தமிழ்த் திரையுலகில் நடிகர் விஜய்தான் 'சிறந்த டான்ஸர்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா புகழாரம் சூட்டியுள்ளார்.
'போக்கிரி', 'வில்லு', 'வெடி' ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பிரபுதேவா,
தொடர்ச்சியாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 'ரவுடி ரத்தோர்',
'வான்டட்', 'ஆக்ஷன் ஜாக்சன்', 'சிங் இஸ் ப்ளிங்' என இந்தியில் முன்னணி
இயக்குநர்களில் ஒருவராக அவர் வலம் வருகிறார்.
தொடர்ச்சியாக இந்திப் படங்களை இயக்கி வருவதால், தமிழ்ப் படங்களில்
பணியாற்றுவது குறித்தும், தனது இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தி
படங்களைப் பற்றியும் விவரிப்பதற்காக, சென்னையில் செய்தியாளர்களை அவர்
சந்தித்தார்.
அப்போது பிரபுதேவா பேசும்போது , "விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்குவேன்.
தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் 'ஆக்ஷன் ஜாக்சன்' படத்தை இயக்கி
வருகிறேன். இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது.
பாடல்களுக்காக விரைவில் ஆஸ்திரியா நாட்டிற்கு செல்ல இருக்கிறோம்.
அப்படத்தைத் தொடர்ந்து அக்ஷய் குமார் நடிக்கும் 'சிங் இஸ் ப்ளிங்' படத்தை
அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்குகிறேன். அதற்கு பிறகு தமிழ்ப் படம்
இயக்குவது குறித்து முடிவு செய்வேன். தமிழ் சினிமா தற்போது நிறைய மாறி
விட்டது. சந்தோஷமாக இருக்கிறது.
'ஏபிசிடி' இந்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது நிறைய
நடனமாடியதால் உடம்பு மிகவும் குறைந்து விட்டது. எந்த ஒரு காரணத்தைக் கொண்டு
நடனம் அமைப்பதை விடும் திட்டமில்லை.
எனக்கு எப்போதுமே ஷங்கர் படங்களுக்கு நடனம் அமைப்பது ரொம்ப பிடிக்கும்.
ஆனால், 'ஐ' படத்திற்கு அவர் அழைக்கவில்லை. நானும் வெவ்வேறு பணிகளில்
பிஸியாக இருந்தேன். என்னைப் பொருத்தவரையில், தமிழ் திரையுலகில் விஜய் தான்
சிறந்த டான்ஸர்" என்றார் பிரபுதேவா.
thanx - the tamilhindu