Showing posts with label விஷால். Show all posts
Showing posts with label விஷால். Show all posts

Saturday, May 12, 2018

இரும்புத்திரை - சினிமா விமர்சனம்

Image result for irumbu thirai wall posters
ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர், அவர் அடிக்கடி எதுனா என்கவுண்ட்டர் போட்டு சஸ்பென்சன் ஆர்டர் வாங்கறவரு. ஹீரோவோட தங்கைக்கு திருமணம், செலவுக்கு 10 லட்சம் தேவை. 4 லட்சம் அப்பாகிட்டே இருக்கு, 6 லட்சம் ஹீரோ ரெடி பண்ணனும், சஸ்பென்சன்ல இருப்பதால் லோன் கிடைக்கலை.அப்பா பேரில் பர்சனல் லோன் வாங்க முடியாது, ஏன்னா அவருக்கு 60 வயசு , 50 வயசுக்கு மேல இருந்தா பேங்க்ல பர்சனல் லோன் கிடைக்காது, அதனால ஒரு ஃபோர்ஜரி கும்பல் அட்வைஸ்படி டம்மி அட்ரஸ்ல ஒரு கடை நடத்துவதா கணக்கு காட்டி ஃபோர்ஜரியா லோன் வாங்கறாங்க

 அந்த லோன் அமவுண்ட்டை ஒரு கும்பல் ஆட்டையைப்போட்டுடுது. இதை ஹீரோ எப்படி மீட்கறார்  அந்த ஃபோர்ஜெரி கும்பலை எப்படி பிடிக்கறார்? என்பதே கதை


 ஹீரோவா புரட்சித்தளபதி விஷால். இவரோட கேரியர்ல ஆம்பள மாதிரி படங்களை தவிர்த்தா முன்னேறலாம், பாண்டிய நாடு , துப்பறிவாளன் போன்ற படங்களே இவருக்கு நல்ல பெர் கொடுக்கும்.


மிலிட்ரிமேனாக இவர் வருவது ஓக்கெ. பாடி லேங்குவேஜ் எப்டியோ ஜிம் பாடி ஃபிட்.43 வயசானாலும்  அது வெளியே தெரியாத மாதிரி கட்டுமஸ்தான  உடம்பு, வில்லனுடனான வாக்குவாதம் , க்ளைமாக்ஸ் ஃபைட் அனல் பறக்குது, நயகியுடனான ரொமான்ஸ் ஓக்கே


 நாயகியா சமந்தா. தமிழ் சினிமான்னாலே லைலா, ஜெனிலியாக்கள் மாதிரி லூஸ் தனமான நாயகிதான் என்ற நியதியை மாற்றி கேசுவலா வர்றார், இவருக்கு ஒரு டூயட் கூட இல்லை என்பது ஏமாற்றம், 40 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்துட்டு நல்லா யூஸ் பண்ணீக்கலை டைரக்டர்


வில்லனா \ஆக்சன் கிங்  அர்ஜூன் அதகளம் பண்ணி இருக்கார் , இடைவேளை பிளாக் , க்ளைமெக்ஸ் ஃபைட் எல்லாம் அனாயசம்

 ரோபோ ஷங்கர் காமெடிக்கு. வல்கரா 2 டபுள் மீனிங் டயலாக் பேசி கடுபேத்தறார் ( உதா , விஷாலை பார்த்து = இவனுக்கு காலே இவ்ளோ பெருசா இருகே.....) ரோபோ ஷங்கருக்கு செட் ஆவது “ விடிகாலை 6 மணீ இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சு ரக காமெடி தான்


டெல்லி கணெஷ் அப்பாவா அமைதியா நடிச்சிருக்கார். 


ஒளிப்பதிவு , பின்னணி இசை பக்கா. வசனங்கள், ஆக்சன் காட்சிகள் படத்துக்கு பெரிய பலம்


 புதுமுக இயக்குநர் முதல் படத்துலயே சமகால சமூக பிரச்சனையை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாய் படம் ஆக்கியதற்கு சபாஷ்



Image result for samantha hot

நச் டயலாக்ஸ்


இன்னைக்கு இருக்கற டிஜிட்டல் உலகத்துல பிரைவசி க்கு இடமே இல்ல

உங்க போன் நெம்பர் எத்தனை பேருக்கு தெரியும்?னு நினைக்கறீங்க?

