Showing posts with label விசாரணை. Show all posts
Showing posts with label விசாரணை. Show all posts

Saturday, February 06, 2016

விசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழும்

விசாரணை.


கமல் ரஜினி ராம்கோபால் வர்மா போன்ற ஜாம்பவான்கள் பாராட்டிய படம், ஆடுகளம் படத்திற்கு பிறகு ஐந்து வருடம் கழித்து வெற்றிமாறன் படம், உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற படம், என்று உச்ச எதிர்பார்போடு நான் சென்று பார்த்த முதல் படம் - 


இதுவரை திரைப்படங்கள் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்றால் அதிகம் இல்லை என்பதே உண்மை,காதல் பருத்தி வீரனைப் போல எப்போதாவது.. பல படங்களைப போல இப்படத்தையும் எளிதாய் கடக்க ியலவில்லை காரணம் இப்படத்தின் தாக்கம்.. அப்டி என்ன தான் தாக்கம்??
அது எந்தளவிற்கென்றால் படம் முடிந்து வெளியேறிய பிறகும் என்னால் மீள முடியவில்ல படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தது 9.45 மணிக்கு இப்போ இத எழுதிட்டு இருக்கறது 1.30 மணிக்கு.. பாத்துக்கோங்க ஒரு வித பயம் ஏன்னு தெரில இப்டியான மனிதர்களும் இருக்காங்களேனு வந்த பயமாக கூட இருக்கலாம்.. சுயநலவாதிகள் சந்தர்ப்ப வாதிகள் என... படத்திற்குள் போவோம் படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷத்துல கதைக்குள் வந்துடாங்க எப்படியான படம்னு தெரிஞ்சிடுச்சி... படம் போக போக அந்த நாலு பேரோட நானும் அந்த லாக் அப்ல இருக்க மாதிரி ஓரு ஃபீல் .


... அதான் இயக்குனரின் அசாத்திய திறமை.. கரெக்டா 40 நிமிஷத்துக்கு அப்புறம் பேசாம கிளம்பி போயிடலாம்னு கூட நினைச்சேன் ஏன்னா அந்தளவுக்கு இருந்துச்சி அந்த கொடுமைகள்,,, பாக்க முடில.... அந்த போலீஸ்காரங்க அடிக்ற அடியெல்லாம் அவ்ளோ உண்மை... யாருக்கு தெரியும் உண்மையா கூட அடிச்சி இருக்கலாம். அதுலயும் ஒரு மொட்ட போலீஸ் பனைமட்டைய வச்சி தினேஷ அடிக்க வரப்போ கண்ண மூடிக்குட்டேன் :)))) அது எப்டி இருந்திருக்கும்னு என் அக்கா கொடுத்த ச்சை சவுன்ட் ரியாக்ஷன்ல தெரிஞ்சிடுச்சி....


என் அப்பாவும் கூட வந்திருந்தார் அவரோட பக்கத்து சீட்ல தான் உட்காந்து படம் பாத்தேன்.... ஏன் சொல்றனா அவரும் போலீஸ் தான் திரைல நடக்குறத பாத்துட்டு அவர பாக்குறேன் முகத்துல ஒரு ரியாக்சன் இல்லாம பாத்தட்டு இருக்கார்.... அப்பப்ப நா அவர கேவலமா பாக்கறப்ப ஒரு சின்ன ஸ்மைல் என் அப்பா... த்துஊ :)))))) இந்தப் படத்துல நடிகர்களோட நடிப்பை பாராட்ட வார்த்தையில்லை.. வாழ்ந்திருக்காங்க... இன்னும் சொல்லனும்னா ஒவ்வொருத்தங்க கைலயும் ஒரு அவார்ட் கொடுக்கனும்.


உயர் அதிகாரிகள் கொடுக்குற ப்ரஷரால கிஷோர அடிச்சுட்டு சமுத்தரகணி பாக்கற அந்த பயம் குற்றவுணர்ச்சி கலந்த பார்வை...


