சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்
அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத்
தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம்
அடைந்தார். அவருக்கு வயது 75.
சேலம் மாவட்ட திமுக செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல்
நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்
இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம்.
அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம்
ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல்
பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம்
ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.
1962
முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை
அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய
சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற
வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011
ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு
நடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம்
தோற்றார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நில அபகரிப்பு
வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்
மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதை நீதிமன்றம் ரத்து செய்தது.
வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்
நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள்
துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி
கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும்
ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதே தினத்தில் தான் திமுக மூத்த தலைவரான முரசொலி மாறனும் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: திமுகவின் சேலம் 'தூணாக' விளங்கிய மறைந்த முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் பயணம் சலசலப்புகளோடும் சர்ச்சைகளோடும்
பயணித்த ஒன்று...
திமுகவில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து
பணியாற்றக் கூடிய திமுக தலைவர்கள் சிலர்தான்.. அந்த வகையில் பேராசிரியர்
அன்பழகன், கருணாநிதி ஆகியோருக்கு அடுத்த நிலை தலைவராக இருந்தவர் வீரபாண்டி
ஆறுமுகம். 1957ம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக இருந்தாலும் 1958ம் ஆண்டு
முதல் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பதவியில் இருந்து வந்திருக்கிறார்.
பறவைக்காய்ச்சல் காரணமா?
இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக மரணடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957
முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர்
கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு
செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக
பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக
பணியாற்றினார்.
3 நாள் துக்கம்:
வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க., சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் கடையடைப்பு
: வீரபாண்டி ஆறுமுகம் காலமானதையடுத்து, சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஸ்டாலின் இரங்கல்:
வீரபாண்டி ஆறுமுகம் மரணடைந்ததை தொடர்ந்து, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மரணம் தி.மு.க.,விற்கு இழப்பு என கூறியுள்ளார்.
குண்டர் சட்டம்
அதிமுகவின்
தற்போதைய ஆட்சிக் காலத்தில் சிறைவாசத்தில் சிக்கிய திமுக பெருந்தலைகளில்
வீரபாண்டி ஆறுமுகமும் முக்கியமானவர். இவர் மீது குண்டர் சட்டம் போட்டும்
ஒரு கை பார்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
54 ஆண்டு கால பொதுவாழ்வு
சுமார்
54 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான வீரபாண்டி ஆறுமுகம் சேலம்
மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக வைத்திருந்தவர் என்பது மிகையல்ல.. அதே
நேரத்தில் சேலத்தில் அவருக்கு போட்டியாக எவரையும் வளரவிட்டதும் இல்லை.
சேலத்தில் திமுக என்றால் தானும் தனது மகன்களும் மட்டுமே என்ற நிலையையும்
உருவாக்கி வைத்திருந்தார்.
இறுதிக்கால சர்ச்சைகள்
வீரபாண்டி
ஆறுமுகத்தைப் பொறுத்தவரை கட்சியில் சீனியர் என்பதால் கருணாநிதியுடன்
மல்லுக் கட்டக் கூடியவர். இந்த சீனியாரிட்டியை மனதில் வைத்துக் கொண்டு
கருணாநிதியும் கண்டு கொள்ளாமல்தான் இருந்து வந்தார். அதேபோல் திமுகவில்
கருணாநிதி கோஷ்டியில்தான் தொடர்ந்தும் இருந்து வந்தார் அவர்.
மு.க.ஸ்டாலினைத்தான்
அடுத்த திமுக தலைவராக முன்னிலைப் படுத்தப்படும்போதெல்லாம், வீரபாண்டி
ஆறுமுகம் போன்றவர்கள் எப்படி ஏற்பார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
இந்நிலையில் மதுரையில் அழகிரி தனது படை பரிவாரங்களுடன் தனி கோஷ்டியாக
செயல்பட சேலத்தில் வீரபாண்டியும் அழகிரி கோஷ்டியாகவே செயல்பட்டு வந்தார்.
இந்த
ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு
செய்ய மு.க.ஸ்டாலின் முனைப்பு காட்டிய போது அவருடன் மல்லுக்கட்டிய இரண்டு
மாவட்டங்கள் மதுரையும் சேலமும்தான்! சேலத்தில் திமுக இளைஞரணிக்கான
விண்ணப்பங்களை தமது மகன் வீரபாண்டி ராஜாதான் வாங்குவார் என்று அறிக்கை
வெளியிட உச்சகட்ட கோஷ்டிப் பூசலில் கடுப்பாகிப் போன கருணாநிதி,
வேறுவழியில்லாமல் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் எச்சரிக்கைவிட வேண்டிய
நிலைக்குப் போனது.
இந்த விவகாரத்தில் திமுகவை விட்டே வீரபாண்டி ஆறுமுகம் நீக்கப்படக் கூடும் என்ற நிலையே வந்தது. தமது கடைசி காலத்தில் தான் நேசித்த தலைவர் கருணாநிதியிடம் 'சங்கடங்களையும்' எரிச்சலையும் சந்தித்தவர் என்பது மறைக்க முடியாத ஒன்று.
அண்ணன்' அழகிரி கோஷ்டி...
பேரறிஞர்
அண்ணா தலைமை ஏற்று திமுகவில் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் தனது
கடைசிகாலத்தில் அண்ணன் 'அ' என்றழைக்கப்படும் கருணாநிதியின் மூத்த மகன்
அழகிரி கோஷ்டியில் ஐக்கியமானது ஒரு சோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அழகிரி
நேரில் சந்தித்து தம் பக்கம் சாய்த்துக் கொண்டு போனார்.
அதிரடி
அரசியல்வாதியாக பெயரெடுத்த வீரபாண்டி ஆறுமுகம் 'அடாவடி'
அரசியல்வாதியாகவும் இருந்தார். கடந்த திமுக ஆட்சியில் சேலத்தில் 6 பேர்
கொல்லப்பட்ட வழகில் அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தம்பி மகன் என்பதற்காகவே பாரப்பட்டி
சுரேஷை ரொம்பவே ஆதரித்தவரும் வீரபாண்டி ஆறுமுகம்தான்! இந்த 6 பேர்
6 பேர் கொலை வழக்கு
ஸ்டாலினை எதிர்த்து...
நீக்கும் நிலை...
இந்த விவகாரத்தில் திமுகவை விட்டே வீரபாண்டி ஆறுமுகம் நீக்கப்படக் கூடும் என்ற நிலையே வந்தது. தமது கடைசி காலத்தில் தான் நேசித்த தலைவர் கருணாநிதியிடம் 'சங்கடங்களையும்' எரிச்சலையும் சந்தித்தவர் என்பது மறைக்க முடியாத ஒன்று.
நன்றி - தினமலர் , தட்ஸ் தமிழ்
டிஸ்கி - ஈரோடு டூ சேலம் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் அந்த ஏரியா மக்கள் பயணிக்கவும்