Showing posts with label விடுதலை 2 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா ). Show all posts
Showing posts with label விடுதலை 2 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா ). Show all posts

Sunday, December 22, 2024

விடுதலை பாகம் 2 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா )

           


     அமரர்  மேஜிக் ரைட்டர் சுஜாதா , எழுத்துச்சித்தர் பாலகுமாரன்  அளவு  சக்ஸஸ் ரேட்  சினிமாத்துறையில்  இல்லாமல் போனாலும் , ரைட்டர்  ஜெயமோகன்  தீவிரமாக கோடம்பாக்கத்தில்  இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார் .ரைட்டர்  ஜெயமோகன் எழுதிய  துணைவன் என்ற சிறுகதையை மையமாகக்கொண்டு  இயக்குனர்  வெற்றி மாறன்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதிய படம் தான்  விடுதலை . இதன் முதல் பாகம்  பிரமாதமான  வரவேற்பைப்பெற்றது .இதன் இரண்டாம்  பாகம் இப்போது  வெளியாகி இருக்கிறது .முதல்பாகம் அளவுக்கு கமர்ஷியலாக  இல்லை என்றாலும் இது தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமே .        


ஸ்பாய்லர்  அலெர்ட்

விடுதலை  பாகம் 1 ல்  தீவிரவாதி  என்று அழைக்கப்படும்  பெருமாள் வாத்தியாரை  நாயகன் ஆன போலீஸ்  கான்ஸடபிள்  எப்படிக்கைது செய்ய உதவி ஆக இருக்கிறார் என்பதைக்கமர்ஷியலாகச்சொன்னது .பாகம் 2 ல் பெருமாள் வாத்தியாரின் பிளாஸ் பேக் கதை 


கதை நடக்கும் காலகட்டம் 1990. பண்ணை  அடிமைகளா  வேலை செய்யும்   பெண்களை  பண்ணையார் தான் விரும்பியபடி  பலாத்காரம்  செய்கிறார் . ஒரு பெண்ணின் கணவன்  வெகுண்டு எழுந்து பண்ணையாரைக்கொலை செய்து விடுகிறான் . பண்ணையாரின்  மகன்  தன அப்பாவைக்கொலை செய்தவனுக்கு ஆதரவு அளித்து அடைக்கலம் கொடுத்த பெருமாள் வாத்தியாரை அடித்துப்போட்டு  விட்டு பாதிக்கபட் ட  பெண்ணின்  கணவனை   பழி வாங்குகிறான் 


இதற்குப்பின்  பெருமாள்  வாத்தியார்    கருப்பன்   என்ற  பெயரில்  வேறு  ஊரில் வேறு  ஐடியில்  கூலி ஆளாக  தன வாழ்க்கையைத்தொடங்குகிறார் . கம்யூனிஸ்ட்  கட்சியில்  சேர்கிறார் .மக்களுக்கான  போராட்ட்ங்களை நடத்துகிறார் .அவரது  வாழ்க்கை  வரலாறு தான்  மீதிப்படம் . முதல்  பாதி  முழுக்க  நாயகன் எப்படிப்போராளி   ஆகிறார்  என்பதை  போர்  அடிக்கும் விதத்தில்  நீட்டி முழக்கி  சொல்லி இருந்தாலும் , நாயகனை போலீஸ்  டீம் எப்படி  ரவுண்ட்  கட்டுகிறது ? அவரை  வைத்து  செய்யும் அரசியல்   என்ன?  என்பதை  சுவராஸ்யமாக  பின் பாதியில் சொல்லி இருக்கிறார்கள் 

நாயகன் ஆக  விஜய் சேதுபதி  பல  தோற்றங்களில்  வருகிறார் . பிரமாதமான  நடிப்பு .பெருமாள்  வாத்தியராகவே  வாழ்ந்திருக்கிறார் . நாயகி ஆக  மஞ்சு   வாரியார்  அதிக  வாய்ப்பில்லை என்றாலும்  வந்தவரை  சிறப்பு .      

நாயகனின் குருவாக  கிஷோர்  கச்சிதம் . போலீஸ் ஆபீசர் ஆக வரும் கவுதம் மேனன்  அதிக  வாய்ப்பில்லை . தமிழக  அரசின்  தலைமை செயலாளர் ஆக வரும் இயக்குனர் ராஜீவ்  மேனன் ஆளுமையான  நடிப்பு + உடல் மொழி கறுப்பன்  ஆக  வரம் கென்  கருணாஸின்  நடிப்பும்  அடடகாசம்  

முதல் பாகத்தில்  நாயகன் ஆக வந்த  சூரி  இதில்  டம்மி ஆகி விடடார் .க்ளைமாக்சில் மட்டும் கலக்கி இருக்கிறார் 

ஜமா படத்துக்குப்பின் அட் டகசமான ரோல்  "சித்தி" புகழ்சேத்தனுக்கு .நெகட்டிவ்  ஷேடில்  கலக்கி இருக்கிறார் 

