Showing posts with label விமல். Show all posts
Showing posts with label விமல். Show all posts

Wednesday, October 14, 2015

எந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் படம்,

தேவதாஸ்-பார்வதி காவியக் காதலைப் போல் கேரளத்தில் பரவலாக அறியப்பட்ட நவீன காலக் காவியக் காதல், காஞ்சனமால-மொய்தீனுடையது. 1950களில் வடகேரளத்தின் சிறு நகரமான முஹ்கத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘எந்நு நிண்டே மொய்தீன்’ என்னும் பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
2006-ல் ‘ஜலம் கொண்டு முறிவுற்றவள்’ என்னும் ஆவணப் படம் மூலம் காஞ்சனமாலா-மொய்தீன் காதலைக் கவித்துவமான விவரிப்புகளுடன் தொகுத்திருந்தார் இயக்குநர் ஆர்.எஸ்.விமல். இந்த ஆவணப் படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தால், செல்போன், இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் தீண்டிடாத காலகட்டத்திய காதலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கு எடுத்து வந்திருக்கிறார் அவர்.
காஞ்சனாவும் மொய்தீனும் பள்ளி சிநேகிதர்கள். காஞ்சனாவின் தந்தையும் மொய்தீனும் தந்தையும் அந்த ஊரின் பெரும் நிலக்கிழார்கள்; காங்கிரஸ் அனுதாபிகள். மொய்தீனின் தந்தை அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகவும் இருக்கிறார். இரு குடும்பத்துக்கும் அந்நியோன்யமான உறவும் உண்டு. மேற்படிப்புக்காக இருவரும் கோழிக்கோட்டில் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. திடீரென ஒரு பேருந்துப் பயணத்தில் ஓட்டுநர் கண்ணாடியின் வழியாக, இரு பழுப்பு நிறக் கண்கள் தன்னை நோக்குவதைக் கவனிர்க்கிறாள் காஞ்சனா. அந்த முகத்தில் விரியும் புன்னகை அவளுக்கு யாரையோ ஞாபகப்படுத்துகிறது. திரும்பிப் பார்க்கிறாள், மொய்தீன். அந்தக் கணத்தில்தான் மொய்தீன் மீதான காதலை அவள் உணர்கிறாள்.
கடிதம் வழியாகக் காதல் வளர்கிறது. கடிதம் மூலமாகவே காதல் விவகாரம் அவளது வீட்டுக்கும் தெரியவருகிறது. அவளது கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வருகிறது. வீட்டுக்குள் சிறைவைக்கப்படுகிறாள். இரு குடும்பத்திலும் எதிர்ப்பு வலுக்கிறது. ஆனால் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். காஞ்சனாவின் போர்க் குணத்தை முன்பே சில காட்சிகள் மூலம் இயக்குநர் சித்திரித்துவிடுகிறார். தன் தந்தைக்கு எதிராகப் போராடும்போது மொய்தீன் ஒரு திடமான கம்யூனிஸ்ட் சோஸலிஸ்ட் என்பதையும் சொல்லிவிடுகிறார்.
காண வழியில்லாத நிலையில் கடித வரிகள் மூலம் கூடுதல் நெருக்கம் கொள்கிறார்கள். மீண்டும் கடிதம் பிடிபடுகிறது. இருவரும் மலையாள எழுத்துகள் கொண்டு புதுமொழியை உருவாக்குகிறார்கள். கவிதைப் புத்தகங்களில் அடிக்கோடிட்டுப் பாஷைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தனது தங்கைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காகக் காஞ்சனா வலிகளுடன் காத்திருக்கிறாள். அவளுக்காக மொய்தீனும் காத்திருக்கிறான்.
அவர்கள் நேரில் பார்த்துக்கொள்ளாமல் பத்தாண்டுகள் கடந்துபோகின்றன. தங்கைகள் எல்லோரும் திருமணமாகிப் போகிறார்கள். அவனுக்கு நரை அரும்பத் தொடங்கிவிடுகிறது. வீட்டைவிட்டு வெளியேறத் தீர்மானிக்கிறார்கள். அதற்கிடையில் தந்தையால் கத்தியால் குத்தப்பட்டு படுத்த படுக்கையாகிறான் மொய்தீன். பிறகு அவனது தந்தையும் இறக்கிறார். இவற்றிலிருந்து மீண்டு வந்து இவளை அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும்போது அவளது அண்ணன் இறந்த செய்தி வருகிறது. எல்லாவற்றுக்குமாக அவள் கதறி அழுகிறாள்.
பரஸ்பர காதல் இருந்தும், அவளது வீட்டு மதிற் சுவர்கள் தாண்டிவிடும் உயரத்திலிருந்தும் மத வேறுபாடு, சமூகப் பழக்கங்கள், உறவு முரண்கள் மட்டுமல்லாமல் சூழ்நிலைகளும் அவர்களைப் பிரித்துக்கொண்டே இருக்கிறது.
பரவலாக அறியப்பட்ட ஒரு காதல் கதையை, திறமையான திரைக்கதை மூலம் சுவாரசியமான சித்திரமாக மாற்றியிருக்கிறார் விமல். மொய்தீனாக பிருத்விராஜ் சுகுமாரனும் காஞ்சனமாலயாக பார்வதியும் நடித்திருக்கிறார்கள். லெனாவும் சாய்குமாரும் மொய்ந்தீனின் பெற்றோராகத் தேர்ந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்றும் மொய்தீன் பெயரில் சமூகப் பணிகளாற்றிவரும் 75 வயதான காஞ்சனா இந்தப் பட உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.
‘எண்டே காஞ்சனக் குட்டிக்கு’ எனத் தொடங்கும் கடித வரிகள் காதலின் ஆழத்தை உணர்த்துகின்றன. டி. ஜானின் ஒளிப்பதிவு எப்போதும் மழை பெய்யும் நிலத்தின் காட்சிகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. 1950 கால கட்டத்திய வடகேரளத்தின் பயன்படு பொருள்களைக் கவனத்துடன் கையாண்டிருக்கிறார் கலை இயக்குநர் கோகுல்தாஸ்.
25 ஆண்டுக் கால மூப்புடைய காதலைச் சொல்லும் விமல் காதலுக்கு வெளியே, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவது, நக்சலைட்டுகள் உருவாவது, நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைவது போன்ற சமூக மாற்றங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் இதைத் தொடக்ககாலச் சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரு கம்யூனிஸ்டுகாரனின் காதல் கதை என்றும்கூடச் சொல்லலாம்.
1982 ஜூலை 15-ல் இருவழிஞ்சிப்புழயில் நடந்த படகு விபத்து இறுதிக் காட்சியில் பத்திரிகைச் செய்தியாக வருகிறது. அன்றைக்கு வெறும் செய்தியாக இருந்த அந்தச் சம்பவத்துக்குக் கால் நூற்றாண்டுத் துயரத்தைச் சேர்த்திருக்கிறது இந்தப் படம்.