என்ன?ஒரு 25 பேர்..
30 லட்சம் பேர்க்கு தெரியும்


டாக்டர் பேரு ரதிதேவியா? ரொம்ப பழைய பீசா இருக்கும் போலயே?
பேரைப்பாத்தா பழைய கிராமபோன் மாதிரி இருக்கும்னு பாத்தா இன்ஸ்டாகிராம் மாதிரி இருக்கே?


காசில்லாதவன் 10 ரூபா க்கு டாப் அப் பண்ணா 3 ரூபா பிடிச்சுக்கறாங்க,காசு இருக்கறவன் 500 ரூ க்கு டாப் அப் பண்ணா புல் டாக் டைம் ,இது தான் உலகம் (ஜியோ சிம் ?)


5 மிலிட்ரி சரக்கு ஆர்மி ஆளுங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்
நானும் ஆர்மி தான் ,எனக்கு கிடைக்கலையே? ஏன்?
நான் ஓவியா ஆர்மீ


விவசாயிகளுக்கு நாங்க பர்சனல் லோன் தர்றதில்ல
விவசாயிகளை நீங்க மனுசனாவே மதிக்கறதில்லையே?


ஊர் பூரா கடன் வாங்கறவனை ஊர்ல யாரும் மதிக்க மாட்டாங்க,ஏன்?சொந்தப்பிள்ளையே மதிக்க மாட்டான்


8  லோன் வசூல் பண்ற முறைல மட்டும் உங்க தப்பு இல்ல.சும்மா இருக்கறவனுக்கு போன் போட்டு லோன் வேணுமா?னு கேட்டு கேட்டு அவனை கடன்காரன் ஆக்கறதே பேங்க் காரன் தான்


நம்ம நாட்டுப்பொண்ணுங்களை லவ் பண்றது கஷ்டம் ,கல்யாணம் பண்றது ஈசி,பாரீன் பைண்ணுங்களை லவ் பண்றது ஈசி ,கல்யாணம் பண்றது கஷ்டம்


10 நீ போடற ஓட்டு யாருக்குப்போய் விழனும்னு தீர்மானிக்கறதே நான்தான்


11 இந்தக்கால திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவை இல்லை,உன்னைப்பத்தி ஒரு தகவல் போதும்,உதா ஆதார்



Image result for samantha hot


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


விஷால் க்கு ் ஸ்டூடியோக்ரீன் ஞானவேல்ராஜன் மீது ஏதோ கடுப்பு போல.ஒரு உள் குத்து டயலாக்


ஹீரோ மிலிட்ரி ஆபீசர் ,அவரு டென்ஷன் பார்ட்டி .கோபப்படாம 21 நாள் இருக்கனும் .இந்த கான்செப்ட் போனவாரம் தான் ல பாத்தோம்.இப்ப அதை "அட்லி" வேலை பாத்து ல சுட்டாச்

3 ஆன் லைன் பரிவர்த்தனை ,ஆண்ட்ராய்டு போன் இரண்டையும் தவிர்க்கனும் என்பதுதான் படத்தின் மெசேஜ்.அதான் பாஜக எதிர்க்குது போல

Image result for samantha hot






சபாஷ் டைரக்டர்


1    சினிமாத்தனம் இல்லாம திரைக்கதை, ஹீரோ வில்லன் காம்போ காட்சிகள்


2  நாயகி நல்ல ஃபிகரா அமைஞ்சும்  டூயட் காட்சிகள் வைக்காதது 


3   படம் முழுக்க ரசிகனை நிமிர்ந்து உட்கார வைக்கும்படி விறு விறு திரைக்கதை




Image result for samantha hot
லாஜிக் மிஸ்டேக்ஸ்   திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1 − மிலிட்ரி ஆபீசராக பணிபுரியும் ஹீரோ வீட்டுக்கு பணமே தராதவர்,கெட்ட பழக்கம் ஏதும் இல்லை.ஆனா சேமிப்பு 10 பைசா இல்லை.6 லட்சம் ரூபா க்கு லோன் போடறார்.3 வருசம் × 12 மாசம் × சம்பளம் =? எங்க போச்சு?