இளையராஜாவின்  மென்மையான  இசையில்  4 பாடல்கள் .அவற்றில்  இரண்டு செம ஹிட் . பின்னணி  இசையில்  முதல் பாகத்தை விட  இதில் அதிக ஸ்கோர்  செய்திருக்கிறார் . ஆர்  வேல் ராஜின்  ஒளிப்பதிவு  அருமை . ராமரின்  எடிட்டிங்கில்  படம் 171 நிமிடங்கள்  ஓடுகிறது .முதல்  பாதியில்  கொஞ்சம்   ட்ரிம்  பண்ணி இருக்கலாம் 



சபாஷ்  டைரக்டர்


1  வீரப்பன்   உட்பட  தேடுதல்   வேட்டையில்  இருக்கும்  தீவிரவாதிகள்  போலீசில்  பிடிபட் டால்  அந்த நியூஸ்  உடனேயே  எதனால்  வெளியே  தெரிவதில்லை ? அதில் இருக்கும் அரசியல் என்ன?என்பதை துணிச்சலாகப்பேசிய விதம் 

2  நாயகன் நாயகியிடம்  தனது   காதலை  சொல்ல  முடியாமல்  தடுமாறும் காட்சி 

3   ஒரே ஒரு சீனில்   வந்தாலும் இளவரசுவின் நடிப்பு கலக்கல் ரகம் 

4  கை  தட் ட  வைக்கும்  க்ளைமாக்ஸ்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  மனசுல மனசுல   ஒரு மாதிரி  இருக்குது 

2  தினம்  தினமும் 


  ரசித்த  வசனங்கள் 


1   இந்த  மாதிரி  நெருக்கடியான  நிலைமைகளை டீல் பண்ணத்தான் நாங்க  படிச்சுட்டு  வந்திருக்கோம் 


 அப்போ  என்னைப்படிக்காத தற்குறி னு சொல்ல வர்றீங்களா? 


================


2 உங்களைப்பொறுத்தவரை  அது வெறும் ஸ்ட்ரேடஜி , எங்களுக்கு அது வலி 

=============

3  நம்ம ஜனங்களுக்கு  அரசியல்  தெரியாது , ஆனா நம்ம உரிமைகள்  பறிக்கப்படுதுன்னா அவங்களே  எதிர்த்துப்போராட ஆரம்பிச்சுடுவாங்க 


================

4  நல்லவனா  இருக்கறதால  மட்டும்  இந்த சமூகத்துல  எந்த மாற்றத்தையும் கொண்டு  வர முடியாது . அதுக்குன்னு சில கோட்பாடுகளும், அமைப்புகளும் தேவை 


5   காலம்  நமக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கி  இருக்கு  1 நடப்பதுதான் நடக்கும், எல்லாம் நம்ம தலை விதி என  அடங்கி  இருப்பது 2 சங்கம் அமைத்து நம்ம உரிமைகளுக்காகப்போராடுவது 


6 போராடடத்தில்  ஈடுபடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில்  ஈடுபடனு ம் . அப்போதான் மக்கள் போராடுபவனைப்பார்த்து உங்களுக்கு என்னப்பா?பொண்டாட்டியா? குட்டியா? என கேட்க மாடடாங்க 


7   எப்பவுமே  ஜனங்க  ஒரு பொதுப்பிரச்சனைக்குப்போராட  வாங்கன்னா வர மாட்டாங்க . அதுக்கான சூழல் உருவாகனும் 


8     அவனவன்   தேர்ந்தெடுக்கும்  பாதை அவனவன் வாழ்வைத்தீர்மானிக்கிறது 

9 என்னோட பாதை என்ன?னு எனக்கே தெரியாதப்ப எனக்கான பாதையை அவர் தான் தேர்ந்தெடுத்தார் 

10   செத்துடுவோம்னு  பயப் படறதை விட செத்துப்போவதே மேல் 

11  வழி நடத்துவதற்கு  தலைவனாக இருக்கணும்கற தேவை கிடையாது தத்துவம் இருந்தா போதும் 


12  வன்முறை என்பது  ஒரு மொழி , பொதுவா நாங்க அந்த மொழியில்   பேசுவது  இல்லை , ஆனா அந்த மொழியும் எங்களுக்குப் பேசத் தெரியும் 


13  தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது 

14  நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு

15  மக்களுக்காகப்போராடுபவர்களை மக்கள் பார்த்துக்குவாங்க 


16  ஒருவருடைய  வாழ்விடத்தை பெருவாரியான மக்களின் நன்மைக்காக என்றாலும்  அதை  அழிப்பது , அழிக்க நினைப்பது ரியா? 