நன்றி-தஹிந்து

Friday, June 20, 2014

நேற்று இன்று - சினிமா விமர்சனம்

 வீரப்பன்  காட்டில் பதுக்கியதாகச்சொல்லப்
படும் கோடிக்கணக்கான பணம் என்ன ஆச்சு? அதை வெச்சு 
கற்பனையா  ஒரு திரைக்கதை  அமைச்சு 
இயக்குநர் பத்மா  மகன் இயக்கிய படம் தான்  கூத்து . வெறும் 
10,000 ரூபாய் முதலிட்டில் ஆரம்பிக்கபட்ட இப்படம்
இப்போது  டைட்டில் நேற்று  இன்று என மாறப்பட்டு ரிலீஸ் ஆகி 
இருக்கு. இவர் ஆல்ரெடி அம்முவாகிய நான் எனும் ஆர் பார்த்திபன்
படத்தை இயக்கியவர். 



5 பேர்  கொண்ட  குழு  விரப்பன் இருக்கும் காட்டுக்குள்  போகுது.
அவங்களுக்கு  கொடுக்கபட்ட பிராஜக்ட் வீரப்பனை பிடிக்கச்சென்ற
போலீஸ் ஆஃபிசர் கட்சி மாறி வீரப்பன் கூடவே சேர்ந்துட்டார் என
டிபார்ட்மெண்ட்டால் நம்பப்படும் ஆளை பிடிப்பதே. 

அவங்களுக்கு எதேச்சையா  வீரப்பன் பதுக்கி வெச்ச பணம் 
கிடைக்குது. ஹீரோ மட்டும் அந்தப்பணம் அரசுக்கு சேரனும்கறார்/
மத்தவங்க அதை ஆட்டையைப்போட்ரலாம்கறாங்க .அவங்களுக்குள்
நடக்கும் போராட்டம்  ஒரு டிராக் . 

இது நேற்று  என  டைட்டில்  தரப்பட்டு ஃபிளாஸ் பேக் காட்சியா 
வருது.



 போலிஸ் ஆஃபீசரா  கெஸ்ட்  ரோலில்  சினேகாவின்
 நிகழ்காலக்கணவர்  பிரசன்னா. கச்சிதமான நடிப்பு . ஆனால் 
 சண்டைக்காட்சிகளீல் அவரிடம்  போலீஸ் ஆஃபீசர் போல் மிடுக்கு
 பாடி லேங்குவேஜ்  இல்லாதது  பெரிய மைனஸ் 

 தேடுதல்  குழுவில்  பணம்  மீது ஆசைபடாத வராக  ஹீரோ 
ரிச்சர்ட். ஷாலினி  அஜித் குமாரின்  தம்பி. போலீஸ் ஆஃபீசராக
வரும்  இவர் மட்டும்  ஃபங்க் கட்டிங்க் , டி ஆர்  தாடி என வலம் வருவது
எப்படியோ? 

தேடுதல்  குழுவை மயக்கும் அந்த மாதிரி பொண்ணாக  அருந்ததி
கவர்ச்சித்திருவிழா நடத்தி  இருக்கிறார் . ஒரே ஒரு முண்டா
பனியன் மட்டும் அணீந்து பாலு மகேந்திரா நாயகி  போல் படம்
 முழுக்க வருவது  கிளு கிளுப்பு . க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ்
 காட்சி  எதிர்பார்த்தது தான் . 

 பொம்பளைப்[பொறுக்கியாக பாத்திரத்துடன் ஒன்றி நடித்து உள்ளார்
 களவாணி  விமல்.  கில்மா லாட்ஜ் ரிசப்ஷனிஸ்ட்டை கரெ\க்ட் 
பண்ணுவது , சவாரி வரும்  ஃபிகரையே உஷார் பண்ணுவது   என 
 எல்லா  சிம்பு வேலையும் செய்யறார் . இவரது உச்சரிப்பு மட்டும்
 பாடாய்  படுத்துகிறது . 


ரிச்சர்டின்  சகோதரியாக  விமலுக்கு  ஜோடியாக வருபவர் நந்தகி 
 சுமாரா  இருக்கார் .  தேறிடும், 


காட்டின்  லொக்கேஷன்  செலக்‌ஷன் , ஒளிப்பதிவு எல்லாம் பக்கா. 

 திரைக்கதை உத்தி  கூட  நல்லா  இருக்கு 

 ராஜேஷ்  குமார்  நாவலில்  வருவது  போல்  இப்படி  ஒரு ரில் 
அப்படி  ஒரு ரில்  என கதை  சொல்வது  பக்கா 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   எல்லோருகும் அறிந்த  வீரப்பன்  கதை , யாரும் அறியாத அந்த
 பண மேட்டர்  என கற்பனை  கலந்து  திரைக்கதை அமைத்த  விதம் 


2  இண்ட்டீசண்ட்டான  மேக்கிங்க் உள்ள படமா  இருந்தாலும் 
டீசண்ட்டா பாடல் எழுதிய  யுக பாரதி 






இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. நடுகாட்டில்  பயணிக்கும் நாயகி  கால் டாக்சி  டிரைவர்  ஃபோன்
நெம்பரை வாங்கி  வெச்சுக்க மட்டாரா? 


