வினோத் கண்ணா , ஜீனத் அமன், அம்ஜத்கான், ஃபெரோஸ் கான் காம்பினேஷனில் ஹிந்தியில் ஃபெரோஸ்கான் இயக்கிய குர்பாணி என்ற ஹிந்திப்படம் 1980ல் ரிலீஸ் ஆகி மியூசிக்கல் ஹிட் ஆனது,டைட்டிலுக்கு அர்த்தம் தியாகம். அதை தமிழில் ரீமேக்கும்போது அந்தக்காலத்தில் ஒரு மல்ட்டி ஸ்டாரர் படமாக தமிழ் , கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் பண்ண தமிழக சூப்பர் ஸ்டார் rரஜினி , கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணு வர்தன் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காம்பினேஷனில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த அளவு மாபெரும் ஹிட் ஆகாமல் மீடியம் ஹிட் ஆன படம்
ஆனால் ஹிந்தியில் இது ஒன்றரைக்கோடி பட்ஜெட்டில் தயார் ஆகி 12 கோடி பாக்ஸ் ஆஃபீசில் வசூலைக்குவித்த படம்.தமிழில் இதற்கு ரிலீஸ் டைமில் பிரம்மாண்டமான விளம்பரங்கள் எல்லாம் தந்தும் ஏன் படம் மெகா ஹிட் அடிக்கவில்லை என தெரியவில்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு திருடன். கார் திருடுவது , பூட்டிய வீட்டை சாவி இல்லாமல் , பூட்டை உடைக்காமல் திருடுவது ஆகியவற்றில் எக்ஸ்பர்ட். இவனுக்கு ஒரு காதலி உண்டு ., காதலி கிளப்ல டான்ஸ் ஆடுபவர். சில திருட்டுக்கேசில் நாயகன் கைது ஆகி ஒன்றரை வருடங்கள் ஜெயில் தண்டனை பெற்று உள்ளே போகும்போதுதான் காதலிக்கு தன் காதலன் ஒரு திருடன் என்பதே தெரியும்
வில்லன் ஒரு பெரிய கடத்தல்காரன், அவனிடம் பணி புரியும் நாயகன் நெ 2 ஒரு கட்டத்தில் கடத்தல் தொழிலை விட்டு விலக நினைக்கும் அடியாளை வில்லன் போட்டுத்தள்ளுவதைப்பார்த்து வில்லனுடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறான், நாயகன் நெ 2 திருமணம் ஆகி மனைவியை இழந்து ஒரு மகளுக்கு தந்தை . நாயகன் நெ 2 , அவன் குழந்தை இருவரும் நாயகியிடம் நெருக்கமாகப்பழகுகிறார்கள் .நாயகன் நெ2 விற்கு நாயகியின் காதல் பற்றி தெரியாது , ஒருதலையாய் நாயகியைக்காதலிக்கிறான். நாயகிக்கு நாயகன் நெ 2 வின் காதல் பற்றி தெரியாது
நாயகன் ஜெயிலில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து ரிலீஸ் ஆகிறான். நாயகனை ஜெயிலில் அடைத்த போலீஸ் ஆஃபீசர் வேறு வேலை எதுவும் இல்லாமல் நாயகன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார். அவன் அடுத்து பண்ணப்போகும் திருட்டை தடுக்கவாம்
வில்லனுக்கு நாயகன் உதவி தேவைப்படுகிறது
இதற்குப்பின் நாயகன் நெ1 , நாயகன் நெ2 , நாயகி , போலீஸ் ஆஃபீசர் . வில்லன் ஆகியோர் வாழ்க்கையில் என்ன நடந்தது ? என்பதுதான் திரைக்கதை
நாயகன் நெ 1 ஆக சூப்பர் ஸ்டார் ரஜினி , எனர்ஜெடிக்கான பர்ஃபார்மென்ஸ் , சிகரெட் தூக்கிப்போடுவது முதல் அவரது அக்மார்க் ஸ்டைல்கள் பல இதில் உண்டு
நாயகன் நெ 2 ஆக கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன்.. அழகிய முகம், மோகன் , சுரேஷ் போல லவ் சப்ஜெக்ட்டில் நடிக்க ஏற்ற முகம், ஆக்சன் காட்சிகளிலும் நல்லா பண்ணி இருக்கார் ‘
நாயகி மாதவி , படத்தின் அனைத்துப்பாடல்களும் இவருக்கே , 2 கிளப் டான்ஸ் , 2 டூயட் , ஒரு மெலோடி , ஒரு டப்பாங்குத்து என பாடல் காட்சிகளுக்கே தனி சம்பளம் தந்திருப்பாங்க போல . டூ பீஸ் டிரஸ் காட்சிகளும் உண்டு
தமிழ் சினிமா உலகில் டூ பீஸ் டிரசில் அழகாக வந்து போன நாயகிகளில் மாதவி முக்கியமான நபர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போலீஸ் ஆஃபீசராக வருகிறார். போலீஸ் யூனிஃபார்மில் கம்பீரமாக இருந்தாலும் தொப்பையுடன் அவர் நாயகனுடன் போடும் ஃபைட்ஸ் எல்லாம் காமெடி
ரஜினி - விஷ்ணுவர்தன் இருவர் இடையே ஏற்படும் நெருக்கமான நட்பு சரியாக கனெக்ட் ஆகவில்லை , ரொம்ப செயற்கையாகத்தான் அவர்களது நட்பு இருக்கிறது, உயிரைக்கொடுத்து காப்பாற்றும் அளவு என்ன இருக்கு என சொல்லப்படவில்லை
ஒய் ஜி மகேந்திரன் காமெடி என்ற பெயரில் வழக்கம் போல லூஸ்தனமாக என்னென்னமோ செய்கிறார், எரிச்சல்.
