Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Monday, May 19, 2014

மிருனாள் சென் - வங்காள சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் - ஒரு பார்வை

 கான் நகர கடற்கரையில் மிருனாள் சென்

மிருனாள் சென் பிறந்த நாள்: மே 14 - முன்னுதாரணம் இல்லாத போராளி

நாடகங்களுக்கு மாற்றாக சினிமா இந்திய நகரங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டம். வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரிதாபூர் என்னும் ஒரு சிறிய நகரத்தின் திரையரங்கு ஒன்றில் சரத் சந்தர் சட்டர்ஜியின் சோக காவியமான தேவதாஸ் வெளியாகியிருந்தது. திரையரங்கில் திரண்டிருந்த மக்களுக்குப் பெரும் கிளர்ச்சி. அந்தக் கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன், தன் நண்பர்களுடன் அந்தப் புது அனுபவத்தில் மூழ்கித் திளைத்திருந்தான். குளோஸ் அப் காட்சி வரும்போதெல்லாம் அவன் நண்பர்கள் திரை சிறியதாக இருப்பதால் கைகால்கள் தெரியாமல் போகிறது எனப் பேசிக்கொண்டனர். 



ஆனால் அதில் ஏதோ புரிபடாத நுட்பம் இருப்பதாகவே அந்தச் சிறுவன் நம்பினான். அந்தச் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை ஒவ்வொரு நொடியாக உள்வாங்கினான். தேவதாஸும் பார்வதியும் கைகோத்தபடி செல்லும்போது திடீரென எங்கிருந்தோ மழை பொழிவது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மழைத் துளிகள், அந்தக் காதலர்களின் காலடி ஓசையைப் போல் கூரையில் உடைந்து சிதறும் ஓசையையும் அவன் நுட்பமாக வாங்கிக்கொண்டான். இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவரெனப் போற்றப்படும் மிருனாள் சென், சினிமாவின் நுட்பங்களை இவ்வாறுதான் உள்வாங்கினேன் என்கிறார். “எல்லோருடைய குழந்தைப் பருவ வாழ்க்கையைப் போன்றதுதான் என்னுடையது. அது வண்ணமயமானதோ கறுப்பு வெள்ளையானதோ அல்ல” என்கிறார் அவர். 



மிருணாள் சென், 1923, மே 14-ல் பிறந்தவர். அவரது தந்தை தினேஷ் சந்திராவும் தாய் சரஜூபாலாவும் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு எப்போதும் புதுப் புது ஆட்கள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் புரட்சியாளர்கள் என்பது சிறுவனான மிருணாள் சென்னுக்கு அப்போது தெரியாது. சென்னின் தந்தை மிகப் பிரபலமான வழக்கறிஞர். தன் வாதத் திறமையெல்லாம் விடுதலைப் போராட்ட வீரர்களை மீட்பதற்காகவே செலவிட்டதால் பெரிய பொருளாதார லாபத்தை அடைய முடியவில்லை. அதுபோலப் புரட்சியாளர்களை மீட்பதிலும் அவரால் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை. ஆனாலும் சென்னின் கண்களுக்கு தினேஷ் சந்திரா ஒரு நாயகனாகத் தெரிந்தார். சென் வளர்ந்தது இந்தப் பின்னணியில்தான். 



சென் வளர்ந்து பதின்ம வயதைத் தொடும் அவரது அரசியல் பார்வைகள் விரிவடைந்தன. ஸ்பானியப் போர் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டதில் பாசிஸத்திற்கு எதிராக எழுதிவந்த எர்னஸ்டா ஹெமிங்வே, ஸ்டீபன் ஸ்பிளண்டர் ஆகியோரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டார். சமூகத்தில் இருந்த வர்க்கப் பாகுபாடுகளைப் பற்றி அறிந்தார். அப்போதுதான் கம்யூனிசக் கொள்கைகள் மீது சென்னுக்கு ஈடுபாடு தோன்றியது. அத்துடன் அவருக்குச் சினிமா ஆர்வமும் வந்தது. 



1950களில் மிருணாள் சென் முழுமையாக சினிமாவில் பணியாற்றத் தொடங்கினார். கம்யூனிசமும் சினிமாவும் சென்னின் இரு கண்களாக இருந்தன. அவரது தொடக்க காலப் படங்களில் சென் தன் கம்யூனிசக் கொள்ளைகளை வெளிப்படுத்தினார். அவரது முதல் படமான ராட் போர் தோல்வியைச் சந்தித்தது. அவரது இரண்டாவது படமான நீல் அக்ஸாய் நீச்சே அதன் காத்திரமான கருத்துகளால் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் பிறகு மிருணாள் சென் நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் படங்களை எடுத்தார். அவரது மூன்றாவது படமான BaisheyShravana சென்னுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. சென்னின் படங்கள் நடுத்தர வர்க்கப் பிரச்சினைகளையும் அதன் காரணகாரிங்களையும் அம்பலப்படுத்தின. அவரது சினிமாவில் தென்படும் ஒரு குழப்பமான மொழியே நடுத்தர வர்க்கத்தின் தெளிவின்மையின் வெளிப்பாடுதான். 



1969-ல் வெளிவந்த Bhuvan Shome மிருனாள் சென்னை சினிமா ஆளுமையாக மாற்றியது. இது வங்க எழுத்தாளர் பனாபூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மனித உறவுகளை ஆழமாகச் சித்திரிக்கும் இப்படம் வர்க்கப் பாகுபாடுகளையும் பேசுகிறது. இது தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்த முதல் படம். இதற்கு அடுத்த அவர் எடுத்த Calcutta 71போன்ற படங்கள் அவரது கம்யூனிசக் கொளைகளைப் பறைசாற்றின. அதைத் தொடர்ந்து பல படங்கள் செய்தாலும் 2003இல் வெளிவந்த Aamar Bhuban அவருக்கு மீண்டும் பெரும் பெயரைத் தேடித் தந்தது. 



