1,விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!
விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக
போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர்
என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல
கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு
இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர்
அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன்
மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் போராடும் போராளியை
தவறாக சித்தரித்து உள்ளனர்.
இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை
புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ,
அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம்
படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ
அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில்
காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல்
விட்டு விட்டார்கள். எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும்
தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான்
என்று கூறியுள்ளார். அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப
தூண்டுவது போல அமைந்துள்ளது
2. .நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!
விஸ்வரூபம்
படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும்,
இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக
கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில்
ரிலீஸாகியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன்.
அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு
ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும்,
தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும்
கடமைப்பட்டுள்ளேன்.
விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.
இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.
விஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.
விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.
இவ்வாறு கமல் கூறினார்.

3.பிரமாண்ட இயக்குனரை மிரட்டிய கமலின் விஸ்வரூபம்! முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ்
ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில்
பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையமாக வைத்து
எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ்,
சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். இப்படம் ரிலீஸ்
ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை
செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று
கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல
தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. தமிழகம், புதுவை தவிர்த்து
பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம்
ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல்
ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.

தமிழில் சினிமாவைப்பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு இணையான படங்களை தருபவர் என்ற பெருமை இதுவரை டைரக்டர் ஷங்கருக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் கமலின் விஸ்வரூபம் படம் வந்த பிறகு அந்த பெயரை போய் விட்டது. ஷங்கர் படம் ஹாலிவுட் படம் மாதிரி என்றால், கமலின் படம் ஹாலிவுட் படமே என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதோடு, விஸ்வரூபம் படத்தைப்பார்த்த ஷங்கரும் அதிர்ச்சியடைந்து போய் இருக்கிறார். கமல் என்ற நடிகருக்குள் இத்தனை பெரிய இயக்குனரா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அவர், ஒரு டைரக்டராய் நாம் இன்னும் நிறைய யோசிக்க வேண்டும் போலிருக்கிறதே என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.
அதன்காரணமாக, ரஜினியை வைத்து தான் இயக்கிய எந்திரன் படத்தை விடவும் இப்போது விக்ரமைக்கொண்டு இயக்கி வரும் ஐ படத்தை இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். அதனால் இதுவரை 80 கோடி பட்ஜெட்டில் ஐ படத்தை பண்ண பட்ஜெட் போட்டு வைத்திருந்தவர், இப்போது 145 கோடி வரை பட்ஜெட் உயர்த்தியிருக்கிறாராம். அதோடு, படத்தை உலக அளவில் பப்ளிசிட்டி செய்து வெளியிட்டு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
4.விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி...?!! - விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும்,
இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து
தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடைகள் பல கடந்து கமல்ஹாசனின்
விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ்
ஆனது. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம்
தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது. படமும் ஹாலிவுட்
தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி
வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி, இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

5.விஸ்வரூபம் 2க்கு பிறகு ஹாலிவுட்! கமல் முடிவு!! விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்தை முடித்த பிறகு ஹாலிவுட் படத்தில்
நடிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். பெங்களூருவில் நடிகர்
கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விஸ்வரூபம்
பிரச்னையில் திரையுலகம் மற்றும் பத்திரிகைகள் எனக்கு ஆதரவாக இருந்ததாக
என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூப பிரச்னை திடீரென்று பொது
பிரச்னையாக மாறி விட்டது. கமல்ஹாசனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டுமா?
என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.
பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வாரம் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது. விஸ்வரூபம் இந்தி படம் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் வெளியாகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விஸ்வரூபம் தமிழ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் படத்தை முதலில் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பாக டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு விட்டது. டி.டி.எச். மூலம் படம் வெளியிடும் புதிய முறை இன்று இல்லாவிட்டாலும் நாளை அமலுக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
அடுத்தபடியாக ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னேவுடன் பணியாற்ற உள்ளேன். ஆனால், எனது விஸ்வரூபம் படத்தின் 2வது பாகத்தை முடித்த பிறகே அவருடன் பணியாற்றுவேன். இந்த ஆண்டுக்குள் விஸ்வரூபம் 2வது பாகம் வெளியாகும் என்று நம்புகிறேன். அந்த படம் இந்தியாவை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும். ஆனால், விஸ்வரூபம் முதல் பாகத்தை போன்று விமர்சனங்கள் எதுவும் வராத வகையில் பார்த்து கொள்வேன், என்றார்.

டிஸ்கி - டைட்டிலில் வந்த பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர் 2ம் தனித்தனி மேட்டர்