Showing posts with label விஜய் டி வி. Show all posts
Showing posts with label விஜய் டி வி. Show all posts

Monday, May 06, 2013

எழுத்தாளர் அமரர் சுஜாதா பேட்டி @ விஜய் டி வி ( நீயா நானா கோபினாத் ) வீடியோ

சுஜாதா பெரும்பாலானவர்களுக்கு எழுத்துலக குரு. மானசீக ஆசான். அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்றோம்னு எல்லாரும் உணர முடியுது . நீயா நானா கோபினாத் விஜய் டி விக்காக எடுத்த ஒரு பேட்டி இப்போ தான் பார்த்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 




Monday, November 05, 2012

விஜய் டி வி - சூப்பர் சிங்கர் - போட்டி சர்ச்சைகள்


          சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு  நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.

ரியாலிட்டி ஷோ எனப்படும் தனிமனித திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சிகளில் தமிழக டி.வி. ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர். பிரபல பின்னணிப் பாடகர்களைப்பேல சிறுசுகள் அநாயசமாகப் பாடும் இந்த நிகழ்ச்சியை ஒரு சினிமாவைவிடவும் அதிகமாக பிரம்மாண்டமாக்கி பிரபலப்படுத்தியது விஜய் டி.வி. நிறுவனம். தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பு, லட்சக்கணக்கில் பரிசுத் தொகை, பிரபலமாவதற்கேற்ற விளம்பரம் என இந்த நிகழ்ச்சி அமைந்திருந்ததால், பாடத் தெரிந்த தங்கள் பிள்ளைகளை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் போட்டிபோட்டனர்.


பல சுற்று தகுதிப் போட்டிகளில் தேறிவந்த இளம் பாடகர்கள், டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று, நடுவர்களான பிரபல பின்னணிப் பாடகர்கள் முன்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நடுவர்களின் மதிப்பெண்ணும், டி.வி. ரசிகர்களின் எஸ்.எம்.எஸ். ஓட்டும்தான் இந்த ஜூனியர் சிங்கர்ஸை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றிச் செல்லும் என்பதால் போட்டிகள் விறுவிறுப்பாகவே இருந்தன.

இறுதிப் போட்டிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அதுதான், வெள்ளிக்கிழமையன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 1.30 மணி வரை நீடித்த இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பதைபதைப்பு ஜூனியர் சிங்கர்களின் பெற்றோர்களிடம் எக்கச் சக்கமாக இருந்தது. நேரில் பார்த்த ரசிகர்களிடமும் டி.வியில் லைவ் ஷோ பார்த்த ரசிகர்களிடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இந்த  டென்ஷனை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், பாட்டு பாடிய குட்டீஸிடம் எந்த டென்ஷனு மில்லை. அவர்களுக்கு மகிழ்ச்சிதான் அதிகரித் திருந்தது. காரணம், போட்டியில் ஜெயிப்பவ ருக்கு பரிசு கொடுப்பதற் காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்திருந்ததுதான். இந்தச் சின்ன வயதில் மிகப் பெரிய இசை ஜாம்பவான் முன்பாக பாடுகிறோம் என்பதே ஜூனியர்களுக் குப் பெரும் பரிசாக இருந்தது.

நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்பூர் ரமேஷ் நம்மிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ""பிரகதி, யாழினி, கௌதம், ஆஜித், சுகன்யா ஆகிய 5 பேரும்தான் இறுதிச் சுற்றில் கலக்கியெடுத்தாங்க. அதிலும் பிரகதி தனது இரண்டாவது சுற்றில், ‘"மைய்யா... மைய்யா...'’என்ற மணிரத்னத்தின் "குரு' படத்தின் பாடலை ஆடியபடியே பாடி ரசிகர்களையும்  ரகுமானையும் அசர வச்சிட்டார். அதுபோலவே யாழினியும் "கொஞ்சம் நிலவு.. . கொஞ்சம் நெருப்பு'’ என்ற பாட்டை ஆட்டத்துடன் பாடி கைதட்டல்களை அள்ளிட்டார். பிரகதியின் பாடலுக்கு ரசிகர்களோடு அவரோட அம்மாவும் லைட்டா மூவ்மெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்துனாங்க.
தென்மாவட்டத்திலிருந்து முதன்முதலா ஃபைனலுக்கு செலக்ட்டான தூத்துக்குடி கௌதம் பாடுனப்பதான் அந்தப் பையனோட அம்மா ரொம்ப பதட்டத்தோடு, தலையைக் குனிஞ்சி, கண்ணை மூடிக்கிட்டு சாமியை வேண்டிக்கிட்டே இருந்தாங்க. "வந்தே மாதரம்' பாட்டு பாடி, ஒட்டுமொத்த ஆடியன்சோட கைதட்டலையும் வாங்குன ஆஜீத்துதான் வின்னர்னு அறிவிச்சி, ரகுமான் கையால பரிசு கொடுக்கப்பட்டப்ப உலகமே சுழலுறமாதிரி அந்த சின்னப்பையனுக்கு அப்படியொரு சந்தோசம். ரகுமான் சார் ரசிகன், ரகுமான் சார் ரசிகன்னு சொல்லிக்கி ட்டிருந்தவனுக்கு அவரே பரிசு கொடுத்தாருன்னு சந்தோசம் இருக்காதா'' என்றார்.