17நீ கூப்டுறது இல்லடா என் பேரு

நான் சொல்றதுதான் என் பேரு

18 போனா உயிர் , வந்தா வரலாறு

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஒரு சண்டையின் போது  தனது கணவன்  தன தலைமுடியைப்பிடித்து  இழுத்து அடித்ததால்தான்  கூந்தலை கட்  பண்ணி விட்டு  பாய்ஸ் கட்டிங்க்  வைத்ததாக நாயகி சொல்கிறாள் .அவனை டைவர்ஸ்  பண்ணிய பிறகும்  அதே பாய்ஸ் கட்டிங்க்   எதனால் ? நாயகனைத்திருமணம்  செய்த பின்பாவது  கூந்தலுக்கு மாறி இருக்கலாம்.10  வருடங்கள் ஆகிறது அவர் கூந்தலை  வளர்க்க 


2     மைதிலி என்னைக்காதலி  படம் ரிலீஸ்  ஆன  கால கட்டம் 1986 . கதைப்படி  அந்தப்படத்தைப்பார்க்கற  சீன்ல டி டி எஸ் ல  ஒளிபரப்பாகுது . ஆனா   டி டி எஸ்  நடைமுறைக்கு வந்தது 2000ம் ஆண்டுக்குப்பின் தான் . பீரியட் பிலிம்  எடுக்கும்போது  இதை எல்லாம் கவனமாப்பார்க்கணும் 


3   முதல் பாதி கதையில்  வரும் பண்ணையார் கொடுமைகள் ,பழி  வாங்கல்கள் எல்லாம்  ஏற்கனவே  மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன் வாட்டாக்குடி இரணியன் , சீவலப்பேரி  பாண்டி , அசுரன்  உட்பட பல படங்களில்  பார்த்தவை தான் . கதை சொல்லும் விதத்திலும் கம்யூனிசம் , பா ரஞ்சித்தின் ஜாதியிஸம் ஓவர் டோஸ் .

4    இளையராஜா தனது படத்தில்  ( ரஜினி யின் தளபதி )  இருந்தே  பிஜிஎம் களை  உருவி இருக்கிறார் 

5  வாத்தியாரின்  வாத்தியார் ஆக  வரும் கிஷோரின்  கேரக்ட்டர்  டிசைன்  அழுத்தமாக எழுதப்படவில்லை .அவருக்கு  ஒன்று நேரும்போது ஆடியன்ஸின்  மனதில் எந்த பாதிப்பும் நிகழ வில்லை 

6  முதல்  பாதி முழுக்க ஆளாளுக்கு  தோழர் தோழர்  என் பேசிக் கொண்டே போவது  செம போர் .இயக்குனர் தன கருத்துக்களை வலிந்து திணிக்கிறார் 

7  இடது சாரி , வலது சாரி  என்றால் என்ன?  என விளக்கும்  காட் சியில்  எடிட்டிங்க் குழப்பமோ ,சென்சார்  தலையீடோ  பாதியிலேயே ஜம்ப் ஆனதால்  மக்களுக்குப்போய்ச்சேரவேண்டிய ஒரு நல்ல கருத்து மிஸ் ஆகிடுச்சு 


விடுதலை  முதல் பாகத்தில்  போலீஸ் ஆபீசர்  கவுதம்  மேனன்  கூட இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக  வரும் ஒரு கேரக்டர்  இந்த இரண்டாம்  பாகத்தில் பண்ணையாராக வருகிறார் . இது எப்படி ? 


வாய்ஸ் ஓவரில்  கதை சொல்வது  எரிச்சல் . அது பல சமயங்களில்  ஓவர்லேப்  ஆகி பல வசனங்கள்  புரியவில்லை 


10   லிப் சிங்க்  சரியாக செட் ஆகவில்லை . பல  கா ட்சிகள்  இருட்டில்  படமாக்கப்பட்டதால் கேமரா  முதுகுக்குப்பின்  வைத்து காட்சிகளை க்காட்டுவதால்   லிப் சிங்க்கிங்க்  குறைபாடு  தெரியாது என இயக்குனர் நினைத்திருக்கிறார் 

11  நாயகன் - நாயகி  ரொமாண்டிக் போர்ஷன்  மனதில் பதியவில்லை  அதற்கு  முக்கியமான காரணம்  நாயகியின்  பாய்ஸ்  ஹேர் கட்டிங் . மஞ்சு வாரியார்  சேலையில் , கூந்தலில் இன்னமும் அழகாக இருப்பார் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+ . வன்முறைக்காட் சிகளுக்காக  சென்சாரில் ஏ சர்ட்டிபிகேட் தரப்பட்டுள்ளதால்  மாணவர்கள் ,மென்மையான மனம் கொண்டவர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் கம்யூனிச சித்தாந்தங்களை  அதிகம் பேசுவதால்  கம்யூனிஸ்ட் , திமுக ,விசிக  போன்ற கட்சிக்காரர்கள்  விரும்பிப்பார்ப்பார்கள் . பொது மக்கள்  விரும்பிப்பார்க்கும் அளவு முதல் பாதி  கமர்ஷியலாக இல்லை . பின் பாதி நல்ல விறு விறுப்பு . எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -46 , குமுதம் ரேங்க்கிங்க் ஓகே .மை  ரேட்டிங்க் 3 / 5