 லாஜிக் மிஸ்டேக் 2 = ஹீரோ தன் அப்பா பேரில் லோன் வாங்க பேங்க் போறப்ப 60 வயசானவருக்கு பர்சனல் லோன் தர மாட்டோமகறாங்க.ஏன்?ஹீரோவோட தங்கை (21) ,அம்மா (54) வாங்கலாமே?


லாஜிக் மிஸ்டேக் 3− மாப்ளை வீட்ல 40 பவுன் சீர் கேட்கறாங்க.ஒரு பவுன் 25000 னா அதே 10 லட்சம் ஆகுது.கல்யாணச்செலவு எவ்ளோ ஆகும்னு கேட்டப்ப 10 லட்சம் போதும்கறாரே,அது எப்டி?

லாஜிக் மிஸ்டேக் 4− ஏடிஎம் பின் நெம்பர் ஹீரோவின் அப்பாவுக்கு தரப்படுது்.ஹீரோவோ ,அவர் அப்பாவோ அந்த பின் நெம்பரை மாற்றவே இல்லையே ஏன்?விதிப்படி அனைவரும் பின் நெம்பரை மாத்தனுமில்ல?

லாஜிக் மிஸ்டேக் 5 - ஃபோர்ஜரி ஆள் டம்மி அட்ரஸ் தர சொல்லும்போது ஹீரோ தான் குடி இருக்கும் ஏரியாவில் ஒரு அட்ரஸ் தரலாமே? அப்போ தானே வெரிஃபிகேசனுக்கு பேங்க்காரங்க வரும்போது சமாளீக்க வசதியா இருக்கும் ?ஃபோர்ஜரி பார்ட்டி தர்ற எங்கேயோ இருக்கும் ஏரியா அட்ரஸ்க்கு எப்படி ஒத்துக்கறார்<



லாஜிக் மிஸ்டேக் 6 − கரிசல் காட்டுப்பெண் போல் மாநிறமாக ஒப்பனை இல்லாத முகத்துடன் இருக்கும் ஹீரோவின் தங்கை தன் அப்பாவை ஹாஸ்பிடல்ல பாக்க வரும்போது பியூட்டி பார்லர் ல இருந்து வந்தவர் போல் செக்கச்சிவப்பாக இருப்பது எப்படி?


லாஜிக் மிஸ்டேக் 7− மிலிட்ரி ஆபீசர் 15 நாள் லீவ்ல இருக்கும்போது / சஸ்பென்சன்ல இருக்கும்போது லோன் பிராசஸ் பண்ணமுடியாதுனு ஒரு வசனம் வருது.அவர் மேல க்ரிமினல் கேஸ் இருந்தாதான் அது கரெக்ட்




Image result for samantha hot




சி.பி கமெண்ட் -இரும்புத்திரை− சுவராஸ்யமான திரைக்கதை.லட்டு மாதிரி சமந்தா இருந்தும் கதைக்கு சம்பந்தம் இல்லாம ஒரு டூயட் கூட இல்லை.ஏ ,பி செண்ட்டரில் ஹிட் ஆகிடும்.விகடன் 43 ,ரேட்டிங் 3/ 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 43


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)  3.5 / 5


இரும்புத்திரை @ கேரளா −சங்கணாச்சேரி தன்யா


=======









Wednesday, November 11, 2015

நடிகையை திருமணம் செய்துகொள்வது என்ன தப்பு இருக்கிறது.-அது எனக்குக்கிடத்த “வரம் “ - விஷால் சூசக பேட்டி

  காவிரி, இலங்கைத் தமிழர் உள்ளிட்ட பிரச்னைகளில் எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த மாட்டோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியும் வந்திருக்கிறது. நடிகராகவும், சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பணிகளை செய்யவேண்டிய கடமையில் இருக்கிறேன். பொறுப்புகள் அதிகமாகியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளேன். பொங்கலுக்கு இந்த படம் வெளிவரும். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘மதகஜராஜா’ எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. அடுத்து முத்தையா இயக்கும் ‘மருது’ படத்தில் நடிக்க உள்ளேன். லிங்குசாமி இயக்கும் ‘சண்டைக்கோழி’ இரண்டாம் பாகம் படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

நடிகர் சங்க கட்டட கட்டுமானப்பணி ஜனவரியில் தொடங்குமா?

