வேட்டைக்காரன் படத்தை விட சுவராஸ்யமான சம்பவங்கள் பட ரிலீசின்போது நடந்தன. சிவாஜி நடித்த கர்ணன் படம் 1964 பொங்கல் ரிலீஸ் என அறிவித்தாகி விட்டது . இயக்கம், தயாரிப்பு பி ஆர் பந்துலு. அதே தேதியில் வேட்டைக்காரன் ரிலீஸ் என தயாரிப்பாளர் தேவர் அறிவித்து விட்டார். இதில் கர்ணன் பிரம்மாண்டமான செலவில் உருவான கலர் படம். வேட்டைக்காரன் லோ பட்ஜெட்டில் உருவான பிளாக் அண்ட் ஒயிட் படம்
ஒரே தேதியில் இரு படங்கள் வருவதால் வசூல் பாதிக்கும் என பந்துலு நினைத்தார். எனவே சிவாஜியுடன் கலந்தாலோசித்து எம் ஜி ஆரை கர்ணன் பட பிரத்யேகக்காட்சிக்கு அழைத்து படத்தை போட்டுக்காட்டினர். படம் பார்த்து விட்டு பிரமாதம் என பாராட்டினார் எம் ஜி ஆர். நைசாக தள்ளி வைபது பற்றி சொன்னதும் எம் ஜி ஆர் தேவரிடம் சொல்லி அனுப்புகிறேன் என்றார்
தேவர் - எம் ஜி ஆர் சந்திப்பில் தேவர் படத்தை தள்ளி வைப்பதில் எதிர்ப்பு இல்லை என்று கூறி விட்டார் , ஆனால் எம் ஜி ஆர் கருத்து வேறாக இருந்தது . இரு தரப்பும் ரிலீஸ் தேதியை அறிவித்த பின் இப்போது பின் வாங்கினால் ரசிகர்கள் எம் ஜி ஆர் பயந்து விட்டார் என நினைப்பார்கள் . ஜனவரி 14,15,16,17 விடுமுறை நாட்கள் , நல்ல வசூல் வரும். எம் ஜி ஆர் பிறந்த நாள் கொண்டாட்டமும் ரசிகர்களால் நடத்தப்படும், எனவே ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் எ3னவே எக்காரனம் கொண்டும் தேதி தள்ளி வைக்க வேண்டாம் என கறாராக கூறி விட்டார்
சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் கர்ணன் பட பிரமாண்ட செட்டுகள் போர்க்களகாட்சி போடப்பட்டு சென்னை பூரா அது பற்றிய பேச்சாக இருந்தது . வேட்டைக்காரன் பட பிரமோக்கு வித்தியாசமாக செய்யலாம் என எம் ஜி ஆர் தரப்பு யோசித்து சித்ரா தியேட்டரில் கானகம் போல செட் அமைத்து உயிருடன் ஒரு புலியை கூண்டில் அடைத்து உலவவிட்டனர் . அப்போது ரசிகர்கள் கர்ணன் செட் அட்டை , ஆனால் இது ஒரிஜினல் புலி என பரபரப்பாகப் பேசினார்களாம்
பட ரிலீசில் கர்ணன் சுமார் வெற்றியைப்பெற்றது , வேட்டைக்காரன் சூப்பர் டூப்பர் ஹிட் . ஆனால் தரத்தில் கர்ணன் செமயாக இருந்தது . பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ ரிலீசில் கர்ணன் நன்றாக ஓடியது , பலராலும் பாராட்டுப்பெற்றது , ஆனால் ரிலீஸ் டைமில் ஓடவில்லை , வேட்டைக்காரன் சாதாரண மாமூல் மசாலா கதை என்றாலும் ஹிட் ஆனது , 175 நாட்கள் ஓடியது இதுதான் நேரம் என்பது
பி ஆர் பந்துலுக்கு கர்ணன் படத்தால் பண நட்டம் ஏற்பட்டது ல் அந்த நட்டத்தை சரிக்கட்ட எம் ஜி ஆர் ஆயிரத்தில் ஒருவன் என்று படம் பண்ணிக்கொடுத்தார் . அது செம லாபத்தை பந்துலுக்கு தந்தது . கர்ணன் நட்டத்தில் இருந்து மீண்டார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் பெரிய எஸ்டேட் ஓனர் மற்றும் வேட்டைக்காரர். அவருக்கு எப்போதும் கானகத்தில் சுற்றித்திரிந்து விலங்குகளை வேட்டையாடுவதில் இஷ்டம். இவருக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் தான் வீடு தங்குவார் என நாயகனின் அம்மா நினைக்கிறார்
