Showing posts with label வெற்றிநடை ஜாக்கி (2015)-சினிமாவிமர்சனம்(மலையாளம்). Show all posts
Showing posts with label வெற்றிநடை ஜாக்கி (2015)-சினிமாவிமர்சனம்(மலையாளம்). Show all posts

Friday, September 25, 2015

வெற்றிநடை ஜாக்கி (2015)-சினிமாவிமர்சனம்(மலையாளம்)

நடிகர் : மோகன்லால்
நடிகை :பாவனா
இயக்குனர் :அமல் நீரத்
இசை :கோபி சந்தர்
ஓளிப்பதிவு :அமல் நீரத்
மோகன்லால் ஒரு இண்டர்நேஷனல் கேங்ஸ்டர். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து கொண்டே உலகத்தில் உள்ள கேங்ஸ்டர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார். இந்நிலையில், கேரளாவின் முதலமைச்சராக இருக்கும் நெடுமுடி வேணுவின் மருமகனான மனோஜ் கே.ஜெயன் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இவரை யார் கடத்தினார்கள்? என்பது மர்மமாகவே இருக்கவே, போலீசும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. 

இந்நிலையில், மனோஜ் கே.ஜெயனின் மனைவியான ஷோபனா, தனது கணவன் கடத்தலை போலீஸ் விசாரிப்பதை தனது அண்ணன் தடுப்பதை அறிகிறாள். உடனே, தனது நண்பரான மோகன்லாலிடம் தனது கணவனை மீட்டுத்தருமாறு கூறுகிறாள். மோகன்லால் தனது அடியாட்களை வைத்து மனோஜை கடத்தியவர்களை தேடுகிறார்.

அப்போது, மனோஜை கடத்தியது, ரோசாரியா பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் சம்பத் மற்றும் வகில் ஆகியோர் என்பதை அறிகிறார். அவர்களிடமிருந்து சண்டை போட்டு மனோஜை மீட்கிறார் மோகன்லால். இதனால் கோபமைடந்தை ரோசாரியா பிரதர்ஸ் மோகன்லாலை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். 

மோகன்லாலை தீர்த்துக்கட்ட ரோசாரியா பிரதர்ஸ் ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இறுதியில், மோகன்லால் அவற்றையெல்லாம் முறியடித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இந்திய சினிமாவில் எந்தவிதமான கதாபாத்திரத்தையும் அசால்ட்டாக செய்து காட்டக்கூடிய மோகன்லால், இப்படத்தில் கேங்ஸ்டராக காட்டவேண்டும் என்பதற்காக கோட் சூட் அணிந்து வெறுமனே அலையவிட்டிருக்கிறார் இயக்குனர். தனக்கு மோகன்லாலை வைத்து இயக்க கிடைத்த வாய்ப்பை இயக்குனர் அமல் நீரத் தவறவிட்டு விட்டார் என்றே கூறலாம்.

படத்தில் சம்பத், நெடுமுடி வேணு, ஷேபானா, மனோஜ் கே.ஜெயன், சுமன், பாவனா என எண்ணற்ற கதாபாத்திரங்கள் இருந்தாலும் படத்தின் கதையில் வலுவில்லாமல் இருக்கிறது. கேங்ஸ்டர் படத்துக்கான வழக்கமான பாணியையே இப்படத்திலும் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருந்தால் ஓரளவுக்கு ரசித்திருக்கலாம்.

இருப்பினும், இப்படத்தை பார்க்க முடியாது என்று சொல்ல முடியாது. மோகன்லாலின் நடிப்பு, வித்தியாசமான படப்பிடிப்பு இடங்கள் என இப்படத்திலும் பார்க்க கூடிய முக்கிய விஷயங்களும் இருக்கிறது. பெரிய ஆக்ஷன் திரில்லராக எடுக்க வேண்டிய படத்தை வலுவான கதையில்லாம் படமாக்கியதுதான் ஏமாற்றம். 

மற்றபடி ‘வெற்றி நடை ஜாக்கி’ சுமார்தான்.


நன்றி-மாலைமலர்