பொதுவாக சென்னின் படங்கள் சூட்சுமமானவை தோற்றத்தில் வடிவத்திலும். இந்த அம்சம் அவரது படங்களின் பலமாகவும் பலவீனமுமாகச் சொல்லப்படுகிறது.பெரும்பாலான படங்களை அவர் தான் படித்த கதைகளின் அடிப்படையில் உருவாக்குகிறார். ஆனால் அவை படங்களுக்கு ஆதாரமானவை அல்ல. அவை படத்தைத் தொடங்குவதற்கான ஊக்கி மட்டுமே. பிறகு அந்தப் படமே தன் கதையை எழுதிக்கொள்ளும் என்கிறார் சென். 


இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய நான்கு மொழிகளில் சென் படங்களை இயக்கியுள்ளார். கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ, சிக்காக்கோ, கய்ரோ உள்ளிட பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு இவரது படங்கள் விருதுகள் பெற்றுள்ளன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகிப் பால்கே விருது, இந்திய அரசின் பத்ம பூஷன் உள்ளிட பல விருதுகளையும் பெற்றுள்ளார். 


இளம் வயதில் சென் ஸ்டியோவிற்குள் வேலை தேடி வந்தபோது அவரிடம் போதிய பணம் இல்லை. அவர் யாருடைய கலை வாரிசும் அல்ல. அவருக்கு குரு எனச் சொல்லிக்கொள்ளவும் யாரும் இல்லை. போதிய தொழில்நுட்ப அறிவும் இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் தன் தனிப்பட்ட ஆளுமையால் இந்தியாவின் முக்கியமான சினிமா ஆளுமையாக உருவெடுத்துள்ளார். அதனால்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த சினிமா விமர்சகர் டெரக் மால்கம் சொல்கிறார், “மிருனாள் சென் துணிச்சலுக்கும் எழுச்சிக்குமான உருவகமாகவும் இளைஞர்களுக்கான முன்னுதாரணமாகவும் இருக்கிறார். அவரின் இந்த எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.” 



Sunday, February 24, 2013

பத்மபூஷண்’ விருதை மறுத்த எஸ் ஜானகி பேட்டி

ஜானகியின் பாடல்கள் கொடுக்கும் பரவசத்தை அவருடனான உரையாடலும் கொடுக்கும் என்பதை அந்த அரை மணி நேரத் தின் ஒவ்வொரு நொடியும் உணர்த்திக்கொண்டே இருந்தது. தனக்கு அளிக்கப்பட்ட 'பத்மபூஷண்’ விருதை மறுத்ததன் மூலம் அகில இந்தியக் கவனம் ஈர்த்தவர், இப்போது அந்தப் பரபரப்பின் சின்ன சாயல் கூட இல்லாமல் தன் வாழ்க்கையின் முக்கியமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.  



''நான் முதல்ல பாடுனது வி.சந்திரசேகரன் என்கிற ஒரு மேடை நாடகக் கலைஞருக்காக. அற்புதமான மோனோ ஆக்டிங் கலைஞர் அவர். அவரோட நாடக இடைவேளைகளின்போது என்னைப் பாடவைப்பார். அப்படி ஒரு சமயம் போனபோது, அவரோட பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோ கீழே விழுந்துடுச்சு. எடுத்துப் பார்த்தா அது ஒரு கம்பீரமான இளைஞரின் படம். என்னமோ தெரியலை...


 பார்த்த உடனே அவர் மேல ஒரு ஈர்ப்பு உண்டாகிருச்சு. அப்புறம் அவர் சந்திரசேகரனோட மகன் ராம்பிரசாத்னு தெரிஞ்சிக் கிட்டேன். அவரை நேர்ல பார்க் காமலேயே காதலிக்க ஆரம்பிச் சிட்டேன். தெய்வீகக் காதல் மாதிரினு வெச்சுக்கங்களேன். ஒவ்வொரு நாள் மேடையில பாடும்போதும் அவர் கூட்டத்தில் அமர்ந்திருக்காரான்னு கண்கள் தேடும். இல்லைன்னா மனசு ஏங்கும்.



ஒரு நாள் சந்திரசேகரன் சார், 'இன்னைக்கு என் மகன் உன் பாட்டைக் கேட்க வந்திருக்கான்’னு சொன்னார். அந்த வார்த்தைகள் உண்டாக்கிய பரவசத்தை இன்னும் என்னால மறக்க முடியலை. அன்னைக்குக் கண்கள் மூடி மெய்மறந்து பாடினேன். கண்ல ஆனந்தக் கண்ணீர் கட்டிக்கிச்சு. பாடி முடிச்சதும் ராம்பிரசாத் ஆச்சர்யமா என்னைப் பார்த்துக்கிட்டே அவர் அப்பாகிட்ட சொன்னார், 'எவ்வளவு திவ்யமா பாடுறாங்க. அந்தக் குரல் உங்களை எதுவும் செய்யலையா? இந்தக் குரல் என் உசுரை, மனசை உலுக்கிடுச்சு. இவங்க இங்க பாட வேண்டியவங்க இல்லை. இந்தக் குரல் உலகம் முழுக்கக் கேட்கணும்.’ என்னை சினிமா பக்கம் திசை திருப்பினவர் ராம்பிரசாத்தான்.
அவர் சொல்லிட்டாருங்கிற ஒரே காரணத்துக்காகவே சினிமாவில் பாடும் முயற்சிகளை மேற்கொண்டேன். என் மனசுல இருந்த காதலை அவர்கிட்ட சொல்லத் தயக்கம். அந்தக் காலத்துல அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனா, நான் தயங்கித் தாமதிச்சதே என் காதலுக்கு ஒரு சோதனையை உண்டாக்குச்சு.
ஒரு முறை அவர் அப்பா சந்திரசேகரன் சார், 'எங்கேயோ வெளியே போகணும்’னு சொல்லி என்னைக் கூப்பிட்டு அனுப்பிச்சார். போய் நின்னா, ராம்பிரசாத்துக்குப் பொண்ணு பார்க்க என்னையும் அழைச்சுட்டுப் போனாங்க. 