நாங்க எதுவும் கேக்கல சார் இப்ப தான் சார் வந்தோம்னு அப்பாவிதனமா தினேஷ் விளக்க முயற்சிக்கிற சீன்.. க்ளைமேக்ஸ்ல சமு.கனி கால புடிச்சு கெஞ்சுற சீன்.... எல்லாம் ரொம்ப பாதிச்ச சீன்ஸ்... அசாத்திய நடிப்பு.
படத்தோட வேகத்துல இசைய கவனிக்க மாட்டோம்... ஆனா அதான் ஜி.வியோட மிகப்பெறிய வெற்றியே... படத்தோடு பிண்ணிப்பினைந்த பிண்ணனி இசை.


இந்தப்படம் ஏதோ இதயம் பலவீனமானவர்கள் பாக்க முடியாது அப்டி இப்டி சொன்னாங்க... அதெல்லாம் கிடையாது இளகிய மனம் கொண்டவர்கள் சகித்துக் கொள்ள முடியாது அவ்ளோதான்.. ஏன் சொல்கிறேன் என்பது படம் பார்த்தால் புரியும். அவ்வளவு உண்மையாக காட்சியமைக்கப் பட்டுள்ளது. படம் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பும் போது அப்பாவ கேட்டேன்...இப்டியெல்லாம் இருப்பாங்களாப்பா போலீஸ்னு... ஹே லூசே இது வெறும் படம் அப்டியெல்லாம் இல்லனு சொன்னாரு.... ஆனா நா அதை ஏத்துக்க முடியல...


இது ஒரு உண்மை சம்பவம்னு படத்துலே சொல்லிருக்காங்களே.. அதான்.
ஓவரால் இந்தப் படத்த ஒரு முறை பாக்கலாம்.. இன்னொரு முறை சகிப்புத் தன்மை இருந்தா சாத்தியம் ஆனா என்னால முடியாது :)))


கண்டிப்பா எல்லோரும் பாக்க வேண்டிய மிக மிக அற்புதமானப் படம்.


சுருக்கமா இது ஒரு உலகத்தர படம்... நன்றி தனுஷ் வெற்றிமாறன்.
எழுத்துப்பிழை இருப்பின் தாந்தோன்றிச் செயல்படும் keyboardஐ மன்னிக்ும்.:))))


 நன்றி#JenniferBlessy



சமூக வலைதளங்களில் கவனிக்கத்தக்க சினிமா, எழுத்து ஆர்வலர்கள் 'விசாரணை' பற்றி எழுதும்போது, 'அதிகார வர்க்கம், விளிம்புநிலை, கோட்பாடு, கட்டவிழ்த்தல், குரூரத்தின் நிஜ முகம், பரிணாமம், செரிமானம், குரலற்றவர்களின் குரல், மனித உரிமை மீறல், அத்துமீறல், சாமானியனின் மரண ஓலம், அதிகாரத் துஷ்பிரயோகம், அவதானிப்பு, அவனண்டர்வார்ப்பு...' என்பன போன்ற டரியல் மொழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் நல்லது. இதையெல்லாம் பார்த்துவிட்டு, "விடுங்கடா சாமி... இது நமக்கான படம் இல்லைடா"ன்னு பலரும் தெறிச்சி ஓடக் கூடும்.



அதேபோல், இந்தப் படத்தைப் பார்க்க தனி தைரியம் வேண்டும்; மன உறுதி வேண்டும்; இரும்பு நெஞ்சம் வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்வதையும் நிறுத்துங்கப்பு. முக்கியமாக இந்தப் படத்தைப் பார்த்துட்டு நாலு நாள் தூங்கலை. பருத்திவீரன் கிளைமாக்ஸுக்கு அப்புறம் என்னை தூங்க விடாம பாதிச்ச படம் என்று போகிற போக்கில் உங்கள் சினிமா அறிவை வெளிப்படுத்த நினைக்காதீர்கள் நண்பர்களே!



