ஒரு ஏரியாவில் 2 டம்மி பீஸ் ரவுடிங்க பெரிய ரவுடிங்க மாதிரி ஃபார்ம் ஆகனும்னு நினைக்கறாங்க , ஸ்கெட்ச் போட்டுக்குடுக்கறது தான் அவங்க பார்ட் டைம் ஜாப் , மெயின் ஜாப் எல்லாமே. அப்பேர்ப்பட்ட வெட்டாஃபீசுங்க கிட்ட ஒரு பொண்ணை தூக்கச்சொல்லி பிராஜெக்ட் வருது , யாருன்னு பார்த்தா ஹீரோ ஒன் சைடா லவ்விட்டு இருக்கும் ஹீரோயின் , அதுக்குப்பின் என்ன ஆகுது? என்பதுதான் கதை
ஹீரோவா கிருஷ்ணா , சமீபகாலமா இவர் கதைத்தேர்வு நல்லா அமைஞ்சாலும் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்ல, இதிலும் டிட்டோ
இவரது டயலாக் டெலிவரி , பாடி லேங்குவேஜ் எல்லாமே ஓக்கே ரகம், காதல் காட்சிகளில் மட்டும் நடிப்பு வர்லை
காமெடியன் கம் ஃபிரண்டா கருணாகரன்,அவருக்கு அதிக வேலை இல்லை ,. கொஞ்ச சீனே வந்தாலும் மொட்டை ராஜெந்திரன் , யோகி பாபு 2 பேரும் ஏதோ சிரிக்க வெச்சுடறாங்க
நாயகி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை , திரைக்கதைல நாயகிக்கு , காதலுக்கு அதிக முக்கியத்துவம் தராம ரவுடியிசம் , ஸ்கெட்ச் போடுவது பற்றிய டீட்டெயிலிங் அதிகமா இருப்பதால் மெயின் கதை அடிபடுது
ராதா ரவி அனுபவம் மிக்க நடிப்பு , அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் காட்சியில் நடிப்பு கன கச்சிதம்
பாடல் இசை சராசரி , ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஓக்கே , படம் பூரா யாராவது எதையாவது தொன தொணனு பேசிட்டே இருப்பது அலுப்பு , கொஞ்சம் அமைதியா , மவுனமா கேப் விட்டு அடிச்சா என்ன?
நச் டயலாக்ஸ்
1 பிடிச்ச பொண்ணை பத்து செகண்ட் பாத்தாலும் பச்சக் னு மனசுல ஒட்டிக்குவா #Veera
2 எந்த வேலையா இருந்தாலும் பெண்டிங் வைக்கலாம் ,ஆனா ஸ்கெட்ச் போடற வேலை ல மட்டும் பெண்டிங்கே வைக்கக்கூடாது,நமக்கே ஸ்கெட்ச் போட்ருவாங்க #Veera
3 ஊருக்கே ஸ்கெட்ச் போடறவனை நாம ஸ்கெட்ச் போடப்போறோம் #Veera
4 எதுவுமே தெரியாதுனு ஒத்துக்குங்க முதல்ல,அப்பதான் தொழில் கத்துக்க முடியும் #Veera
5 நீதான் கடை ஓனரா?
ஆமா,
மாமூல் எடு
நம்ம கடைல அதெல்லாம் விக்கறதில்லைங்களே? #Veera
6 அரசியல்ல எவனாவது உன்னை எதிர்த்தா முதல்ல அவன் தோள்ல கை போடு ,அசந்த நேரத்துல ஆளையே,போட்ரு #Veera
7 பிரச்னை பண்ணக்கூடாதுனு நான் சொல்லலை.நாமதான் பிரச்னை பண்றம்னு மத்தவங்களுக்குத்தெரியாம பண்ணனும்,அதான் அரசியல் #Veera
8 அந்தப்பொண்ணு உன்னைத்தான் லவ் பண்ணுதுனு எதை வெச்சு சொல்றே?