 கண்ணுல துளிர்த்த கண்ணீரை மறைச்சுட்டு கலங்கிப்போய் உட்கார்ந்து இருந்தேன். நல்லவேளை அந்தப் பொண்ணு கைகூடலை. அப்புறம் அவரோட அப்பாவே என் நடவடிக்கைகளைக் கவனிச்சிட்டு, 'பக்கத்துல லட்சுமியை வெச்சிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேனே’னு என்கிட்ட வந்து என் விருப்பத் தைக் கேட்டார். சந்தோஷமா தலையாட்டுனேன். அப்புறம் ராம்பிரசாத்தும் மனசு நிறைய என் மேலே காதலை மறைச்சி வெச்சிருந்ததைப் பின்னாடி சொன்னார். இப்படி ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் காதலைச் சொல்லாமலேயே வாழ்க்கைத் துணை ஆனோம். என் கணவர்தான் சென்னைக்கு என்னை அழைச்சிட்டு வந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவுல மாசச் சம்பளத்துக்கு ஆர்ட்டிஸ்ட்டா சேர்ந்தேன்.''



''அந்தச் சமயம் பி.சுசீலா, பி.லீலா, ஜிக்கின்னு பிரமாதமான பாடகிகள் சினிமாவில் கோலோச்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு நடுவில் எப்படி எஸ்.ஜானகி உருவானாங்க?'' 



''தானா எல்லாம் நடந்துச்சு. ஏவி.எம்-ல மாசச் சம்பளம் 300 ரூபான்னு மூணு வருஷம் ஒப்பந்தம் போட்டாங்க. அப்ப ஏவி.எம். ஆர்ட்டிஸ்ட்னா பெரிய மரியாதை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அங்கே நான் பாடின முதல் பாட்டைக் கேட்ட எல்லாரும், 'யாரு இந்த சின்னப் பொண்ணு. குரல் ஃப்ரெஷ்ஷா இருக்கே... பாட்டைக் கேட்டுட்டே இருக்கணும்போல இருக்கே’னு ஆச்சர்யப்பட்டாங்க. அந்த ஒரு பாட்டைக் கேட்டதுமே வெளியே இருந்து நிறைய அழைப்புகள் வந்தன. எதிர்பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பெரிய வாய்ப்புகள் வந்தன. 



ஆனா, ஏவி.எம். நிறுவனத்தோட இருந்த ஒப்பந்தத்தை மனசுல வெச்சுட்டு நான் தயங்கி நின்னேன். என் தர்மசங்கடம் புரிஞ்சுட்டு ஒரு கட்டத்துல அவங்களே மனசு கேட்காம ஒப்பந்தத்தைத் தளர்த்திட்டாங்க. ஏவி.எம்-ல நான் முழுசா ஒரு வருஷம்கூடப் பாடலை. நான் கோரஸ் பாடி அறிமுகம் ஆனதா சிலர் நினைக்கிறாங்க. ஆனா, நான் கோரஸ் பாடுனதே இல்லை. முதல் பாடலே ஸோலோவாகத்தான் பாடினேன். அந்தக் காலகட்டத்தில் மேதைகளுக்கு நடுவில் எனக்கு ஒரு சின்ன இடம் கிடைச்சதுக்கு ஏவி.எம். நிறுவனம் எனக்குக் கொடுத்த வாய்ப்பும் சுதந்திரமுமே முக்கியக் காரணம்.''



''17,000 சினிமா பாடல்கள், சுமார் 20,000 தனிப் பாடல்கள், திருவையாறில் மூன்று முறை அரங்கேற்றம்... இந்தச் சாதனைகளுக்கான சின்ன அங்கீகாரமாகத்தானே உங்களுக்கு பத்மபூஷண் அறிவிக்கப்பட்டது. அதை ஏன் மறுத்தீங்க?'' 



''ரசிகர்களின் அன்பை விட இந்த உலகத்துல வேற எதையும் பெரிய அங்கீகாரமா நான் நினைக்கலை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி, படுகா, சிங்களம், இங்கிலீஷ், ஜெர்மன் உட்பட 17 மொழிகளில் பாடியிருக்கேன். விருதை எதிர்பார்த்து இத்தனை மொழிகளில் நான் பாடலை.



ஒருத்தருக்கு விருது அங்கீகாரம் எப்ப கிடைக்கணும்? அவர் கம்பீரமா... நல்ல நிலைமையில் இருக்கிறப்போ, 'இந்த விருதுக்கு முழுத் தகுதியானவன் நான்’ங்கிற எண்ணம் மனசுல அலை அடிக்கிற சமயம் கொடுக்கிறதுதானே நியாயம்? அதை விட்டுட்டு, வீல் சேர்ல ஒருத்தர் தள்ளிட்டு வர்ற நிலைமையில ஒருத்தருக்கு விருது கொடுக்கிறது என்ன நியாயம்?