நாயகனின் எஸ்டேட் மேனேஜர் தான் வில்லன். அவன் ஆள் இல்லாதபோது வீட்டுக்குள் நுழைந்து சில பத்திரங்களை , பணத்தை கொள்ளை அடிக்க முயலும்போது நாயகனின் அம்மா பார்த்து விடுகிறார். ஒரு கட்டுக்கதை அழிழ்த்து விடுகிறான். நானும் என் தம்பியும் ட்வின்ஸ், நீங்க பார்த்த திருடன் என் தம்பியாக இருக்கும் என்கிறான்
நாயகன் நாயகியை கானகத்தில் சந்திக்க இருவருக்கும் காதல் . நாயகன் வசதியானவர் என்பதால் நாயகியின் அப்பா திருமணத்திற்கு சம்மதிக்கிறார் . வில்லனான எஸ்டேட் மேனேஜர் நாயகனைக்கொன்று விட்டு நாயகியை அடைய நினைக்கிறான் , வில்லனின் எண்ணம் நிறைவேறியதா? என்பது பின் பாதி திரைக்கதை
நாயகன் ஆக எம் ஜி ஆர் . அவரது காஸ்ட்யூம் இதில் வித்தியாசமாக இருக்கும். தோற்றத்தில் , நடிப்பில் மாமூல் தான். வழக்கம் போல தத்துவப்பாட்டு , தனி நபர் துதிப்பாட்டு இதிலும் உண்டு. எப்போதும் சிரித்த முகத்துடன் எனர்ஜெட்டிக்காக இருப்பது எம் ஜி யாரின் பெரிய பிளஸ்
நாயகி ஆக சாவித்திரி .. நடிகையர் திலகம் என நிரூபிக்க எல்லாம் இதில் வாய்ப்பில்லை , சும்மா ஜஸ்ட் லைக் தட் வந்து விட்டுப்போகிறார், டூயட் பாடுகிறார், பின் பாதியில் நோய் வாய்ப்பட்டபின் நடிக்க நல்ல வாய்ப்பு
வில்லன் ஆக எம் என் நம்பியார் . சரியான வில்லத்தனம் . அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்வது அருமை . இன்னொரு சின்ன வில்லனாக அசோகன். உங்க வீட்டுல சாப்பிட்டுட்டேன், அதனால உங்களைத்தாக்க மனம் வர்லை என்ற வசனம் எல்லாம் அக்மார்க் எம் ஜி ஆர் டச்
நாயகியின் அப்பாவக எம் ஆர் ராதா . சாதாரண கேரக்டரையே அசாதரணமாக சித்தரிக்கும் வல்லமை கொண்டவர்
காமெடி டிராக்கிற்கு நாகேஷ் - மனோரமா ஜோடி , இவர்களுக்கு ஒரு டூயட் பாட்டும் உண்டு , பாடும் வானம்பாடி படத்தில் ஆனந்த் ஆபு போட்ட பல ஸ்டெப்களை அந்தக்காலத்திலெயே சீட்டுக்கட்டு ராஜா பாட்டில் பிரமாதமாக போட்டவர் நாகேஷ்
கே வி மகாதேவன் இசையில் 7 பாடல்கள் , அவற்றில் 5 செம ஹிட் நாயகியைப்பார்த்து நாயகன் வர்ணிக்க வேண்டிய சூழலில் கூட தத்துவப்பாட்டு பாடுவது ஆச்சரியமான விஷயம்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனைக்கொல்ல நாயகனின் உடையை சிறுத்தைக்கு மோப்பம் பிடிக்கக்கொடுத்து பழக்கும் வில்லன் பின் நாயகன் ஒரு சிறுத்தையை சுட்டதும் இன்னொரு சிறுத்தை பழி வாங்க நாயகன் வீட்டுக்குப்போகும் என கணித்து அதற்கு வழி வகை செய்யும் காட்சிகள் பரபரப்பானவை
2 மிக மிக சாதாரனமான ஒரு கதைக்கருவை விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றிப்படம் ஆக்கிய லாவகம்
3 காமெடியனுக்கு ஒரு சோலோ சாங்க் டான்ஸ் கொடுத்து மேற்கத்திய பாணி நடனம் அமைத்த விதம்
4 காச நோயால் பீடிக்கப்பட்ட நாயகி தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்ற விஷயத்தை வைத்து அமைக்கப்பட்ட செண்டிமெண்ட் சீன்ஸ் தாய்க்குலங்களைக்கவரும் விதத்தில்..
