Showing posts with label விலைவாசி. Show all posts
Showing posts with label விலைவாசி. Show all posts

Monday, April 28, 2014

200 ரூபாயை கந்து வட்டிக்கு விட்டு 2000 ரூபாய் வசூலிப்பது எப்படி - புரட்சித்தலைவியின் அபார திட்டம்

தமிழக மின் வாரிய நஷ்டம் ரூ.75,000 கோடியாக அதிகரிப்பு: மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த திட்டம்?

தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழகத்தில் கடந்த 2005-ம்ஆண்டுக்குப் பிறகு 2011-ம் ஆண்டுவரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன்காரணமாக 2011-ம் ஆண்டு வரை மின் வாரியத்துக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மின் வாரியம் திவாலாகும் நிலையில் இருந்ததால் வங்கிகள் அதற்கு கடன் கொடுப்பதை நிறுத்தின. 


இதைத் தொடர்ந்து 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மின் துறையை வளப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மின் வாரியத்தின் கடன் தொகைக்கு தமிழக அரசே உத்தரவாதம் கொடுத்தது. மேலும், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை மின் வாரியத்துக்கு நிதி கிடைத்தது. 


மின் வாரிய பங்குகளும் தனியாருக்கு விற்கப்பட்டன. அத்துடன் 2012-ல் மின் கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டது. நஷ்டத்தை சமாளிக்க, தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதன்பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக மின் வாரியத்துக்கான அரசின் மானியம் மட்டும் உயர்த்தப்பட்டது. 


இந்நிலையில், சமீபத்தில் மின் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மின் வாரியத்தின் இழப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. 


இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நஷ்டம் அதிகரிக்க என்ன காரணம்? 

 
கடந்த 2011-ம் ஆண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நஷ்டத் தொகை, தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்ததற்கு பல காரணங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 


சமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 



  • vimalavidya  
    எந்த கட்சி ஆனாலும் இதை செய்தால் மக்கள் எட்டி உதைப்பார்கள்- எச்சில் காரி துப்புவார்கள்- விமலா வித்யா
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • minsaaran Agasthian  from Chennai
    அக்னி நட்சத்திரம் நெருங்கிகொண்டிருக்கிறது, மின்வெட்டும் அதிகரித்து கொண்டிருக்கிறது , மின் கட்டணம் எவ்வளவு உயர்ந்தாலும் பரவாயில்லை , வெயில் கொடுமையிலிருந்து விடுபட மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு பொதுமக்களை தள்ளி சத்தமில்லாமல் மின்கட்டணத்தை உயர்த்துவதுதான் இன்றைய அரசின் டெக்னிக். மின்சாரத்தை ஒழுங்காக வழங்காததால்தான் திமுக அரசு பதவி இழந்தது என்பதை மறந்துவிடகூடாது. தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய எம்ஜியார் காலத்திலேயே 1980ஆம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் , கப்பல் பேர ஊழல் காரணமாக அதிமுகவை தோற்கடிதவர்கள் தான் இந்த தமிழ்நாட்டு வாக்காளர்கள். 3 ஆண்டு காலத்தில் கிடைத்த டாஸ்மாக் வருமானத்தை முழுக்க சூரிய மின்சாரம் தயாரிப்பில் செலவிட்டு இருந்தால் , மிகை மின்சாரமும் கிடைத்திருக்கும், தமிழர்களின் அதிருப்பதியையும் சம்பாத்திருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் பொறுமையை ஒரு எல்லையை கடந்தால் ,நிரந்தரமாக கொடநாட்டிலேயே ஓய்வு எடுங்கள் என்று அனுப்பி விடுவார்கள் . இலவசங்கள் எப்போதுமே கைகொடுக்காது.