தொண்டையில் வாய்வைத்துக்கு கடித்துக் குதறும் படக்காட்சிகளை டிவி பொட்டி முன்பு அமர்ந்து, நொறுக்குத் தீனையைக் கொறித்துக்கொண்டே குழந்தைகள் ரசிக்கும் வகையில் தமிழ் சினிமாவை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். செய்தித்தாள் தொடங்கி செய்தி சேனல் வரையில் அங்கிங்கெனாதபடி ரொம்ப ஈஸியா வன்முறைகளைக் கடந்து போகிற காலத்தில் இருக்கிறோம்.



சின்ன சின்ன செயல்களைக் கூட பேரன்பின் தரிசனம் என்று மிகைப்படுத்துவதும் வழக்கமாகிப் போய்விட்டது. உச்சபட்ச வன்முறை என்பது கழுத்தை நெறிப்பதும், குரல்வளையைக் கடிப்பதும், ரத்தம் சொட்டச் சொட்ட செத்த பிணத்தின் மீது தாக்குதல் நடத்துவதும் படத்தில் இமை கொட்டாமல் பார்ப்பது பழக்கமாகிப் போனது.


இந்த நிலையில், விசாரணை படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வன்முறைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது போலவும், இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்வது நகைமுரண்!


நிஜத்தில் தாங்கிக்கொள்ளவே முடியாத வன்முறைகளை அப்படியே ர்ராவாக பதிவு செய்யாமல், ப்யூர் சினிமாவுக்கே உரியவகையில், வன்முறைகளின் பாதிப்புகளை மட்டும் ரசிகர்களை உணரவைக்கிறது விசாரணை. ரத்தம் தெறிக்கும் ஓர் இடத்தைக் கூட கறுப்பு - வெள்ளையில் காட்டியதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். வன்முறைக் காட்சிகளை அப்படியே பதிவு செய்வது சாதாரண படைப்பாளிகளின் திறமையை காட்டும். ஆனால், அந்த வன்முறை தரும் வலியை மட்டும் உணரச் செய்யும் வகையில் காட்சிகளை அமைப்பதுதான் அசாத்திய படைப்பாளியின் வல்லமை. அப்படி ஓர் அபார சினிமா படைப்பாளியான வெற்றி மாறனை கொண்டிருப்பது நமக்குப் பெருமை.



வன்முறைகளை முன்வைத்துப் பார்க்கும்போது, 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனியாக அரங்கில் பார்க்கக் கூடிய அளவில்தான் விசாரணை இருக்கிறது என்பது தெளிவு.



இப்படம் குறித்த அனுபவக் கருத்துகளைப் படிக்கிறபோது, இதுதான் காவல்துறையின் உண்மையான முகம் என்கிற ரீதியிலும் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நம் காவல்துறையினரின் இருண்ட பக்கம் மட்டும்தான் விசாரணை. மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத் துறையில் உள்ள இருண்ட பக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எது பயங்கரம் என்று விவாதிக்கத் தொடங்கினால் முடிவு எட்டப்படுதல் கடினமே.



இப்படி எல்லா துறைகளிலும் இருண்ட பக்கங்கள் உள்ளன. எல்லா மனிதர்களிடத்திலும் ஓர் இருண்ட பகுதி இருக்கின்றது. ஒரு தனி மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். தன் ரத்த பந்தங்களுக்கு மட்டுமே தெரியும், தன் உறவுகளுக்கு மட்டுமே தெரியும், தன் நண்பர்களுக்கு மட்டுமே, தன் சுற்றத்தாருக்கு மட்டுமே தெரியும் பக்கங்களுக்குடன் இருப்பார். அவருக்குள் உள்ள வக்கிரங்களும் இன்னபிற நெகட்டிவ்களும் அவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிய எளிதில் வாய்ப்பில்லை. இத்தகைய ஓர் இருண்ட பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரை முழுமையாக இப்படித்தான் என்று தீர்மானிப்பது எந்த வகையில் சரி என்பது விவாதிக்கத்தக்கது.



