Posted Date : 11:44 (21/11/2012)Last updated : 12:47 (21/11/2012)
புதுடெல்லி:
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்திலேயே அஜ்மல் கசாப்
தூக்கிலிடப்படுவது ரகசியமாக வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர்
சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30
மணியளவில் புனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.இந்நிலையில் கசாப்
தூக்கிலிடப்படும் வரை அது குறித்த தகவல் வெளியில் கசியவிடாமல் ரகசியம்
காக்கப்பட்டது.
இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர்
சுஷில் குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர்,"எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல்
இருப்பதற்காகதான், கசாப் தூக்கிலிடப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பையும்
அரசு வெளியிடாமல் ரகசியம் காத்தது.இதற்கான அடிப்படை காரணம் இதுதான்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி சித்திக்
கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் ஆகஸ்ட் 1 ல் தொடர் வெடிகுண்டு
தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.எனினும்,சரியாக செயல்படாத காரணத்தால்
வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை.இதனால் பேராபத்து நீங்கியது.எனவே, கசாப்
தூக்கிலிடப்படுவதை தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து
விடாமல் இருப்பதற்காக தான் தகவல்கள் வெளியிடப்படவில்லை” என்றார்.
புதுடெல்லி: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட தகவல் பாகிஸ்தானுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே
கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், கசாப் தூக்கில் போட்டதை கடிதம் மூலம்
பாகிஸ்தானுக்கு தெரிவித்தது. ஆனால் அந்த கடிதத்தை ஏற்க அந்நாடு மறுத்து
விட்டது. இதனையடுத்து அத்தகவல் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டதாக ஷிண்டே
தெரிவித்தார்.
கசாப்பை தூக்கிலிடப்பட்டதன் மூலம் , மும்பை தாக்குதல் வழக்கில்
நீதித்துறையின் உத்தரவை நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி
கூறுகையில்,"அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது தாமதமானாலும்
வரவேற்க்கத்தக்கது.
தூக்கில் போட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு.நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளார்” என கூறினார்.
மும்பை: அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டதன் மூலம்
தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டி உள்ளோம் என்றும், நாட்டிற்கு கிடைத்த
வெற்றி என்றும் மும்பை தாக்குதல் வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான
வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கசாப்பை தூக்கில்
போட்டதன் மூலம், மும்பை தாக்குதலில் பலியான பொது மக்கள், போலீசாருக்கு
அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
கசாப்பை குற்றவாளி என நிருபித்து தூக்கு தண்டனை கிடைத்ததன் மூலம், நாம்
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் எவ்வாறு ஈடுபட்டது என்பதை
நிருபித்துள்ளோம். கசாபை தூக்கில் போட்டதன் மூலம் மும்பை தாக்குதல் போன்ற
சம்பவங்களை இந்தியா சகித்து கொள்ளாது என
வெளிப்படுத்தியுள்ளோம்.குற்றவாளிகளை நீதி முன்னர் நிறுத்துவோம் என்பதை
நிரூபித்துள்ளோம்.இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டி உள்ளோம்”
என்றார்.
நன்றி - விகடன்
புதுடில்லி: மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30
மணியளவில் தூக்கில் இடப்பட்டான். அவனது கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி நிராகரித்தார். கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே
நிராகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த 2008ம்
ஆண்டு நவம்பர், 26ம் தேதி, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர்
திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், வெளிநாட்டினர்
உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில்
தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற
பயங்கரவாதி மட்டும் உயிருடன் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை
ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.
விசாரணையில் முடிவில், அவனுக்கு 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மரண தண்டனை
விதிக்கப்பட்டது. பின், இந்தத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். சுப்ரீம் கோர்ட்,
ஆகஸ்ட், 29ல், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில்,
தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினான். இந்த மனு
கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தால்
நிராகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய
உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. கசாப்பின் கருணை மனுவை மத்திய
உள்துறை அமைச்சகமும் நிராகரித்ததுள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின்
மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து கசாப்பின்
கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இம்மாதம் 8ம் தேதி நவம்பர் முதல்
வாரத்தில் நிராகரித்தார். ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து, மும்பை ஆர்தர்
சாலை சிறையிலிருந்த கசாப், புனே ஏரவாடா சிறைக்கு மாற்றப்பட்டு தூக்கில்
இடப்பட்டான். கசாப்பின் தூக்கு தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது சரியானதே
என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரவேற்பு:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் தூக்கில் இடப்பட்டதற்கு பல்வேறு
கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பா.ஜ., கம்யூனிஸ்ட், தி.மு.க., உட்பட பல
கட்சிகளும் தூக்கு தண்டனையை வரவேற்றுள்ளன. இதே போல், மும்பை தாக்குதலில்
உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கசாப்பின் தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கசாப் வழக்கு: முக்கிய திருப்பங்கள்
2010
அக். 18: மரணதண்டனையை எதிர்த்து கசாப் மேல்முறையீடு செய்த வழக்கில் மும்பை
ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. கசாப் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்.அக்.