    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kevin  
    The only way to avoid the loss in TNEB is to take severe actions for electricity theft!! we've seen in election campaign of all political parties!! where they getting power for that meetings?? is they using generators, a big question to be asked?? Also we've to increase our solar power generation!!
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • saathu  from Rajapalayam
    போட்டி இல்லாத அத்தியாவிச தேவையுள்ள ஒரு தொழிலைகூட இப்படி நஷ்டத்தில் நடத்த இங்கு இருக்கும் அரசினால் மட்டுமே முடியும் . அம்மா பேசுவதில் காட்டும் திறமையை கொஞ்சம் செயலிலும் காட்டினால் நன்று. இவர் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டும் முட்டாள் கூட்டம் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு விமோசனம் ?????
    about a month ago ·   (3) ·   (1) ·  reply (0)
  • Parthasarathy Krishnamoorthy Student at Gandhigram Rural University, Dindigul from Bangalore
    இதற்கு ஒரே தீர்வு , சூரிய ஒளி மின்சார திட்டம் கொண்டு வருவதுதான். ஐரோப்ப நாடான ஜெர்மனி சென்று பாருங்கள், அங்கே சூரிய ஒளி மூலம் gigawatt அளவுக்கு மின்சாரம் தயார் செய்கிறார்கள். இத்தனைக்கும் அங்கே சூரிய ஒளி வருடம் முழுதும் கிடைப்பதில்லை. 25 வருடங்களுக்கு தொடர்ந்து இந்த சூரிய ஒளி கலம் மின்சாரம் வழங்கும். சூரிய ஒளி மின்சாரத்தால் புவி மாசு படுவது எந்த நிலையிலும் இல்லவே இல்லை. இந்த திட்டம் கொண்டு வருவதால் சில நிறுவனகளும் தொழிலாளர்களும் பாதிக்க படுவதாக எண்ணபடுகிறது. ஆனால் 6 கோடி மக்கள் எண்ணபடுவதில்லை.
    about a month ago ·   (2) ·   (0) ·  reply (2)
    • Ahmad  from Jeddah
      சூரிய ஒளி மின்சாரத்திற்கான அரசின் ஆதரவு தெளிவாக இல்லை.1KW அளவிலான அமைப்பிற்கு மட்டுமே மானியம் என்று அரசின் கொள்கை உள்ளது.ஒரு சிறிய வீட்டுக்கு 1KW என்பது தேவை இல்லாததும் மிகப் பெரிய செலவு பிடிக்கும் ஒன்றுமாகும்.சாதாரண மக்களும் அதை நிறைவேற்றும் வகையில் 100 Watt முதல் உள்ள சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு அரசு மானியம் தர முன்வர வேண்டும்.அரசு மானியம் என்று சொல்லி கடைக்காரரிடம் சென்றால் அவர்கள் இரட்டிப்பு விலை சொல்லுகிறார்கள்.இதையும் தடுக்க வேண்டும்.
      about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
    • m.siva  from Kumar
      நாம்தான் இந்த நிலைமைக்கு காரணம், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முதலீடு செய்ய மறுக்கிறோம் , ஒவொரு வீடும் சூரிய ஒளி பேனல்களால் மூடபட்டால் அவர்கள் தேவைக்கு போக மீதி மின்சாரத்தை அரசுக்கு வழங்கி பணம் சம்பாதிக்கலாம்.. 3-5 லட்ச ரூபாய் முதலீடு போதும். 5 வருடங்களுக்குள் நம் முதலீடு நமக்கு கிடைத்துவிடும்.. தற்போது கடன்கூட மானியத்துடன் கிடைக்கிறது.. நாம்தான் யோசிக்காமல் மின்கட்டண உயர்வுக்கு வழிசைகிறோம்
      about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Ahmad  from Jeddah