நடிகர் சங்க கட்டட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதற்கான பத்திரத்தை சரத்குமார் எங்களிடம் வழங்கியிருக்கிறார். தற்போது வரவு–செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கட்டடத்துக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும்.

நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்ட புதிய படம் எடுக்கப்போவதாக சொன்னீர்களே?, அதில் ரஜினிகாந்த்– கமல்ஹாசன் நடிப்பார்களா?

எல்லா நடிகர்களும் சேர்ந்து இந்த படத்தை எடுக்க உள்ளோம். டைரக்டர் யார், எந்தெந்த நடிகர்கள் நடிப்பார்கள், என்ன மாதிரி கதை, மொழிமாற்று படமா, நேரடி படமா என்பதுபற்றியெல்லாம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களையும் நடிக்க அழைப்போம்.

உங்கள் புதிய படத்தில் ராதாரவி நடிக்கிறாரா?

என் படத்தில் ராதாரவி நடிப்பது டைரக்டரின் முடிவு. கதைக்கு தேவையென்றால் சரத்குமாருடனும் இணைந்து நடிப்பேன். நாங்கள் தேவைப்பட்டால் சந்தித்தும் பேசுவோம். கார்த்தி ஏற்கனவே சரத்குமாரை சந்தித்துள்ளார்.

உங்கள் திருமணம் எப்போது?

என் திருமணம் இப்போதைக்கு இல்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டியப்பிறகு திருமணம் செய்துகொள்வேன்.

காதல் திருமணம் செய்வீர்களா?, பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணப்பீர்களா?

‘எனக்கு காதல் திருமணம்தான் சரிபட்டு வரும். கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்துகொள்வேன்.

நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண் நடிகையாக இருப்பாரா?

நடிகையை திருமணம் செய்துகொள்வது என்ன தப்பு இருக்கிறது. என்னிடம் ஒளிவு மறைவு கிடையாது. எதுவும் வெளிப்படையாகவே பேசுவேன்.

அரசியலுக்கு வருவீர்களா?

நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கிறது. நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் நல்லது செய்யவே, நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வரமாட்டேன், தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்.

காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என்று நீங்கள் சொன்னதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?

எனது வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போராடுபவர்கள் முதலில் ஏழைப்பிள்ளைகளை படிக்க வையுங்கள். காவிரி, இலங்கைத் தமிழர் உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பது அரசு செய்யவேண்டிய வேலை. அதற்கான போராட்டங்களில் நடிகர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நடிகர் சங்கம் கலந்துகொள்ளாது. அரசு சார்ந்த விஷயங்களில் நடிகர் சங்கம் பங்கேற்காது. நானும் தமிழன்தான், தமிழ் குடிமகன்தான். சென்னையில்தான் பிறந்தேன். காவிரி பிரச்னைக்கு தீர்வு ஏற்படவேண்டும் என்பது என் ஆசை.

நன்றி - விகடன்

Thursday, October 29, 2015

விஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்? - சேரன் உருக்கமான விளக்கம்