நான் கேட்டப்ப எல்லாம் கரெக்டா டைம் சொல்லுச்சு ,அப்போ அது லவ் தானே?
சுத்தம் # veera
9 எங்கப்பா பேரு பாக்சர் ராஜேந்திரன்
எதுக்கு ஒரு ஆளுக்கு 2 பேரு வெச்சிருக்காங்க?
ஹய்யோ ,ஒரு பேருதான் #Veera
10 இவனுங்க எல்லாம் ரவுடின்னா அப்ப நாம யாரு? #veera
11 மொட்டை ராஜேந்திரன் − நான் அப்பப்ப அடுத்த வீட்டு சுவரேறி குதிப்பேன்
யோகிபாபு − பெரிய ரவுடியோ?
அதெல்லாமில்ல,ஆண்ட்டீங்களை கரெக்ட் பண்ண #veera
12 லவ் பண்றவன் உயிருக்கு பயப்படக்கூடாது,உயிருக்கு பயப்படறவன் லவ் பண்ணக்கூடாது #veera
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஹீரோயினோட அப்பாவுக்கு 3 சம்சாரம் ,கழக ரெப்ரென்ஸ் #veera
2
பேய்ப்படம் கிடையாது,ஆனாலும்
பயமா இருக்கு ,நான்,தியேட்டர் ஓனர் ,ஆபரேட்டர் ,டிக்கெட் கிழிப்பவர் ,கேண்ட்டீன் மேனேஜர் 5 பேர்தான்
சபாஷ் டைரக்டர்
1 ஸ்கெட்ச் போடும் அந்த டீட்டெய்லிங் ரொம்ப கனகச்சிதம்
2 ராதாரவி , தம்பி ராமய்யா கேரக்டர்கள்
லாஜிக் மிஸ்டேக்ஸ்திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 ஹீரோ ஹீரோயின் காதல் அழுத்தமா சொல்லப்படலை
2 நாயகியின் அப்பாவுக்கு 3 சம்சாரம் என்பது கதைக்கு எந்த விதத்தில் லிங்க் ஆகுதுன்னு தெரில
3 பல துரோகங்களை சந்திச்ச தாதா ராதா ரவி ஹீரோ தன்னை கொல்ல வரும்போது அதை எதிர்பார்க்காமல் ஹார்ட் அட்டாக்கில் இறப்பது நம்ப முடியல . அதுவரை எந்தக்கொலையுமே செய்யாத ஹீரோ செத்துப்போன டெட் பாடில கத்தியால ரத்தம் வர குத்திக்கதகளீ ஆக்குவதும் நம்பும்படி இல்லை
சி.பி கமெண்ட்-வீரா (first Blood) - லோக்கல் ரவுடி கோஷ்டிகள் ஸ்கெட்ச் போட்டு ஆளைத்தூக்கும் கதை,சுவராஸ்யம்தான்,ஆனா இழுவை,பெண்களுக்கு பிடிக்காது,சி செண்ட்ர் பிலிம் ,விகடன் 40 ,ரேட்டிங் 2.5 / 5
யோகிபாபு,மொட்டை ராஜேந்திரன் ,கருணாகரன் இருந்தும் காமெடி மிஸ்ஸிங்
டுடே ரிலீஸ் ரிசல்ட்
1 நாச்சியார் − பாலாவுக்கு எதிர்பாராத வெற்றி,பெண்களும் பார்க்கும் தரத்தில் ,விகடன் 41 ,ரேட்டிங் 2.75 / 5
2 நாகேஷ் திரையரங்கம் − கோஸ்ட் த்ரில்லர். பி & சி ல மீடியமா ஓடிடும் விகடன் 40 ,ரேட்டிங் 2.5 / 5
3 வீரா − ரவுடியிச ஸ்கெட்ச் கதை ,விகடன் 40 , 2.5/5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)
வீரா @ ஈரோடு"சூரம்பட்டி சங்கீதா ( சங்கூதற வயசுல சங்கீதா)
=========