Showing posts with label விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் பேட்டி. Show all posts
Showing posts with label விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் பேட்டி. Show all posts

Tuesday, April 01, 2014

விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல்..: அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் பேட்டி

பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.A

பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல் என அதிமுவில் இணைந்த விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் (56) குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய காந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தார். அவரை சந்திப்பதற்காக மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெரு வில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். 4-க்கு 6 அடி உள்ள சமையலறை, கால்களை நீட்டி படுக்க முடியாத அளவுக்கு வெறும் 48 சதுர அடி மட்டுமே கொண்ட மற்றொரு அறை. இதுதான் விஜயகாந்தின் சகோதரர் வீடு என்பதைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. உடைந்த நாற்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த அரசின் இலவச டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.



‘‘எங்க அப்பா கே.என்.அழகர் சாமிக்கு ஆண்டாள், ருக்மணி என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு விஜயலெட்சுமி, நாகராஜன், விஜயராஜ் (தற்போது விஜயகாந்த்), திருமலாதேவின்னு 4 பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு செல்வராஜ், பால்ராஜ் (நான்), சித்ராதேவி, ராம்ராஜ், மீனாகுமாரி, சாந்தி, பிருத்விராஜுன்னு 7 பிள்ளைகள். ஆண்டாள் அம்மா இறந்த பிறகு ருக்மணியம்மாதான் எல்லோரை யும் பாத்துக்கிட்டாங்க. அப்பா ரைஸ்மில்ல கவனிச்சிக்கிட்டாரு. விஜயகாந்தும் அங்கேதான் இருப்பாரு..

விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் தனது வீட்டில் மனைவி வெங்கடலெட்சுமியுடன்..

ஒருசில நேரத்துல வீட்டுல சமைக்க நேரமாயிடும். அதுக்கப் பறம் அந்த சாப்பாட்ட எடுத்துக்கிட்டு நான் வேகமா மில்லுக்கு ஓடிப்போய் கொடுப்பேன். அப் பிடியிருந்தும் ஏன்டா லேட்டா வந்தேன்னு, அங்க கெடக்கற கயித்த எடுத்து விஜயகாந்த் என்னை அடி அடின்னு அடிப்பாரு.. இதனால அவருக்குப் பயந்து 5 வயசுல இருந்தே இன்னொரு அண்ணன் நாகராஜ் கூடத்தான் நான் எப்பவுமே இருப்பேன். அவருதான் என்னை கடைசி வரை வளர்த்தாரு. விஜயகாந்த் என்கூட சரியாகக்கூட பேச மாட்டாரு.. அப்புறம் அவர் சினிமாவுல நடிக்க சென்னை போயிட்டாரு. 

பணத்துக்கு கஷ்டப்பட்டதால எங்க அப்பா மாசாமாசம் 1000 ரூபாயை என்கிட்ட கொடுத்து அனுப்புவாரு. நானும் ரயில்ல போய் கொடுத்துட்டு உடனே திரும்பிடுவேன். அப்பா இறந்த பின்னாடி என்ன மில்லவிட்டே தொறத்திட்டாங்க..’’ என பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.


பின்னர் அவர் மேலும் கூறியது: ‘‘எலக்ட்ரிஷியன் வேலை தெரிஞ்சதால ஊர் ஊரா போய் பிழைப்பு நடத்த ஆரம்பிச்சேன். அப்பதான் எங்க உறவுக்காரப் பெண் வெங்கடலெட்சுமியை பதிவுத் திருமணம் செஞ்சுகிட்டேன். அவருக்கும் யாரும் இல்லை. எனக்கும் உதவி செய்ய ஒருத் தரும் முன்வரல. ஒரு கட்டத்துல குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அதனால எனக்கு பங்கு பிரிச்சு கொடுத்த வீட்டோட கீழ் பகுதியை மாசம் ரூ.4,000-க்கு வாடகை விட்டுட்டு மேலே இருக்கிற அறையில் குருவிக்கூடு போல குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கோம். மகனை பாலி டெக்னிக் படிக்க வைக் கலாம்னு ஆசைப்பட்டு, அதுக்கு விஜயகாந்திடம் உதவி கேட்க நினைச்சேன். ஆனா வீடு, ஆபீஸ்ன்னு எங்கயும் அவரைப் பார்த்து பேச முடியல. போன் பண்ணினாலும் கட் பண்ணிடு வாங்க.. அவரு.. நல்லவரோ.. கெட்டவரோ.. ஆனா பிரேமலதா வந்து ஆளையே மாத்திடுச்சு.. இப்ப கூட தனது மனைவி, மைத்துனன் பேச்சை கேட்டுக்கிட்டுதான் இப்பிடி யெல்லாம் பண்றாரு..