19: கோர்ட்டில் நேரடியாக ஆஜராக விரும்புவதாகவும், அமெரிக்காவுக்கு
அனுப்புங்கள் என்றும் கசாப் கோபமாக தெரிவித்தான். ஒழுக்கமாக நடக்குமாறு
கசாப்புக்கு நீதிபதி எச்சரிக்கை.அக். 21: கசாப் தனது வக்கீலிடம் கோர்ட்டுக்கு நேரடியாக வருவதாக மீண்டும் வலியுறுத்தினான். அக். 25: சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில்
இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான கசாப் மற்றும் அபு இஸ்லாம் ஆகியோரின் பயங்கரவாத நடவடிக்கைகளை நீதிபதிகள் பார்வையிட்டனர். அக் 27: கசாபுக்கு சிறப்பு கோர்ட் வழங்கிய மரணதண்டனை சரிதான் என அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் கோர்ட்டில் வாதம்.
அக் 29: சிறப்பு கோர்ட்டில் கசாப் அடிக்கடி "பல்டி' அடித்து கோர்ட்டில் குழப்பம் நிகழ்த்தினான். நவ 22: கசாப் ஒரு பொய்யர், சதிதிட்டமிடுபவன் என அரசு வக்கீல் வாதம். நவ. 23: நீதிபதி மீண்டும் ஒருமுறை சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டார். நவ. 24: கசாப் குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பு கேட்டதை சிறப்பு கோர்ட் சிறிதளவு ஏற்றுக்கொண்டது தவறு என அரசு வக்கீல் வாதம். நவ.
25: கசாப் வக்கீல் அமின் சோல்கர் வாதத்தை தொடங்கினார். சிறப்பு கோர்ட்டின்
தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என
வாதம். நவ. 30: "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல்' குற்றம் கசாப் மீது விதிக்கக்கூடாது என கசாப் வக்கீல் வாதம். டிச.
2: கசாப் சிறிய படகு மூலம் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை. சிறிய படகில்
பத்து பேர் அமர்வதற்கு சாத்தியமில்லை என கசாப் வக்கீல் வாதம். டிச. 7:
போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மற்றும் இரண்டு போலீசாரை தான் சுட்டுக்
கொல்லவில்லை என கசாப் மறுப்பு. கசாப்பிடம் இருந்த புல்லட்டுக்கும்,
கர்கரேயிடம் இருந்து எடுக்கப்பட்ட புல்லட்டுக்கும் பொருத்தம் இல்லை என
கசாப் வக்கீல் வாதம். டிச. 14: கசாப் இளைஞர் இல்லை என அவரது வக்கீல் வாதிட்டதை ஐகோர்ட் ஏற்க
மறுப்பு. கசாப்பின் மனநிலையை ஆராய வேண்டும் என்ற கசாப் வக்கீலின்
கோரிக்கையையும் ஐகோர்ட் ஏற்க மறுப்பு. 2011 ஜன. 5: சபாபுதின் அகமத்
மற்றும் பகீம் அன்சாரி இருவரும் மும்பை தாக்குதலுக்கு பயங்கரவாதிகளுடன்
சேர்ந்து கூட்டு சதித்திட்டம் தீட்டியவர்கள் என அரசு வக்கீல் வாதம். ஜன.
6: பகீம் மும்பை தாக்குதல் வழக்கில் ஈடுபட்டதற்கு உரிய சாட்சியங்கள்
இல்லை, மேலும் தாக்குதல் குறித்த வரைபடம் அபு இஸ்லாமின் பாக்கெட்டில்
இருந்த எடுத்தது இல்லை என பகீம் வக்கில் ஐகோர்ட்டில் வாதம். ஜன. 7: பகீம் தவறான விபரங்களை கொடுத்து போலியான பாஸ்போர்ட் பெற்று பாகிஸ்தான் அரசை ஏமாற்றியுள்ளார் என அரசு வக்கீல் வாதம். ஜன.
10: பகீமால் வரையப்பட்ட மும்பை வரைபடத்தை சபாபுதீன், பயங்கரவாதி அபு
இஸ்லாமுக்கு வழங்கினார் என அரசு வக்கீல் வாதம்.ஜன. 11: பயங்கரவாதி
அபுசலீமுக்கு, பகீம் வரைபடம் கொடுத்தது சோடிக்கப்பட்ட குற்றம் என்பதை அரசு
வக்கீல் மறுத்தார். ஜன.
13: தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் சபாபுதீனுக்கு தொடர்பில்லை,
அதற்கான ஆதாரமும் இல்லை என அவரது வக்கீல் இசாஸ் நக்வி வாதம்.ஜன. 17: வழக்கு விசாரணை முடிந்தது. பிப். 7க்கு ஒத்திவைப்பு.
பிப். 7: சில பணிகள் இருப்பதால் தீர்ப்பு 21ல் வெளியிடப்படும் என ஐகோர்ட் அறிவிப்பு. பிப்.
21: அஜ்மல் கசாபுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மரணதண்டனையை மும்பை ஐகோர்ட்
உறுதி செய்தது. சபாபுதீன் அகமத் மற்றும் பகீம் அன்சாரி ஆகியோரை கோர்ட்
விடுதலை செய்தது. 2012 நவ.5: கசாப் மீதான கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். நவ.19: மும்பை ஆர்தர்ரோடு சிறையிலிருந்த கசாப், புனேயில் உள்ள எர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார். நவ.21: காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.
