Showing posts with label விமர்சனக். Show all posts
Showing posts with label விமர்சனக். Show all posts

Thursday, April 11, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்(விகடன் விமர்சனக் குழு)

கில்மா கிளாமர், பிலோ தி பெல்ட் ஹ்யூமர்... இரண்டும் கலந்து 'டீன் மூவி’யாக ஹிட்டான இந்தி 'டெல்லி பெல்லி’யை தமிழ் 'சேட்டை’ ஆக்கியிருக்கிறார்கள்.

வில்லன் கடத்தும் வைரம் இடம் மாறிக் கைமாறுவதால் உண்டாகும் குழப்ப மேளாதான் படம். படத்தின் கிளாமருக்கு ஹன்சிகா - அஞ்சலி... ஹ்யூமருக்கு சந்தானம் இருக்கும் தைரியத்தில் கொஞ்சம் அசந்துவிட்டார்போல இயக்குநர் கண்ணன். ஆனால், இருதரப்புமே அவரைக் கை விட்டுவிட்டது.

துடிப்பும் வெடிப்பும் நிரம்பிய பரபர பத்திரிகையாளனாக இருக்க வேண்டிய ஆர்யா, 'இது யார்யா?’ என்று கேட்கவைக்கிறார். டிஸ்கொதே ஹால் பவுன்ஸர் போல ஆர்ம்ஸ் காட்டிக்கொண்டு, உர்ர்ர்என்று முறைத்துக்கொண்டே இருக்கிறார். அட... ரொமான்ஸின்போதும் அதே முறைப்புதானா?  
படத்தின் எனர்ஜி மீட்டர் சந்தானம்தான். 

ஆனால், 'கக்கா காமெடி’ சமயம் அவரே அந்த ஃபியூஸைப் பிடுங்கிவிடுகிறார். 'பாதாள சாக்கடைக்கு ஜன்னல், கதவு வெச்சா மாதிரி ஒரு வீடு’, 'நக்மாவை கரெக்ட் பண்ண ரஜினி வைரத்தைத் திருப்பிக் கொடுப்பார்’ போன்ற மிகச் சில ஒன் லைனர்களில் கலகலக்கவைக்கிறது சந்தானத்தின் காமெடி வசனம். 

ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார் பிரேம்ஜி. பர்தா அணிந்துகொண்டு முகத்தைக் காட்டாமல் தண்ணீர் குடிப்பது ஒரு கிச்சு கிச்சு சாம்பிள். ஹன்சிகா... வழக்கம்போல பப்ளி பப்பாளி. எந்த ஸ்கோப்பும் இல்லாமல் அஞ்சலி. அவரும் அலட்டிக்கொள்ளவே இல்லை!


புரட்சி ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்படும் ஆர்யா, அத்தனை கோக்குமாக்குத் தில்லாலங்கடிகளில் ஈடு படுகிறாராம். ஹன்சிகா அப்பா மேல் இருக்கும் கோபம் காரணமாக, ஹன்சிகாவுடனான காதலையே விட்டுக்கொடுக்கிறாராம் ஆர்யா. 

ஒரு சந்திப்பு, சில பார்வைகளிலேயே ஆர்யாவை அஞ்சலி காதலிக்கத் துவங்கிவிடுகிறாராம்... என்னப்பா நடக்குது நாட்ல?  
தமிழ்ப் படம் என்பதால் தவிர்க்காமல் இடம் பிடித்திருக்கும் பாடல்கள், டெட் ஸ்லோ திரைக்கதையை இன்னும் பின்னால் இழுக்கிறது. அதிலும் வில்லனின் சீரியஸ் விசாரணையின்போது வரும் 'அகலாதே’ ட்ரீம் சாங்.... சேட்டைல்ல உங்களுக்கு!

நியூலைன் சினிமாவாக இளசுகளை ஈர்த்த ஒரிஜினலின் 'சேட்டை’களை நீக்கிய பிறகு, ஜெய்சங்கர் காலத்து 'வைரக் கடத்தல்’ கதைக்கு இத்தனை பில்ட்அப்பா?

அட போங்கப்பா!

நன்றி - ஆனந்த விகடன்