எனக்கு மட்டுமில்ல.. குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல.. ராமராஜ் மகன் கௌதமன அவரோட ஆண்டாள் அழகர் கல்லூரியில் காசு வாங்கிட்டுதான் சேர்த்தாங்க.. மீனாகுமாரி மகனைப் படிக்க வைக்க உதவி கேட்டப்பவும் முடியாதுன்னுட்டாங்க. இப்பிடி யாருக்குமே அவரு எதையும் செய்யல.. இப்பிடி அண்ணன், தம்பிக்கே எதுவும் செய்யாதவரு நாட்டுக்கு என்னது செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும், சகலைக்காகவும்தான் அவர் கட்சியே நடத்திக்கிட்டு இருக்காரு. அவரது சகலை (பிரேமலதாவின் சகோதரியின் கணவர்) ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை, புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இதில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை.


ஆனா விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’. இதுதான் இப்போ நான் அடிக்கடி கேட்குற பாட்டு’’ என தன் வேதனையை பால்ராஜ் கொட்டித் தீர்த்தார்.



அதிமுகவில் இணைந்த கதை



பால்ராஜ் குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட அவரது நீண்டகால நண்பரும், அதிமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளருமான வைகை பாண்டி என்பவர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மூலமாக அவரை அதிமுக வில் இணைத்துள்ளார். முதல் வரை சந்திக்கும்போது குடும்ப கஷ்டத்தை தெரிவிக்க பால்ராஜும், அவரது மனைவி வெங்கடலெட்சுமியும் முடிவு செய்திருந்தனர். ஆனால் மேடையில் அவ்வாறு செய்ய முடியாது என செல்லூர் கே.ராஜு மறுத்துவிட்டார். மேலும் அதிமுகவிலிருந்தும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. இதுபற்றி பால்ராஜ் கூறும்போது, ‘என் மகனோட வாழ்க்கைக்காக அம்மா (முதல்வர்) ஏதாவது பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். அது மட்டும் செஞ்சு கொடுத்தா காலத்துக்கும் அம்மாவுக்கு நன்றியோட இருப்பேன்’ என்றார் கண்ணீருடன்.


‘வடிவேலுதான் மனுஷன்’


‘‘இதே மதுரையில பொறந்து வளர்ந்த வடிவேல், விஜயகாந்தை விட எவ்வளவோ மேல்... ஏழையா இருந்த அவரு சினிமாவுக்கு போயி சம்பாதிச்ச பிறகு தன்னோட குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிறாரு.. அதோட விடாம.. கஷ்டத்துல இருக்க தன்னோட சொந்தக்காரங்க எல்லாத்தையும் தேடித்தேடி போயி பலசரக்கு கடை, பெட்டிக்கடைன்னு ஏதாவது ஒண்ண வச்சுக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்காரு.. அவர்தான் மனுஷன்...’’ என்றார் பால்ராஜ்.