எத்தனை பேருக்கு தூக்கு
1983ம்
ஆண்டு முதல், மிகவும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்
தூக்கு தண்டனை விதிக்கிறது. பயங்கரவாத செயல்கள், குற்றங்களில் இருந்து
தப்பிக்க கொலை செய்வது, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்வது, தற்கொலைக்கு
உடந்தையாக இருப்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது,
நாட்டிற்கு எதிராக செயல்படுவது, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிற்காகவும்
தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின்,
இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சர்ச்சைகுரியதாகவே இருக்கிறது.
சுதந்திரத்திற்கு பின் நாட்டில் இதுவரை 52 பேர் தூக்கிலிடப்பட்டதாக
அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975க்கும் 1991க்கும் இடை
யே 40 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2007ல் 100 பேருக்கும், 2006ல் 40
பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2001ல் 33
பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
தூக்கிலிடப்பட்ட முக்கிய குற்றவாளிகள்:
* 2012 நவ.,21ல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். * 2005 ஏப்.,27ல் கடத்தல், கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்டதற்காக சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான். * 2004 ஆக.,14ல் பாலியல் குற்றத்திற்காக தனஞ்செய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான்.
நன்றி - தினமலர்
புனே: அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.
பாகிஸ்தான்
தீவிரவாதியான அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இன்று காலை
7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடும் முன்பு அவனின் கடைசி
ஆசையைக் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்றான். ஆனால் தூக்கு மேடை ஏறும்
முன்பு அவன் கூறுகையில், அல்லாஹ் மீது ஆணையாக மறுபடியும் இது போன்ற தவறை
செய்ய மாட்டேன் என்று தெரிவி்த்துள்ளான்.
முன்னதாக கடந்த 12ம் தேதியே
கசாபிடம் அவனது தூக்கு தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவன் இந்த
தகவலை தனது தாயிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளான்.
இந்நிலையில் கசாபின் தூக்கு குறித்து எழுத்தாளர் சோ கூறுகையில்,
தீவிரவாதி
கசாபை தூக்கிலிட்டது சரி தான். இது அவசியம் என்று நினைக்கிறேன். சில கொடூர
குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான
தண்டனை அளிக்காத சமூகம் கட்டுப்பாட்டை இழக்கும். என்னைப் பொறுத்தவரை கசாபை
தூக்கிலிட்டது சரியே. இந்த தூக்கு தண்டனை ரகியமாக வைக்கப்பட்டது என்று நான்
நினைக்கவில்லை. இதில் ரகசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்,
தனது
உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு
வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர
அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித
நேயத்திற்கு எதிரானது.
காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை
வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது.
அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில்
வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது.
மரண தண்டனை
உலகம் முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும்
வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள
யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண் துடைப்பா?
புனே:
தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள்
வெளியாகி வருகின்றன.
26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான
பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள
ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம
ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி
கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இந்நிலையில் கசாப் டெங்கு
காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக
தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த
தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது
உடலை புதைத்துவிட்டனர்.
இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,
1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?
2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?
3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.
4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?
கசாப்
டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால்
அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கசாப் தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்...
இஸ்லாமாபாத்: கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள்
மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகின்றன. அவனது தூக்கு தண்டனை குறித்து
பாகிஸ்தான் டிவியின் இணையதளத்தில் ஒரு செய்தி கூட இல்லை.
மும்பை
தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகி்ஸ்தான் தீவிரவாதி அஜ்மல்
கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில்
தூக்கிலிடப்பட்டான். அவன் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்த இந்திய ஊடகங்கள்
இது தொடர்பாக செய்திகள் மேல் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
ஆனால்
பாகிஸ்தான் ஊடகங்களோ இது குறித்து அவ்வளவாக செய்தி வெளியிடவில்லை.
பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனலான ஜியோ டிவியின் இணையதளத்தில் கசாபை
தீவிரவாதி என்று குறிப்பிடாமல் மும்பை தாக்குதல் கன்மேனை இந்தியா
தூக்கிலிட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது.
"அஜ்மல் கசாப்
தூக்கிலிடப்பட்டான்: இந்திய ஊடகங்கள்" என்று பாகிஸ்தான் நாளிதழான டான்
செய்தி வெளியிட்டுள்ளது. மும்பை தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட
முகமது அஜ்மல் அமிர் கசாபின் கருணை மனுவை அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை இந்திய சிறையில்
தூக்கிலிடப்பட்டான் என்று டான் செய்திகள் தெரிவிக்கின்றன.
தி நியூஸ் இன்டர்நேஷனலில், இந்தியாவில் அஜ்மல் கசாப் சாகும்வரை தூக்கிலிடப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.