இயக்குநர் சேரன் | கோப்புப் படம்

இயக்குநர் சேரன் | கோப்புப் படம்
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய போது, விஷால் அணியினரை பற்றி விமர்சனம் செய்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய போது, விஷால் அணியினரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது.
எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த சமூகத்திற்கு செய்யும் கேடு என்று நினைப்பவன் நான்.
அப்படியாகத்தான் நான் சரத்குமாரை ஆதரித்ததும், விஷால் அணியில் சிலர் மீது சாடியதும். 1990களில் இருந்து சரத்குமாரை நன்கு அறிந்தவன் நான். அவசரஉதவி எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் அவரை நடுசாமத்தில் எழுப்பியிருக்கிறேன். ஒருமுறை பிரகாஷ் என்ற சிறுவனுக்கு இருதய ஆபரேஷனுக்கு, இன்னொருமுறை சம்பத்குமார் என்ற உதவி இயக்குனரின் இருதய ஆபரேஷனுக்கு, பல நேரங்களில் கல்வித்தொகை வேண்டியும்.
இதுமட்டும் இல்லாமல் அவரின் உழைப்பு அறிந்தவன். நடிகர் சங்க வேலைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விதம், அவரது தொலைநோக்கு சிந்தனை இவையெல்லாம் தீர ஆராய்ந்தபோதும் தான். அதேநேரம் எதிர்முனையில் அவர்களைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை.
நாசர் எனக்கு நண்பர்தான், நிறைய முறை அவரோடு எங்கள் திரையுலகம் தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர்மீதோ, சகோதரர் பொண்வண்ணன் மீதோ அல்லது நண்பர் கருணாஸ் மீதோ எனக்கு எந்த கருத்து வேறுபாடோ, சிந்தனை தொடர்பான சந்தேகங்களோ இல்லை.
அப்படியிருக்க விஷால், கார்த்தி இவர்கள் மீது மட்டும் எனக்கு கோபம் வரக்காரணம் என்ன என்பதையும் இங்கு நான் பதிவு செய்தாக வேண்டும். இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள். நான் இவர்களுக்கு முன் இயக்குநராகி 7, 8 திரைப்படங்கள் முடித்த நிலையில் இவர்களை நடிகர்களாக பார்க்கிறேன்.
எந்த நடிகரையும் இவர் கண்டிப்பாக என் படத்தில் நடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், இவர் இந்த திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும், இந்த திரைப்படம் நிறைய மக்களை போய் சேரும் என ஒவ்வொரு இயக்குநரும் நினைப்பது இயல்புதானே. நானும் அப்படி நினைத்தது சரிதானே.
பலமுறை விஷாலை தொடர்பு கொண்டு கதை சொல்ல முயன்று ஒருவழியாக ஒருமுறை தாஜ் ஹோட்டலில் அவரையும், அவர் அண்ணனையும் சந்தித்து கதைசொல்ல, கேட்ட அவர்கள் கதை நன்றாக உள்ளது பண்ணலாம் என்று போனார்கள். ஒருவாரம் ஆகியும் பதில் இல்லை. திடீர் என “பாலா படத்தில் விஷால்” என்ற செய்தியை பார்த்தேன்.
என்னிடம் உங்கள் படம் வேண்டாம் என்று சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அதை சொல்லியிருக்கவேண்டும் அல்லவா. இரண்டு மணிநேரங்கள் உயிர் வருத்தி கதை சொன்னவன் முட்டாள் அல்லவே. பிறகு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். ஒரு நான்கு நாட்களுக்கு பிறகு எனக்கு அவரது அண்ணன் பதில் அனுப்பினார், நாங்கள் இப்போது பாலா சார் படம் பண்ணுகிறோம் பிறகு பார்க்கலாம் என… சரி, இன்று நம்மைவிட பாலாவுக்கு மார்க்கெட் உள்ளதால் அதை தேர்ந்தெடுப்பது சரியே என நான் உணர்ந்து அமைதியாகிவிட்டேன். அந்த படம் வெளியான பின்பும் எந்த தகவலும் இல்லை. திரையுலகம் இப்படித்தான் என நானே நினைத்துக்கொண்டு எனது அடுத்த படங்களில் என்னை நுழைத்துக் கொண்டேன்.