2 . ஒரு  போலீஸ் ஆஃபீசரின்  தங்கை பர்சில்  ஏ எடி எம் கார்டோ , 
 செல்  ஃபோனொ இல்லாமல்  வருவாரா? 

3 லாட்ஜில்  ரூமில் நாயகி   தங்கி  இருக்கையில் பாத்ரூமில்
குளிச்சிட்டு இருக்கார் . நாயகன்  விமல் வந்ததும் டர்க்கி டவலுடன்
 டக்னு என்னமோ  தேவதூதர் மாதிரி தரிசனம்  தர்றாரே? எப்படி ?
 யோக்கியமான  ஃபேமிலி கேர்ள் அப்படியா வரும் ? வெய்ட். நான் 
குளிச்சுட்டு இருகேன்னு  தானே  சொல்லும் 


4  லாட்ஜ்  ரிசப்ஷனிஸ்ட்  வாக் மேன் கேட்டுட்டு  இருக்கார்.  
அப்போ விமல் வந்து வாக்மேனை ஆட்டையைப்போடறார். 
பின் ரூமுக்குப்போய்டறார்., அது அந்த ரிசப்ஷனிஸ்ட்க்குத்
தெரியாமல்  போவது  எப்படி ?

5   பொம்பளைப்பொறுக்கியா   ஐட்டம் கூட எல்லாம் சகவாசம்
 வெச்சிருக்கும்  நாயகனைப்;பார்க்கும்போது நமக்கே வாமிட் வர்ற
 மாதிரி  இருக்கு. குடும்பப்பெண்ணான நாயகிக்கு எப்படி காதல்  
வரும்?


6  போலீஸ் ஆஃபிசர்கள்  4 பேரும்  அந்த  கில்மா  லேடியுடன்
 கூத்தடிக்கும்  காட்சிகள்  முகம்  சுளிக்க வைப்பவை 


7  ஆற்றில்    குளிக்கும்   பொண்ணுக்கு  துப்பட்டா  வேணா  நழுவி
 தண்ணில போகலாம் . ஆனா  சுடிதார் டாப்பே எப்படி நழுவி போகும்?
அடுத்த ஷாட்டில் அவர் ஆத்தில்  இருந்து எழும்போது  பாட்டம்
 கூட  காணோம் . என்னய்யா  லாஜிக்  இல்லா மேஜிக் ?  
 என்ன தான்  கிளு கிளுப்பா  இருந்தாலும்  ஒரு நியாயம் வேணாமா? 




மனம் கவர்ந்த வசனங்கள்


1 .   இந்தக்காட்டில்  சிங்கம்  , புலி  இருக்காமே ? உண்மையா? 

 பின்னே ? காட்டில்  சிம்ரனா இருப்பாங்க ? 


2  இன்னைக்கெல்லாம் படிச்சவங்க தான் நாட்டை கெடுத்து  குட்டிச்
சுவர் ஆக்கிட்டு  இருக்காங்க 


3   தனியா  ஃபிகர்  இருக்கும்போதே  பிக்கப் பண்ண  முடியல /
 இதுல  இவன் வேற 


4  என்னது? கடைசில  நம்ம கேசை கண்டு பிடிச்சது  ஒரு கேசா?



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1  எச்சரிக்கை -,நேற்றும் இன்றும் - பெண்களைக்கேவலப்படுத்தும் காட்சிகளுடன் கிட்டத்தட்ட கில்மாப்படம் போல்- குடும்பப்பெண்கள் தவிர்க்கவும் 18+

2 சந்தனக்கடத்தல் மன்னன் அமரர் வீரப்பன் ன் வேன் என் கவுன்ட்டர் சீனுடன் பரபரப்பான ஓப்பனிங் # நேற்று இன்று



சி பி கமெண்ட் -நேற்று இன்று -வீரப்பன் காட்டில் பதுக்கிய பணத்தை வேட்டை ஆடும் ஆக்சன் த்ரில்லர்- விகடன் மார்க் =41 ,ரேட்டிங் = ச் ( பெண்கள் தவிர்க்க)




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =  41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =   2.5 /  5 


diski  1 =

வடகறி - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_591.html 


2  

வெற்றிச்செல்வன் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2014/06/blog-post_8644.html



சூறையாடல் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_7814.html

 


  

Wednesday, February 27, 2013

சில்லுனு ஒர் சந்திப்பு - சினிமா விமர்சனம்

 

அந்தக்காலத்துல சீத்தலைச்சாத்தனார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் ஏதாவது தப்பா எழுதிட்டா தன் தலைல தானே எழுத்தாணியால குத்திக்குவாரு. அப்படி குத்தி குத்தி மண்டை செப்டிக் ஆகி சீழ்த்தலை சாத்தனார் ஆகிட்டாரு, பேச்சு வழக்கில் பின் சீத்தலைச்சாத்தனார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க . அதே மாதிரி ஒரு ஃபிகரு தான் என்ன தப்பா சொன்னாலும் அழகா தன் மண்டைல கொட்டிக்கறாரு ( நல்ல வேளை ... மண்டைல கொட்னாரு ) 


ஹீரோயின் மண்டைல கொட்டிக்கற அழகைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்து தொலைச்சுடுது. 2 கேனங்களும் லவ் பண்ணுது . இதுல என்ன புதுமைன்னா அவங்க 2  வீட்டு பெற்றோர்களும் மாமா வேலை பார்க்காத குறையா  அவங்க லவ்வுக்கு சப்போர்ட் பண்றாங்க . ( ஒரு சீன்ல மாடில இருக்கும் பெட்ரூம்க்கு 2 பேரையும் அனுப்பிட்டு 2 பெற்றோர்களும் கெக்கே பிக்கே னு இளிக்குதுங்க )

படத்துல வில்லனே இல்லைன்னு தெரிஞ்சதுமே நமக்கு சிச்சுவேஷன் தான் வில்லன்னு தெரிஞ்சுடுது. ஹீரோவுக்கு  +2 படிக்கும்போது ஒரு  லவ் இருந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிஞ்சுடுது , ரொம்ப சென்சிட்டிவ் கேரக்டரான ஹீரோயின் டூ விட்டுட்டு போய்டுது . 