சந்திரபோசின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். தீம் இசையாக படம் முழுக்க வரும் அந்த இசையில் மட்டும் ஹிந்தி வாசனை . பின்னணி இசை படம் முழுக்க பிரயாணம் செய்திருக்கிறது
டி வாசுவின் எடிட்டிங்கில் 141 நிமிடங்கள் தான் ஓடுது , ஆனால் படம் ரொம்ப நேரம் ஓடுவது போல தோன்றுகிறது
திவாரி , சுரேஷ் சந்திரமேனன் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக கண் முன் விரிகின்றன
சபாஷ் டைரக்டர்
1 இரு நாயகர்கள் , ஒரு போலீஸ் ஆஃபீசர் மூவருக்கும் சரி சமமாக காட்சிகள் இருக்க வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு திரைக்கதை எழுதி இருப்பது நன்றாகத்தெரிகிறது
2
செம ஹிட் சாங்க்ஸ்
1 ராகம் நானே தான் ( ஹீரோயின் ஓப்பனிங் சாங் கிளப் டான்ஸ் 1 )
2 நீலக்குயில்கள் இரண்டு பாடித்திரியும் இன்று ( ஹீரோ நெ 2 ட்ரீம் டூயட் சாங்- செம ஹிட் மெலோடி )
3 ராஜாவே ராஜா நான் தானே ராதா ( ஹீரோயின் கிளப் டான்ஸ் 2)
4 தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி ) நாயகன் நாயகி முதல் டூயட் )
5 நாட்டுக்குள்ளே நம்மைப்பற்றிக்கேட்டுப்பாருங்க , அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ரசித்த வசனங்கள்
1 ஏழைங்க வயிற்றில் அடிச்சே ஆண்டவன் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை அழிச்சிடுவான்
2 ஏது புது கார்?
எனக்கு புது டிரஸ் மாத்தற மாதிரி கார் மாத்தற ஆள்
3 ஜூஜூ பி , இதெல்லாம் ஒரு பூட்டா?
4 மேலே இருந்து கீழே விழுந்துட்டேன்னு பார்த்தீங்களா? எத்தனை ரவுண்ட் ஆகும் உருண்டு வரனு செக் பண்ணினேன்
5 இதுல 3 தோட்டா இருக்கு , சாப்பிடறியா?
எனக்கு பசிக்கல, நீங்களே சாப்பிடுங்க
6 சிலருக்கு எதிரிகளால் ஆபத்து ,சிலருக்கு நண்பர்களால் ஆபத்து,
7 ஒரு பெண்ணோட உண்மையான அன்பை விட உயர்ந்தது இந்த உலகத்தில் வேற எதுவும் இல்லை , அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைக்காதவன்
8 ரோடு முன்னால இருக்கு
ஆனா நீ பின்னால இருக்கியே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கடலில் குளித்து விட்டுக்கரையில் ஹீரோ அருகில் அமரும் நாயகி ரொம்பக்குளிருது என்கிறார், ஏம்மா மின்னல் துண்டு எடுத்து துவட்டாம ஈரத்தலை ஈர உடம்போட இந்த டயலாக்கை ஏன் சொல்றே? துவட்டலாமில்ல என கேட்கத்தோணுது
2 சிவாஜி கணேசன் நல்ல நடிகர் தான் , அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக சம்பந்தமே இல்லாமல் பல காட்சிகளில் அவரை உலா வர விட்டது மேட்சே ஆகலை . குறிப்பாக ராஜாவே ராஜா பாடல் காட்சியில் அவர் டிரம்ஸ் வாசிப்பவராக மாறு வேடம் அணிந்து தேவை இல்லாமல் எதுக்கு ஃபர்னிச்சரை உடைக்கிறார்?