  • Dhans kovai  from Tirupur
    ஊருக்கெல்லாம் உதவி செய்வதை போல் நடித்து கொண்டிருக்கிறார் . நல்ல நடிகன் சொந்த அண்ணனின் வறுமையை போக்க முடியாதவர் நாளை முதல்வர் ஆஹா வந்து எப்படி தமிழ் நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்குவர்?எல்லாம் வெளியே வரும் நேரம். பொது வாழ்க்கை அவ்வளவு எளிதான விசயமில்லை. வருவதற்கு முன்னால் நாம் பல முறை யோசிக்க வேண்டும். நான் அதற்கு தகுதியானவன்தானா? தனி மனித ஒழுக்கம் என்னிடம் உள்ளதா? சினிமாவை தாண்டி நான் சாதித்தது என்ன? நான் மற்றவர்களைப்பற்றி கூறும் தவறுகள் நம்மிடம் உள்ளதா? நம்முடம் பழகிய பல பேர்கள் நம்மைவிட திறமைசாலிகள், ஏன் நாம் அவர்களை முன்னிருத்துவதில்லை ? நமக்கு தெரிந்தே பலர் நம்மை விட்டு பிரிந்து போக என்ன காரணம்? நமக்கு நாமே மார்க் போட்டு கொள்வதால்தான் ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்ல முடிவுடன் உள்ளார்கள். பாக்யராஜ் , TR போன்றவர்கள் திண்டாடி தெருவில் ஜால்ரா சத்தத்தில் காணாமல் போய்விட்டார்கள்.
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  syedali  from Abu Dhabi
      சொந்த அண்ணனின் வறுமையை போக்க முடியாதவர் நாளை முதல்வர் ஆஹா வந்து எப்படி தமிழ் நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்குவர்? இப்பவே கண்ண கட்டுதே
      about 20 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
      Prabakaran  Up Voted
      •  s.c.jeganathaan c  from Kariapatti
        வீட்டுக்குவீடு வாசப்படி..,இந்த மாதிரி nondikittu இருந்தால் வீசம் தான் மிஞ்சும்.தேவய நமக்கு.
        a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
        •  ssasindia  
          உறவுகளுக்கு உதவினால் - சொந்தக்காரர்களுக்கு சொத்தா வாங்கி குவிக்கிறான் என்றும், உதவி செய்யலேனா - பணம் வந்ததும் சொந்தங்களை மறந்துராணுங்க என்றும் உலகம் சொல்லிக்கொண்டுதான் இருக்கும். யாரையம் திருப்தி படுத்த முடியாது....!
          a day ago ·   (9) ·   (2) ·  reply (0)
          LINGESH  Up Voted
          •  MANUSHI  from Bangalore
            இதுதான் உலகம்.
            a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
            •  shivakumar Shivakumar  from Coimbatore
              இவர்களை கஷ்டத்தில் விட்டது வி காந்த் தவறு ,,,அதை வைத்து அரசியல் பண்ணுவது கேவலம் ,,,பணம் என்னென்ன பண்ணுது ???
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
              •  mani  from Palayankottai
                நீங்க இன்னும் மாறவே இல்லையா . தமிழ் நட்டு மக்கள் செம்மறி ஆட்டு kuuட்டம்னு ஒரு தலைவர் சொன்னது மறந்து போச்சோ எலக்ஷன் வந்த அப்படித்தானே அடித்து கொள்ளுவார்கள் அப்புறம் மாமன் மச்சான்னு கூடிக்குvaaங்கல்
                2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                D.Thirumalai kumar  Up Voted
                •  saravanakumar saravanakumar  from Chennai
                  ஒருவரின் ஏழ்மையை, கையாலாகாத தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் பெறுவதுதான் அரசியல் என்றால்.....அத்தகைய அரசியலை நாம் புறக்கணிக்க வேண்டும். விஜயகாந்த் குடும்பத்துக் கதைகளை நீட்டி முழக்கும் இந்த செய்தியாளர் முதல்வரின் சகோதரரின் குடும்பத்தாரை சந்தித்து பேட்டி எடுத்துப் போடுவாரா?
                  2 days ago ·   (31) ·   (2) ·  reply (1)
                  •  மாறனேர்நம்பி  from New Delhi
                    அவருக்கு 10சகோதர்ராம்...எல்லாரையும் அவர் கை தூக்கி விட வேண்டுமாம்..மடமை...
                    a day ago ·   (1) ·   (4) ·  reply (0)
                    Raj  Down Voted
                  •  Gunasekaran N  from Chennai
                    விஜய காந்த மற்றும் வடிவேலுவை பற்றி தெரிந்து கொள்ள சில தகவல்கள் தெரிவிக்க பட்டுள்ளது. வேடிக்கையான உலகம் !
                    2 days ago ·   (2) ·   (0) ·  reply (0)
                    •  sivamani  