தமிழில் பாடுவதற்கு ரொம்பவும் சிரமமான பாட்டான 'சிங்காரவேலனே தேவா’ பாடினப்பவே என்னைக் கவனிச்சு, தொடர்ந்த சில வருஷங்களிலே என் திறமையைக் கணிச்சு விருது கொடுத்திருந்தா, அதை நான் ஏத்துட்டு இருந்திருப்பேன். ஆனா, இப்போ எதுக்கு எனக்குச் சம்பந்தம் இல்லாம அந்த விருது? அப்போ வடக்கத்திய ஆட்கள் நினைச்சு மனசு வெச்சாதான் தெக்கத்திய ஆட் களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்னா, அது எதுக்கு நமக்கு? அதான் வேண்டாம்னு மறுத்துட்டேன். அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை.''



''எல்லா காலகட்டத்திலும் எல்லா இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக நீங்கள்தான் இருந்திருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுடையது சுகமான பயணமாகத்தானே இருந்திருக்கிறது. ஆனா, 'பத்மபூஷண்’ விருதை மறுக்கும் அளவுக்கு மனதில் என்ன காயம்?'' 



''எல்லாரும் நினைக்கிற மாதிரி சினிமாவில் ஜானகியின் வளர்ச்சி சுலபமா இல்லை. பலருக்கும் தெரியாத ஒரு உண்மையை இப்போ சொல்றேன்... நான் சினிமாவில் பாடத் தொடங்கிய சில வருஷங்கள்லயே கடுமையான ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். 'சுமைதாங்கி’ படத்துல 'ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ’ பாடுனப்ப மூச்சுத் திணறல் அதிகமாகி நெஞ்சை அடைச்சிருச்சு.




 ஆனாலும், தொடர்ந்து பாடினேன். 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ பாட்டு இப்பவும் எத்தனை பேரைத் தாலாட்டித் தூங்கவைக்குது. ஆனா, அந்தப் பாட்டைப் பாடுறப்ப எனக்குக் கடுமையான மூச்சுத்திணறல்.  அதைப் பொறுத்துக்கிட்டு பாடினேன். பாடி முடிச்சதும் மயங்கிட்டேன். உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போய் உயிரைக் காப்பாத்தினாங்க. இப்படி என் உயிரின் சில இழைகளை இழந்துதான் என் ஒவ்வொரு பாட்டிலும் ஜீவன் சேர்க்குறேன்.  ஆனா, அதைக் கவனத்தில் கொள்ளாமல், 'என் குரல் சுமார்தான். ஆனா, பாடுற விதத்துல திறமையா இருக்கிறதால பாட்டு நல்லா வருது’னு விமர்சிச்சாங்க. அதுதான் என் மனசை  கஷ்டப்படுத்திய விஷயம். ஆனா, அதையெல்லாம் இப்போ கடந்து வந்துட்டேன்.''



''இன்னைக்குப் பாடிட்டு இருக்கும் பின்னணிப் பாடகர், பாடகிகளில் யாரை உங்களுக்குப் பிடிக்கும்?'' 



''நிறையப் பேர் வர்றாங்க. அருமையா பாடுறாங்க. எல்லாரையும் ரசிக்குறேன். இன்னைக்கும் சினிமாவுல பாடச் சொல்லி தினமும் என்கிட்ட கேட்குறாங்க. ஆனா, தோணுறப்போ வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டுதான் பாடுறேன். அடுத்தடுத்த தலைமுறைக்கு வழிவிடணும். என் குழந்தைங்க பாடட்டும். நான் இப்போ ரசிகை மட்டும்தான்.''


 நன்றி - விகடன் 

Tuesday, April 17, 2012

பச்சை என்கிற காத்து - சினிமா விமர்சனம்

http://www.thedipaar.com/pictures/mp3_album_images/resize_1279895834.jpg

அமைதிப்படை அமாவாசை மாதிரி ஆர்வக்கோளாறு அதிகம் உள்ள அடியாள் தான் ஹீரோ.. ஊருக்குள்ள மக்கள் தன்னை மதிக்கனும்கறதுக்காக வாலண்ட்ரியா ஒரு அரசியல்வாதி கிட்டே எடுபுடியா சேர்ந்துக்கறாரு.. ஆனா ஓவரா அலப்பரை பண்ராரு.. அது பிடிக்காம அந்த அரசியல்வாதியோட மத்த எடுபுடிங்க எல்லாம் அவனை கழட்டி விட சமயம் பார்த்துட்டு இருக்காங்க.. ஒரு கேவலமான சந்தர்ப்பத்துல அந்த அரசியல்வாதிக்கும், ஹீரோவுக்கும் அடி தடி அளவு தகராறு முத்திடுது. 

பொதுவா அழகிரி அண்ணன் கூட ஃபைட் போட்டு வெளீல வந்தா ஸ்டாலின் அண்ணன் கூட ஐக்கியம் ஆகிடனும்.. இதுதான் தமிழனின் பாரம்பரியம்.. அதைத்தான் ஹீரோவும் பண்றாரு.. அவருக்கு ஆப்போசிட் ஆள் கூட சேர்ந்து ஊருக்குள்ள அராஜகம் பண்ணிட்டு இருக்காரு.. ஒரு கட்டத்துல அழகிரியும், ஸ்டாலினும் ஒண்ணு சேர்ந்துடறாங்க.. ஹீரோவை போட்டுத்தள்ளனும்னு பிளான் பண்றாங்க.. 

 இப்படியே போனா இது முழுக்க முழுக்க அரசியல் கதை ஆகிடுமே.. கதைல கிளாமர் வேணாமா? அதனால ஸ்கூல் படிக்குதா? பூக்கடை வெச்சிருக்கா?ன்னு டைரக்டருக்கே குழப்பமான  கேரக்டர்ல   ஹீரோயின்.. முதல் சீன்ல பாப்பா ஸ்கூல்ல இருக்கு.. அடுத்த சீன்ல பூக்கடை வெச்சிருக்கு.. பார் டைம் ஜாப் மாதிரி காட்டலை. ஃபுல் டைம் ஜாப் மாதிரி தான் காட்டறாரு.. 