 ஹீரோ அந்த + 2 படிக்கறப்ப லவ்வுன ஃபிகரை இப்போ மீட் பண்றாரு. 2 பேரும் லவ்வைப்புதுப்பிச்சாங்களா? இல்லையா? யார் கூட ஹீரோ ஜோடி சேர்றார்? என்பதே கதை

களவாணி படம் ஹிட் ஆனது இயக்குநர் சற்குணத்தால. விமல் தன்னால தான் அப்டினு நினைச்சுட்டு இருக்கார் போல. ரொம்ப அசால்ட்டு . என்னமோ புருஷனை மதிக்காத பொண்டாட்டி மாதிரி படம் முழுக்க ஏனோ தானோன்னு நடிச்சிருக்காரு . வசனம் பேசும்போது வாய்ஸ் மாடுலேஷன் சுத்தமா வர்லை . கவனம் செலுத்துனா நல்லது . மற்றபடி ஆள் பர்சனாலிட்டி ... 

ஹீரோயின் தீபா ஷா , ஃபிகருக்கு  கண் உதடு 2ம் ரொம்பச்சின்னது . ( இனி ஒண்ணும் பண்ண முடியாது , சும்மா சொல்லி வைப்போம் )  அடிக்கடி தலைல கொட்டிக்கும் சீன், வெட்கப்படுவது என ஸ்கோர் பண்றார். க்யூட்டான நடிப்பு , ஆனா பாப்பாவுக்கு கோபம் சரியா வர்லை . இன்னும் வளரனும் ( ஃபீலிங்க்ஸை சொன்னேன் ) 


 போஸ்டர்ல மார்க்கெட் வேல்யூ ஏத்திக்க இன்னொரு ஹீரோயின் ஓவியா. நேர் கொண்ட பார்வை , நிமிர்ந்த நன்னடை வேணும்னு பாரதியார் சொன்னாலும் சொன்னாரு . ஓவியா டைட் டி சர்ட் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு படம் பூரா வருது . என்னமோ ஜிம்ல பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் டூ செஸ்ட் பண்ணிட்டு அப்போதான் வெளில வர்ற மாதிரி ஒரு பில்டப் . செம கிளு கிளுப்பு . இவர் +2 கேர்ளா வர்றது கூட ஓக்கே , ஆனா விமல் கூட  + 2 பாய்னு சொல்றது எல்லாம் ஓவரோ ஓவர் 





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  போஸ்டர் டிசைனும் , டைட்டிலும் செமயான லவ் ஸ்டோரி போல என எண்ண வைக்கும் யுக்தி , நல்லா ஒர்க் அவுட் ஆகி  ஓப்பனிங்க்ல தியேட்டருக்கு காலேஜ் ஸ்டூடண்ட்சை வர வெச்சிருக்கு 



2. சின்னத்தம்பி பெரிய தம்பி பிரபு சத்யராஜ்  மாதிரி சின்ன தங்கச்சி பெரிய தங்கச்சி மாதிரி தீபா ஷா , ஓவியா வை முறையே ஹீரோயின் நெம்பர் 1 , நெம்பர் 2 வா புக் பண்ணது 


3. இதே ஹீரோ விமல் நடிச்ச இஷ்டம் படக்கதையை கொஞ்சம் உல்டா பண்ணி இவர் கிட்டேயே கால்ஷீட் வாங்குனது


4. மனோபாலா காமெடி டிராக்கை டபுள் மீனிங்கில் எழுதி சி செண்ட்டர் ரசிகர்களை கவர முயன்றது 



5. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் 2ம் குட் 




இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ ஹீரோயின் 2 பேரும்  பிளஸ் டூ ஸ்டூடண்ட்ஸா டவுன் பஸ்ல டிக்கேட் எடுக்காம பொய் செக்கிங்க்ல மாட்டிக்கறாங்க . ஓக்கே , ஆனா  அதுக்காக 2 பேரையும் போலீஸ் ஜீப்ல ஏத்திட்டு போகுமா? வார்ன் பண்ணி விட்டுடுவாங்க . அதுவும் மாணவியை ஜீப்ல ஏத்திட்டு போக சட்டத்துல இடம் இல்லை 



2.  ஹீரோ கூட சைக்கிள் ல போக ஹீரோயின் தன்னோட சைக்கிளை  ஹேர் பின்னால டயரை குத்தி பஞ்சர் பண்ணிக்குது. அது ஏன் காலம் காலமா அப்படியே பண்றாங்க? வால்ட்யூப்பை ஓப்பன் பண்ணி விட்டா காத்து இறங்கிட்டுப்போகுது . அவன் என்ன செக் பண்ணவா போறான்? 


3. ஹீரோ ஃபோன்ல  “ அங்கே தான் வந்துட்டு இருக்கோம் “னு பன்மைல தான் சொல்றாரு , எதுக்கு “ அவளையும் கூட்டிட்டு வா அப்டினு அம்மா சொல்வதா ஒரு வசனம் ? 



4.  லவ்வர்ஸ் ஹோட்டல்ல சாப்பிடுவதும் , காதலி லவ் பண்ணலைன்னு சொன்னதும் காதலன் தனித்தனி பில் என்பதும் உடனே காதலி கிஸ் கொடுப்பதும் பல படங்களில் பார்த்து சலித்த சீன். அந்த காமெடியை அவ்வளவு நீளமா மொக்கையா கொண்டு போகனுமா? 



5. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கும் எல்லா பசங்களுக்கும் நான் தான் டாக்டர் அப்டினு ஓவியா சொல்லும் டபுள் மீனிங்க் காமெடி சகிக்கலை 


 




6.  அமெரிக்கா போறவர் தன் சொந்தக்கார்ல போய் பார்க்கிங்க் பண்ணிட்டு ஃபிளைட்ல போய் அமெரிக்கால செட்டில் ஆவது செம காமெடி , சொப்பன சுந்தரி கார் மாதிரி ஸ்டேண்டில் விட்ட காரை யார் வெச்சுப்பாங்க? அதுக்கு டாக்சில போய் இறங்குவதா காட்டி இருக்கலாம் 


7. க்ளைமாக்ஸ்;ல ஹீரோயின் ஹீரோவுக்கு ஃபோன் பண்றார், அவர் எடுக்கலை , பர பரப்பான சூழல்ல ஒரு எஸ் எம் எஸ் அனுப்ப மாட்டாரா/ ?


8.  கதைக்களம் ஊட்டி, ஆனா ஒரு சீன்ல ஜெமினிகணேஷன் பங்களா வருது , அது கொடைக்கானல் ஆச்சே? 


9. ஹீரோ ஃபாரீன்ல இருந்து ஒரு  நாய் பொம்மை வாங்கிட்டு வர்றார். அதுக்கு ஏன்  அவ்வளவு முக்கியத்துவம்? கதைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எடிட்டிங்க்ல கட் ஆகிடுச்சா?


10 .  ஸ்கூல் லவ்வை ஹீரோவே கேவலமா பேசுவதும் , இந்தக்காதலி இல்லைன்னா அந்தக்கதலி என்னும் விதமாய் ஹீரோ பல்டி அடிப்பதும் காதலை கொச்சைப்படுத்தும் உத்திகள் 


11. ஸ்கூல் கலாட்டா என்ற பெயரில் நடக்கும் டீச்சர் - வாத்தியார் லவ் கூத்துகள் , காபி சாப்டியா? என்றால் மேட்டரை முடிச்சுட்டியா? என்ற டபுள் மீனிங்க் காமெடியை ஒரு லேடியே சொல்வது எல்லாம் மலிவான வியாபார உத்தி  





மனம் கவர்ந்த வசனங்கள்



1.  டியர் ஸ்டூடண்ட்ஸ் , லிசன்  ( கவனிங்க ) 


அடேய்.. எங்கேடா பார்க்கறீங்க? போர்டை பார்க்கச்சொன்னா பொண்ணுங்களைப்பார்க்கறீங்க? 



2.  செக்கிங்க் ஆஃபீசர் - டிக்கெட் எங்கே? 

 போன ஸ்டாப்பிங்க்லயே இறங்கிப்போய்ட்டா.. 



3.  என்னை மட்டும் இல்லை , என் பேப்பரைக்கூட உன்னால திருத்த முடியாது 


4. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.




அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா?


5. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு



6. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை




7. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே 



8.  நீ பேசிட்டே இருக்கணும். நான் கேட்டுட்டே இருக்கணும். அதுக்குத்தான் நான் எதையும் சொல்லலை


9.நீ இவுங்க மகளோட குடும்பமே நடத்தினாலும், கண்டுக்காத குடும்பம் இது


10.  உலகத்துலயே பெரிய அருவியான நயாகரா அருவியை தெரியாதவங்க கூட இருக்கலாம் , ஆனா வயாக்ரா தெரியாத ஆளே கிடையாது 

 





11.  என்னம்மா நோட்டு(ம்) கசங்கி இருக்கு> ?



`12.  கண்டக்டர் கிட்டே பேசுனே ஓக்கே , டிரைவர் கிட்டேய்யும் பேசுறியே , அவர் நம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துடப்போறார்



13.  அம்மா , அடிக்கடி அந்த மேஜர் அங்கிள் துப்பாக்கியை காட்டி பயப்படுத்தறார்



14.  ஃபாரீன்ல கில்மா எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க . ஜஸ்ட் காஃபி சாப்பிடற மாதிரி 

 லேடி - தம்பி , அப்போ எத்தனை காபி சாப்டிருக்கீங்க? 



15.  எனக்கு காபி சாப்பிடற பழக்கமே இல்லைங்க 

 கல்யாணத்துக்கு அப்புறமாவாவது சாப்டுறு, வேற யாராவது உன் காபியை குடிச்சுடப்போறான்


16.  நீ எனக்கு தெரிஞ்சதைப்பேசுனாலும் , தெரியாததைப்பேசுனாலும் எனக்கு அது புதுசாத்தான் இருக்கும் 


17. பொண்ணுங்க ஏன் ஆபத்துல இருந்து அவங்க காதலனை க்காப்பாத்தறாங்க?

 மேரேஜ்க்குப்பிறகு தான் சாகடிக்க வேண்டிய ஆளை வேற யாரும் சாகடிக்கக்கூடாதுன்னுதான் 


18.  வீட்டுக்கு ஒரு மேரேஜ் புரோக்கர் ஓக்கே, ஆனா உங்க வீட்ல  வீடே புரோக்கர் மயமா இருக்கே? 



19.  வெட்கமா இருக்கு 

 ஏன்? வெட்கம்னா உனக்குப்பிடிக்காதா? 


 வெட்கத்தைப்பிடிக்காத  பொண்ணு உலகத்துலயே இல்லை 



20 . கல்யாணம் ஆகும் வரை ஒரு செகண்ட் கூட சலனப்படாத , சலனப்படமாட்டேன்கற  நேர்மையோட நான் இருப்பேன் 



 



21 இந்த உலகத்துல எத்தனை லவ் ஃபெயிலியர் ஆனாலும் மீண்டும் மீண்டும் லவ் தோன்றக்காரனம் சரக்கு இருக்கும் தைரியம் தான்



22.  உன்னைப்பார்த்தா லவ் ஃபெயிலருக்காக குடிக்கற மாதிரி தெரியல , குடிக்கறதுக்காகவே லவ் ஃபெயிலியர் ஆன மாதிரி தோணுது 



23.  பசங்க சைக்காலஜி என்னன்னா மிஸ்டு கால் வந்தா உடனே கூப்பிட்டு பேசிடனும் , அது ஒரு ஃபிகரா இருக்கக்கூட சான்ஸ் இருக்கே..? 