தி
நேஷன் இணையதளத்தில் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மும்பை தாக்குதல்
கன்மேன் கசாப் தூக்கிலிடப்பட்டான் என்ற செய்தி உள்ளது. தி டெய்லி டைம்ஸ்
தனது இணையதளத்தில் இது குறித்து எந்த முக்கியத்துவம் வாயந்த செய்தியையும்
வெளியிடவில்லை. பாகிஸ்தானின் அதிகாரப்பூரவ ஊடகமான பிடிவியின் இணையதளத்தில்
கசாப் தூக்கு குறித்து ஒரு செய்தி கூட இல்லை.
பிபிசியில் மும்பை
தாக்குதல் கன்மேன் தூக்கிலிடப்பட்டான் என்பது தான் அதிகம் ஷேர் செய்யப்பட்ட
செய்தி ஆகும். இன்று நண்பகல் வரை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஹஃப்பிங்டன்
போஸ்ட்டில் கசாப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை. மேலும் நியூயார்க் டைம்ஸ்
காலை 11.30 மணிக்கு தான் கசாப் தூக்கு பற்றி ஒரேயொரு செய்தி
வெளியிட்டுள்ளது.
சின்மயி குறித்த என் தரெட்ல கூட வந்து சிலர்,"
நீ அவளா? இவளா? பணம் வாங்கற, போற" என்று ஒரே அவதூறு. சின்மயி பற்றியும்,
கைது செய்யப்பட்டவரின் தொனியிலேயே கமென்ட் போடுகிறார்கள். பொது
வாழ்க்கைக்கு வந்துட்டா, எந்தப் பெண்ணையும் வாயில வந்தத பேசறது செக்சிஸம் ,
பாலியல் அத்துமீறல் என்று கண்டித்தால், குட்டி ரேவதி போன்றவர்கள் கூட அதை
இறக்குமதி கான்செப்ட் என்கிறார்கள்.
ஒரு பார்ப்பனப் பெண்ணின் மீது நடந்த
தாக்குதல்என்பதாலேயே அதை தாக்குதல் இல்லை
என்று எப்படி வாதிட முடியும். இல்லை அதை கண்டிப்பதாலேயே , ஒடுக்கப்பட்டப்
பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையில் அக்கறையில்லை என்பது
எவ்வளவு அபத்தம். சின்மயி பேசியது கடும் தவறு தான் . அதனாலேயே அவர் மீது
பாலியல் தாக்குதலை ஏவியது சரி என்று குட்டி ரேவதி போன்றவர்களே பேசுவது
சகிக்க முடியவில்லை
மனுஷ்யபுத்திரனிடம் நடந்த உரையாடலை
நினைத்துப்பார்த்தாலே அருவருப்பாய் இருக்கிறது. என்ன ஒரு ஆண் திமிர். என்ன
ஒரு தடித்தனம். சக மனுஷி மீது எந்த மரியாதையும் தர இயலாதபோது எதற்கு
விவாதத்திற்கு வர வேண்டும்? ராஜன் லீக்ஸ் இண்டெர்நெட் செக்ஸிஸ்ட் என்றால்,
மனுஷ்யபுத்திரன் ஒரு இலக்கிய செக்ஸிஸ்ட். அவ்வளவு தான்!
ஐயோ, என்னை சும்மா இருக்க விட மாட்டேங்குறாங்களே
ஒரு பொண்ணு பார்ப்பனப் பொண்ணா இருக்கிறதனாலேயும் , பொறுப்பில்லாம அரசியல்
தவறா பேசினாங்க என்பதாலும், அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்
செய்யலாம் என்று எப்படி தீர்ப்பளிப்பது? மனுஷ்யபுத்திரன் மன்னிப்பு
கேட்க சொல்கிறார், இதை சின்மயியையும் அவர் தாயாரையும் பாலியில் ரீதியாக
பேசுவதற்கு முன்னல்லவா செய்ய வேண்டும்,
அப்புறம், குட்டி ரேவதி - சண்டை
கோழி பிரச்சினை தொடங்கி இப்ப வரைக்கும், பேட்டி, தலையங்கம் எல்லாத்திலயும்
பெண் கவிஞர்களை பற்றி செக்ஸிஸ்ட் கமெண்ட் தருகிறீர்களே? நீங்க எப்ப
மனுஷ்யபுத்திரன் மன்னிப்பு கேட்க போறீங்க?
இதனால், நண்பர்களுக்கு, குறிப்பாக பத்திர்கை
நண்பர்களுக்கெலாம் சொல்லிக்கொள்வது, பேராசிரியர் மார்க்சும், தோழர் ஷோபா
சக்தியும் என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் கூட இல்லை. யாருக்கும் ஏதும்
கணக்கு தீர்க்கனும் என்றால் என்னிடமே கேட்கலாம். எப்போதும் விவாதத்திற்கு
நான் தயாராகவே இருக்கிறேன். லீனா அதை செய்த போது ஏன கண்டிக்கவில்லை? இதை
செய்தபோது ஏன மெளனம் காத்தீர்கள் என்று அவர்களிடம் எதற்கெடுத்தாலும்
கேட்டுக்கொண்டிருப்பது காமெடி கூட இல்லை. செம கடி!