ஊர்ல அழகான, ஆரோக்யமான 1008 பசங்க இருந்தாலும் , இந்த சினிமா ஹீரோயின்கள் மட்டும் கேவலமான ரவுடிகளையும், பொறுக்கிகளையும் தான் லவ்வுவாங்க..  பவுனு பவுனு தான் ஹீரோயின் ரோகினி மாதிரி பாப்பா சாட்சாத் நெஞ்சுலயே ஹீரோவோட கேவலமான பேரை பச்சை குத்தி வெச்சிருக்கு.. ஆனாலும் வெளீல அதை காட்டலை ( ஐ மீன் அவ வெச்சிருந்த ஆசையை )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ4lvxf1MTOYkWuj5zqP-7Sm20pmIJwI5TweDv1thBjw-ZI6JMyaPiimVHxVA4G5-Cvvj1KO7nbuMlYAIlT2iwLAcCE_ElU7RnSZCgvN3HqJPKqTRIH8fr9daaTlXvPvdy_Psz7uC73J34/s1600/pachai-engira-kaathu-movie-gallery-05.jpg

 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்காக அந்த சீனை வெச்சிருக்காரு போல. ஹீரோ ஒரு முரடனா? ஒரு டைம் வயக்காட்ல பாப்பாவை ஓரம் கட்டி என்னை லவ் பண்றியா ? இல்லையா? ந்னு சல்மான் கான் ஐஸ்வர்யா ராயை மிட் நைட்ல ஹோட்டல் ரூம் வாசல்ல டார்ச்சர் பண்ணுன மாதிரி தண்ணி தொட்டிக்குள்ள முக்கி முக்கி எடுக்கறான்.. 

 அந்த ஹீரோயின் லூசுப்பயலுக்கு பிறந்த கேனக்கிறுக்கி போல.. இல்லை இல்லை லவ் பண்ணலைன்னு சொல்லி செத்தே போயிடுது.. ( அப்புறம் என்ன இதுக்கோசரம் பச்சை குத்தி இருக்கு?) பாப்பா வுக்கு ஒரு தங்கச்சி 10 வயசு.. அது பெருசாகி பாப்பா மாதிரியே ஆகுது ( டபுள் ஆக்ட்)

12 வருஷம் கழிச்சும் ஹீரோ அப்படியே இருக்கான்.. தங்கச்சி ஹீரோயின் கொலைக்கு பழி வாங்க ஹீரோவை கல்யாணம் கட்டி மேட்டர் எல்லாம் முடிஞ்ச பிறகு கொலை பண்ணிடறா..... ( கொலை பண்றவ மேட்டர் நடக்கறதுக்கு முன்னேயே கொலை பண்ணக்கூடாதா? ஹி ஹி )


ஹீரோவா நடிச்சவர் நடிப்பு டாப் ரகம்.. புது முகம் மாதிரியே தெரியலை.. செம நடிப்பு.. ஆனா திரைக்கதையின் குளறுபடிகளால் பல இடங்களீல் எரிச்சல்.. கவனிக்கப்பட வேண்டிய தமிழ் நடிகர்.. 

ஹீரோயின் சுமாரிலும் சுமார்.. தயாரிப்பாளருக்கு வேண்டியவங்க பொண்ணு போல .. ம் ம்


http://chennai365.com/wp-content/uploads/movies/Pacchai-Enginra-Kaathu/Pachai-Engira-Kaathu-Stills-006.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  ஹீரோயின் எக்சாம் செண்ட்டர்ல எக்சாம் எழுதும்போது ஹீரோ அவளுக்கு ஹெல்ப் பண்ண மக் செட்டுடன் வாசலில் நின்று பப்ளீக்காக பதிலை மைக்கில் சொல்வது  நம்ப முடியாத சீன் என்றாலும் ரசிக்க வைத்தது...


2. பெரும்பாலான நடிகர்கள் கேமராவுக்குப்புதுசு. அனைவரையும் நன்றாக வேலை வாங்கியமைக்கு ஒரு ஷொட்டு


3. ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சுநாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே கும்மாங்குத்துப்பாட்டு கிராமிய மணம்..கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சுஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு ஓக்கே ரகம்.. நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே.. மெலோடி, தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய் சோகப்பாட்டு,சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னைகிறுக்கனாக்கி சிரிக்கிறாளே பாட்டு சோக தெம்மாங்கு,நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ...... ஒப்பாரிப்பாட்டு என எல்லாப்பாடல்களூம் கவனிக்க வைத்தது./. வெல்டன் இசை அமைப்பாளர்

4. ஹீரோவின் அம்மாவாக வருபவர் நடிப்பு செம.. ஹீரோயினும் ( தேவதை) ஓக்கே ரகம் தான்


http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/pachai-engira-kaathu/pachai_engira_kathu_movie_stills-18_01.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோயின் ஸ்கூல் ஸ்டூடண்ட்டா? பூக்காரியா? பார்ட் டைமில் பூக்காரியா? ஒய் குழப்பிங்க்?


2. அவ்வளவு பெரிய அரசியல் தலைவரிடம் ஓப்பனிங்க்லயே  அவ்வளவு உதார் விடுவது நம்பவே முடியல.. 


3. ஹீரோ தனுஷ்க்கு தம்பி மாதிரி இருந்துட்டு காலேஜ் கேம்பஸ்ல போய் 1900 ஸ்டூடண்ட்ஸ் கூடி நின்னு பார்க்க 89 பேரை போட்டு விளாசறாரே? போட்டு கும்மிட மாட்டாங்க?