அதற்கு பின்பும், அவர் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு லோக்கல் சேனல் அலுவலகத்தில் திருட்டு விசிடியை எதிர்த்து நியாயமான முறையில் தட்டிக் கேட்டபின்பு அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினேன். ஆனால், அதே செயல்தான் C2H. நான் இரண்டு வருடம் என்னை தொலைத்து திருட்டு விசிடி ஒழிப்புக்காக உருவாக்கிய திட்டம். கிட்டத்தட்ட 3000 இளைஞர்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்டது, எங்கள் திரைத்துறையின் நன்மை கருதி… அன்று ஒரு வீடியோ கடைக்காரரை உதைத்த விஷால் இன்று இவ்வளவு பெரிய முயற்சிக்கு ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை. ஆனால் நான் விஷால் கண்டிப்பாக அழைத்து வாழ்த்துசொல்லுவார் என எதிர்பார்த்தேன். அப்போது அவருக்குள் உள்ளது உண்மையான சமூக சிந்தனையா என்ற கேள்வி எழுந்தது.
அதேபோல கார்த்தி நல்ல பையன், எனக்கு மிகவும் பிடித்த நண்பர் சூர்யாவின் தம்பி. அவர் அறிமுகமான சமயம் ஒருமுறை சந்தித்து கதை சொல்லியிருக்கிறேன், அதை அவர் விரும்பவில்லை. ஆனால் அது நமது கலாச்சாரம் பற்றிய வாழ்வியல் சொல்லும் அண்ணன் தங்கை கதை. சரி காலம் கனிந்து வரும், நல்ல திரைப்படங்களும் பண்ணவேண்டும் என்று உணர்த்தும் என காத்திருந்தேன். நல்ல நடிகர் சில கமர்ஷியல் படங்களில் நடித்து தன் திறமையை வேஸ்ட் பண்றாரே என எண்ணி, மீண்டும் அவரை தொடர்புகொள்கிறேன் அவரது மேலாளர், உறவினர் பிரபு மூலமாக. என்ன காரணமோ தெரியவில்லை, சந்திக்கவோ, கதை சொல்லவோ முடியவில்லை…
என்னுடைய கேள்வி எல்லாம் நீங்கள் எனது படத்தில் நடிக்க வேண்டாம். உங்கள் பார்வையில் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய இயக்குநராக இல்லாமல் இருக்கலாம். நான்கு தேசியவிருதுகள் மட்டும்தான் வாங்கியுள்ளேன். மேலும், நம் தமிழ் சமூகம் சார்ந்த கதைகளை மட்டுமே எடுக்கத் தெரிந்த இயக்குநர்தான். ஆனால் எந்த மனிதனாக இருந்தாலும் அவனை மதித்து, அவனை சந்தித்து அவன் மனம் நோகாமல் பதிலளித்தால் தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் கூட எழுந்து நடக்கத்துணிவார்கள் என்ற நல்ல சிந்தனை உங்களுள் வராமல் போனதே உங்கள் சமூகப்பணி தொடர்பாக என் மனதில் எழுந்த முதல் கேள்வி.
இப்படியிருக்க, மூத்த கலைஞர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது எந்த வகையில் என எனக்கு புரியவில்லை. அவர்களின் மன உணர்வுகளைப் பற்றி புரியாமல் நீங்கள் எப்படி உதவுவீர்கள் என்பது எனது அடுத்த கேள்வி. இப்படியாக அவர்கள் மீது எனக்கு இருந்த வருத்தமே அன்று அந்தமேடையில் எனது கோபமாக அவ்வாறு வெளிவந்தது. தவிர, அவர்கள் மீது குறிவைத்து தாக்க வேண்டும் என எண்ணவில்லை. சினிமாவை நேசித்து, அதற்காகவே வாழ்க்கையை தொலைத்து வாய்ப்பு கிடைக்கும்போது வியாபாரம், மார்க்கெட் என்ற பெயரால் ஒருவரின் வாழ்க்கை இழக்கப்படும்போது தான் அந்த வலி தெரியும்…
அதேபோல JK.ரித்தீஸ் பற்றியும் பேசிவிட்டேன். அதுகூட அவர் விஷால் அணி வீடியோவில் ராதாரவியைப் பற்றி தவறாக மிகவும் மரியாதைக் குறைவாக சொல்லியிருந்தார். என்னதான் எதிரணியாக இருந்தாலும் 35வருடம் சினிமாவில் அனுபவம் உள்ள ஒரு மூத்தகலைஞனை அப்படி சொல்வது தவறு என எனக்கு தோன்றியது.
மேலும் அந்த வீடியோவை அவர்கள் அணியில் உள்ள அனைவரும் பார்த்த பின்புதான் வெளியிட்டிருப்பார்கள், யாராவது அதை தடுத்து அல்லது மாற்றியிருக்கலாம். அதனால்தான் என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். மற்றபடி யாரையும் குறிவைத்து தாக்கி ஓட்டு சேகரிக்க அப்படி சொல்லவில்லை. நான் எந்த அரசியல் சார்பும் இல்லாதவன். என்மீது அக்கறை உள்ள எனது ரசிகர்களும், அபிமானிகளும் எடுத்துச் சொல்லும்போது அதை நான் மறுத்தால் நல்லது இல்லை.
என் சொந்த பிரச்சனையின் போது அரவணைப்பாக இருந்தவர்கள் இப்போது அதட்டி சொல்லும்போது கேட்கத்தான் வேண்டும். தம்பி விஷால், தம்பி கார்த்தி, அண்ணன் JK.ரித்தீஸ் உங்க மனசு வருந்தும்படி பேசியமைக்கு, காயப்பட்டிருந்தால் இந்தசபையில் வருத்தம் தெரிவிக்கிறேன், மனப்பூர்வமாக…
இதை அவர்களின் அடுத்த பட தேதிக்காக, என கமெண்ட் போட்டு கொச்சைப்படுத்த வேண்டாம்'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.