நாம் ஆஜித்தின் சொந்த ஊரான திருச்சியில் விசாரித்தோம். ""எங்க ஊரு பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசா கிடைச்சிருக்கு. அதுவும் ஏ.ஆர்.ரகுமான் கையால கிடைச்சிருக்குங்கிறது எங்க எல்லோருக்கும் பெருமைதான். ஆஜித்தை வளர்த்ததும் அவனுக்கு குருவா இருந்ததும் அவனோட பெரியம்மா சமீதாதான். ஆஜித்தோட அம்மா அப்பா சபானா-நிஷாருக்கு கல்யாணமாகி 10 வருசம் கழிச்சி பிறந்த குழந்தை இவன். 6 மாசக் குழந்தையா இருக்கிறப்பவே டி.வியில சினிமா பாட்டு கேட்டா அதை மழலை பாஷையில் குதப்புவானாம்.


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1ghdqzms0j1wSEtL0Z3B7fYYd84Mo1eRQPqrW3rbnR4Wwhpcyw-Ht2Ak8kCmmVoa-hTpmSAMKAKgtjszQOlaOcu8_lnAKrtS_TaLjzE0l-mrQ6FYI7XlPoUDUIJqSM3FVsc5dNGuH16GK/s1600/Pragathi+Guruprasad+in+airtel+super+singer+junior+3+at+vijay+tv+(13).jpg


 இது கடவுள் வரம்னு அவங்க குடும்பம் உற்சாகப்படுத்தியிருக்கு. கே.கே.நகரில் 4000 குழந்தைகள் படிக்கிற ஆல்ஃபா பள்ளிக்கூடத்தில்தான் ஆஜித்தும் படிச்சான். அவங்க பெரியம்மா அங்கேதான் டீச்சரா இருந்தாங்க. அதனால  அவனோட இசை ஆர்வத்தை கண்டுபிடிச்சி வளர்த்தாங்க. யு.கே.ஜி படிக்கும்போதே வந்தே மாதரம் பாட்டை பாடி, குட்டி ஏ.ஆர்.ரகுமான்னு பெயர் எடுத்தவன். அப்ப அதைக் கிண்டல்கூட பண்ணினாங்க. ஆனா இப்ப 11 வயசிலே, அதே ஏ.ஆர். ரகுமான் கையால பரிசு வாங்கி சாதிச்சிருக்கான்'' என்கிறார்கள் பெருமை பொங்க.

ஃபைனலுக்கு முன்னாடி நடந்த  போட்டியில் பாட்டு வரிகளை மறந்து  போய் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பிடிக்க முடியாமல் போனவர்தான் ஆஜித். அது மாதிரியே யாழினிக்கும் இடம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒயில்டு கார்டு என்கிற முறையில் ரசிகர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தால், அவர்கள் ஃபைனலை நோக்கி முன்னேறமுடியும். இன்னாருக்கு இந்த நம்பரில் ஓட்டுப் போட்டு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களின் படங்களோடு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியது விஜய் டி.வி. ஓட்டுகள் குவிந்தன. ஆஜித்துக்கு ஆதரவாக இதுவரை இல்லாத அளவுக்கு நான்கரை லட்சம் எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் குவிந்தன. அதுபோலவே, யாழினிக்கும் நிறைய பேர் ஓட்டுப் போட்டதால் அவரும் ஃபைனலை நோக்கி முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஆஜீத் முதலிடம்  பெற, இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க நகை, மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, சுகன்யாவுக்கும் கௌதமிற்கும் 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பள்ளிப் பருவத்தில், தமிழகம் தழுவிய அளவில் திறமைகளைக் காட்டி, உலகின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களின் மனங்களை தங்களின் திறமை யால் வென்ற இந்த ஜூனியர் சூப்பர்களின் ஆற்றலை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் மிகவும் பாராட்டு கிறார்கள். பிரபல இசைக் கலைஞரும் இசைப் பயிற்சி வல்லுநருமான மீரா காயத்ரி நம்மிடம், ""அந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட எல்லாப் பிள்ளைகள் கிட்டேயும் தனித் திறமை இருந்தது. அற்புதமா பாடி னாங்க. ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம்  அவங்களோட திறமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே மாதிரி திறமையுள்ள வர்கள் கிராமப்புறங்களிலும் இருக்கிறார்கள். நகரத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவங் களுக்குக் கிடைக்கிறதில்லை. அவங்களையும்  கண்டு பிடிச்சி,  மேடையேற்றி வாய்ப்புகளைக் கொடுக்க ணும். அப்பதான் உண்மையான திறமைகள் வெளிப்பட்டுக் கிட்டே இருக்கும்'' என்றார்.

