Showing posts with label விழா -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label விழா -சினிமா விமர்சனம். Show all posts

Friday, December 27, 2013

விழா -சினிமா விமர்சனம்



இழவு வீட்டில் ஒப்பாரிப்பாட்டுப்பாடும் பெண் , தப்பாட்டம்  எனப்படும்  ஒரு கிராமியக்கலைக்கான தப்புமேளம் கொட்டும்   கலைஞன் இருவருக்கும் இடையே   நிகழும்  சந்திப்பில்  முதல் பார்வையிலேயே   இருவருக்கும்  காதல்  .அடுத்தடுத்த  காதல் சந்திப்புக்கு   அந்த ஊரில் ஏதாவது  இழவு  விழுந்தாத்  தான்   உண்டு. இப்படி சுவராஸ்யமாகப் போகும்  காதல் கலாட்டாக்களுக்கு  நடுவே  நாயகனுக்கு  தக்க  சமயத்தில்  உதவும்   நபர்க்கு நாயகன்  நன்றிக்கடன் பட்டாகவேண்டிய  சூழல் . அவருடன்   நாயகிக்கு நிச்சயமாகி விடுகிறது  .என்னநடக்குது என்பதே   மிச்ச  மீதிக்கதை.



நாளைய  இயக்குநர்    நிகழ்ச்சியில்  கலைஞர்  டிவியில்     ஃபைனல்  வரை வந்த   உதிரி  எனும்   குறும்படம் தான்    இந்த    விழா  எனும்    சினிமா. காதலில் சொதப்புவது    எப்படி  குறும்படம்   சினிமா வாக   வந்து   ஹிட் ஆன  பின்   2வதாக  சினிமா   ஆகும்  தமிழ்க் குறும்படம்  இது.அடுத்த    படம்  பண்ணையாரும் பத்மினியும்  .மூன்றிலும்  வேறுவேறு   இயக்குநர். நல்ல முயற்சிகள் வெற்றி பெற  வாழ்த்துகள் .


 ஹீரோ  புது முகம் ( மாஸ்டர்  மகேந்திரன் ) .இயல்பாக நடிக்கிறார்.கிராமியம் கலந்த  முகம்  என்பதால் பாத்திரத்துடன்  கலந்து  இயல்பாக தோன்றுகிறார்.  ஹீரோயின் புதுமுகம் மாளவிகா  மேனன்.இவன் வேற  மாதிரி யில்  நாயகிக்கு தங்கையாக  வந்தவர்.  ஒப்பனையே இல்லாத  அல்லது ஒப்பனை இட்டதே தெரியாத  எளிமையான அழகு. கண்ணியமான உடை  , காட்சிகள்  படத்துக்கு பக்க பலம்.


ஓப்பனிங்கில்   ஜேம்ஸ் வசந்தன் ன் துள்ளாட்ட இசையில் இழவு வீட்டில் நடக்கும் ஒப்பாரிப்பாட்டு .கரகாட்ட கோஷ்டிப்பாட்டுடன் கும்மாளமான ஓப்பனிங் சாங் களை கட்டுகிறது.அதைத்  தொடர்ந்து கிராமத்திலிருக்கும் எல்லா  பாட்டிகளுக்கும் இடையே சண்டை  வர ஹீரோ&கோ காரணமாகும்காட்சி  ஆண்பாவம் ஆர் பாண்டியராஜன்  &   எம் சசி குமார் டைப் காமெடி,குட்


எல்லாப்  பாத்திரங்களும்   திரைக்கு புதுசு என்பதால் நேட்டிவிட்டி,இயல்பு கலந்த எதார்த்த   நடிப்பு .சபாஷ் போட வைக்கிறது.  


அடுத்த சந்திப்பு நடக்க   ஊரில் யாராவது சாக வேண்டும் என அலைவது செம காமெடி.அந்தசிச்சுவேஷனில் வரும்”முக்காக்கிழவா,முக்காக்கிழவி   என் காதல் வாழ நீ
கொஞ்சம் செத்துப்போ பாட்டுஅதகளம் ... 60 ம்கல்யாணம் நடக்கும்   வீட்டில்  புகுந்துஇழவுவீடாகநினைக்கும்காமெடியும்புதுசு/.


இப்படிப்படம்முழுக்க

  இழவுவீட்டுசம்பிராதயங்களுக்குஇடையேவேமுழுக்கதையும்நகருவதால்கொஞ்சம்சலிப்பு
ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை..

க்ளைமாக்ஸ் கடைசி20  நிமிடங்கள்இழுவை


நச் டயலாக்ஸ்


1.ரிங்க் டோன்=உசிரே போகுது உசிரே   போகுது


அதான் போயிடுச்சே?


2மாப்ளையை  எப்டியாவது கரெக்ட்  பண்ண   ஒரு   ஐடியா  கொடு


ஃபேஸ்புக்   அக்கவுண்ட்   ஆரம்பிச்சு ,லைக்போட்டு கமெண்ட்போட்ருங்க


சரிசரி.இந்தவிஷயத்துக்கு,எம்புட்டு,செலவானாலும் பரவாயில்லை.கேஸ் முடிச்சுடுங்க


 3எடுபட்டபயலுக.எவனுக்காவதுகொத்துஅடிக்ககொலைவெறியோடஅலையறாங்க

4 கொடுக்கல்வாங்கலேதாவது.உங்க2பேருக்குஇடையேநடந்ததா?


காதலிகிட்டேகடன்வாங்குவதுதப்புடா


அய்யோ  ராமா,முத்தம்  பத்தி   பேசறோம்


5மாப்ளை.எனக்கு  மட்டும்  டம்ளர்ல  சரக்கு ஷேர்கம்மியா  இருக்கு?


அவன்குடுத்த8ரூபாயைஅவன்கிட்டேயேகுடுத்துடு.தனியாபோய்வாங்கிசாப்பிட்டுக்கட்டும்

6. என்னடாமாப்ளை,ஹரிபடத்துலவர்ற.அடியாளுங்கமாதிரி,இருக்காங்க?

7நாயைக்கொஞ்சினாவாயைநக்குமாம்.அதுசரியாப்போச்சு.உன்னைஎல்லாம்வைக்கவேண்டியைடத்துலவைக்கனும்.
 

சி பி.கமெண்ட்-விழா - எளிமையான காதல் கதை @ இழவு வீடு.கவனம் ஈர்க்கத்"தவறி விட்டார்கள்" - ரேட்டிங் = 2.75 / 5 ,


விகடன் மார்க் =40

குமுதம் -சுமார்

 ஈரோடுவிஎஸ்பிலபடம்பார்த்தேன்