சாத்தப்பன் நாஅவர்கள்
வரம்பு மீறி விமர்சித்தது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை மட்டும் கடுமையாக
விமர்சித்துவிட்டு சின்மயியின் பெரிய தவறுகளை மென்மையாக விமர்சிப்பது
வருத்தத்தைத் தருகிறது.
Venkatesh Chakravarthyநான்
ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் பள்ளிமுதல் கல்லூரிவரை
தேவிடியாள் வீட்டில் பிறந்தவன் என்ற ஒரு முத்திரையை அல்லது அடையாளத்தை
எப்படி அந்த காலக்கட்டத்த்தில் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமலே, இன்று
எனக்கு எட்டிய அறிவின் உதவியுடன் கடந்து வந்து விட்டேன். எனக்கு இந்த
விவாதத்தில் இருக்கும் ஒரே பயம் வசைப்பாடுபவர்களை எதிர்க்கும் அதே
சமயத்தில் கண்காணிப்பு இயந்திரங்களை ஆதரிக்கின்றோமா என்பதே.
Leena Manimekalaiஎனக்கு அதில் இரண்டு வேறு கருத்துகள் இல்லை Venkatesh Chakravarthy . என்வரையில் எப்பொழுதும் வசையை, அவதூறை, பாலியல் அத்துமீறலை எழுத்தின் மூலமாகவே எதிர்த்திருக்கிறேன். ஆனால் அதையே ஒரு பெண் சட்டபூர்வமாக எதிர்க்க முடிவெடுத்தால், அதை ஆதரிப்பதை தவிர எனக்கு வெறு கருத்தில்லை
Venkatesh ChakravarthyMy
humble plea is, the pressure of public opinion is better than the
initiation of a new law and its violent mechanisms which will have a far
reaching effect in policing social networks and mobile phones. The fact
that we are debating this itself unlike the times of my school or
college days indicates a positive change. We must exercise patience and
not rush things in a such a manner that we lose the very freedom on the
basis of which such interventions become possible in the new public
spheres these devices have opened up.
Shankar Krishnamurthythis
should be seen only as a legal re-joinder to personal abuse and attack
beyond what is accepted and described in the legal framework.. no other
consideration or talk should come here.. such things are only diverting
the issue ..
Venkatesh Chakravarthyஅதே
சமயம்...சின்மையின் மீது இன்று செய்யப்படும் தாக்குதல்களையோ மற்றும் நமது
பெண் கவிஞர்கள் மீது, லீனா உள்பட; பல ஆண்டுகளாக செய்யப்படும்
தாக்குதல்களையோ நான் என்றும் ஆமோதித்ததில்லை. அவை எல்லாமே இன்று அதீத
வீரியம் அடைந்து வரும் ஆண் ஆதிக்க போக்குகளின் கொடூரமான வெளிபாடுகள்
என்பதால் அவற்றை முழுமையாக நான் கண்டனம் செய்கிறேன் என்பதையும் இங்கு பதிவு
செய்வது முக்கியம்.
Shankar KrishnamurthyVenkatesh Chakravarthy
that can be decided and judged only by the person affected Sir.. we
cannot give unsolicited advice.. in the current situation she decided to
go legal and she is entitled to that.. as simple as that.. whether an
offence of such nature occured or not, evidences, witnesses, all such
things to be decided during the trial only.. if law is questionable even
for that there is a remedy in the form of challenging such laws ...
many provisions of laws have been removed, amended, altered only through
such remedy process
Venkatesh Chakravarthy"இந்தப்
பெண்ணியம், பாலியல் தாக்குதல், செக்ஸிசம் எல்லாமே இறக்குமதி செய்யப்பட்ட
பிழைப்புவாதங்கள்" என்று குட்டி ரேவதி போன்றவர்கள் சொல்வது சற்று
வேடிக்கையாக இருக்கிறது. அப்படியேன்றால மனித உரிமை, சுதந்திரம், சுயமரியாதை
இவைகளும் வெரும் பிழைப்பு வாதங்கள்மட்டும் தானா? இந்த கருத்துகள்
எங்கிருந்து வந்தால் என்ன? அவை இங்கு இறக்குமதி செய்யப்படாவிட்டால் இன்று
நமது கதி என்ன?
Shankar KrishnamurthyUniversal
Declaration of Human Rights in 1948 released by UN is the basic
document for all rights in the world.. most countries are signatories to
that including India.. even our Constitution came after that only.. we
cannot take something and leave something according to our convenience..
Venkatesh ChakravarthyTrue
Shankar Krishnamurthy...but we should not place any limit on the debate
that is taking place on that count. Even that's a matter of legality if
your prefer that phrase 'freedom of expression' as enshrined in our
constitution.
Leena ManimekalaiFilmmaker Bharathi,
சின்மயி பேசியதை பிற்போக்கென்றும், தவறென்றும் ,
கண்டனத்திற்குரியதென்றும், தொடர்ந்து நான் சொல்லியே வருகிறேன். கைதான ராஜன்
என்பவரின் தகுதி, கீழ்க்கண்ட லிங்க் ஒன்றிலிருந்தே விளங்குகிறது.