                      அப்போ கூடிய சீக்கிரம் வடிவேலுவை கொண்டு வருவாங்களோ??எப்பவும் மாற்றான் தாய் தான் கொடுமைப் படுத்துவது வழக்கம். இங்கே திரைக் கதையே மாறுதே. விஜயகாந்த் எப்போது விஜய்ராஜாக மாறுவார்
                      2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
                      Raj  Up Voted
                      •  kabir  
                        எல்லாம் வெளியே வரும் நேரம். பொது வாழ்க்கை அவ்வளவு எளிதான விசயமில்லை. வருவதற்கு முன்னால் நாம் பல முறை யோசிக்க வேண்டும். நான் அதற்கு தகுதியானவன்தானா? தனி மனித ஒழுக்கம் என்னிடம் உள்ளதா? சினிமாவை தாண்டி நான் சாதித்தது என்ன? நான் மற்றவர்களைப்பற்றி கூறும் தவறுகள் நம்மிடம் உள்ளதா? நம்முடம் பழகிய பல பேர்கள் நம்மைவிட திறமைசாலிகள், ஏன் நாம் அவர்களை முன்னிருத்துவதில்லை ? நமக்கு தெரிந்தே பலர் நம்மை விட்டு பிரிந்து போக என்ன காரணம்? நமக்கு நாமே மார்க் போட்டு கொள்வதால்தான் ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்ல முடிவுடன் உள்ளார்கள். பாக்யராஜ் , TR போன்றவர்கள் திண்டாடி தெருவில் ஜால்ரா சத்தத்தில் காணாமல் போய்விட்டார்கள். நம் நடிகர்களுக்கு எல்லாமே விளையாட்டு,வியாபாரம்,சினிமா.
                        2 days ago ·   (7) ·   (0) ·  reply (1)
                        •  Raj  from Mountain View
                          You and me like it or not vijakanth organized his party very well from the root level. May be it was done by Banrooty Ramachandren or by somebody who know well how to do. His wife toois a great strength to coverup his weakness. In a way he is sure not fit to be a people's leader but huge fortune to have a decent vote share! ADMK unwittingly helped him to be a opposite leader, Jayalalith made a huge tactical error.
                          a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
                        •  முஹம்மது Rafi  
                          சின்ன வயசுல எங்க வகுப்பு ஆசிரியர் அடிக்கடி சொல்லுவாரு “சினிமா வாழ்கையும் நெஜ வாழ்க்கையும் ஒன்னு இல்லடா!!” ன்னு. ”சின்ன கவுண்டர்” படத்தை பார்த்தும், “அந்த வானத்தப்போல..” பாட்டை கேட்டும் அருமை விஜயகாந்தை நினைத்து நெகிழ்ந்ததுண்டு... ஆனால், சமீபத்தில் அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அவரின் உண்மை முகம் அடிக்கடி வெளிக்கொணரப்படும்போது, என் வகுப்பாசிரியரின் வார்த்தைகள் 20 வருடங்களுக்கு பிறகும் என்னை ஆழமாக பாதிப்பதுண்டு. அவர் சினிமாவில் “ந டி த் து” இறுந்திறுக்கிறார் என்றார் என்ற சாதாரன உண்மைப் புரிந்தது. எல்லோரும் இப்படி இல்லை என்றாலும், சினிமாவில், அசலை காட்டிலும் நடிப்புக்கு மனதை பறித்து நாம் முட்டால்கள் ஆக்கப்படுவது வேதனை.
                          2 days ago ·   (10) ·   (2) ·  reply (0)
                          shivakumar Shivakumar · selvam  Up Voted
                          •  maa.periasamy  from Chennai
                            பெருந்தலைவர் காமராஜர் கூட தன் சொந்தக் குடும்பத்திற்க்கென்று எதையும் செய்ததில்லை.
                            2 days ago ·   (0) ·   (17) ·  reply (3)
                            shivakumar Shivakumar  Down Voted
                          •  m.sankaralingam  from Laguna Niguel
                            இருட்டு உலகத்தின் பகட்டுகள் வெளிப்படுகின்றன.பாவம் இந்த ஏழைச்சகோதரர்.
                            2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                            •  chinnamanidhanabal  
                              சொந்த பந்தம் என்றாலும் எதிர்பார்க்கும் சலுகை கிடைக்காவிட்டால், தேர்தல் நேரத்தில் எதிரியின் கூடாரத்திற்கு சென்று புழுதியை வாரி இறைக்கவே செய்வர்.ஊடகங்கள்தான் அரசியல் ஆதாயத்திற்காக ஒன்றுமில்லா இதுபோன்ற விஷயத்தை ஊதி பெரிதாக்குகின்றன.
                              2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                              •  kannan  from Abu Dhabi