3 விஜயகுமாரும் , விஷ்ணுவர்தனும் ஒரு சீனில் மோதிக்கொள்வது சம்பந்தமே இல்லாத சீன், அதுல ஒரு ஃபைட் வேற . இரு ஹீரோக்களுக்கும் சமமான அளவில் காட்சிகள் வைக்க வேண்டும் தான், ஆனால் அது திரைக்கதைக்கு சம்பந்தம் உள்ளதாக இருக்க வேண்டும், வலியத்திணித்து இருக்கக்கூடாது
4 பிந்து கோஷ் காமெடி காட்சிகள் எல்லாமே பாடி ஷேமிங் கேட்டகிரியில் வருவதுதான் அந்தக்காலத்தில் மாதர் சங்கங்கள் ஆக்டிவாக இல்லாததால் தப்பி விட்டார்கள் படக்குழுவினர்
5 பேபி ஷாலினி துறுதுறுப்பான சிறந்த குழந்தை நட்சத்திரம்தான் , ஆனால் பல கட்டங்களில் அதன் ஓவர் ஆக்டிங் , அதிகப்பிரசிங்கித்தனம் இதை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது , குறிப்பாக டூ பீஸ் டிரஸ்ல ஒய்யாரமாக நடந்து வருவதெல்லாம் கொடுமை
6 ரஜினி ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி வெளியே வரும்போது அவரை சந்திக்க வரும் மாதவி இனிமே நீங்க திருடக்கூடாது என்றோ அது பற்றியோ எதுவுமே பேசவில்லை , இன்னொரு சந்தர்ப்பத்தில் சம்பந்தமே இல்லாம திருட்டுத்தொழிலை விடனும் என்கிறார்
7 நாயகி சிறந்த டான்சர், ஆனால் கிளப் டான்ஸ் காட்சிகளில் அவருக்கு கிரவுண்ட் எக்சசைஸ் போல ஸ்டெப்ஸ் கொடுத்தது கொடுமை யார் அந்த கொரியோகிராஃபர் என கேட்கத்தோணுது
8 நாயகன் நெ1 நாயகன் நெ2 நாயகி மூவரும் சந்திக்கும் முதல் காட்சியிலேயே யாராவது முறையாக அறிமுகம் செய்திருக்கலாம், வாய்ப்பிருந்தும் அது நடக்கவில்லை
9 விஜயகுமார், விஷ்ணுவர்தன் இருவருக்கும் நடக்கும் முதல் ஃபைட்டே நம்பவே முடியாத காரணம்னு சொன்னேன், ஆனா அந்த சப்பைக்காரணத்துக்காக அவரைக்கட்டி வைத்து ஆள் வைத்து அடித்து கொலை வரை போவது எல்லாம் லாஜிக்கே இல்லை
10 விஷ்ணுவர்தன்க்கு எப்போது யாரால் ஆபத்து வந்தாலும் ரஜினி கச்சிதமாக அங்கே வருவதும் காப்பாற்றுவதும் நம்பவே முடியாதது
11 கவிழ்ந்து கிடக்கும் போலீஸ் ஜீப்பை நிமிர்த்தி விட்டு சிவாஜி மாதவி முன் ஒரு டான்ஸ் மாதிரி ஏதோ பண்ணுவது காமெடியா? அவரது இமேஜையே கேலி பண்ணுவது போல இருக்கிறது
12 அனுராதா வில்லனை ஷூட் பண்ண வரும்போது வில்லன் பார்த்துக்கிட்டே நிக்கறான். இத்தனைக்கும் ஒரு பஞ்ச் டயலாக் வேற பாப்பா சொல்லுது , என் அண்ணனோட திமிரை நீ பார்த்திருக்கே , உன்னோட திமிரை நான் பார்த்திருக்கேன் என்னோட திமிரை நீ பார்த்ததில்லையே , இப்போ பாரு இத்தனையும் பேசற வரை பே-னு பார்த்துட்டே இருக்கான்
13 ரஜினி தன்னைக்கொலை கேசில் மாட்ட வைக்க விஷ்ணுவர்தன் பிளான் போடுகிறார் என சந்தேகிக்க எந்த வித முகாந்திரமும் இல்லை , சும்மா இருவருக்கும் ஒரு ஃபைட் சீன் வைக்க வேண்டுமே என வலியப்புகுத்திய காட்சி ஒட்டவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- மாதவி டூ பீஸ் டிரசில் ஸ்லோமோஷனில் வரும் ஒரு காட்சி தவிர வேறு 18+ காட்சிகள் ஏதும் இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரஜினி ரசிகர்கள் பார்க்கலாம், பொது ரசிகர்கள் சூப்பர் ஹிட் பாட்டுக்காக பார்க்கலாம் ரேட்டிங் 2.5 / 5
Viduthalai | |
---|---|
Directed by | K. Vijayan |
Written by | Aaroor Dass (dialogues) |
Story by | K. K. Shukla |
Produced by | Suresh Balaje |
Starring | Sivaji Ganesan Rajinikanth Vishnuvardhan |
Cinematography | Tiwari Suresh Chandra Menon (second unit) |
Edited by | D. Vasu |
Music by | Chandrabose |
Production company | Sujatha Cine Arts |
Release date |
|
Running time | 141 minutes |
Country | India |
Language | Tamil |