    இனி வரும் காலங்களில் எந்த ஒரு பொருளின் விலையும் குறையும் என்பது ஒருபோதும் நடக்காத ஒன்று.எந்த ஒரு அரசியல் கட்சியும் விலைவாசியை குறைப்போம் என்று சொன்னால் அவர்கள் பச்சைப் பொய் சொல்லுகிறார்கள் என்று அர்த்தம்.ஆனால் அரசு செய்ய வேண்டியது மின்திருட்டை ஒழிப்பது,மின் இழப்பை தடுப்பது,இலவச மின்சாரம் என்ற பெயரில் மின் கொள்ளைகளை தடுப்பது மற்றும் மின்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை தடுப்பது இவற்றின் மூலம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதற்கு முயற்ச்சிக்க முடியும்.
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Onyx Cleaner  
    மின் கட்டணம் உயர்த்த வேண்டும் என்றால், முதலில் மின் விநியோகத்தில் எவ்வளவு மின் இழப்பு ஏற்படுகிறது, திருடு போகிறது, ஊழலால் ஏற்படும் நஷ்டம் என்ன போன்ற புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும். கடந்த காலங்களில் இது எவ்வளவு சரி செய்யபடிருகின்றது என்பதையும் சொல்ல வேண்டும். அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் செய்தல் போன்று ஒரு ஆடிட் செய்ய உத்தரவிட வேண்டும்.
    about a month ago ·   (2) ·   (0) ·  reply (0)
    vimalavidya   Up Voted
  • ramesh  from Suri
    75000 கோடி நஷ்டம் இருக்ற மின் வாரியம் அதன் ஊழியர்களுக்கு அணைத்து சலுகைகளையும் அளித்து விட்டது அனல் 9000 கோடி நஷ்டம் உள்ள போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கு அவர்களின் பணத்தை வைத்து போக்குவரத்துக்கு நிர்வாகம் நடக்கிறது இது என்ன அரசு puriyavillai
    about a month ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • A ganesan  
    Just now during election campaign the ADMK was claiming that they have cleared the debt of electricity Board and now after election finishes the news coming out that the debt has increased to 75 000 Crores
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • a.s.ragunathan  from Mumbai
    அடுத்தது பால். பிறகு பஸ்.
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Balaji  from Hyderabad
    மின்சார திருட்டை ஒழித்தால் இவ்வளவு நஷ்டம் அதிகரித்து இருக்காது. அதை யாரும் கண்டு கொள்வதில்லை.
    about a month ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • rafi  
    திராவிட கட்சிக்கு மக்கள் வாக்களித்து மக்கள் மிகவும் வெறுப்பு அடைந்துள்ளர்கள் அடுத்து மாற்றத்தை எதிர்பார்கிறார்கள் அது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும்.
    about a month ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • Kanthasamy  from Chennai
    வாழ்க சோ ராமசாமி!
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kanthasamy  from Chennai
    குறித்துக்கொள்ளுங்கள். மின்சாரம் உற்பத்தி செய்ய நீர் அதிக அளவில் தேவை. அது சூரிய ஒளி, காற்றாலை என இரண்டையும் தவிர. நீர் மின் nilayangalaagattum, அனல்மின் நிலையங்கலாகட்டும், அணுமின் நிலையங்களாகட்டும், நீரின்றி அமையாதன அவை. ஆனால், அரசு, இந்த இரண்டுக்கும் இப்போது துந்தனா பாடுகிறது. இதன் பொருள் என்னவென்றால், முன்னுரிமை காட்டி பெரும் மூலதனத்தை இவற்றுக்காக செலவிட வேண்டியதிருக்க, இவர்கள், ஒரு ரூபாய் இட்டளிக்கும், வடை, தோசை, பொங்கலுக்கும் சென்னையின் குடிசைப்புற வாக்காளர்களை மட்டுமே மனதில் கொண்டு அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று சல்லி பெறாத திட்டங்களுக்கு வித்திட்டனர். இப்போது அம்மா திரையரங்காம். ஊர்ப்புற விவசாயிகளை மனதில் கொண்டு ஒரு திட்டமும் இல்லை. நீராதாரங்களை மேம்படுத்த, சூரிய ஒளியில் மின்சாரம் பெற இந்த அம்மா செய்தது 0. வறுமை தாண்டவமாடும் அப்பிரிக்காவின் மாலி என்ற நாடு முற்றாக சூரிய ஒளியில் பயன் பெறுகிறது. அங்கே முதல்வர் மக்களோடு வாழ்கிறார். இங்கோ, முதல்வர் மக்களோடு வாழ இயலாமல் மலையேறி போய்விட்டார். என்ன உலகமோ இது? சென்னை வெறுத்து விட்டதா? ஓட்டு பொறுக்க மட்டும் சென்னையா?