இதுபோலவே, காவல்துறையின் இருண்ட பக்கம் ஒன்றை விசாரணை வெளிச்சப்படுத்தியது என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினரின் உண்மை முகம் இதுமட்டுமே என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், சென்னை போன்ற பெருநகரில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் போதுமான பாதுகாப்பு உணர்வுடன் பெரும்பாலான மக்கள் வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு என்பது மிகப் பெரியது என்று நம்புகிறேன்.



ஹரி, கவுதம் முதலானோர் படங்களில் வரும் போலீஸ் அதிகாரிகள்தான் காவல்துறையின் உண்மையான முகம் என்று 100 சதவீதம் நம்புவது எவ்வளவு அபத்தமோ, அதற்கு இணையானதுதான் விசாரணையில் காட்டப்பட்ட காவல்துறையினர்தான் காவல்துறையின் 100 சதவீத உண்மை முகம் என்பதும்.


அதேநேரத்தில், நாம் சம்பந்தப்பட்டிருப்பதால், நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காவல்துறையின் இருண்ட பக்கத்தை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் காட்டிய வகையில் இங்கே விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
*
படப்பிடிப்பில் தொலைந்து போகும் என் படங்களை அடையாளம் காட்டும் படத்தொகுப்பாளர் கிஷோருக்கு இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வெற்றி மாறனின் நேர்மையை அங்கீகரித்தது முதல் காரணம்.


பெரிய ஜாம்பவான்கள் கூட இந்தப் படத்தின் தழுவல் என்பதை திரையில் சொல்ல மறுக்கின்றனர். இன்னும் சிலர் நன்றி கார்டுடன் சேர்த்து ரசிகர்கள் உள்வாங்காத 2-3 நொடிகளில் கிரெடிட் கொடுப்பதாக தகிடுதத்தம் செய்கின்றனர். ஆனால், வெற்றி மாறன் அந்த சின்னப்புள்ளத்தனத்தை செய்யவே இல்லை.



சந்திரகுமாரின் லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று ரசிகர்கள் உள்வாங்கும் வரை சில நொடிகள் திரையில் தெரியவைத்தார். மூலக்கதை சந்திரகுமார் என்று கிரெடிட் கொடுத்தார். இதனாலேயே வெற்றி மாறன் மீதான மரியாதையை அதிகரிக்க ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். இது அடுத்த காரணம்.


தன் படைப்புக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார் வெற்றி மாறன். அதனால்தான் படம் முடிந்த பிறகும் எழுத்தாளரின் குரலை பதிவு செய்திருக்கிறார்.
''கோட்டாவுல வந்தவன் சிஸ்டம் புரியாம தொல்லை பண்றான்''


