படி  ரூட்  விடறார் என்பதே  முதல் பாதி கதையை இழுக்க போதுமான தா  இருக்கு 

  திடீர் -னு ஒரு  ட்விஸ்ட் . ஹீரோவோட அம்மா  அவுட் . அந்த வேலை  ஹீரோவுக்குக்கிடைக்குது . இஞ்சினியர் ஆனதும் அங்கே  ஒரு வில்லன் வர்றான் . அந்த  வில்லனால் ஏற்படும் தடங்கலை   ஹீரோ எப்படி  முறியடிக்கிறார் ? என்பதே  மிச்ச மீதிக்கதை


 தென்னக ப்ரூஸ்லீ , சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் ஸ்டார் , ”ஸ்ருதி ”சுத்தமாக  முக பாவனைகளை வெளிப்படுத்தும் அடுத்த மாத சூப்பர் ஸ்டார்  தனுஷ் தான்  ஹீரோ / சும்மா சொல்லக்கூடாது . அவர் நடிப்பு நாளுக்கு நாள்  மெருகு ஏறுது . சிக்ஸ் பேக் வைக்கவே வேணாம் . ஆல்ரெடி அங்கே எய்ட் பேக் ரேஞ்சுக்குத்தான்  இருக்கு . இவருக்கு ஒரு வேளை படங்கள்  எல்லாம் வரிசையா ஹிட் ஆனா  ஒரு வேளை முன்னணி  ஹீரோ பட்டியலில் இணைவார் .ஆல்ரெடி வரிசையா 4 ஃபிளாப் படங்கள்  கொடுத்திருந்தாலும் அவருக்கு கிடைச்சிருக்கும்  மாஸ்  ஓப்பனிங்க் பிரமிக்க வைக்குது .


 ஹீரோயினாக  இப்போதான் மேரேஜ் ஆன அமலா பால் . கல்யாணம் ஆன பொண்ணை  தமிழன் ரசிக்கவும் மாட்டான் , வர்ணிக்கவும் மாட்டான்,ஏன்னா தமிழன் பண்பாடு அப்படி . ஓக்கே .  நிச்சயதார்த்தம் ஆன பின் புக் ஆன படம் போல . ஜாக்கிரதையா கண்ணியமா நடிச்சிருக்காங்க . எந்த சிந்து சமவெளியையும் எதிர்பார்க்காதீங்க


 ஹீரோவோட் அப்பாவா சமுத்திரக்கனி , அம்மாவா  சரண்யா .  இவங்க 2 பேரும்  குணச்சித்திர நடிப்பில்  கோல்டு மெடல் வாங்கத்தகுதி பெற்றவர்கள் என்பதை  நிரூபிக்கிறார்கள்


 சின்னக்கலை வாணர்   விவேக்  ரீ எண்ட்ரி . சொல்லிக்கறா  மாதிர்  ஒண்ணையும் காணோம் .ஆனாலும்  பின் பாதி  திரைக்கதை தடுமாறும்போது கொஞ்சம்  பூஸ்ட்  தர்றார்.


  வில்லனாக வரும்  அமிதாஷ்   அமுல் பேபி மாதிரி இருக்கார் . காலேஜ் பெண்கள் இவரை  மொய்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை . 


 இவன் வேற மாதிரி  புகழ்  சுரபி அதே மாதிரி  உதிரியா வந்து  போவுது . அய்யோ பாவம்.பாப்பாவுக்கு  ஒரே  ஒரு  லோ கட் ஷாட்  மின்னல் மாதிரி வந்து  போகுது . 8 விநாடி நேரமே வந்து  போகும் அழகிய காட்சியைக்காணத்தவறாதீர் !




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1    ட்ரெய்லர்  , டிவி  ப்ரமோ  , போஸ்டர்   டிசைன் எல்லாம்  அருமை 


2   அனிரூத் -ன் இசை .  அவருக்கு வாய் ஜாலம் எந்த அளவுக்கு ஆண்ட்ரியாவிடம்  மவுத் ஆர்கன் அளவு வெளிப்பட்டுதோ அதே அளவு  இசையிலும் கலக்கறார் . நற நற 


3   அம்மா சரண்யா  ஹார்ட் அட்டாக் வந்தப்போ பையன்  தனுஷ்க்கு  ஃபோன் பண்ணுவதும் , வேற் ஏதோ சாதா மேட்டர்னு அலட்சியமா  தனுஷ் அதை கட் பண்ணுவதும்  பின்  அவர்  உயிர் போன பின்  குற்ற உணர்ச்சியில்  துடிப்பதும்  படத்தின்  ஜீவன்  உள்ள காட்சிகள்  




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 மாசம்  ஒரு லட்சம் ரூபா சம்பளம் வாங்கும்   தம்பி அண்ணனிடம் அப்படி அடிமை போலவா இருப்பார்?  ஹீரோவிடம் அண்டர் ப்ளே ஆக்ட் பண்ண வேண்டியதுதான் . ஓவர் பதுங்கு குழி அண்டர் ப்ளே வா இருக்கே? 