                                நல்லா வசதியாக ஒரு மனிதன் இருக்கும்போது எப்படி சொந்த பந்தங்களை மறக்கமுடிகிறது?
                                2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                •  சரவணன் சுதந்திரன்  
                                  இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய்காந்த் ஒரு மனசாட்சி இல்லாத மனிதர் என்பது வெளிச்சமாகிறது! ஊருக்கு உதவுவது ஒரு விளம்பரம்..நல்லது செய்யணும்னு மனசார நெனக்கறவங்க விளம்பரம் செய்ய விரும்பமாட்டாக!
                                  2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
                                  Raj  Up Voted
                                  •  தமிழன்டா  from Écouen
                                    எனங்கே அண்ணே!! ஒங்க பொழப்பு இவ்ளோ நாறி போச்சு! உங்கள் குறி பாக்க போற அம்பு வேறு எங்கேயும் இல்லை!!
                                    2 days ago ·   (4) ·   (1) ·  reply (0)
                                    •  raajaa  
                                      ரெண்டு பேருமே காமெடியில் கலக்குபவர்கள்தானே!
                                      2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                      •  Gershom நற்செய்தி  from Chennai
                                        வடிவேலு என்கிற நல்ல கலைஞரை ஏன் இப்போது திரையுலகு ஒதுக்கிவைக்கிறது? அரசியல் மாற்றுக் கருத்தென்றால், காங்கிரசு காலத்தில் எம்ஜி ஆர் படம் ஓடவில்லையா? எம்ஜிஆர் ஆட்சியில் சிவாஜி படம் ஓடவில்லையா? இப்போது வடிவேலுவை ஒதுக்கிவைக்கும் திரையுலகிற்கு, எண்ணும் திறன் இல்லையா? எதிர்கொள்ளும் துணிவு இல்லையா? யாருக்கு அஞ்சுகிறது இன்றைய திரையுலகு?
                                        2 days ago ·   (20) ·   (0) ·  reply (1)
                                        Velraj · shivakumar Shivakumar  Up Voted
                                        •  raj  from Kuwait
                                          மாற்று கருத்து கூற அனுமதி இல்லை, முன்பு ரஜினியை எதிர்த்து பிரச்சாரம் செய்ததற்காக மனோரமாவுக்கு பல காலம் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை, பின் ரஜினியே மன்னித்ததாக கூறியதால் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன, ஆனால் இந்த சினிமா உலகம் வேசம் போடுவதில் கில்லாடிகள்
                                          2 days ago ·   (2) ·   (0) ·  reply (0)
                                        •  Thirumalai  from Chennai
                                          வருத்தமும் வேதனையும் தரும் செய்தி.
                                          2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                          Gunasekaran N  Up Voted
                                          •  rabi  
                                            ஊருக்கெல்லாம் உதவி செய்வதை போல் நடித்து கொண்டிருக்கிறார் . நல்ல நடிகன்
                                            2 days ago ·   (11) ·   (0) ·  reply (0)
                                            •  raja  
                                              கூடப் பிறந்த ரத்த சம்மந்துகே உதவி செய்யாதவனர் ,மனதுஇல்லதவர் சமுகத்துக்கு தமிழக மக்களுக்கு நிச்சய மாக சையமாட்டார் கருப்பு MGR என்ற பெயரை கொடுத்தவர்கள் வருதபடவேண்டும்
                                              2 days ago ·   (8) ·   (2) ·  reply (0)
                                              thangamani · Chandras  Up Voted
                                              •  Ratheesh  
                                                வணக்கம் அன்புள்ள தமிழ் நாடு மக்களூக்கு நல்ல சந்திங்க இவிங்க யாரும் தமிழ் நாடு காக ஒனும் செயபோறது இல்ல இன்னும் கொஞ்சம் வருசத்துல இந்தியால மோசமான ஸ்டேட் இன்னு பேரு வாங்கிடும் இப்படிக்கு அயல் நாட்டில் வசிக்கும் தமிழன்

                                              THANX - THE HINDU