செம ஹிட் சாங்க்ஸ்
1 உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போஒராடலாம் ( ஹீரோ - ஹீரோயின் ஜங்க்சன் சாங் )
2 மஞ்சள் முகமே வருக ( வர்ணனைப்பாடல் )\
3 மெதுவா மெதுவா தொடலாமா? ( மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதும் கொண்டாட்டப்பாடல் )
4 சீட்டுக்கட்டு ராஜா ( காமெடியன் டூயட் )
5 கண்ணனுக்கு எத்தனை கோவிலோ ? ( ஹீரோயின் டவுட் சாங் )
6 கதா நாயகன் கதை சொன்னான் ( டூயட் )
7 வெள்ளி நிலா முற்றத்திலே ( தாலாட்டு )
ரசித்த வசனங்கள்
1 கணவன் மனைவிக்கு பணி விடை செய்யக்கூடாது என்று சட்டமா? என்ன? நான் செய்யப்போகும் உதவிகளால் உனக்கு வந்திருக்கும் நோய் ஓடோடிப்போய்விடும்
2 தாய்ப்பாசத்தை மறந்து ஒரு குழந்தையால் இருக்க முடியும், ஆனால் பெற்ற பாசத்தை மறந்து ஒரு தாயால் இருக்க முடியாது
3 பெற்றால் மட்டும் போதுமா? பேணி வளர்க்க வேண்டாமா?
4 கணவர் வீட்டுக்குப்போகாதே என தந்தை எப்போதும் கூற மாட்டார் , உலக வழக்கத்தில் இருந்து மாறாதீர்கள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 எந்தக்குழந்தையாக இருந்தாலும் அது குழந்தை செல்வம் தான் என்னும் கருத்தை வலியுறுத்த வேண்டியவர் இப்படத்தில் ஆண் குழந்தைதான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பது அபத்தம்
2 அவ்வளவு பெரிய பணக்காரர் ஆன நாயகன் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியைக்கவனிக்க ஒரு நர்சை நியமித்துக்கொளள மாட்டாரா?
3 படம் முழுக்க வேட்டைக்காரன் யூனிஃபார்ம்லயே சுற்றும் நாயகன் ஹாஸ்பிடலில் பிரசவ டைமிலாவது மஃப்டியில் இருக்க மாட்டாரா? அப்போதும் யூனிஃபார்ம்
4 டீக்கடைக்கு ரெகுலர் கஸ்டமர் வருவது போல சிறுத்தைப்புலி அடிக்கடி நாயகன் பங்களாவில் ஹாலை
க்கடந்து மாடிப்படி ஏ012றி பெட்ரூம் வரை வருவதெல்லாம் மரணக்காமெடி. ஒரு வாட்ச்மேன் கூட இருக்க மாட்டானா?
5 விலங்குகளுக்கு மோப்ப சக்தி உண்டு , மனித வாடையை அது சுலபமாக நுகரும், ஒளிந்து எல்லாம் அதை ஏமாற்ற முடியாது
6 இந்தக்காலத்து மாப்பிள்ளைங்க மனைவிங்கற ஸ்பேனர் எடுத்து மாமனார்ங்கற நெட்டை காலி பண்ணிடறாங்க
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சாதாரண கதைதான் , கமர்ஷியல் மசாலா அயிட்டங்கள் கலந்து சரி விகிதத்தில் தந்திருப்பதால் பார்க்கலாம் , ரேட்டிங் 2.5 / 5
Vettaikkaran | |
---|---|
Directed by | M. A. Thirumugam |
Story by | Aaroor Dass |
Produced by | Sandow M. M. A. Chinnappa Thevar |
Starring | |
Cinematography | N. S. Varma |
Edited by |
|
Music by | K. V. Mahadevan |
Production company | |
Distributed by | Emgeeyar Pictures |
Release date |
|
Running time | 157 minutes |
Country | India |
Language | Tamil |