4.  ஹீரோவை அடிச்சவனுக்கு அவனை அடையாளம் தெரியாதா? ஹீரோவை உயிருடன் மறுபடி பார்க்கறவன் ஹீரோ உயிரோடயா இருக்கான்னு ஒரு அதிர்ச்சியை காட்டவே இல்லையே?


5. ஹீரோ கூட அந்த சாமியார் ஜஸ்ட் 2 மாசமாத்தான் கூட இருக்கார்.. ஆனா ஹீரோயின் ஒரு சீன்ல “ நீ எத்தனை வருசமா கூடவே இருக்கே? நீ சொல்லக்கூடாதா?ன்னு கேட்கறார்.



6. ஹீரோயின் தங்கை கிளைமாக்சில் ஹீரோ ஹீரோயினை கொலை செய்யும்போது ஆள் அங்கே இல்லை . ஆனா ஒரு சீன்ல  என் கண்ணெதிரே என் அக்காவை கொலை செஞ்சேன்னு வசனம் வருதே?


7.  ஹீரோவை கொலை பண்றவன் அடிச்சுப்போட்டு வாய்க்கா மேட்டுல வீசிட்டு போயிடனும்,. எதுக்கு மெனக்கெட்டு லார்வா கூட்டுப்புழு பருவம் மாதிரி சாக்கு மூட்டைல அடைச்சு ஆல மரத்துல தொங்க விடனும்..?


8.ஹீரோ பெரிய தியாகி கிடையாது. ரவுடி, பொறுக்கி.. ஆனா அவன் சாகற சீன்ல ஆடியன்ஸ் சோகமா இருக்கனும், ஃபீல் பண்ணனும்னு இயக்குநர் எதிர் பார்ப்பது ஏன்?


9. ரஜினியே நடிச்சாலும் சோக சீன், அழற சீன் எல்லாம் இந்தக்காலத்துல 2 நிமிஷம் தான் வைக்கனும்.. நீங்க 18 நிமிஷம் வெச்சிருக்கீங்களே? ஏன்?


10. ஹீரோயின் ஏன் தெளிவான முடிவெடுக்காம நயன் தாரா மாதிரி ஆசிலேட்டட் மைண்டாவே இருக்காங்க? ஒரு சீன்ல வெட்கப்பார்வை, அடுத்த சீன்ல கோபப்பார்வை..


11. திரைக்கதைல ஒண்ணா ஒரே சீரா  கதை போகனும், அல்லது ஃபிளாஸ்பேக்ல கதை சொல்லனும், அதை விட்டுட்டு 30 நிமிஷம் ஃபிளாஸ்பேக், 10 நிமிஷம் கரண்ட் டைம்னா ஆர்டினரி ஆடியன்ஸ் குழம்ப மாட்டாங்களா?


12. ஹீரோ தன் அப்பாவின் மரணத்துக்கு சரியான டைமில் வர்லை. ஆனா தியேட்டர்ல படம் பார்த்தவங்கள்ல பாதிப்பேரு ( ஐ மீன் 4 பேர் )அப்பாவை கொலை செஞ்சதே ஹீரோதான்னு தப்பா நினைக்கறாங்க.. எடிட்டிங்க் ரொம்ப  மோசம்


http://tamilmovie.ebest.in/Events/pachai%20engira%20kathu%20psm%20big62.jpg


 மனதில் நின்ற வசனங்கள்

..1.  அண்ணே, கட்சில தானே இடம் கேட்டேன். கவ்ர்மெண்ட் வேலையா கேட்டேன். ?


2. இங்கே எல்லாம் பூக்கடை வெக்கக்கூடாதும்மா.. ஆர் சி புக் இருக்கா? லைசன்ஸ் இருக்கா?.. டேய்.. போலீஸ கூப்பிடு. மிலிட்ரியை கூப்பிடு


3.  எனக்கு சின்ன வீடு இருக்குன்னு ஊருக்கெல்லாம் மைக் போட்டுச்சொல்லுடா ங்க்கொய்யால.


4.  காக்காய்க்கு சோறு கம்மியா வெச்சியா? இந்தக்கத்து கத்துது?

டேய். அவர் உன் அப்பாடா..


5. லேடி - யார் நீ?

 கர்த்தர் அழைத்தார்.. காற்றாய் வந்தேன். 

6. செல்லம்.. நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கை விடுவதும் இல்லை


. 7.  நீ பத்தாங்கிளாஸ் படிக்கறப்ப ரோஸி குளிக்கறதை எட்டிப்பார்த்தவன் தானே?

8. காவல் நிலையம் மாடில இருந்து மது அருந்தினான் பச்சை என வரலாறு பேசட்டும். 

9. புள்ள குடுக்கச்சொன்னா, ஆண்டவன் 12 கிலோ தொல்லையை கொடுத்துட்டான் போல. 


10.  நாங்கள் அயராமல். சளைக்காமல் , உழைக்காமல் போராடுவோம். 


11. யோவ்.. வக்கீல் இனி நீ தான் எனக்கு அரசியல் சட்ட ஆலோசகர். இனி கோர்ட்டுக்கெல்லாம் போக வேணாம். என் கூட வந்துடு.. 


12.  கட்சிக்கு விசுவாசமா இருக்கமோ இல்லையோ. அண்ணனுக்கு விசுவாசமா இருக்கனும்.. 

13. என்னால நம்பவே முடியலை நேத்து வரைக்கும் எப்படி இருந்த நீ இன்னைக்கு திடீர்னு மாறீட்டியே?