'லக்பீம' இதழில் ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்த கார்டுனைவிடக் கேவலமானது
அந்தக் கார்டுனுக்கு ராஜன் லீக்ஸ் கொடுத்திருந்த 'கமென்ட்'. http://www.use.com/showoriginal.pl?set=0579a6a74773f1b6118e&p=10.
மேலும், இணையம் எங்கும் விரவியிருக்கும் சின்ம்யி டிவிட்டர் உரையாடலை
காம்ன் சென்ஸ் இருப்பர்கள் படித்தாலெ புரியும். அவர் எவ்வளவு வக்கிரமாக
தாக்கப்பட்டிருக்கிறார் என்று. எனக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்களை சற்று
அனலைஸ் செய்து பாருங்கள். நன்றி
வி.சு. சத்தியமூர்த்திதன்
மீது வெறுப்பும் தன்னபிக்கைன்மையும் வரும்போது அதை மற்றொருவரிடம் தான்
காட்டமுடியும் .பாட பாடல்கள் இல்லை .நடிக்க கூப்பிட்டார்கள் போகவில்லை
(எந்த டைரக்ரர் கூப்பிட்டார் ) இதனால் பிரபலமாக ஒரேவழி பப்பிளிசிடி தான்.
Leena Manimekalai@வி.சு.சத்தியமூர்த்தி.
பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லத் துணியும் எந்த பெண்ணும்
உங்களைப்போன்றவர்களின் இந்த இத்துப்போன விமர்சனத்தைக் கடந்து வந்தவர்கள்
தான்
Shoba Sakthiசின்மயி
விவகாரத்தில் கவிஞர் குட்டி ரேவதி வெளியிடும் கருத்துகள்
அதிர்ச்சியளிக்கின்றன. சின்மயி மீதான பாலியல் வசவு வன்முறையை வாயளவில்
கண்டிக்கக் கூட அவர் தயாரில்லை.
'சண்டை
கோழி' திரைப்படத்தில் "குட்டி ரேவதி துப்பட்டாவ கையில் எடுத்துட்டுச்
சுத்தறவ" என்று வரும் வசனத்திற்காக எவ்வாறு கொதித்துப் போய் போராடினார்
குட்டி ரேவதி என நினைத்துப் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாக தோழர்கள்
திரண்டிருந்தார்கள். வசனம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணனின் 'தலை தரையில்
உருளும்' என்றெல்லாம் எச்சரிக்கை விடப்பட்டன. நான்கூட எஸ்.ராவைக் கண்டித்து
எழுதினேன்.
இன்று
சின்மயிக்கு நடந்திருப்பதோ குட்டி ரேவதிக்கு இழைக்கப்பட்டதைவிட பன்மடங்கு
பெரிய பாலியல் துன்புறுத்தல். சின்மயியின் தாயார் கூட
அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இதை just like that என்று எப்படியாம் கடப்பது..
'என்னங்க நடக்குது இங்க' என்று தங்கர்பச்சான் போல என்னய என் தங்கச்சிக புலம்ப வைத்துவிட்டார்கள்!
Shoba Sakthiசொல்ல
மறந்தது: குட்டி ரேவதிக்கு ஆதரவாக பார்ப்பன சாதியைச் சேர்ந்த பெண்களும்
அவர் கூடவே நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தில் அன்று நின்றிருந்தார்கள்.
Kamalam ManiMaranபார்ப்பன
பெண்ணிற்கு முற்போக்கலர்களும் ஊடகங்களும் காவல்துறையும் அக்கறைபடுவதும்
நேரம் ஒதுக்கி விவாதிப்பதும் ஒரு வகை. மதிப்பிற்குரிய சின்மயி அவர்களின்
அதிகார வர்க்க தொடர்புகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.பாலியல்
ரீதியிலான தாக்குதல் என்பதுகூட பார்ப்பனர் மீதான தாக்குதல் என்றவுடன் தான்
எதிர்ப்பு வீரியம் பெறுகிறது.ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனமாக தெரிகிறது
நமக்குள் இவ்வளவு விமர்சன விவாதங்களை ஏற்படுத்தி இன்றளவும் வெற்றி பெற்று
வருவது பார்ப்பனர்கள் மட்டுமே.
David Jebaraj@leena
manimekalai : லீனா அவர்களுக்கு, இந்த எளியவன் எழுதிக்கொள்வது, சின்மயி -
ராஜன் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்க அவர்கள் இருவருடன் குறைந்த
பட்சம் இரண்டு வருடங்களாவது பயணித்திருக்க வேண்டும். ராஜனின்
நிலைப்பாடுகள், செயல்பாடுகள், போர்க்குணம் என பலவற்றை அருகிருந்து
பார்த்தவன், அதேபோல் சின்மயியின் சிறுபிள்ளைத்தனத்தையும் உடனிருந்து
பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
//சின்மயி
பேசியது கடும் தவறு தான் . அதனாலேயே அவர் மீது பாலியல் தாக்குதலை ஏவியது//
என்று சொல்கிறீர்களே, இக்கைது நடவடிக்கை இரு வருடங்களாக
அவர்களிருவருக்குள் நடக்கும் பனிப்போரின் வன்ம வெளிப்பாடு என்பதை
அறிவீர்களா??. சாதி பற்றி நானிங்கு குறிப்பிடவில்லை.