தஹிந்து

Monday, September 07, 2015

பாயும் புலி-திரை விமர்சனம்:

விளையாட்டு, அரசியல், நிழ லுலகம் என எதை முதன்மைப் படுத்தினாலும் அதில் வலு வான குடும்பப் பின்னணியை அமைத்து யதார்த்தமான சித்தரிப் புடன் படங்களைத் தருபவர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் குடும்பமும் உறவு களும் இருக்கின்றன. அவற்றுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் ஊடாடுகின்றன. நிழல் உலக தாதாக்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கு எதிர்பாராத இடத்தி லிருந்து சவால் வரும்போது காவல் துறை அதிகாரி என்ன செய்வார் என்பதுதான் ‘பாயும் புலி’.
சுதந்திரப் போராட்டத் தியாகியின் பேரன் காவல் அதிகாரியான விஷால். தன் அப்பா கேட்டுக்கொண்டதற்காக அரசியலில் நுழையாமல் இருக்கிறார் விஷாலின் அப்பா. ஆனால் விஷாலின் அண்ணன் சமுத்திரக்கனி அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டவர். அன்பும், பாசமும் மிக்க இவர்களது குடும்பம் வசிப்பது மதுரையில். இங்கே அடுத்தடுத்து நான்கு தொழிலதிபர்களைக் கடத் திக் கொல்கிறது ஒரு மாபியா கும்பல். இதனால் பயந்துபோகும் மற்ற தொழிலதிபர்களிடம் தலா இரண்டு கோடி கொடுக்காவிட்டால் நீங்களும் இதேபோல்தான் கொல்லப் படுவீர்கள் என்று பயமுறுத்திப் பணத்தைக் கறக்கிறது.
இந்தக் கொலைகளுக்குக் காரண மான குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையால் அனுப்பப்படும் விஷால் மறைமுக ஆபரேஷன் மூலம் முதல் கட்டமாகச் சில ரவுடிகளை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்கிறார்.எல்லோரையும் கொன்று விட்டோம் என்று நினைக்கும்போது இதற்கெல்லாம் பின்னால் இன்னொரு வர் இருப்பது தெரியவருகிறது. அந்த நபரைக் கண்டுபிடிக்கும் வேட்டை யில் விஷால் இறங்க, அந்த நபர் திறமையாகக் காய் நகர்த்துகிறார். குற்றவாளி யாரென்று தெரிந்ததும் அதிர்ந்துபோகும் விஷால் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
ரவுடிகளை வேட்டையாடும் போலீஸ் படங்களுக்கே உரிய ‘ரத்தக் கவிச்சி’அடிக்கும் கதைதான் பாயும் புலி. இதைக் குடும்ப இழையுடன் பின் னிய விதத்தில் சுசீந்திரன் வித்தியாசம் காட்டுகிறார். ஒரு சில காட்சிகளும் திருப்பங்களும் அதிர்ச்சியும் ஆச்சரிய மும் தருகின்றன. ஆனால் இவை அதிகமாக இல்லை என்பதுதான் பிரச் சினை. பல காட்சிகள் முன்னரே யூகிக் கக் கூடியவையாக உள்ளன. காதல் சமாச்சாரம் சம்பிரதாயத்துக்காகத் திணிக்கப்பட்டதுபோல் இருப்பதால் படத்தில் ஒட்டவே இல்லை.
விஷால் யாரைத் தேடுகிறார் என்பதைப் பார்வையாளர்களுக்கு விரைவிலேயே அடையாளம் காட்டி விடுகிறார் இயக்குநர். அதாவது, வில் லன் யாரென்று பார்வையாளர்களுக் குத் தெரியும், கதாநாயகனுக்குத் தெரியாது. வில்லனால் கதாநாயக னுடன் நேருக்கு நேர் மோத முடி யாத நிலை. இத்தகைய சூழல் விறுவிறுப்பான திரைக்கதைக்கு உத்தரவாதம் தருகிறது. ஆனால் சுசீந்திரன் அதைச் சரியாகப் பயன் படுத்திக்கொள்ளவில்லை. விளைவு, தெரிந்த முடிவை நோக்கி நகரும் படத்தைப் பொறுமையோடு பார்க்க வேண்டிய நிலைக்குப் பார்வை யாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.
விஷால் காஜல் இடையிலான காதலில் புதிதாக எதுவும் இல்லை. தன் கண் முன்னால் விஷால் சில ரைச் சுட்டுத்தள்ளும்போது காஜல் காட்டும் உணர்ச்சி சூரியின் நகைச் சுவைக்கு ஈடாக இருக்கிறது.
விஷால் வழக்கம்போல ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம் காட்டுகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக் கவும் செய்கிறார். எப்போதும் போல அழகும் உற்சாகமுமாய்த் திரையில் தோன்றும் காஜல் அகர்வாலுக்கு இது இன்னொரு படம். அவ்வளவுதான். சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். சூரியின் நகைச்சுவை முயற்சிகள் சில இடங்களில் சிரிக்கவைக்கின்றன.
ஒளிப்பதிவிலும் பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் வேல்ராஜ் படத்தைத் தூக்கிப்பிடிக்க முயற் சித்திருக்கிறார். இமானின் பின்னணி இசை சுமார்தான். ‘யார் இந்த முயல் குட்டி’, ‘சிலுக்கு மரமே’ ஆகிய பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
ஒரு காட்சியில் கான்ஸ்டபிள் சூரி நன்றாகக் குடித்துவிட்டு பைக்கை ஓட்டிச் செல்கிறார். பின்னால் துணை கமிஷனரான விஷால் உட்கார்ந்திருக் கிறார். குடித்துவிட்டு வண்டி ஓட்டக் கூடாது என்னும் சட்டம் காவலர் களுக்கு இல்லையா? காவல் துறை யின் சாகசங்களைக் காட்டும் இயக்கு நர் அவர்களுக்கான பொறுப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா? அல்லது காவல் துறையினரைப் பற்றிய விமர்சனமாக இந்தக் காட்சியை அமைத்திருக்கிறாரா?
பிரதான குற்றவாளியை நாயகன் கொன்றுவிடுகிறார். ஆனால் அந்தக் கொலைக்கான பழியைப் பிறர் மீது போட்டு அதற்காக நான்கு பேரைச் சுட்டுக் கொல்கிறார். குடும்பப் பெரு மையைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் இந்தக் கொலைகளும் மோசமான குற்றம்தான். இப்படிப் பட்ட காவல் துறை அதிகாரிதான் தார்மீகமான சக்தியா?
படம் முழுவதும் வேட்டுச் சத்தம், வெட்டு, குத்து, ரத்தம். இவற்றைக் குறைத்து, குற்றத்திற்கான காரணம், புலனாய்வு, ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் புலியின் பாய்ச்சல் இலக்கை எட்டியிருக்கும்.


