Showing posts with label வெற்றிவேல் -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வெற்றிவேல் -சினிமா விமர்சனம். Show all posts

Friday, April 22, 2016

வெற்றிவேல் -சினிமா விமர்சனம்


ஹீரோ , ஹீரோ தம்பி 2 பேரும் தலா தனித்தனியா ஒவ்வொரு பொண்ணை லவ்வறாங்க. தம்பியோட லவ்வரை கடத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முயற்சிக்கும்போது ஆள் மாறாட்டத்தில் வேற  பொண்ணைக்கடத்திடறாங்க. 


ஆள் மாறாட்டமா கடத்தப்பட்ட பொண்ணோட அப்பா அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கறார். பிரச்சனை பெருசாகுது.தன்னால வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு தான் தான் வாழ்வளிக்கனும்னு ஹீரோ பாதிக்கப்பட்ட பொண்ணோட கழுத்தில்  தாலி கட்டிடறாரு. இடைவேளை


 இதுக்குப்பின் ஹீரோ காதலிச்ச பொண்ணோட நிலைமை என்ன? தம்பியோட லவ்வர் கதை என்னாச்சு என்பதை வெண் திரையில் காண்க 


ஹீரோவா எம் சசிகுமார். ஓப்பனிங் சாங்கில் சூரியன் சுட்டெரிக்க இண்ட்ரோ தர்றார், டான்ஸ் ஆடறார். நட்பு , துரோகம் வசனம் எல்லாம் பேசாம காலந்தள்றார். காதலிப்பதும்  உருகுவதும் எடுபடலை. அவர் அந்த ஆள் மாறாட்டப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் காட்சி நல்லாருக்கு.




 ஹீரோயினா  மியா ஜார்ஜ். கேரளத்துப்பைங்கிளி, பேச்சிலும், கூந்தலிலும் மலையாள வாசம்  இவரது அழகான முகம் மனசில் தங்குது. வாய்ப்பு அதிகம் இல்லை


ஹீரோவுக்கு மனைவியா வர்றவர் பேரு தெரியலை.  ( ரேணுகா?)  நல்ல ரவுண்ட் ஃபேஸ், இவருக்கு சோக நடிப்பு தான் வரும் காட்சி எல்லாம்.

 ஹீரோ தம்பி காதலியா வர்றவரும் நல்ல ஃபிகர் தான்


 பிரபு , இளவரசு  என கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள் நடிப்பு கனகச்சிதம் 

 பாடல்கள்  இசை ஒளிப்பதிவு எல்லாம்


ஹீரோவோட தம்பியா வர்றவர், அவர் காதலியா வர்றவர் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு





சபாஷ்  டைரக்டர்


1  தம்பி ராமய்யா மிக்சர் பார்ட்டி என்பதும் அவர் தன் சம்சாரத்தை எதுவுமே செய்வதில்லை என்பதை வைத்து புனையப்படும் காமெடி டிராக் கலக்கல். நீ வீட்டுக்குப்போய் சும்மா தானே இருக்கப்போறே? என்ற டயலாக்கை ஆளாளுக்கு சொல்வது கலாய்ப்பது


2   சமுத்திரக்கனி அண்ட் கோ செய்யும் கலாட்டாக்கள் கல கலப்பு


3   ஹீரோ மேரேஜுக்குப்பின்னும் மனைவியை தொடாமல் இருப்பதும் அத்ற்கு அவர் சொல்லும் காரணமும், இமேஜை தூக்கி நிறுத்துது

4   பிரபு  இளவரசு இருவரும் இறுக்கமான  சூழலில் பேசும் வசனங்கள் நல்ல டைரக்சன்




 லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 காதலிச்ச பொண்ணை திருவிழாக்கூட்டத்தில்  தூக்கனும், இந்த ப்ராஜக்ட்ல பொண்ணோட  ஃபோட்டோ இல்லை என்பதும் குத்து மதிப்பாக கடத்தலில் இறங்குவதும் அபத்தம்.ஃபோன் ல ஃபோட்டோ வெச்சிருந்தேன். அது எரேஸ் ஆகிடுச்சு என்பதெல்லாம் டுபாக்கூர்