உங்களிடம் சில கேள்விகள். பதிலளிக்க விருப்பமில்லை எனினும் முழுவதுமேனும் படித்து விடுங்கள்.
2)
பெற்றோர் இல்லாமல் அனாதையாக, தானே படித்து, தானே உழைத்து அரசாங்க வேலை
வாங்கி, (அதுவும் இப்போது பறிபோய்விட்டது) தன்னைப்போல் ஒரு அநாதை பெண்ணை
கரம்பிடித்த ராஜனின் இன்னொரு பக்கத்தை நீங்கள் அறிவீர்களா??
3) ட்விட்டரில் ராஜனின் எழுத்துக்களை (அ) அவரது பிளாக்கில் அவரது எழுத்தாளுமையை படித்திருக்கிறீர்களா??
4) தமிழில் பாடி சம்பாதிக்கும் அப்பாடகி இதுவரை தமிழிலில் ட்விட்டுவதை கவுரவ குறைச்சலாக நினைப்பதை நீங்கள் அறிவீர்களா??
5)
சின்மயியின் மீது பாலியல் தாக்குதலை ராஜன் ஏவியிருக்கிறார் என்ற தொனியில்
நீங்கள் பேசிவிட்டு ஆதாரமாக கார்டூன் விமர்சனத்தை தானே சொல்கிறீர்கள்?
ராஜன் சின்மயியின் மீது பாலியல் தாக்குதலை ஏவியதற்கான ஆதாரம் ஏதும் உளதா??
6)
அந்த சிங்கள கார்ட்டூன் வெளியான அன்று ராஜன் ட்விட்டரில் தனது கண்டனத்தை
கடுமையாக பதிவு செய்ததை நீங்கள் அறிவீர்களா?? (ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள்
விவரமாக அதை தவிர்த்துவிட்டனர்)
7)
அதன் பின் ஒரு நாள் மன்மோகன்சிங் அணுஉலை விடயத்தில் மௌனமாகவே இருப்பதை
சீண்டும் விதத்தில் 'இந்தாள் இதுக்காவது வாயத் தொறப்பாரா?' என்ற எள்ளல்
தொனிக்க அக்கார்ட்டூனை பற்றி அவர் பேசியதே நீங்கள் பார்த்த அந்த
ஸ்க்ரீன்ஷாட். (அது அருவருக்கத்தக்க கமன்ட் என்பதில் எனக்கும்
மாற்றுக்கருத்து இல்லை) அது ஒன்றை வைத்து அவரின் முழு குணநலனை எவ்வாறு
கணித்தீர்கள்??
8
) இவ்வாறான அசிங்கமான ஒரு சில ட்விட்டுகள் தவிர்த்து, கிட்டத்தட்ட 50,000
ட்விட்டுகளுக்கும் மேல் பெண்ணியத்திற்கு, அணுஉலை எதிர்ப்பு, தமிழர் நலன்,
மீனவர் வாழ்வு, சினிமா என்று ட்விட்டரிலும், அவரது பிளாக்கிலும் அவர் எழுதி
தள்ளிய எத்தனை எழுத்துக்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள்??
David Jebaraj9) இரு வருடங்களாக அவர்களுக்குள் நடக்கும் பனிப்போர் குறித்து கிஞ்சித்தேனும் உங்களுக்கு தெரியுமா?? (எனக்கு தெரியும்)
10)
முக்கியமாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் 'The badshas of
entertainment' வகைமையில் ட்விட்டர் பிரபலங்கள் வரிசைபடுத்துகையில்
சின்மயிக்கு நான்காவது இடத்தையும் அடுத்த ஐந்தாவது இடத்தில் ராஜனை தெரிவு
செய்து வெளியிட்ட எடிட்டரிடம் ஆற்றாமையினால் இரு நாட்கள் அதை நீக்க சின்மயி
போராடியதை அறிவீர்களா?? (இது எல்லாருக்குமே தெரியும். அவரும்
ஒத்துகொள்கிறார்). நீக்கமுடியாது என்று எடிட்டர் மறுத்துவிடுகிறார்.