2  படத்தின்  ஜீவனான காட்சியான  ஹீரோவின் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும் காட்சியில்  அம்மா 5 தடவை செல் ஃபோனில் அழைத்தும்  ஹீரோ அட்டெண்ட் பண்ணாம கட் பண்றார். மகனின்  சுபாவம் தெரிஞ்ச அம்மா ஏன் அமலாபால் க்கு  ஃபோன் பண்ணி  என் பையன்க்கு தகவல்  சொல் . என சொல்லக்கூடாது ? அவர் பண்ணினா டக்னு எடுத்திருப்பாரே? அல்லது   மகனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பலாமே>?   அவர்  படித்தவர் என டயலாக்  ஒரு இடத்துல வருது . மெசேஜ் டைப் பண்ணத்தெரியாது என சொல்ல வழி இல்லை 


3  பின் பாதியில்  ஏகப்பட்ட லாஜிக்  மிஸ்டேக்குகள் . சிமெண்ட் வியாபாரத்தில் லாபமே  50 %  டூ 60 %  தான்  கிடைக்கும் . ஒரு கவர்மெண்ட்  ப்ராஜக்ட்டில் எதுக்காக அவர்  50%  டிஸ்கவுண்ட்  தர்றார் ? 


4  கிட்டத்தட்ட 60% பில்டிங்க்  ஒர்க் நடந்து  முடிந்த பின்  தான் தப்பா  கட்னதை  உணர  முடியுமா? அதுக்குப்பின் அதை  இடிச்சு பின் மீண்டும் கட்டுவது  சாதா விஷயமா? 


5  ஆனானப்பட்ட ரஜினியே   தம் அடிக்கும் காட்சியில்  இனி நடிக்கலைன்னு டாக்டர்  ராம்தாஸ் அவர்களீன்  வேண்டுகோளை ஏற்று  அறிவித்த  பின்  தனுஷ் அவர் மாப்ளையாக  இருந்து   தம் அடிக்கும் ஸ்டைல் காட்சிகள்  தேவை இல்லாத  திணிப்பே ! 


6  போ  இன்று  நீயாக  வா நாளை நாமாக பாடல் காட்சியில்   தனுஷ் பாடுவது  போல் வரும் காட்சியில்  அமலா பால் உதட்டசைவில் பாடுவது  போல் வருது . எடிட்டிங்க்  ஃபால்ட் 


7  இடை வேளைக்குப்பின்  அடுத்து வரும் காட்சிகள்  யூகிக்க  முடிவது  பெரிய மைனஸ் . 


8  கோடீஸ்வர வில்லன்  சாதா  இஞ்சினியரிடம்  ஜெயிக்க  முடியாமல்  சும்மா உதார் மட்டும் விட்டுட்டு  இருப்பது  அசல்  சினிமாத்தனம் . அட்லீஸ்ட்  ஒரு ஆக்சிடெண்ட் செட் பண்ணி  ஹீரோவை வீட்டோட  படுக்கப்போட முடியாதா? 



மனம் கவர்ந்த வசனங்கள்


இஞ்சினியரிங் முடிச்சா ஒன்னு இஞ்சினியரா வேல செய்யணும்.. இல்ல கிடைச்ச வேலய செய்யனும்:-//


2 சமயத்துல 2000 ரூவாய விட அம்மா அப்பாவுக்கு தெரியாம கொடுத்த 200 ரூவாக்குதான் மதிப்பு ஜாஸ்த்தியா இருக்கும்


முதல்ல யாரு சம்பாதிக்கிறாங்கிறது முக்கியமில்லை.. யாரு கரெக்ட்டான டைம்ல சம்பாதிக்கிறாங்கங்கிறதுதான் முக்கியம்


4 "நாளைக்கு நீ freeயா?" 


"யாரைப்பாத்து என்ன கேள்வி கேட்ட, நான் எப்பவுமே free தான்" 


வேலைக்கு போகலைன்னா நீங்க பேர் வெச்சு வளர்த்த நாய் கூடஉங்களை மதிக்காது # வே இ ப


6 பக் வீட் ல சாதா பிகர் இருந்தாலே சும்மா இருக்க மாட்டோம்.சினிமா நடிகை மாதிரி பிகர் இருந்தா?,


7  இது போதும் னு தோணிடுச்சுன்னா வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்குப்போகவே முடியாது#,வே இ ப்


8  நீ தான் கார்த்திக்கோட அண்ணனா? அவன் தான் என் தம்பி # VIP


9 இந்த ப்ளானை தப்பா போட்டுக்குடு .


சாரி சார்.இஞ்சினியர் னா தப்பா கட்டக்கூடாதுனு தானே படிக்க்றோம் ?


10  பேர் வைக்கறதுல கூட பார பட்சம்.அவனுக்கு ஹீரோ பேரு .கார்த்திக்.எனக்கு வில்லன் பேரு .ரகுவரன் #,VIP


11  அம்மா அடிப்பது எவ்ளவ் சந்தோஷம் னு அம்மா இல்லாதவங்க கிட்டே கேள்


12 வண்டி இவ்ளவ் சின்னதா இருக்கே.டபுள்ஸ் இழுக்குமா?