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார் 



 சி பி கமெண்ட்  - ஓவியாவின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்,  மற்றபடி படத்துல ஒண்ணும் கிடையாது . அரியலூர் நடராஜா தியேட்டர்ல இந்த டப்பா படத்தை பார்த்தேன் . தியேட்டரும் டப்பா  . தமிழ் நாட்லயே கேண்ட்டீன் கூட இல்லாத  ஒரே தியேட்டர் இதுதானாம், டெண்ட் கொட்டாய்ல கூட கேண்ட்டீன் இருக்கும் . ஹூம்..  படம் பிப்ரவரி 14 க்கே ரிலீஸ் ஆகிடுச்சு, இப்போதான் நான் பார்த்தேன்



Friday, September 30, 2011

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12644_1.jpg

முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..  


( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,

எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன் 

எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு, 

வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி .. 

என நீண்டு செல்லும் உதாரணங்கள்...

ஆனால்  (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை.. 






http://www.cinespot.net/gallery/d/582254-1/Vaagai+Sooda+Vaa+photos+_12_.jpg

 கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக  பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை  கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும்  அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..


இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..

விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது.. 

அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்..  செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்..  நல்ல எதிர் காலம் உண்டு.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-1.jpg

மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம்  காண வைத்த வசனங்கள்

1.  அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....

2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?

அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு.... 

3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!

4.  யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?

2க்கும் என்னம்மா வித்தியாசம்?

3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..

சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..

போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)


5.  வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க.. 

6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது.. 

அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்.. 

டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. 

7.  சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..

8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..

இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்.. 

9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு.. 

ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்.. 

10. நீங்கதான் போஸ்ட்மேனா?

அதுக்கு ஏன்யா சிரிக்கறே?

இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-4.jpg

11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல... 

12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..

13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்... 

14.  வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

15.  ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?

யோவ்!!!!!!!!!!!!!!

16.  அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)

17.  இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..

இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!

18.  அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.

19.  டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?

அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?

20.  முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா  இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?

சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?



http://thebollywoodgallery.com/wp-content/uploads/2011/07/Iniya-Vaagai-Sooda-Vaa-Heroine-8-269x339.jpg

21.  அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....

22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்... 

யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்.. 

23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல.. 

24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....

25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்.. 

26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!

http://www.newsonweb.com/newsimages/September2011/a114d1f5-f31c-476c-8270-c5709fc219321.jpg




இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது.. 

2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில்  2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..

3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1.  சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே..  போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..

4.  ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ,  செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் )  என ஜால வித்தை..

5.  காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..

6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!

7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/idhayathil-idam-kodu/idhayathil-idam-kodu-movie-udhayakumar-iniya-ganja-karuppu-stills-13_720_southdreamz.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..

2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?

3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..

4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்..  இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்.. 

6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?

7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?

8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?

அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6gakMt66Yon5-ZYk3mQAP_bxKPB9H8k2E6RkS0PFDhuWMgbpcKYU-IKS7nyts4adj_jUgV9ifX_I97rV4RfJEm5d5SscwJA6TbAA0WZjW3BymHzsFd_vbMfJ_1Gicotk9Y6_x2iRxXE/s400/RA%25252B5.jpg



ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.


ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்


டிஸ்கி -1

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி -3

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்



Friday, May 27, 2011

எத்தன் - சடன் ஆக வந்த கடன் காமெடி- சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/05/Eththan.jpg
கடன் வாங்கியே காலம் தள்ளும் வடக்குப்பட்டி ராம்சாமி வகையறாக்களின் காமெடிகளை தமிழ் சினிமாவில் இதற்கு முன் இவ்வளவு டீட்டெயிலான நகைச்சுவைகளுடன் யாரும் பதிவு செய்ததில்லை என்ற அளவில் இந்தப்படம் தனித்துவம் பெறும் ஒரு சிம்ப்பிள் காமெடி லவ் ஸ்டோரி என்று பெயர் பெறுகிறது..

படத்தோட கதையைப்பற்றி முதல் 8 ரீல் வரை இயக்குநர் கவலையே படாமல் ஒரே காமெடிக்காட்சிகளாக போட்டுத்தாக்கி இருப்பதில் இருந்தே இவர் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கத்தக்க ஒரு புது முக இயக்குநர் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

படத்தோட ஹீரோ விமல் கடன் வாங்குறதுல மன்னன். யாரா இருந்தாலும் பேசியே கவுத்து கடனை வாங்கி அல்வா குடுக்கறதுல கேடி.. இப்படிப்பட்ட ஆளுக்கு பேங்க்ல கடன் அட்டை பாக்கி வசூல் ( க்ரெடிட் கார்டு கலெக்‌ஷன்)ஏஜெண்ட் வேலை கிடைக்கிறது..இதுவரை அவரைத்துரத்திய கடன் காரர்களை எல்லாம் இப்போ அவர் துரத்துகிறார்... 
இந்த ஒன்லைனே இந்தப்படம் ஹிட் ஆவதற்குப்போதுமானது.. ஆனா இயக்குநருக்கு திடீர்னு ஒரு டவுட்.. காதல், செண்ட்டிமெண்ட், வில்லன் இல்லைன்னா தமிழ் சினிமா ஓடாதுன்னு யாரோ சொன்ன பேச்சை கேட்டுட்டு ஹீரோயின், அவளோட மாமன் மகன் (வில்லன்),அவளை அடைய நினைப்பது, ஹீரோ காப்பற்றி ஹீரோயினை அடைவது என மாமூல்  மசாலாவுக்குள் போய் தத்தளித்து, தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து இருக்கார். 

ஆனா அந்த கிளைக்கதை இல்லாமலேயே படம் பிக்கப் ஆகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்.. 