 புத்தன் கூட போதி மரத்தடிக்கு வந்த பின் தான் ஞானம் பெற்றான்


14.  இப்போ தங்கம் என்ன விலை? 

 18000


 அப்போ இத்தனை நாளா நான் அடமானம் வெச்ச நகைக்கு வட்டி 900 ரூபா குடு.


15. இந்த சொத்து தாத்தா சம்பாதிச்சது.,. எனக்கு அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கு. அழிக்க இல்லை.


16.   பாறை மாதிரி பார்க்கறதுக்கு இருந்தாலும் ஊத்துத்தண்ணி போல அப்பப்ப அன்பு சுரக்குது போல. 


17.  நாயைக்காசு குடுத்து வாங்கறது எதுக்கு? நம்ம கிட்டே வாலாட்டத்தானே?


18. தலைவரே.. அவனை போட்ரலாமா?


19. ’எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுறாங்க நான் இப்போ அதைத்தானே செஞ்சுட்டிருக்கிறேன்?.

20.  நான் மட்டும் கொஞ்சம் முந்தி பிறந்திருந்தா, வரலாறுங்கிற பேரை மாத்தி பச்சைன்னு வச்சிருப்பாங்கடே


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg22mSm0W31p-cPlm8FvIGrpuDehgLBEZPNSyI5cS4j035Y5R5Wn0qRB11QCop-W0f183oPHIc5qhFrnFrcH1sNc4aTsgGtljKrEygMWtsiq_pwQQMeg53aBgGC-wSMPdthCCdReGZsv38/s1600/Pachai+Enginra+Kaathu+Movie+Still+5.jpg 

 வேணாம்யா.. புதுசா கல்யாணம் ஆனவன், இன்னைக்கு ஒரு நாள் அவன் மனைவியை தொட்டுக்கட்டும் விடிஞ்சதும் போட்ருங்க..


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்களை ரசிக்கும் ஆண்கள் மட்டும் பார்க்கலாம்.. ஓவர் வன்முறை என்பதால் பெண்கள் தவிர்க்கலாம்..

ஈரோடு ஸ்டாரில் பார்த்தேன்


http://media.getcinemas.com.s3.amazonaws.com/posters/padam-paarthu-kathai-sol/still-16-full.jpg

Monday, February 27, 2012

2012-ல் ஆஸ்கார் அவார்ட் வென்ற படங்கள் - ஒரு பார்வை

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 84வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என 3 டாப் விருதுகள் உள்பட 5 ஆஸ்கர்களை வென்றிருக்கிறது, மெளனப் படமான 'தி ஆர்டிஸ்ட்'!


http://www.stardusttrailers.com/poster/(The%20Artist)(poster)The_Artist_poster.jpg

ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் 'THE ARTIST', 'IRON LADY', 'HUGO' உள்ளிட்ட படங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 4 'THE ARTIST' படம் வென்றுள்ளது.

பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் ஏற்கனவே தட்டிச் சென்றது 'THE ARTIST'.
மவுனப்படமான 'த ஆர்டிஸ்ட்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைப் படமான இந்தப் படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகை விருது 'IRON LADY' படத்தில் பிரிட்டன் பிரதமராக நடித்த Meryl Streepக்கு கிடைத்தது. இது Meryl Streep பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.


'அயர்ன் லேடி' படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.

இதற்கு முன் க்ராமர் Vs கிராமர் (1979), சோபிஸ் சாய்ஸ் (1982) ஆகிய படங்களுக்கும் இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.movie-list.com/posters/big/zoom/ironlady.jpg


 சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது.

http://content9.flixster.com/movie/60/49/00/6049003_det.jpg


GEORGE CLOONEY நடித்த 'THE DESCENDANTS' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 


http://mimg.sulekha.com/english/the-descendants/stills/the-descendants-04.jpg



 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதினை 'THE SEPARATION' என்ற ஈரான் திரைப்படம் வென்றது.

http://vomena.org/blog/wp-content/uploads/2012/01/Nader-and-Simin-a-separation.jpg


ஆஸ்கர் விருதுகள் வென்றவர்கள் முழுமையான பட்டியல் :

Cinematography: Hugo.

Art Direction: Hugo.

Costume Design: The Artist.

Makeup: The Iron Lady.

Foreign Language Film: A Separation, Iran.

Supporting Actress: Octavia Spencer, The Help.

Film Editing: The Girl With the Dragon Tattoo.

Sound Editing: Hugo.

Sound Mixing: Hugo.

Documentary Feature: Undefeated.

Animated Feature Film: Rango.

Visual Effects: Hugo.

Supporting Actor: Christopher Plummer, Beginners.

Original Score: The Artist.

Original Song: Man or Muppet from The Muppets.

Adapted Screenplay: Alexander Payne, Nat Faxon and Jim Rash, The Descendants.

Original Screenplay: Woody Allen, Midnight in Paris.

Live Action Short Film: The Shore.

Documentary (short subject): Saving Face.

Animated Short Film: The Fantastic Flying Books of Mr. Morris Lessmore.

Directing: Michel Hazanavicius, The Artist.

Actor: Jean Dujardin, The Artist.

Actress: Meryl Streep, The Iron Lady.

Best Picture: The Artist.
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை 'THE ARTIST' படத்தினை இயக்கிய Michel Hazanavicius வென்றுள்ளார். 
pic.twitter.com/pZHn0qon







ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.



மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.



'THE ARTIST' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுடன் Jean Dujardin!

Saturday, February 25, 2012

ரஜினியின் பாராட்டில் நனைந்த எஸ் ராமகிருஷ்ணன் -இலக்கிய விழா உரை

கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது 2011 ஆம் ஆண்டுக்கு இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான பாராட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகைதந்து பாராட்டு விருதை எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கிய ரஜினிகாந்த், தனக்கும் அவருக்கும் உள்ள நட்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார். 