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • R  from Coimbatore
    தமிழகத்தில் மொத்த ஆண்டு வருமானம் 155 000 கோடி. இதில் இலவச மற்றும் நல திட்டங்களுக்கு 48000 கோடி செலவு செய்ய படுகிறது. இதில் பல திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அந்த தொகையை மின் உற்பத்தி தொடர்பான செயல்களுக்கு ஒதுக்கலாம்.
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kanthasamy  from Chennai
    இந்த ஆட்சியில் நிறைவான செயல்பாடுகளாக எதுவுமே இல்லாதபோதும், அப்படி இருப்பதாகத் துதிபாடினால்தான் பிழைக்க முடியும். இல்லையேல், தொல்லைதான். அதே சமயம், குறைகளை எடுத்துரைத்தால், கெட்டது குடி. இப்படி நடப்பதல்ல ஜனநாயக நெறிகளுக்குட்பட்ட அரசு. சட்ட மன்றத்தில் ஒவ்வொருநாளும் எதிர் கட்சியினர் வெளியேற்றப்பட்டு அவர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டது நாடறிந்த ஒன்று. அரசின் குறைகளைக் கூறுவோரை அவைத் தலைவரே அரசின் அடியாளாக மாறி பேசவிடாமல் செய்த நிகழ்வுகள் பல. சொல்லப்போனால் மெஜாரிட்டி அரசாங்கம் மைனாரிட்டியாக உள்ள எதிர்கட்சினருக்குத்தான் அதிகநேரம் பேசுவதற்கு ஒதுக்கி அரசின் குறைகளைக் கேட்கவேண்டும். அந்தப் பெருந்தன்மை ஜெயலலிதாவிடம் அறவே கிடையாது. எதிர் கட்சியினரைத் தானும் தன் கட்சியின் உறுப்பினர்களும் ஏகடியமும் குதர்க்கமும் பேசும்போது அதை மேசை தட்டி இரசிப்பதும், தன்னைப் புகழ "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா" என்ற சொற்களை தன் கட்சியினர் வாய்களுள் திணித்திருப்பதும் அருவருக்கத் தக்கன. இவ்வாறு நிகழும் ஒரு சர்வாதிகார ஆட்சியில் எல்லா துறைகளும் நஷ்டத்தில் நடப்பதில் என்ன பெரிய வியப்பு? காதுகள் இல்லை அரசுக்கு, கேட்க!
    about a month ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Kanthasamy  from Chennai
    எஞ்சிய இரண்டாண்டுகளும் இருப்பதைச் சுருட்ட ஒதுக்கப்பட்டவை. இந்த 75000 கூடுதல் மின்வாரிய நஷ்டம் அதற்கு ஒரு அருமையான முகவுரைதான். இனி, வாரியங்கள் தோறும் புற்றீசல்போல் ஊடுருவியுள்ள ஊழல் கரையான்கள் படு வேகமாகப் பரவி, தமிழ் நாட்டின் பொருளாதாரத்தைப் புசித்துவிடும். தனிமனிதத் துதிபாடும் ஒரு அரசியல் கட்டமைப்பில் ஜனநாயக நெறிகள் ஒருபோதும் தழைத்ததில்லை. ஜெயலலிதா என்ற தனியாளால் மட்டுமே நடத்தப்படும் இந்த அரசு, கூட்டு யோசனைகளுக்கு எதிர் கட்சிகளின் கருத்தை ஒருபோதும் செவிகொடுத்துக் கேட்டதில்லை. அதற்குக் காரணம் வாக்களித்த மக்களே. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை இன்னும் ஈராண்டுகளுக்குள் நிறைவேறத் தக்கன? அவற்றுள் எதுவுமே ஈராண்டுகளுக்குள் நிறைவேறாதபோது அவற்றை அறிவிப்பதால் யாது பயன்? மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டம்போல் முடக்கப்படும் அல்லவா? அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தேவையான அளவுக்கு மக்களுக்கு அல்வா கொடுக்கத் தேவைப்படும் மூலப் பொருள் சேகரிப்புக்கு இப்போதுமுதல் இந்த ஆட்சி ஏறெடுக்கும் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு இந்த மின்வாரிய நாஷ்டம் 75000 கோடி. அம்மா போடும் நாமம் வாழ்க!