வன்மவிதை துளிர்விட்ட இடமிது http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx
11)
ஆறு மாதங்களாக சின்மயியிடம் சமரசம் பேச நினைத்தும் அதற்குரிய ஆட்கள்
கிடைக்காமல் அல்லாடிய ராஜனை உங்களுக்கு தெரியுமா?? அது சம்பந்தமான அவரின்
பதிவு http://www.rajanleaks.com/2012/03/blog-post.html
12)
வழக்கு பதிவு செய்வதற்கு 15 நாட்கள் முன்பு கூட ராஜனுக்காக (ராஜனும்)
நாங்கள் சின்மயி அம்மாவிடம் மன்றாடிய தொலைபேசி உரையாடலை
கேட்டிருக்கிறீர்களா?? அத்தொலைபேசி உரையாடலில் வன்மம் தெறிக்க அவர் எங்களை
மட்டுமில்லாது லண்டன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணான 'கண்ணம்மா' என்பவரை வாய்க்கு
வந்தபடி பேசிய பேச்சுக்களை நீங்கள் அறிவீர்களா?? இன்னும், பாடகர்
'கிருஷ்'ஷை (சம்பந்தமே இல்லாமல்) அப்பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி அவர்
வசைபாடியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?? http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by (இது பகுதி பேச்சு மட்டுமே)
13)
அதிகாரம் தன்பக்கம் உள்ளது என்று நிரூபிக்கும் சின்மயி, இனி அவரை
எதிர்த்து யாரும் பேச யோசிக்கவேண்டும் என்று மறைமுக எச்சரிக்கை விடுகிறார்
என்பதையாவது உணருகிறீர்களா?? (சமீபத்திய உதாரணம் : கொற்றவை புதிய தலைமுறை
தொ.கா யில் நிகழ்த்திய விவாதத்தை எள்ளலாக குஷ்பூவிடம் விமர்சித்தது)
14)
ஜெயலலிதாவை, கருணாநிதியை இன்னும் பிற அரசியல் தலைவர்களையே இப்படி
சகட்டுமேனிக்கு விமர்சிப்பவர் என்னை எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்
என்பதை குயுக்தியான ஆதாரங்களை கொண்டு முன்வைத்து சின்மயி விஷயத்தை
திசைதிருப்புகிறார் என்பதை அறியாதவரா நீங்கள்??
இன்னும்
ஆயிரம் கேள்விகள் உள்ளன லீனா அவர்களே. உலகம் முழுவதும் உங்களைப் போன்றோர்
பேசுவதை உன்னிப்பாக கேட்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து
கருத்தில்கொண்டு இருபக்கமும் காதுகொடுத்து கேட்டு பதிவு செய்யுங்கள். என்
கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காவிடினும் ஏதேனும் சிறு அதிர்வை
ஏற்படுத்தியிருந்தால், கீழிறங்கி இன்னும் கொஞ்சம் விளக்கங்கள்
கேட்டுக்கொள்ளுங்கள். எங்களிடமும் ஆயிரமாயிரம் வெடித்தழவியலா விம்மல்கள்
உள்ளன...
Sheik Pareethமதிப்பிற்குரிய
லீனா மணிமேகலை அவர்களுக்கு.. இது குறித்து மேலும் காட்டமாக நீங்கள்
விமர்சிக்கும் முன்பாக மேலே நண்பர் டேவிட் கொடுத்த லிங்க் களை பொறுமையாக
படிக்கவும்.. அதன் பின்பு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.. எதையும்
மேலோட்டமாக பார்த்து விமர்சிப்பது அழகல்லவே..??
Shanmugam Rajaசின்மயி
மீது எந்தவிதமான பாலியல் தக்குதல் நடத்தப்பட்டது என்பதை,அவர்
நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்..நண்பர் டேவிட்டின் கேள்விகள்
அவருக்கான கேள்விகள் மட்டுமல்ல மணிமேகலை.. பிரபலமல்லாத,மிகச்சாதாரணமான
ஒருவருக்கு இவ்வளவு ஆதரவா எனும்போதே,அவருக்கான நியாயம் அறியப்பட்டிருக்க
வேண்டும்..
Jei Pandianதவறு செய்தவனை தண்டியுங்கள் - அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு .. பட் இங்க ராஜன் செய்த தவறு என்ன???????
உங்களுடைய நண்பர் ஒருவர் 99 % மார்க் எடுத்து அவருக்கு உரிய சீட் கிடைக்க
வில்லை என்பதற்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு என்ன வேணாலும் ட்விட்
போடுவீங்க,ஆனா...See More
Mahendhiran Kilumathurபாலியல்
ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார்கள் இந்த ஆணாதிக்கவாதிகள் என
பெண்ணியவாதம் பேசும் பெண்கள் பேசுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் "அய்யா சாமி
தர்மம் பன்னுங்க".... அடியேன் ஆணாதிக்க வியாதியல்ல பெண்ணியம் பேசும்
பெரியாரும் அல்ல ஆண் என்பதாலேயே அடக்கி ஆளவும் பெண் என்பதாலேயே சலுகைகளை
வழங்கவும் முன்வராத சராசரி மனிதன்,
Jayaraman Bharatwajமகேந்திரன்
கிலுமத்தூர்...........பெண்கள் யாரும் இங்கு தட்டு ஏந்தி பிச்சை கேட்டு
வரவில்லை.. அவர்களின் அடிப்படை உரிமையை வாழ்வாதாரத்தின் நிலையையும்
உயர்த்தவே போராடுகிறார்கள் இன்று வரையில் அது நடந்த பாடில்லை... இதில்
நீங்கள் எந்த மனோநிலையில் இந்த விவாதத்தில்
உங்கள் கருத்தை முன் மொழிகிறீர்கள்...? பெண் என்பதாலே அவள் பாலியல்
ரீதியாய் துன்புறுத்த பட வேண்டுமா..? நாயினமாய் இருந்தாலும் பெண்ணின்
ஒப்புதல் இல்லாமல் புணரமுடியாது...!!! அதை புரிந்து கொள்ளுங்கள்...!!!