இசைப் பிரியரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான  திருவாரூர் ஜி.ரவி, ""அது ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. இந்தத்  திறமைகளைத் தொடர்ந்து வளர்க்கிற மாதிரி வாய்ப்புகள் கொடுக்கணும். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பள்ளிக்கூடத்திலேயே இசை வகுப்பைத் தொடங் கணும்னு சொல்லியிருந்தார். அவர் சொன்ன கருத்து ரொம்பவும்  சரியானது. மனதை ஒருமுகப்படுத்தவும், ஒரு விஷ யத்தின் மீது கவனத்தை செலுத்தவும் இசை என்பது சரியான பயிற்சியாக அமையும். மாணவர்கள் மனதில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இசை மூலமா உருவாகும்போது  அவங்களால பாடத்தையும் நல்லா படிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை எளிமையா உள்வாங்கிக்க முடியும். பள்ளிக்கூடங்களிலேயே தமிழிசையை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார்.

http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg
அதே நேரத்தில், இந்த சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதல் பரிசு என்பது திறமையின் அடிப்படையிலா ஓட்டுகளின் அடிப் படையிலா என்ற குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் அவர்கள், ""முதல் சுற்றில் கிளாசிக்கல் சாங் பாடவேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள், அருமையா கிளாசிக்கல் பாடிய பிரகதியை விட்டுவிட்டு, கிளாசிக்கல் வரைமுறைக்குள்ளேயே வராத "வந்தே மாதரம்' பாடலைப் பாடிய ஆஜீத்துக்கு பரிசு கொடுத்தது எப்படி? 




இந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட சின்னப்புள்ளைகளை டி.வி. நிறுவனத்தோடு காண்ட்ராக்ட் போடவச்சு, தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப் படுத்திக்கிறது சட்டப்படி சரியானதுதானா?'' என்று கேள்வி எழுப்புவதுடன் இந்தப் போட்டி நடத்தும் விதம், தேர்வு முறை, பரிசுத் தொகை அனைத்தையும் விமர்சனத்திற்குட் படுத்துகிறார்கள். 



"11 வயது பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்போது, அதன் மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரியாது. அது அவனது பெற்றோருக்குத்தான் பயன்படும். பெற்றோரின் வானளாவிய ஆசைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் போக்கையே இத்தகையப் போட்டிகள் வளர்க்கின்றன' என்றும் "சமுதாயத்தால் இது  மற்ற பிள்ளைகளின் மீதும் மன அழுத்தத்தை உண்டாக்கும்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மனோ ரமா இதுபற்றி கூறும்போது, ""ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக் குரியதுதான். அதை ஒளி பரப்பும் முறைகள் சரியான வகையில் இல்லை. போட்டியில் தோற்றுப் போகும் குழந்தைகளின் அழுகையை க்ளோசப்பில் காட்டுவது, அப்போது  அவர்களின் பெற்றோர் படும் பதட்டத்தை ஸ்லோ மோஷனில் காட்டுவது, இதில் ஜெயித்தால் மட்டுமே வாழ்க்கை என்பதுபோல பிள்ளைகளை தீவிரப்படுத்துவது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல பரிசுத் தொகையும் அவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பாகவோ, ஹாலிடே டூர்  புரோகிராமாகவோ, இசை சம்பந்தப்பட்டதாகவோ இருந்தால் வளர்ச்சிக்கு உதவும்'' என்கிறார் தெளிவாக.

இளம் வயதிலேயே திறமையால் அசத்திய சாதனைத் திலகங்களை சரியான  வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற் றோருக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது. சக மனிதர்களான நமக்கும்தான்.           

நன்றி நக்கீரன் -லெனின்
ஜெ.டி.ஆர்., மனோ 


http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg

Tuesday, May 29, 2012

விஜய் டி வி - கோபிநாத் VS பவர் ஸ்டார் - எப்பொழுதும் உன் அலப்பறைகள்



விஜய் டி வி தமிழ் சேனல்களில்  பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள்  விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..


விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட  குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDrzj-0OzN8CE-D5vum_sHzI9fdl9A4dM7r5k_F5CcWL9vu2lksn0O2HxtOUeuvKUq4vLMx2-wTbyyR3BETR21GmfIFHpTihLUZ_O1ljMtGcpZZm-iCYYS_WT-pnsc0EKSiFd4AgXdNMe-/s400/7-neeya-naana-gopinath-pics-images-photos-stills.jpg

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை  ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

 கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும்  நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல்  அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

 வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

 அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி  தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

 இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

 உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

http://tamil.oneindia.in/img/2012/05/14-neeya-naana-gopinath--300.jpg


அலப்பறை மன்னன் அண்ணன்  கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும்  நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


 பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து 
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என் ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால் 
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/04/Neeya-Naana-.jpg
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfBxTIGbgH0xOgVQPZFvMrtOsfypS7cjBqLLoE3g0gfq_vONBq_a3ZEexTb-1KvCuOLXGXusQLM-PJZ1q-p8Xaj3yMY4y328Z1xkIQj81hFIfK4O6k9wk5IUGNtJS0Ru-nAUOwryGAa3O/s1600/gopinath+neeya+naana.jpg

Sankarkumar  -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!:)) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!




Wednesday, November 09, 2011

நீயா? நானா? கோபிநாத் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

நீயா? நானா? விஜய்  டி வி யின் டி ஆர் பி யை எகிற வைத்த நிகழ்ச்சி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை..  டைமிங்கான டைட்டிலில் வாத விவாதங்கள் சூடு பறக்கும்.. கோபிநாத் தனது ஆணித்தரமான வாதங்களால், ஆளுகை செய்யும் பாடி லேங்குவேஜால் பலரது மனம் கவர்ந்தவர்.. ஆனால் வர வர அவரது ஸ்கில் குறைந்துவிட்டது போல் தோற்றம் அளிக்கிறது.. ஏற்கனவே ஒத்திகை பார்த்து வந்து நடத்தும் நாடகம் போல அவர் நிகழ்ச்சி அமைகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன..



 இந்த வேளையில் இலங்கையில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மெயிலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அவர் தொலை பேசியில் என்னுடன் பேசி அவர் தம் ஆதங்கத்தை தெரிவித்தார்...


http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TM9UVKb21cI/AAAAAAAAEXg/C3iRIk8owDA/s1600/gopinath.jpg




வணக்கம் அண்ணன்,


     நான் உங்கள் பதிவுகளை வாசிப்பவன் என்ற முறையில் தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலமாக இதனில் உள்ள குறைபாடுகளை வாசகர்களுக்கு சுட்டிகாட்டுவீர்கள் என நம்புகிறேன். கடந்த 6 ஆம தேதி விஜய் டிவியில்  ஒளிபரப்பப்பட்ட நீயா நானா  நிகழ்ச்சியில் ஒரு நபர் பேசிய வீடியோ பதிவுகளை இதனுடன் இணைத்துள்ளேன்,



 இவ்விடியோவில் வங்கியில் பணி புரிவதாக கூறுபவர் மிகவும் நாகரிகமான முறையில் தன் கருத்துகளை பதிவு செய்கிறார். அடுத்ததாக பேசுபவர் தான் UK வில் மூன்று வருடங்கள் ஒரு பெண்ணுடன் ஒன்றாக இருந்ததாகவும் இந்தியா வந்ததும் பெற்றோரின் எதிர்ப்பால் தன் காதலியை கைவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். அத்துடன் அந்த பெண்ணை தானே கைவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் நண்பர்களுக்கு தெரிவிப்பதாகவும் கூறுகிறார்.


இப்படி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தெரிவிப்பதன் மூலமாக அந்த பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படாதா ?  இவரை அடுத்து பேசுபவர் இதே கருத்தை சற்று சாதாரணமாக கூறுகையில் கோபிநாத் உட்பட அனைவரும் ஏளனம் செய்கின்றனர். இதுவே சமுகத்தில் தன்னை படித்தவராக காட்டிக்கொள்பவர் எதை சொன்னாலும் சரி என்பது போல் கோபிநாத்தின் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டது .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGWykgOeP_nyWbfea_QtClaN0SO7fqhTkDgDnqWrk3NLH2VQTiPQLB8xO67q_ZJtwRwGKbH16dKD5vEq8r88mTV6Kw19J9iJK54SaWkDXO5fkIGUg6RZjvzQtFikjFC3GX9pSfcZmxzzsw/s400/vijay.jpg


