விடா முயற்சி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )
ரொமாண்டிக் காமெடி டிராமாவாக வெளிவந்த முன் தினம் பார்த்தேனே (2010) தான் இயக்குனர் மகிழ் திருமேனியின் முதல் படம் என்றாலும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத்தாக்க (2012) தான் அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டிய ஆக்சன் த்ரில்லர் .ஆர்யா நடிப்பில் வெளியான மீகாமன் (2014) ஒரு மாறுபட் ட ஆக்சன் த்ரில்லர் என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெறாத படம் . மீண்டும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் (2019) அருமையான க்ரைம் த்ரில்லர் ஆக வந்தது .டூயல் ரோலில் வித்தியாயமான முயற்சி அது உதய நிதி நடிப்பில் வெளிவந்த கலகத்தலைவன் (2022) ஒரு ஆக்சன் த்ரில்லர்
நல்ல திறமை உள்ள ஒரு இயக்குனர் எதற்காக பழைய ஹாலிவுட் படமான பிரேக் டவுன் (1997) க்ரைம் த்ரில்லர் படத்தை அபிஷியலாக ரீமேக்க வேண்டும் ? என்பது தெரியவில்லை ஒரிஜினல் வெர்சன் 90 நிமிடங்கள் இது 150 நிமிடங்கள் தமிழுக்குத்தக்கபடி எக்ஸ்ட்ரா வாக ஓர் மணிநேரம் திரைக்கதையை இழுத்து இருக்கிறார்கள் சுவராஸ்யமாக இருந்ததா என்பதைப்பார்ப்போம்
வில்லி சின்னவயசுல இருந்தே மன நலம் பாதிக்கப்பட் ட சைக்கோ அடுத்தவங்களைத்துன்பப்படுத்தி அதில் இன்பம் காண்பவர் இவரைத்திருத்தவும் முடியாது , மாற்றவும் முடியாது , குணப்படுத்தவும் முடியாது என டாகடர்கள் கை விரித்து விடுகின்றனர் . பெற்றோரும் கண்டுக்கறதில்லை .இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்புக்காக ஏங்குகிறார் .அப்போது தான் வில்லன் அறிமுகம் ஆகிறான் .வில்லி மீது அன்பு வைக்கிறான் . இருவரும் மனமொத்த காதல் தம்பதியாக வாழ்கின்றனர்
நாயகன் , நாயகி இருவரும் 12 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . ஆனால் இப்போது நாயகிக்கு நாயகன் மீது இஷ்டம் இல்லை . பிரிய முடிவு எடுக்கிறார் .பிரிவுக்கு முன் தன பெற்றோர் வீட்டுக்குபோய் கொஞ்ச காலம் ஓய்வெடுக்க நினைக்கிறார் . நானே உன்னை டிராப் பண்றேன் . அது நம் கடைசி ரோடு டிரிப் ஆக இருக்கட்டும் என்கிறார் நாயகன்
பயணத்தின் போது ஒற்றுமையுடன் இருக்கும் வில்லன் - வில்லி , ஒற்றமை இல்லாத நாயகன் - நாயகி அறிமுகம் உண்டாகிறது . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை .
நாயகன் ஆக அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் குமார் கச்சிதமாக நடித்திருக்கிறார் . ஒரு மாஸ் ஹீரோ பில்டப் இல்லாமல் சாமானிய நபராக நடிக்க ஒத்துக்கொள்வதே அபூர்வம் .தன மனைவி மீது அன்பு வைத்திருக்கும் நல்ல கணவனாக பாந்தமான நடிப்பு . வழியில் மனைவி மிஸ் ஆனதும் பரிதவிப்பது ,பின் ஆக்சனில் இறங்கவதெல்லாம் கனகச்சிதம்
நாயகி ஆக த்ரிஷா . அதிக வாய்ப்பில்லை .இவரது கேரக்டர் டிசைனில் தெளிவில்லை .