எந்த ஆளை பார்த்தாலும் பார்வையாலேயே ஸ்கேன் பண்ணி  அவரிடம் எவ்வளவு பணம் தேறும் என கணக்கு பண்ணி விடுவதில் ஹீரோ கில்லாடி.. அவர் ஊரில் கடன் வாங்காத ஆளே இல்லை.. ஊரில் தடுக்கி விழுந்தா கடன் காரன் மேல் தான் விழுவார்..

சிங்கம் புலியுடன் அவர் அடிக்கும் காமெடி கூத்துக்கள் தான் பாதிப்படம்.. 
http://4.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TUGQfS8nCqI/AAAAAAAAJKs/CZREnC1Jgmc/s1600/Actress-Sanusha-%2540-Eththan-Movie-Gallery.jpg

கலக்கலான காமெடியில் களை கட்டிய இடங்கள்

1. மாப்ளே.. ரெண்டு அம்பது வெச்சிருக்கியா?

ம்.. இந்தா.. 

சரி ஒரு அம்பதைக்குடு.. நாளைக்கு தர்றேன்.. 

அடப்பாவி.. சேஞ்ச் தானே கேட்டே..?

கடன்னு கேட்டா குடுத்திருக்கவா போறே?சரி சரி விடு.. 50,000 குடுத்தவனே சும்மா போறான்.. வெறூம் அம்பதை குடுத்துட்டு ஏன் முறைக்கிறே?

2.  என்னது? லோன் வேணூமா?எங்க பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?

சார்.. டீக்கடைல அக்கவுண்ட் இருக்கு,  மளீகைக்கடைல அக்கவுண்ட் இருக்கு,ஆனா பேங்க்ல அக்கவுண்ட் இல்லை சார்.. 

3. அடப்பாவி.. எல்லார் கிட்டேயும் கடன் வாங்கியாச்சு.. இனி யார் கிட்டே போய் கடன் கேட்க..?

அப்பா.. எம் சி வாத்தியார் வட்டிக்கடை ஆரம்பிச்சிருக்கார்ப்பா/... 

பார்த்தியா? ஒரு மணீ நேரத்துக்கு முன்னால தான் தொழிலை ஆரம்பிச்சான்.. அதைக்கூட தெரிஞ்சு வெச்சிருக்கானே?

4. நான் தெரியாம தான் கேட்கறேன்.. உலகத்துல  கடன் வாங்காத பிஸ்னெஸ் மேன் யாரு?

5. கஜினி முகம்மது 17 முறை படை எடுத்தார்னு பாடம் படிக்கறப்ப நான் கத்துக்கிட்டது என்ன தெரியுமா?தோக்கறவன் எல்லாம் கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பான் சார்.. 

6. டாட்டா,பிர்லா பார்த்து யாரும் பொறாமைப்படறதில்லை..பக்கத்து வீட்டுக்காரனைப்பார்த்துத்தான் பொறாமைப்படறாங்க.

7. ஏய்.. ஆளைப்பார்த்தா சூர்யா மாதிரியே இருக்கானில்லை..?

அடிப்போடி.. எவனைப்பார்த்தாலும் நீ இப்படித்தான் சொல்றே?

. 8.அண்ணே.. எனக்கு அவசரமா 5000 ரூபா கடன் வேணூம்..

சிங்கம்புலி- அப்படியா.. அதோ அங்கே தூரத்துல நமீதா போஸ்டர் தெரியுதே... அதை ஓடிப்போய் தொட்டுட்டு வா..

ம்.. ஓக்கே அண்ணே

சிங்கம்புலி- சாரி உனக்கு லோன் தர முடியாது.. நீ மணீக்கு 180 கி மீ வேகத்துல ஓடறே,,, கடன் வாங்கறதுக்கு முன்னேயே இந்த ஸ்பீட்ல ஓடறவன் நாளை நான் கடன் வசூல் பண்ண வர்றப்ப எவ்வளவு ஸ்பீடா ஓடுவியோ?எப்படி உன்னை நான் துரத்தி பிடிச்சு வசூல்; பண்ண? 

9. எந்த ஊர்லயாவது அப்பாவைக்கேட்காம பையன் லோன் வாங்குவானா?என்னை கேட்டுட்டா நீ கடன் வாங்குனே?

அப்பா.. என்னை பிள்ளையா பெத்துக்கறதுக்கு முன்னே என்னை கேட்டுட்டா பெத்தீங்க?

10.  ஏண்டா இப்படி இருக்கே? உன் கூட படிச்சானே கோபி.. அவன் அவங்கப்பா பார்த்த வேலையே பார்க்கலை?

அவனோட அப்பா செத்திட்டதால அவரோட வேலை அவனுக்கு கிடைச்சுது.. ஹி ஹி





http://reviews.in.88db.com/images/eththan-audio/Eththan-Movie-Audio-Launch-Stills-Pics-Gallery-10.JPG



11.அடடே..வாங்கண்ணே.. படம் பார்க்கவா வந்தீங்க?எந்திரன் படம் பிரம்மாண்டமா இருக்குமே?

டேய்.. நீ காட்டாத படத்தையா அவங்க காட்டிடப்போறாங்க?

12. நாங்க ஊருக்குப்போறோம்.. வீட்டை பார்த்துக்கோ..

ஒண்ணூம் அர்ஜெண்ட் இல்லை.. மெதுவா வாங்க/...

டேய்.. வீட்டை அடமானம் வெச்சுடாதேடா..

ஆமா, பெரிய மைசூர் பேலஸ்..


13. என்னை கடன்காரன்னு சொல்லு ஆனா சோம்பேறின்னு சொல்லாத./. விடி காலைல 4 மணீக்கே எழுந்து கிளம்பிடுவேன். நைட் 12 மணீக்கு தான் வீட்டுக்கே வருவேன்..

14. மேனேஜர் சார்.. சும்மா நக்கல் பண்ணாதீங்க.. உலக வங்கில இருந்து இந்தியா எவ்வளவு கடன் வாங்கி இருக்குன்னு தெரியுமா?