    about a month ago ·   (13) ·   (1) ·  reply (0)
    sasibalan  · Venkatesh RAO  Up Voted
  • தீர்ப்பு  
    இப்போது மக்கள் மீண்டும் என்ன கேட்கிறார்கள் என்றால் மின்சாரம் எனது முழூ கட்டுபாட்டில் உள்ளது என்று சொன்ன ஜெயலலிதா இப்போது பதில் சொல்ல வேண்டி இருக்குமோ என்று தானே கொடநாட்டுக்கு ஓய்வு எடுக்க பறந்து விட்டார் ??
    about a month ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Murukesan,Kannankulam ,Tirunel  
    தமிழக மக்களை திராவிட இயக்கங்கள் வஞ்சித்துவிட்டன . அம்மா , அய்யா யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்சினை தீராது. முதலில் மின்சாரம் கொடுங்கள் .மீண்டும் தேர்தல் நேரத்தில் நல்லவங்க வேடம் போட்டு திரும்ப வருவாங்க சாராயம் தரும் தமிழ்நாடு உயர்ந்ததா? மக்களின் வயிற்று எரிச்சலை மேலும் மேலும் வாங்கி கட்டி கொண்டு. முருகேசன்,கண்ணன்குளம்,திருநெல்வேலி ,தமிழ்நாடு.
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kanthasamy  from Chennai
    "கடந்த திமுக ஆட்சிதான் இந்த கூடுதலான கடன் சுமைக்கும், 15 விழுக்காடு கட்டண உயர்வுக்கும் காரணம். திட்டமிட்ட சதியால் விளைந்த கேடு இது. மின்வாரியத்துக்குள்ளே உள்ள எதிர் கட்சியினர் உள்ளிருந்தே கீழறுப்பு வேலை செய்கின்றனர். என் தலைமையிலான அரசு நடத்தும் முறையான ஆட்சியின் மீது குறை உண்டாக்கும் தீய எண்ணத்தில் கருணாநிதியின் கடந்த கால முறையற்ற ஆட்சியால் விளைந்த கேடு இது. உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். நான் வேறு எங்கு போகமுடியும்?" --- போதாதா ? ஓசியில் ஒரு ரூபாய்க்கு இவர் போடும் இட்லியை விழுங்கிவிட்டு, குவாட்டர் அடித்துவிட்டு குப்புற சென்னைத் தெருவெங்கும் விழுந்து கிடக்கும் அந்தக் காலத்து ஆயிரத்தில் ஒருவன் இரசிகர்கள் மனமுருகி கண்கள் சிவக்க "அம்மா நாமம் வாழ்க" என்று உளறியவாறு ஓட்டுப் போடா? 15% என்ன? 50% உயர்த்தினாலும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஒருபயலாவது ஏனென்று கேட்க எவ்வழியும் இல்லை. எதிர் கட்சிகள் கேள்வி கேட்க முடியாத சட்டமன்றம். "எனது தலைமையிலான அரசு" என்று எதேச்சாதிகாரம். மீழாப் படுகுழிக்குள் இட்டுச் செல்லப்படுகிறது இவரால் இன்பத் தமிழகம்.
    about a month ago ·   (4) ·   (4) ·  reply (0)
    Vaduvoraan   Down Voted
  • கணேஷ் துரைசாமி Managing Director at My Own Business from Pollachi
    அதிக அளவிலான மானியத்தில் சூரியஒளி மின்தகடுகள் அணைத்து வீட்டுகளுக்கும் கொடுத்தல் மிக அதிக அளவிலான மின்சாரம் மிச்சம் பிடிக்கலாம்...அதை விட்டு விட்டு தொலைகாட்சி,காத்தாடி,கலக்கி,அரைப்பன்..போன்றவடை கொடுத்தல் மின் உபயோகம் அதிகமாகதான் செய்யும்... மிக சிறந்த முட்டாள்களை நாம் தலைவர்கலாகவும்,நிமிர்ந்து நிக்க முதுகெலும்பு இல்லாதவர்களை மந்திரிகளவும், வாய்திறந்து பேச தெரியாதவர்களை ஆலோசகர்கலகவும் நாம் அட்சி புரிய சொல்லி உள்ளோம்...அனுபவித்துதான் ஆக வேண்டும்.... இதில் ஒருவர் விவசாயத்திற்கு மின் வரி போடா சொல்லுகிறார் தாரளமாக போடுங்கள் , அதற்க்கு முனால் விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் பண்ணும் உரிமையை கொடுங்கள். நான் ஒரு விவசாயி நான் மின்வரி கட்ட தயார் ...நீங்கள் நான் சொல்லும் விலைக்கு பொருட்கள் வாங்க தயாரா?