''அப்ஸ்ல-னா அல்கொய்தாவா? ஐஎஸ்ஐஎஸ்-ஆ?''
''தமிழ்னா எல்டிடியா?''
வசனங்கள் மூலம் மற்றவர்களின் பொதுப்புத்தி அடிப்படையிலான சந்தேகப் பார்வையைப் புரிய வைக்கிறார்.
ரஜினிமுருகன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்த டம்மி வில்லன் சமுத்திரக்கனி நடிகனாக ஆக்கிரமிக்கிறார். தினேஷ், கிஷோர், முருகதாஸ் போன்ற நடிகர்களின் ஆளுமையை உணரமுடிகிறது.
இப்படி பல காரணங்களை பட்டியலிடுவதை விட படம் பார்த்து நீங்கள் தமிழ் சினிமாவின் வலிமையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த எளியவனின் வேண்டுகோள்.
இன்னொரு முக்கிய கோரிக்கை: பாலு மகேந்திராவின் ஆன்மா வெற்றி மாறனை வழிநடத்துகிறது. நல்ல சினிமாவை பாலு மகேந்திரா வெற்றி மாறன் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார் என்றெல்லாம் ஆராதிப்பது வெற்றி மாறனின் தொழில் பக்தியை கூறு போடுவதுதான். படைப்பாளியை எந்த ஒப்பீடும் இல்லாமல் கொண்டாடுவதே அவருக்கும், படத்துக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
*
மொத்தத்தில், விசாரணை... குறியீடுகள் குதறித்தள்ளத்தக்க வகையிலான எந்த பேரறிவும் அவசியம் இன்றி எடுக்கப்பட்ட தமிழின் பெருமித சினிமா.
இப்படிப்பட்ட எளிமையானதும் உருப்படியானதுமான படத்தைப் பற்றி டரியல் மொழிகளிலும் எழுதுவதும், இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்பதால் ஸ்டாரும் மார்க்கும் தரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், உலகத் தரம் என்ற சொல்லுக்கு புது புது அர்த்தங்கள் புகுத்தி 'ஃபெஸ்டிவல் சினிமா' என்று முத்திரைக் குத்துவது முதலான மேதமை அணுகுமுறைகள், இந்தப் படத்தை சாதாரண மனிதர்களிடம் இருந்து விலகவைத்துவிடும் என்பதே நான் கொண்டிருக்கும் டரியல்.
உண்மையில், சாதாரண மனிதர்களைப் பற்றிய சாதாரண மனிதர்களுக்காகவும் எடுக்கப்பட்ட அசாதாரண படைப்புதான் இந்த விசாரணை!