 லாரியை க்கூட டோ பண்ணி இழுத்திருக்கு


13  எங்கே கிளம்பீட்டீங்க?


சைட்டுக்கு


நானும் வர்றேன்


விவேக் = சைட் னா உடனே வந்துடுவீங்க்ளே /?



14 கவர்மென்ட் பிராஜக்ட்னாலே மெட்டீரியல்ஸ் எல்லாம் கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும்.அட்ஜஸ் இட்



ஸாரி.இது பலர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்


15  விவேக் = இது தான் வீடா?


வாட்?


இது தான் உங்க வீடா?னு கேட்டேன். கேரி பேக் ல குடி இருக்கே போல



16 விவேக் = இப்ப நாம எதுக்காக வாக்கிங் போறோம் ?



தனுஷ் = சார்.நாம வண்டில போய்க்கிட்டு இருக்கோம். விவேக்=ஓ.இதான் வண்டியா?


17  விவேக் = என் சம்சாரம் பர்த் டே டேட் உனக்கு எப்டி தெரியும் ?


செல் முருகன் = நாங்க 2 பேரும் FB பிரண்ட்ஸ்


18  தனுஷ் - உன்னைப்்பார்த்தா எனக்கு வில்லன் கற பய்மே வர்ல்.அமுல் பேபி


19 என் ஒயிf போன் நெம்பரை நீ ஏன் ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கே?


 ஆத்திரம் அவசரத்துக்கு உதவியா இருக்கட்டும்னு தான். வாட்? ஐ மீன் டூ யூ.. உங்க அவசரத்துக்கு  உதவியா இருக்குமேனு


20  25% DISCONUNT OK?


75%?


 உங்களுக்கும் வேனாம்.எனக்கும் வேணாம்


விவேக் =வேற யாருக்காவது தரப்போறீங்க்ளா?

நோ  . 50 % 


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


1   தென்னக புரூஸ்லீ தனுஷ் ன் வே இ ப படத்தின் வெற்றிக்கொன்டாட்டம் இன்னும் ஆரம்பிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.இவரும் ரொம்ப சிம்ப்பிள் போல

2  வே இ ப = 133 நிமிடங்கள் = கூட்டுத்தொகை = 7 , ஏழரை ஆகிடுமோ?



3  ஹீரோவுக்கு தூங்கி எந்திரிக்கும் சோம்ப்லான ஓப்பனிங் # வே இ ப


4  தனுசின் பிளஸ் பாயிண்ட்டே டாண்ஸ் ,பைட் எல்லாவற்றிற்கும் ஒத்துழைக்கும் ஒல்லி கில்லி உடல் வாகு.அனிரூத் ன் அதிரடி இசையில் ஓப்பனிங் டான்ஸ்


5  தம்பி கார் வாங்கி வந்ததைப்பார்த்து இயலாமையில் தனுஷின் பாடி லேங்குவேஜில் சாகர் (ஹிந்தி) கமல் ( அரங்கம் அதிரும் கை தட்டல் அந்த காட்சிக்கு )


6  அமலா பால் மாதிரி ஒரு ஹீரோயினுக்கு ஓப்பனிங் சீன் இவ்வளவு டல்லாவா வைப்பது? நடு இரவில் மங்கலா 1 ம் தெரியல.


7  ஹீரோயின் உடைய அம்மா கிட்டே ஹீரோ பேசறதை ஹீரோயின் ரசிக்குது # நீதி = அத்தையிடம் கடலை போடு


8  நான் வெறி ஆனா விருமாண்டி னு ஒரு லைன் வருது ஒரு பாட்டுல.இதுல ஏதாவது உள் குத்து இருக்குமோ ?


9  கலகலப்பான காட்சிகள் ,டான்ஸ் ,ஆட்டம் பாட்டம் என ஜாலியான முதல்64 நிமிடங்கள் முடிந்து இடைவேளை # வே இ ப


10  அம்மா/அப்பா போன் செய்யும்போதுஅம்மாதானே அப்புறம் பேசிக்கலாம்னு போனை கட் பண்ணிடாதீங்க.அது முக்கியமான அழைப்பாக இருக்கக்கூடும்

** THANKS TO KARUTHU KANTHAN FIRST 5 DIALOGUES 

சி பி கமெண்ட் -  வேலை இல்லா பட்டதாரி =  முன்பாதி  ஜாலி காமெடி, பின் பாதிலாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதை தடுமாற்றம். விகடன் மார்க் =41 , ரேட்டிங்க் =2.5/5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41

குமுதம் ரேட்டிங்க் = ok

 ரேட்டிங் =  2.5   /  5





தஞ்சையில் தென்னக புரூஸ்லீ படம் 



தஞ்சையில் தென்னக புரூஸ்லீ படம்
Embedded image permalink