தெரியலப்பா.. என் பேங்க்ல இருந்து வாங்கி இருந்தாத்தானே எனக்கு தெரியும்..?

15. என் அனுமதி இல்லாம என் பேர்ல உலக வங்கி கடன் வாங்கறப்ப, எனக்காக நான் கடன் வாங்குனது தப்பா?

16. டேய் கடன் காரா.. என்னைக்காவது செல் ஃபோனை பயம் இல்லாம அட்டெண்ட் பண்ணி இருக்கியா?

17. எந்த பிஸ்னெஸ் மேனையாவது நிம்மதியா இருக்கேன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்?

18. டேய்.. ஒருத்தன் நம்மை திட்டிட்டாலே நம்மோட செல்ஃப் கான்ஃபிடண்ட் போயிடும்..

19. மேனேஜர் சார்.. நான் மாறிட்டேன் ...

எப்படி நம்பறது?

இப்போக்கூட பாருங்க.. லோன் கேட்டு வர்லை.. வேலை கேட்டுத்தான் வந்திருக்கேன்..

20. உனக்கு கலெக்‌ஷன் ஏஜெண்ட் வேலை செட் ஆகும். எப்படின்னா ஒரு கடன்காரன் எப்படி எஸ்கேப் ஆவான்னு இன்னொரு கடன்காரனுக்குத்தான் தெரியும்..

21. நீ இது வரை லோன் வாங்காத ரெண்டே பேங்க் 1. கண் வங்கி  2 பிளட் பேங்க்

22.சிங்கம்புலி- அடப்பாவி, நம்மளை பழி வாங்கறதுக்காகவே தேடிப்பிடிச்சு இந்த வேலை வாங்கி இருக்கான் போல..

23.  சிகரெட் பிடிக்கிறியே அறிவில்லை?

இருக்கற அறிவை யூஸ் பண்ணத்தான் சிகரெட் பிடிக்கிறேன்

24. உங்கப்பன் பேர் என்ன?

சிங்கம்புலி- அவருக்கு இன்னும் பேரே வைக்கலை

25.அப்பா.. ஏன்பா வீட்டை திறந்தே வெச்சிருக்கீங்க? திருடன் வந்துட்டா?

உன்னை விடப்பெரிய திருடன் எவன் வரப்போறான்?

26. சிங்கம்புலி- ரெயில்வே ஸ்டேஷன்ல செக்யுரிட்டிக்காக செக் பண்ணூவாங்க.. அப்போ எல்லாம் எரிச்சலா இருக்கும். ஆனா பாப்பா செக் பண்றப்ப ஜாலியா இருக்கு.. ஏன் நிறுத்தீட்டே? பேண்ட் பாக்கெட்லயும் செக் பண்ணு..

27.நான் உன் கிட்டே க்டன் வாங்குனப்ப நீ என்ன வெயிட்?

90 கிலோ

இப்போ?

60 கிலோ..

அப்போ என்னால என்னை துரத்தி துரத்தி நீ வெயிட் குறைஞ்சிருக்கே.. இப்படி உடம்பை குறைக்காம இருந்திருந்தா உனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.. ஒரு லட்சம் செல்வாகி இருக்கும்/..

28. அடியே எதுக்கு அவனோட காதலை மறுத்தே?உங்களுக்கு செல் பில் கட்ட மட்டும் ஆள் வேணூம்?

29. பசங்க பொண்ணூங்க பின்னால அலையறதால தான் பொண்ணூங்க மதிப்பே கூடுது.. எவனும் கண்டுக்கலைன்னா அவ்வ்வ்வ்வ்வ்

30. சிங்கம்புலி- நானும் மதுரைல தான் இருக்கேன்.. ஹலோ.. கேட்குதா? நான் பேசறது?

நான் மதுரை மாட்டுத்தாவணில இருக்கேன்..

சிங்கம்புலி- நான் மட்டும் என்ன மாட்டுப்பாவாடைலயா இருக்கேன்? நானும் அங்கே தாண்டா இருக்கேன்


31 சிங்கம்புலி-ஹலோ.. பணம் ரெடி பண்ணிட்டியா?

ஹலோ.. பணம் ரெடி பண்ணிட்டியா?

என்ன நான் பேசறது எனக்கே கேட்குது?ஃபோன்ல ஃபால்ட் போல..


http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/03/Eththan-Movie-3-Stills.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ ஹீரோயினை அவர்கள் சந்திப்பை ரொம்ப எதார்த்தமாக காட்டியது.. காதல் மலர்வதை கண்ணீயமாக காட்டியது.. ஹீரோயினை டீசண்ட்டாக காட்டியது..


2. மழை உதிர்க்காலம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் நீட்..

3. லோன் கொடுக்கும் முன் பிரைவேட் பேங்கர்ஸ் கஸ்டமர்சிடம் தொங்கி விட்டு பின் லோன் வசூல் பண்ணும்போது அடாவடி செய்வதை படம் பிடித்துக்காட்டியது..

4. எல்லா லோனும் செட்டில் ஆகும்போது குணா கமல் போல சிங்கம்புலி பார்த்த விழி பார்த்த படி பூத்துக்கிடக்க பாடல் காட்சியை  கலக்கலான காமெடி ஆக்கியது..

5. படம் பூரா காமெடி வசனங்க ளை அள்ளீத்தெளித்தது.. மொத்தம் 87 ஜோக்ஸ்

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ அவ்வளவு கடனை வாங்கி என்ன பண்றார்? என்ன தொழில் முடக்கறார்? ஏன் லாஸ் ஆகுது என காட்டாமல் விட்டது..

2. ஹீரோவின் அப்பா இடைவேளை வரை திட்டி விட்டு திடீர் என பாச மழை பொழிவது..

3. வில்லன் கேரக்டர் பல படங்களில் பார்த்து புளித்துப்போன கேரக்டர்..

4. க்ளைமாக்ஸில் தேவை இல்லாத நீளம்..

இந்தப்படம் ஏ, பி  என 2 செண்ட்டர்களிலும் 30 நாட்கள் ஓடும், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று..