ஏனெனில் இதில் அவர் எடின்பாரோ வாழ்கை பற்றி பல பிழையான தகவல்களை கூறுவதன் மூலம் அவரது நோக்கம் பற்றிய பல சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. பின்வருவன அவர் கூறும் ஒரு நாள் சம்பளம் மூன்று பவுண்ட் என்பது முழுமையான பொய். இங்கே மிக குறைந்த சம்பளமாக ஒரு மணி நேரத்திற்கு ஐந்து பவுண் 95 காசுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இங்கே கூறப்பட்டது அடிப்படை சம்பளமாகும் . அத்துடன் தினமும் எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று பணிபுரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதற்கு மிக மிக குறைந்த சாத்தியமே, எனெனில் இங்கு போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது அத்துடன் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்கூட ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக கிடைக்கும்  வருமானம் ஒரு மாதத்திற்கு பஸ் பாஸ் அன்லிமிடெட்  பயணம் செய்ய பெற்றுக்கொள்ள முடியும்.


இப்படி பல பொய்யான தகவல்களை தெரிவித்து தனது பேச்சாற்றல் மற்றும் முக பாவனை மூலம் மக்களிடையே அனுதாபத்தை தேடிகொல்கிறார். இவரது கருத்துகளின் உண்மை தன்மையை அறியாமல் அதை ஊக்குவிப்பது போல கோபிநாத்தின் செய்கை அமைந்ததுமட்டும் அன்றி அவருக்கே பரிசும் வழங்கப்பட்டது .


இப்படி பலராலும் பார்க்கபடும் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுடன் மூன்று வருடம் ஒன்றாக இருந்து கைவிட்டதை தெரிவிபதின்மூலம் நமது சமூகத்தில் அப்பெண்ணின் எதிர் கால திருமண வாழ்க்கை பாதிக்கப்படாத ? அப்பெண்ணின் பெயர் குறிப்பிடாமல் விட்டாலும் அப்பெண் யார் என்பதை இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் முலம் அறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல, அவர் குறிப்பிடுவது போல தான் தெரிவித்துகொள்ளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களால் மேலும் பல்லாயிரம் பேருக்கு தெரியவராது  என்பதற்கு என்ன நிச்சயம் ? .


இத்தகைய நபர்களின் கருத்துகளை ஊக்குவிப்பது போன்றதான கோபிநாத்தின் செயற்பாடுகள் அவரது தரத்திற்கும் நிகழ்ச்சியின் தரத்திற்கும் பொருத்தமாக இல்லை . இக்கருத்தில்  எங்களது தவறு ஏதேனும் இருந்தால் அதை சுட்டி காட்டவும் தயங்க வேண்டாம் . 

http://www.tamilhindu.com/wp-content/uploads/neeya-naana-4-300x227.jpg


இப்படிக்கு
Shyam sundar  MBA   [email protected].com
Nishanthan  MBA mnishan.nishangmail.com
Jaganathan MSc [email protected]
Jeyakanthan MBA [email protected]
Dilipkumar MSc  [email protected]
286 Gorgie road
Edinburgh
EH11 2PP.

கோபிநாத்திற்கு சில அட்வைஸ்


1. ஒரு தரப்பை பேச விடும்போது குறுக்கிடாதீர்கள்.. அவர்கள் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாட்டேங்குது.. 

2. உங்க பாடி லேங்குவேஜ்ல , பேச்சுல சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் தலை விரிச்சு ஆடுது..

3.  உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், மத்தவங்க எல்லாரும் முட்டாள்ங்க என தயவு செஞ்சு நினைக்காதீங்க..

4.  எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சொந்தமா எடுங்க. நீங்க காதுல வெச்சிருக்கற வாக் மேன் செட்ல , மைக் செட்ல யார் கிட்டயோ ஆர்டர் ரிசீவ் பண்ணி அப்படியே ஒப்பிக்கறது நல்லாவே தெரியுது.. 

5. பெண்கள் முன்னால ஆண்களை மட்டம் தட்றீங்க அடிக்கடி..  அதனால உங்க இமேஜ் பெண்களிடம் உயரும் என நீங்க நினைச்சா .. சாரி..

6. தமிழ்ல யாராவது பேசுனா அவங்களை  அசால்ட்டா பார்க்கறதும் , தமிங்கிலீஷ்ல பீட்டர் விடும் மொக்கை ஃபிகர்களிடம் வேற்றுக்கிரக ஜந்து போல பிரமிப்பாக பார்ப்பதும் எதுக்கு?