த இந்து

Thursday, October 08, 2015

'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம்

"சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. வெனீஸ் திரைப்பட விழாவில் இப்படம் "மனித உரிமை சினிமா விருது" என்ற விருதை வென்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு இயக்குநர்கள் படக்குழு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
வெனீஸ் நகர திரைப்பட விழாவில் உன்னுடைய 'விசாரணை' திரைப்படம் சிறப்புப் பரிசு பெற்றதையெடுத்து, உனக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது, நீ என்னை உன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அத்திரைப்படத்தின் ஒரு காட்சியைக் காண்பித்தாய். அதில் பரவியிருந்த குரூரமும், நேர்மையும் என் ஆழ்மனத்தை உலுக்கியது. அதிர்ந்தவனாய் என் அலுவலகத்திற்கு திரும்பினேன்.
என் நண்பர்கள் "படம் பார்த்தாயா? எப்படியுள்ளது 'விசாரணை'?" என்று விசாரித்தனர். என் மெளனம் உடைந்தது, என் எண்ணவோட்டத்தினை பகிர்ந்தேன். அவர்கள் அமைதியானார்கள்.
மறுநாள், சி. மோகனை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். மிகுந்த ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றியபடி, "'விசாரணை' பார்த்தாயா?" என்று கேட்க, "நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினேன். "நீ நிச்சயம் பார்க்க வேண்டும், பிரமாதமான படமது" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. அவரது கண்களில் நேர்மை பளிச்சிட்டது.
பின்பு நான் உன்னை அழைத்து "எனக்கு முழுப்படத்தினையும் காண்பி" எனக் கேட்டேன். இன்னும் சில இயக்குநர்களை ஒன்று சேர்க்கட் சொன்னாய், மறுநாள் உன்னுடைய அலுவலகத்தில், எடிட்டிங் ரூமில் காட்டப்படும் என முடிவானது. நான் மற்ற இயக்குநர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், பாலாஜி சக்திவேல் என்றவொரு திருடன், "நாம் வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா" என்று கேட்டான். சரிதானே எனத் தோன்றியது. மறுகணமே, என் அலுவலகத்தில் சிறிய விழாவொன்றுக்கான ஏற்பாட்டினை ஆரம்பித்து, இயக்குநர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி படைப்பாளிகளுக்கும், "வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா?" எனக்கேட்டு மெசேஜ் தட்டினேன். சரி, நான்கைந்து பேராவது வந்தால் போதுமே என்று தான் என் எண்ணமாக இருந்தது. அனைவருமே 'சரி' என மறுகணமே பதிலளித்தனர்.
மகிழ்ச்சிக் களிப்பில், அன்று முழுவதும் விழாவிற்கான வேலையில் ஈடுபட்டு கடைசியில் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால், மற்ற இயக்குநர்கள் உன் அலுவலகத்தினில் படம் பார்த்தனர். சிலர் அமைதியானார்கள், சிலர் புகழ்ந்தார்கள், சிலர் அழுதார்கள்.. சிலர்...
விழாவிற்கு முதல் ஆளாக மணிரத்னம் வந்து நின்றார். அவர் படம் பார்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து பாலா, ஷங்கர், லிங்குசாமி, ராம், சமுத்திரக்கனி, மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல், கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதான், சசி, மணிகண்டன், ரஞ்சித், சுப்ரமணிய சிவா, ரோகினி, ஸ்டான்லி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், மகேஷ் முத்துசாமி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், உனது சக தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். மேடை வலுத்திருந்தது.
ரோகிணி தொகுத்து வழங்க, மணிரத்னம் 'விசாரணை' திரைப்படத்தின் மீது புகழ் கிரீடம் சூட்டினார். படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனியோ பேச நா எழாது உறைந்து நெகிழ்ச்சியுடன் நின்றான். திரைப்படம் கொடுத்த அனுபவத்தினை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் மெளனத்தில் தஞ்சமடைந்தான் பாலாஜி சக்திவேல். "நான் பேச மாட்டேன். ஆனால், இப்படத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒலிப்பெருக்கியாவேன்" என்றார் ஸ்டான்லி. உன் தைரியத்தினைப் பற்றி வியந்து பேசினார் சுப்ரமணியசிவா. "என் படம் விசாரணை முன் ஒன்றுமேயில்லை" என்றான் மணிகண்டன்..
உன் படத்தின் ஒளிப்பதிவாளருக்கோ பேச்சு எழவில்லை, உன் கலை இயக்குநர், "நான் மேடையேற மாட்டேன்" என்று கூறி உரக்க "நன்றி" சொல்லி அமர்ந்தார். படம் பார்க்காத மற்றவர்கள் எதுவும் புரியாமல், எல்லோருக்கும் புரிந்த ஒற்றை வாக்கியமான 'வெற்றி பெற வாழ்த்துகள்' என்று சொல்லி தப்பித்தனர்.
பிறகு விருந்து தொடங்கியது. ஆலமரத்தின் கிளைகளில் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போல் கலகலவென்ற குதூகலப் பேச்சொலி.. பிறகு இசைந்தோடியது இளையராஜாவின் பாட்டு. அதில் மயங்கினோம், பாலாஜி சக்திவேலின் சேட்டைகளுக்கு சிரித்து விழுந்தோம். பின்பு மரத்திலிருந்து இறங்கி மனதை வெற்றிடம் ஆக்கிரமிக்க, வீட்டை நோக்கி நகர்ந்தோம்.
மறுநாள் நான் ஃபோர் பிரேமிஸில் 'விசாரணை' படம் பார்த்தேன். படத்தின் முடிவில் "எண்ட் கிரெட்டிட்ஸ்" வரும் முன்னே நான் திரையரங்கினை விட்டு வெளியே ஒடி வந்து என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"விசாரணையின் ஒற்றைக் காட்சியைப் பார்த்தபின் என் மனதில் எழுந்திருந்த எண்ணம் தவறு. மிகச்சிறந்த படம் இது. கலையும் கலைஞனும் கை கோர்த்து புதிய பரிமாணத்தினை எட்டியிருக்கின்றனர்."
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய், என் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்திருந்தால் உன்னைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே 'விசாரணை'. 'மனிதம்' என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும், படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள்.
நண்பா, உன் 'விசாரணை' என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது.
இதோ, சில வார்த்தைகள் கூவிச் சொல்கிறேன்.
"சினிமா கலைஞர்களாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'"
இனி வரலாறு சத்தமிடும்..
வெற்றிமாறா.. தலை நிமிர்ந்து நட..
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மிஷ்கின் கூறியுள்ளார்.