வில்லி ஆக ரெஜினா கசண்ட் ரா மிரட்டலான நடிப்பு . ஆனால் அவரது பிளாஷ்பேக் ஓப்பன் ஆகும் இடம் சரி இல்லாததால் ரசிகர்கள் மனதில் பதியவில்லை . வில்லன் நெம்பர் ஒன் ஆக அர்ஜுனும் ஆரம்பத்தில் அசத் தி போகப்போக டம்மி ஆகி விடுகிறார் .. வில்லன் நெம்பர் 2 ஆக பிக் பாஸ் புகழ் ஆரவ் , பரவாயில்லை ரக நடிப்பு
இசை அனிரூத் பிரமாதமான பிஜி எம் போட்டிருக்கிறார் . அஜித் வரும் காட் சிகளெல்லாம் பிஜிஎம் தெறிக்கிறது . ஆனால் பாடல்கள் சுமார் ரகம் தான் .3 பாடல்களுமே சராசரி தரம் தான் .ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம்
ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி வேகம் . பின் பாதி ஸ் லோ . இயக்கி இருப்பவர் மகிழ் திருமேனி
சபாஷ் டைரக்டர்
1 ஒரிஜினல் ஹிந்தி வெர்சன் ஆன பிங்க்கில் இல்லாத மாஸ் சீக்வன்ஸை நேர் கொண்ட பார்வையில் சேர்த்த மாதிரியோ , லியோ வில் நாயகன் 500 பேரை அசால்ட் ஆக அடிப்பது போலவோ இ ல்லாமல் ரியலிஸ்ட்டிக் ஹீரோவாகக்காட்டிய விதம் அருமை
2 வில்லி க்குக்கொடுத்த முக்கியத்துவம் , வில்லியின் நடிப்பு
3 லொக்கேஷன் , பிஜிஎம்
4 அன்பில்லாத , பிரிய முடிவு எடுத்த மனைவியின் மீது ஒரு கணவன் பரிபூரண அன்பு செலுத்த முடியும் எனக்காட்டிய விதம்
5 வில்லி நாயகனிடம் , நாயகியிடம் மாற்றி மாற்றி ஆடும் மைண்ட் கேம் உத்திகள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி நாயகன் மீது எதனால் கசப்பு கொள்கிறார் ? என்பது விளக்கமாக சொல்லப்படவில்லை .இந்தக்கதைக்கு அது ரொம்ப முக்கியம்
2 நாயகி காணாமல் போனதும் நாயகனுக்கு ஏற்படும் பரிதவி ப்பு ஆடியன்ஸுக்கு ஏற்படவில்லை
3 வில்லன் அர்ஜுன் சொல்வதை எல்லாம் போலீஸ் கேட்பது அபத்தம்
4 வில்லன் ஆரவ் நாயகனை சுட வாய்ப்ப்பிருந்தும் சுடாமல் அருகில் இருக்கும் போலீஸ் ஆபீசரை சுடுவது
5 நாயகியின் புதுக்காதலன் யார் என்பதில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கலாம் .அது மிஸ்சிங்
ரசித்த வசனங்கள்
1 அவர் என்னைப்பார்க்கும்போது அவர் ஆயுசுக்கும் என்னை மறக்கக் கூடாது
ஏழு ஜென்மத் து க்கும் மறக்க மாட் டார் . போதுமா?
2 உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா ?
ஆகி இருக்கும் , உங்களை மாதிரி ஒரு பெண் கிடைச்சிருந்தா
3 நாம எல்லோருமே மாறிக்கிட் டே இருக்கோம் . இப்போ நேசமா இருக்கும் இந்த ஜோடி இன்னும் 15 வருடங்கள் கழித்து இதே போல் இருப்பாங்களா?னு சொல்ல முடியாது
4 ஆரோக்கியமா , சந்தோஷமா , மன நிம்மதியுடன் வாழ கத்துக்குங்க
5 எந்த ஆணாலும் தாங்கிக்கொள்ள முடியாத வலி அவன் மனைவி இன்னொரு காதல் வைத்திருப்பது . அது அவன் மனதை அப்படியே குத்திக்காயப்படுத்திடும்
6 காயம் பட்ட ஆம்பளை எந்த எக்ஸ்ட்ரீம் க்கும் போவான்
அடல்ட் கண்ட் டென்ட் வார்னிங் - U/A
சிபிஎஸ் பைனல் கமெண்ட் - மங்காத்தா , பில்லா லெவலுக்கு இல்லை .ஆனால் ஏ சென் ட் டர் ஆடியன்ஸைக்கவரக்கூடிய ஒரு ஆக்சன் த்ரில்லர் தான் .விகடன் மார்க் யூகம் -42 . குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே .மை ரேட்டிங் 2.75 /5