2  கடத்தப்பட்ட பெண் நீ லவ்வும் பெண் தானா? என பார்ட்டியிடம் கன்ஃபர்ம் பண்ணாம கார்ல  கூட்டிட்டுப்போவது  ஓவர்


3  ஒரு பொண்ணைக்கடத்த ஆள் அரவம் இல்லாத இடம் தான் சரி. ஸ்பாட் செலக்சனே தப்பு. ஊர் திருவிழாக்கூட்டம்  ரொம்ப ரிஸ்க்

4  நாலு பேர் முன்னால் அவமானப்பட்ட அந்த ஆள் மாறாட்டப்பொண்ணோட அப்பா தன் பொண்ணு வந்ததும் என்ன நடந்தது? என கேட்காமயே தற்கொலை செய்துகொள்வது ஏன்? என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என திடகாத்ரமாய்  நம்புபவர் ஏன் பெண்ணிடம் எதுவும் கேட்கவில்லை?


5  ஊர் மக்கள்  ஹீரோவை அடிக்கும்போது ஹீரோ வாயைத்திறந்து நடந்த உண்மையை சொல்லவே இல்லையே ஏன்?


6  காதலி கடத்தும் படலம் நாடோடிகள் ரீமிக்ஸ் ஆக இருப்பதும் அதே பட பாட்டான சம்போ சிவ சம்போ பாட்டு பிஜிஎம்மை யூஸ் பண்ணியதும்  தவறான தேர்ந்தெடுப்பு

7   பிரபு தன் தங்கை ஒரு துரோகி என்பதை உணரும் காட்சி எல்லாம் படு நாடகத்தனம். அந்தக்கால டிராமா





தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்
வெற்றி வேல் =141 நிமிடங்கள் @ திருவனந்த புரம் தன்யா 11 15 AM

2 அடியே !உனைப்பாத்திட பாத்திட நான் குறைஞ்சேனே வே




நச் டயலாக்ஸ்


1 காதல் ,கல்யாணம் இதெல்லாம் இல்லாம இருந்தாதான் வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும் #,வெ வே

2 யாராவது உன்னைக்குப்புறப்படுக்க வெச்சி அயர்ன் பண்ணுனாங்களா?

நீங்கதானே விறைப்பா.வரச்சொன்னீங்க? வே

3 இவரு தான் ஒத்தாசை

உங்களுக்கு ஒத்தாசையா இருக்காரு சரி.என்ன பேரு?
அவரு பேரே ஒத்தாசைதான் வே

4 ஹலோ, உங்க கிட்டே 1 சொல்லனும்

சொல்லுங்க
மொபைல்ல சொல்லற மேட்டர் இல்லை, முகத்தைப்பார்த்து சொல்லனும் # வெ வே


5 விரல்ல புண் வந்தா வலிக்கத்தான் செய்யும், அதுக்காக விரலை வெட்டிட முடியுமா? #வெ வே


6   இங்கே ஜாதி ரொம்ப முக்கியம். எந்த மத ஆளும் மதம் மாறலாம், ஆனா எந்த ஜாதிக்காரனும் ஜாதி மாற முடியாது @ வெ வே



7  

 அடிக்க ஆள் அனுப்பறதை அரிவாளை தூக்கறதைவிட்டுடு. இல்லை தூக்கறது நீயா  இருந்தாலும் அறுக்கறது நானா தான் இருப்பேன்


8   காதலிக்கும் நாம 2 பேருமே பரஸ்பரம் நம்ம காதலை சொல்ல முடியாத சூழல் அமைஞ்சது - இயற்கை கொடுத்த  வரமாவும் இருக்கலாம் # வெ வே


9  பகைமை பாராட்டும்  இரு சொந்தங்கள் தங்கள் பகையை மறந்து சேர அச்சாரமாய் எதிரி கையால்   உப்பு வாங்கி பானையில் வைப்பது நம் சம்பிரதாயம் # வெ வே


 சி.பி கமெண்ட் -  வெற்றி வேல் - எம் சசிகுமார் நடிப்பில் கிராமத்துக்காதல் கதை , ஃபேமிலி மெலோ டிராமா, பி, & சி செண்ட்டர் ஆடியன்சுக்காக. விகடன் மார்க் =40 , ரேட்டிங் = 2.5 / 5


 குமுதம் = ஓக்கே