thannnx-thehindu

Tuesday, August 11, 2015

விசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்

சட்டத்தின் ஆட்சியையும், எல்லா மக்களுக்கும் நீதியையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, உண்மையில் என்ன நிலையில் இருக்கிறது? அதன் கைகளில் அப்பாவிகள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதை ‘விசாரணை’ படத்தின் டிரைலரே ரத்தம் உறையச் சொல்லிவிடுகிறது. உலகப்புகழ் பெற்ற வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடவிருக்கும் 20 படங்களில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’-யும் இடம்பெற்றுள்ளது. போட்டிப் பிரிவில் வெனிசில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்பதே விசாரணை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து 1983-ல் ஆந்திர மாநிலம் குண்டூர் சென்று பொய்யான குற்றச்சாட்டில் அப்பாவியாய் சிக்கிய மு.சந்திரகுமாரின் கதை இது. மூன்று நண்பர்களுடன் சட்டவிரோதக் காவலில் 13 நாட்கள் காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்ட மு.சந்திரகுமார் என்ற ஆட்டோ சந்திரன், தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘லாக்கப்’ நாவல் தான் ‘விசாரணை’யாக மாறியுள்ளது.
“இந்தியாவில் காவல் துறையினரால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களின் அனுபவம் இது. எத்தனையோ துயரங்கள் பதிவாகாமலேயே போயிருக்கின்றன. சந்திரகுமார் தனது 13 நாள் சிறை அனுபவங்களை ஒரு டைரி போல எழுதியதன் மூலம் ஒரு காலகட்டத்தின் பதிவாக மாற்றியுள்ளார். அந்த நாவலில் இருந்த உண்மை என்னை ஈர்த்தது. ஆடுகளம் முடித்த பிறகு, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பெரிய ஹீரோவை மையமாக வைத்துக் கதை பண்ணாமல் யதார்த்தமாக ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது எனது நண்பர் பரிந்துரைத்த புத்தகம்தான் ‘லாக்கப்’.” என்றார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கூர்மையுடன் எழுதப்பட்டிருக்கும் ஆட்டோ சந்திரனின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இளம் வயதிலேயே வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்னை, மதுரை, தூத்துக்குடி என்று அலைந்த இவருக்கு வாழ்வையே திருப்பிப் போடும் அனுபவம் நேர்ந்தது ஆந்திராவில். குண்டூரிலிருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தெருவோர உணவு விடுதியில் பரிசாரகனாக வேலை கிடைத்தது. தினப்படிக் கூலி என்பது அவருக்கும் அவரைப் போன்ற நாடோடி நண்பர்களுக்கும் சந்தோஷமான விஷயமாக இருந்துள்ளது.
“நாள் முழுவதும் வேலை. அதற்கப்புறம் சினிமா பார்ப்பது, இரவில் நண்பர்களுடன் எதிர்காலத்தைப் பற்றி கனவுகளுடன் அசைபோடுவது என்று இருந்தபோதுதான் திருட்டுவழக்கில் என்னையும் மூன்று நண்பர்களையும் கைது செய்தார்கள். கேட்பதற்கு நாதியற்ற அநாதைகள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளை காவல்துறை எப்படி நடத்துகிறார்களோ அதேபோலவே நாங்களும் நடத்தப்பட்டோம். 13 நாட்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைக்கப்பட்டோம். நாங்களாகப் போராடித்தான் நீதிமன்றத்தின் பார்வைக்கே செல்ல முடிந்தது. பத்துக்கு பத்து அடி பரப்பளவே கொண்ட சின்ன அறையில் மார்ச் மாத வெயிலில் வழியும் வேர்வையுடன் மிருகங்கள் போல அடைக்கப் பட்டிருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. எங்களை ஜாமீன் எடுப்பதற்கோ, எங்களைத் தேடி காவல் நிலையத்துக்கு வருவதற்கோ யாரும் கிடையாது. அந்தக் கதையைத்தான் என் முதல் நாவலாக எழுதினேன்” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையைக் கழித்துள்ளார் சந்திரன்.