நன்றி - த இந்து

  • Juliet  
    do know what to say????????? if there s none of this option surely i will select as a rating.
    about 10 hours ago
     (0) ·  (0)
     
    • PPadmanabhan  
      படம் சுமாரா இருக்கு. ஆனா கான்செப்ட் ல் அங்கங்க தனி ஒருவன் வாடை அடிப்பதை நீங்கள் கவனிக்கலியா ?
      about 11 hours ago
       (0) ·  (0)
       
      • ஜோதி  
        சராசரி குடும்பத்தலைவனாக இருப்பவன் வெளி உலகின் வன்மம் மிகுந்த கொலைக்காரன், தன் தாய்,மனைவி, குழந்தைகள் அனைவரையும் பார்த்தபிறகும் தகப்பனையும், சகோதரனையும் அழிக்க முற்படுவதாக காட்டப்படுவது வன்முறையின் உச்சம்.
        about 14 hours ago
         (0) ·  (0)
         
        • SSebastian  
          Lingusamy Suraj listla ipo susintheeran....paayum puli pakravan balii
          about 18 hours ago
           (0) ·  (0)
           
          • SSenthil  
            குடித்து விட்டு மனைவியை எப்படி சரி கட்டுவது என்று போலிஸ் அதிகாரியே அறிவுரை ஐடியா தருகிறார் பாருங்கள்