    about a month ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • Aslamkhan Khan  from Kumar
    எல்லம் விதி
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • baskaran Karan  from Chennai
    இந்த அறிவிப்பை ஏன் தேர்தலுக்கு பின் தான் வெளியிட வேண்டுமா இன்று மின்சாரம் நாளை பால் அறிவிப்பு வரும்.....
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • samaaniyan  from Chennai
    அம்மா அவர்கள் அடுத்து ஸ்டாலினுக்கு வழி விடுகிறார், பலிகடா மக்கள் !
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • viswa  from Pompano Beach
    ஆரிய சூழ்ச்சி , பார்ப்பனர் எதிர்ப்பு , சம உரிமை , தீண்டாமையை போக்குதல் போன்ற பிரசாரங்களை செய்து , பதவியை பிடித்து , அதிகாரத்தை கைப்பற்றி , தமிழகத்தை , தமிழக மக்களை திராவிட இயக்கங்கள் வஞ்சித்துவிட்டன .ஆடம்பர விளம்பரங்கள் , வீண் படாடோபங்கள் ,செலவுகள் , சுய விளம்பரம் , மாநாடுகள் போன்ற போலித்தனங்கள் இதிலேயே 46 ஆண்டு ஓடி விட்டது . அரசு அதிகாரிகள் நல்லவராக இருக்க முடியாத சூழ்நிலை , நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருக்கும் நிலை . ஆக்க பூர்வமான , மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் வருமா ? மிசாராம் திருடும் நபர்களுக்கு தண்டனை கிடைக்குமா ?
    about a month ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Anthonymuthu Xavier  from Nellore
    பல முறை எவ்வாறு இலவச மின்சாரம் வசதி உள்ள விவசாயிகளால் வீணாகிறது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. . இந்த இலவ மின்சாரத்தால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இலவச மின்சாரம் வழங்கபடுவதை ஒழுங்குமுறை செய்தால் மின் வாரியத்தின் பணபற்றாகுறை தீர வாய்ப்பு உள்ளது. கூடவே, நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.
    about a month ago ·   (2) ·   (2) ·  reply (0)
    p   Up Voted
  • indian  from Dubai
    முதலில் private sector முழு மின்சாரம் கொடுகுரங்கள அவுங்கழ்த்த வாங்க சொல்லுக நஷ்டத
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kanthasamy  from Chennai
    இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ----------------- இந்த கையாலாகாத அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று யாரேனும் சொன்னால் அது தவறு.
    about a month ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • moorthy  
    This rate increase is casual after election everyone will do like this only
    about a month ago ·   (1) ·   (1) ·  reply (0)
    Naina Mohamed  Up Voted
  • Kalaimani Muthusamy Owner at Civil Engineering 
    எங்கள் அம்மா மீது குற்றம் சொல்வது தப்பு இது எதிர் கட்சிகளின் சூழ்ச்சிகள், எங்கள் அம்மா போல் ஒரு திறைமையான ஆல் இல்லிகோ , இன்னு ரெண்டு வருசும் இப்படிதான் இருக்கும் முடிந்தால் அடுத்த வரும தேர்தல்களில் இதைத்தான் நாங்கள் சொல்வோம் அது எங்கள் கடமை


    நன்றி - த இந்து