வரவேற்புரையாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், "எஸ்.ராமகிருஷ்ணனுடன் சமகாலத்தில் ஒப்பிடக்கூடிய இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இளைஞர்களுக்கு உலக சினிமாவை, உலக இலக்கியத்தை அறிமுகம¢ செய்யக்கூடியவராக அவர் இருக்கிறார். நமது மொழிக்கும் நமது இலக்கியத்துக்கும் எஸ். ராவுக்கு அளிக்கப்பட்டிருக்கிற விருது பெருமை சேர்க்கிறது. அதைவிட அந்த விருதுக்கே கிடைத்த கௌரவம் என்று சொல்லலாம்" என்றார். 


அடுத்து பேசிய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், "இந்த விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ஏன் வருகிறார் என்று என்னிடம் நண்பர்கள் கேட்டார்கள். ராமகிருஷ்ணனுக்கு பாபாவே அவர்தான் என்று அவர்களிடம் சொன்னேன். எழுத்தாளர்களை மதிக்காத இந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்திருந்து வாழ்த்துவது வியப்புக்குரிய விஷயம். பெரிய மரியாதையையும் பெரிய மகிழ்ச்சியையும் இந்த விழா ஏற்படுத்தியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக எஸ்.ரா இருக்கிறார்" எனறு பாராட்டியவர் அவரது நாவல்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.


வெ.இறையன்பு, உலக இலக்கியங்களை வாசிப்பதில் உலகின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதில் எஸ்.ரா ராட்சத பசியுள்ளவராக இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். நிறைய விருதுகளைப் பெற்ற பின்னரும்கூட அவர் அமைதியாக இருக்கிறார் என்றார்.


 நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளராக எஸ். ரா இருப்பதாகச் சொன்னார் கவிஞர் வைரமுத்து, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த விழாவிற்கு வந்திருப்பது பற்றி ஆச்சரியமாகப் பேசுகிறார்கள். ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த வாசகர். அவரை உணர்ந்து சொல்கிறேன். நிறைய கதைகள் அவரிடம் இருக்கின்றன. ஞானபீடம் விருதுபெற்ற ஜெயகாந்தனை முதல் நாள் இரவே வீட்டுக்குப் போய் வாழ்த்தி வந்தவர் அவர். இங்கு வந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 எஸ். ராமகிருஷ்ணன் அனுபவங்களைத் தேடி பயணம் செய்துகொண்டே இருக்கிறார். படித்துக்கொண்டே இருக்கிறார். படிக்காத ஒருவர் பெரிய படைப்பாளியாக இருக்கமுடியாது. படிப்புதான் மழை. படிப்புதான் ஜீவன். என்னைவிட அதிகம் படித்தவராக எஸ். ரா இருக்கிறார் என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.


அடுத்து ப்ரெண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினார்கள். 


தனது ஏற்புரையில் எஸ். ராமகிருஷ்ணன், ''இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். ஒரு மகத்தான ஆத்மாவாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் குறையாத தாயன்பை வைத்திருக்கிறார். சிறந்த நடிகராக சிறந்த வாசகராக இருக்கிறார். வரலாற்றைத் தேடித்தேடி படிக்கிறார். பல மூத்த படைப்பாளிகளை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அவர் வந்திருந்து வாழ்த்தியதை பெருமையாக நினைக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கிற இந்த விருது தமிழ் மொழிக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் பேசியபோது, "என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். எழுத்தாளர் பாராட்டுவிழா போஸ்டரில் உன் பெயரைப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. உண்மையா? என்று கேட்டான். நான் வந்திருப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் பார்த்த சபைகள் வேறு. இந்த சபையில் பெரிய எழுத்தாளர்கள் மீடியாக்காரர்கள் வந்திருக்கிறார்கள். மைக் முன்னால் வந்தாலே எனக்கு மொழி மறந்துபோய்விடுகிறது.


 தமிழ், கன்னடம், தெலுங்கு தெரியும். ஆனால் எதுவும் முழுமையாகத் தெரியாது. ஆங்கிலம் தெரியும். அதுவும் அரைகுறைதான். இப்போது தமிழ் வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. எப்படி எஸ். ராமகிருஷ்ணன் நண்பரானார் என்பதைச் சொல்லவேண்டும். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது என்னைப் பார்க்க பலரும் விருப்பப்பட்டார்கள். யாரும் வரவேண்டாம். நானே வருகிறேன் என்று சொன்னேன். ஒருநாள் எஸ்.ராவைச் சந்திக்கலாம் என்று போனில் கேட்டேன். அப்போது ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னார். மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்தார்.


 ஏழு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்தார். அவரது வீட்டிற்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே சென¢னை முழுவதும் ஒரு ரவுண்ட அடித்தோம். பாபா படத்தில் சொர்க்த்தை விஷூவலாக எப்படி காட்டமுடியும் என்பதற்காக எழுத்தாளர் சுஜாதா சொல்லி, அவரிடம் பேசினேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரமித்துப்போனேன்.


 அவருடன் ஆந்திரா, கர்நாடகா என்று பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் குழந்தையைப்போல ஆச்சரியமாகப் பார்த்துப் பேசுகிறார். எழுத்து என்பது கடவுள் கொடுத்த வரம். குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எதிர்காலத்திலும் நிறைய எழுதவேண்டும்" என்று பல ஆன்மிக தத்துவ கதைகளை எடுத்துக்காட்டி சுவாரசியமாகப் பேசினார். 

 நன்றி - த சண்டே இந்தியன்