Showing posts with label விசாரணை கமிஷன் குற்றச்சாட்டு. Show all posts
Showing posts with label விசாரணை கமிஷன் குற்றச்சாட்டு. Show all posts

Wednesday, August 26, 2015

உயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து | கோப்பு படம்
மவுலிவாக்கம் கட்டிட விபத்து | கோப்பு படம்

மவுலிவாக்கம் விபத்து அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்: விதிமுறை மீறல் இருப்பதாக விசாரணை கமிஷன் குற்றச்சாட்டு

*
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான கட்டிடத்தின் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் 55 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முன்னாள் நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
தமிழக அரசு அமைத்த இந்த விசாரணை கமிஷனின் 225 பக்கங்கள் கொண்ட அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு விதிமுறை மீறல் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெகுபதி கமிஷன் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்:
* மவுலிவாக்கம் சம்பவம் ரியல் எஸ்டேட் துறையின் கருப்புப் பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த உதாரணம். ரியல் எஸ்டேட் பிசினஸில் பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பில்லை.
* மவுலிவாக்கம் கட்டிடத்தை கட்டும் பணியில் விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
* கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனத்தினர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாக விதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து கட்டிடம் கட்டியுள்ளனர்.
* ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைப்படத்தில் 46 தூண்கள் இடம் பெற்றதற்கு மாறாக 37 தூண்களை மட்டுமே அமைத்து உள்ளனர்.
* சென்னை நகரிலும், நகரைச் சுற்றியும் மேற்கொள்ளப்பட்டு பெரும் கட்டிட வேலைகளை கண்காணிக்க உடனடியாக ஒரு குழு அமைத்து சோதனை மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் மவுலிவாக்கம் போன்ற துயரச் சம்பவத்தை தவிர்க்கலாம்.
* விசாரணை கமிஷன் பார்வையில், மவுலிவாக்கம் விபத்துக்கு முழு முதற் காரணமாக, சிருஷ்டி ஹவுஸிங் லிமிடட் நிர்வாக இயக்குநர் மனோகரன், இயக்குநர்கள் முத்துகாமாட்சி, பாலகுருசாமி, பொறியாளர் எஸ்.வெங்கடசுப்ரமணியம், கட்டிட வரைகலை ஆலோசகர் விஜய் பர்கோத்ரா, கட்டிட மேற்பார்வையாளர்கள் கார்த்திக், சங்கர் ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேருமே ஆவர்.
* விபத்துக்குள்ளான கட்டிடத்தில் வீடு முன்பதிவு செய்திருந்த நபர்களுக்கும், கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகில் இருந்த சில வீடுகளும் பாதிப்புக்குள்ளாகின. அவற்றில் வசித்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
* ஒரு பெருங் கட்டிடம் கட்டும் போது கட்டுமான நிறுவனம், வங்கி, வாடிக்கையாளர்கள் ஆகிய மூவரையும் உள்ளடக்கி மும்முனை பொறுப்பை ஏற்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் மேற்கொள்வது தொடர்பான சட்டதிருத்தம் செய்வது அவசியம்.
* பெருங் கட்டுமான திட்டத்தை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட அளவிலான தொகையை 10 ஆண்டுகளுக்கு நிரந்த வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும்.
* சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலும், தொழில்நுட்ப அதிகாரி, சட்ட வல்லுநர், மண் பரிசோதகர், அடித்தளம் அமைப்பு வடிவாளர், ஸ்ட்ரக்சரல் பொறியாளர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். நகரின் பெரும் கட்டுமான திட்டங்கள் அனைத்தையும் அவர்கள் மேற்பார்வை செய்வர்.


நன்றி - த இந்து

  • Venkatasubramanian  
    மீ ண்டும் ,மீண்டும் தனிக் குழுக்கள் கண்காணிப்பு,என்ற பாதை என்ன புதுமையைக் காட்டப்போகிறது? இந்த தனிக்குழு ஆராய்வில் புதுமைகளை விரும்பினோம் . இந்த விபத்தின் எதிரொலியை மற்ற ஆயிரக்கணக்கான இல்லங்களும் சந்தித்தன. முடிவு எங்கே?
    Points
    100
    about 16 hours ago
     (0) ·  (0)
     
    • JJesudass.Sathiyan  
      சூப்பர்...ஆனா எதுவுமே செல்லாது. மொத கட்டுமான நிறுவனம், என்னை நம்பிய வீடு முன்பதிவு செய்த என் மக்களுக்கு துரோகம் நினைக்கமட்டேன்னு மனசாட்சிக்கு பயந்து வேல செஞ்சபோதும்...
      about 16 hours ago
       (0) ·  (0)
       
      • HHaja  
        விபத்துக்குள்ளான கட்டிடத்தின் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. - நடக்கும்குறீங்க .. நான் நடக்காதுங்குறேன்..
        Points
        3525
        about 17 hours ago
         (1) ·  (0)
         
        T Up Voted
        • RRaghupathy  
          பத்து மாடி அப்ப்ரோவல் வாங்கி , 100 மாடி கட்டும் வரை , உங்கள் கைகள் என்ன பூ பறித்தன வோ ? லஞ்சம் லஞ்சம் லஞ்சம் ... அந்நியன் போல் 100 படங்கள் வந்தாலும் , திருந்தாத மனித தோல் அணிந்த மிருகங்கள் !!!
          about 17 hours ago
           (6) ·  (0)
           
          test · eesak · Kailash · anitha Up Voted
          • Shanmugam Sankaralingam  
            கருப்புப்பணத்தை பெருக்கும் தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் மாறிப்போனதாலேதான் உண்மையான கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கும் கெட்ட பெயர்.
            Points
            1500
            about 17 hours ago
             (3) ·  (0)
             
            durai · eesak · Shanmugam Up Voted
            • Vezhavendhan Karuppiah  
              கேட்பதற்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இருபது முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த MMDA மாதிரியான கட்டுக்கோப்பான.நடுநிலையான,அரசியல்வாதிகளின் ஆளுகைக்கு உட்படாத,சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு,ஊழலுக்கு இடங்கொடாத அமைப்பு இருந்தால் மட்டுமே இத்தகைய முறைகேடுகளையும் உயிர் இழப்புக்களையும் தடுக்க முடியும்!
              Points
              4140
              about 17 hours ago
               (2) ·  (0)
               
              durai · prasad Up Voted
              • சரசேது ராமன்  
                விதிமீறல் உண்மை காரணம் அரசின் அலட்சியமும் ஊழலும் தான் காரணம்