நீயா? நானா? விஜய் டி வி யின் டி ஆர் பி யை எகிற வைத்த நிகழ்ச்சி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.. டைமிங்கான டைட்டிலில் வாத விவாதங்கள் சூடு பறக்கும்.. கோபிநாத் தனது ஆணித்தரமான வாதங்களால், ஆளுகை செய்யும் பாடி லேங்குவேஜால் பலரது மனம் கவர்ந்தவர்.. ஆனால் வர வர அவரது ஸ்கில் குறைந்துவிட்டது போல் தோற்றம் அளிக்கிறது.. ஏற்கனவே ஒத்திகை பார்த்து வந்து நடத்தும் நாடகம் போல அவர் நிகழ்ச்சி அமைகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன..
இந்த வேளையில் இலங்கையில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மெயிலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அவர் தொலை பேசியில் என்னுடன் பேசி அவர் தம் ஆதங்கத்தை தெரிவித்தார்...
வணக்கம் அண்ணன்,
நான் உங்கள் பதிவுகளை வாசிப்பவன் என்ற முறையில் தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலமாக இதனில் உள்ள குறைபாடுகளை வாசகர்களுக்கு சுட்டிகாட்டுவீர்கள் என நம்புகிறேன். கடந்த 6 ஆம தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நபர் பேசிய வீடியோ பதிவுகளை இதனுடன் இணைத்துள்ளேன்,
இவ்விடியோவில் வங்கியில் பணி புரிவதாக கூறுபவர் மிகவும் நாகரிகமான முறையில் தன் கருத்துகளை பதிவு செய்கிறார். அடுத்ததாக பேசுபவர் தான் UK வில் மூன்று வருடங்கள் ஒரு பெண்ணுடன் ஒன்றாக இருந்ததாகவும் இந்தியா வந்ததும் பெற்றோரின் எதிர்ப்பால் தன் காதலியை கைவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். அத்துடன் அந்த பெண்ணை தானே கைவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் நண்பர்களுக்கு தெரிவிப்பதாகவும் கூறுகிறார்.
இப்படி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தெரிவிப்பதன் மூலமாக அந்த பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படாதா ? இவரை அடுத்து பேசுபவர் இதே கருத்தை சற்று சாதாரணமாக கூறுகையில் கோபிநாத் உட்பட அனைவரும் ஏளனம் செய்கின்றனர். இதுவே சமுகத்தில் தன்னை படித்தவராக காட்டிக்கொள்பவர் எதை சொன்னாலும் சரி என்பது போல் கோபிநாத்தின் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டது .
ஏனெனில் இதில் அவர் எடின்பாரோ வாழ்கை பற்றி பல பிழையான தகவல்களை கூறுவதன் மூலம் அவரது நோக்கம் பற்றிய பல சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. பின்வருவன அவர் கூறும் ஒரு நாள் சம்பளம் மூன்று பவுண்ட் என்பது முழுமையான பொய். இங்கே மிக குறைந்த சம்பளமாக ஒரு மணி நேரத்திற்கு ஐந்து பவுண் 95 காசுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இங்கே கூறப்பட்டது அடிப்படை சம்பளமாகும் . அத்துடன் தினமும் எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று பணிபுரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதற்கு மிக மிக குறைந்த சாத்தியமே, எனெனில் இங்கு போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது அத்துடன் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்கூட ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக கிடைக்கும் வருமானம் ஒரு மாதத்திற்கு பஸ் பாஸ் அன்லிமிடெட் பயணம் செய்ய பெற்றுக்கொள்ள முடியும்.
இப்படி பல பொய்யான தகவல்களை தெரிவித்து தனது பேச்சாற்றல் மற்றும் முக பாவனை மூலம் மக்களிடையே அனுதாபத்தை தேடிகொல்கிறார். இவரது கருத்துகளின் உண்மை தன்மையை அறியாமல் அதை ஊக்குவிப்பது போல கோபிநாத்தின் செய்கை அமைந்ததுமட்டும் அன்றி அவருக்கே பரிசும் வழங்கப்பட்டது .
இப்படி பலராலும் பார்க்கபடும் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுடன் மூன்று வருடம் ஒன்றாக இருந்து கைவிட்டதை தெரிவிபதின்மூலம் நமது சமூகத்தில் அப்பெண்ணின் எதிர் கால திருமண வாழ்க்கை பாதிக்கப்படாத ? அப்பெண்ணின் பெயர் குறிப்பிடாமல் விட்டாலும் அப்பெண் யார் என்பதை இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் முலம் அறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல, அவர் குறிப்பிடுவது போல தான் தெரிவித்துகொள்ளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களால் மேலும் பல்லாயிரம் பேருக்கு தெரியவராது என்பதற்கு என்ன நிச்சயம் ? .
இத்தகைய நபர்களின் கருத்துகளை ஊக்குவிப்பது போன்றதான கோபிநாத்தின் செயற்பாடுகள் அவரது தரத்திற்கும் நிகழ்ச்சியின் தரத்திற்கும் பொருத்தமாக இல்லை . இக்கருத்தில் எங்களது தவறு ஏதேனும் இருந்தால் அதை சுட்டி காட்டவும் தயங்க வேண்டாம் .
இப்படிக்கு
Shyam sundar MBA [email protected]. com
Nishanthan MBA mnishan.nishangmail.com
Jaganathan MSc [email protected]
Jeyakanthan MBA [email protected]
Dilipkumar MSc [email protected]
286 Gorgie road
Edinburgh
EH11 2PP.
கோபிநாத்திற்கு சில அட்வைஸ்
1. ஒரு தரப்பை பேச விடும்போது குறுக்கிடாதீர்கள்.. அவர்கள் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாட்டேங்குது..
2. உங்க பாடி லேங்குவேஜ்ல , பேச்சுல சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் தலை விரிச்சு ஆடுது..
3. உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், மத்தவங்க எல்லாரும் முட்டாள்ங்க என தயவு செஞ்சு நினைக்காதீங்க..
4. எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சொந்தமா எடுங்க. நீங்க காதுல வெச்சிருக்கற வாக் மேன் செட்ல , மைக் செட்ல யார் கிட்டயோ ஆர்டர் ரிசீவ் பண்ணி அப்படியே ஒப்பிக்கறது நல்லாவே தெரியுது..
5. பெண்கள் முன்னால ஆண்களை மட்டம் தட்றீங்க அடிக்கடி.. அதனால உங்க இமேஜ் பெண்களிடம் உயரும் என நீங்க நினைச்சா .. சாரி..
6. தமிழ்ல யாராவது பேசுனா அவங்களை அசால்ட்டா பார்க்கறதும் , தமிங்கிலீஷ்ல பீட்டர் விடும் மொக்கை ஃபிகர்களிடம் வேற்றுக்கிரக ஜந்து போல பிரமிப்பாக பார்ப்பதும் எதுக்கு?
6. தமிழ்ல யாராவது பேசுனா அவங்களை அசால்ட்டா பார்க்கறதும் , தமிங்கிலீஷ்ல பீட்டர் விடும் மொக்கை ஃபிகர்களிடம் வேற்றுக்கிரக ஜந்து போல பிரமிப்பாக பார்ப்பதும் எதுக்கு?