இவர் எழுதிய 160 பக்கம் கொண்ட லாக்கப்புக்கு 2006-ம் ஆண்டில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கம் வகிக்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் ‘சிறந்த மனித உரிமைகள் ஆவணம்’ என்ற விருதைக் கொடுத்தது.
தமிழ் மட்டுமல்ல இந்திய வெகுஜன சினிமாக்கள் அனைத்திலும் காவல் துறையினர் கேலியாகவும் ஊழலாகவுமே சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேவேளையில், என்கவுண்டர் செய்யும் போலீஸ் நாயகர்கள் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைவதும் சாத்தியமாகவே உள்ளது. மோதல் சாவுகள் மட்டுமல்ல; காவல் கொலைகளும், சித்திரவதைகளும், காவல் நிலையத்தில் நடக்கும் வல்லுறவுச் சம்பவங்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் ‘விசாரணை’ டிரைலரைப் பார்க்கும் போது ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
ஒரு நாவலின் கதையை எடுத்து திரைக்கதையை உருவாக்கி, அதை எழுதிய எழுத்தாளருக்கு சரியான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் அரிதான போக்கு இது. விசாரணை திரைப்படத்தின் இறுதியில் கதாசிரியரைப் பற்றிய ஆவணப்படமாக ஒன்றரை நிமிடப் படம் ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். “தமிழ் சினிமாவில் எழுத்தாளனுக்குச் செய்யப்பட்டிருக்கிற ராஜமரியாதை இது” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நடிகர் தனுஷும், வெற்றி மாறனும் ‘காக்கா முட்டை’-க்குப் பிறகு தயாரிப்பாளர்களாக இணையும் இரண்டாவது திரைப்படம் இது. இரண்டு திரைப்படங்களும் உலகத் திரைப்படவிழாக்களுக்குச் சென்ற பெருமையையும் பெற்றுவிட்டன.
இப்படத்தின் மூலம் வெற்றி மாறன், காவல் நிலையச் சுவர்களுக்குப் பின்னர் இருக்கும் குரூரமான யதார்த்தத்தையும், சொல்லப்படாத குமுறல்களையும் விசாரணை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நிஜமான அரசியல் திரில்லருக்கான நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இந்தப் படம் மூலம் அது சாத்தியப்படலாம்.

நன்றி- த இந்து

Wednesday, August 05, 2015

‘விசாரணை’ போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தாக்கும் படமா? - ஆடுகளம் இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல்

‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
சர்வதேச திரைப்பட விழாக்கள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டீர்களே?
சர்வதேச திரைப்பட விழா களம் மிகப் பெரிய சினிமா மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொடுக்கும் இடம். மரபார்ந்த படங்களுக்கான சந்தையாக அல்லாமல் கொஞ்சம் கலைநயத்தோடு எந்த சமரச மும் இல்லாமல் இருக்கும் படங் களுக்கு அங்கே மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தபோது ‘ஆடுகளம்’ படத்தை காட்டினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இதை ஏன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவில்லை’ என்று கேட்டார். அப்போதைய அந்த சூழ் நிலையில் அனுப்ப முடியாமல் போனதை பகிர்ந்தேன். அதன்பிறகு சர்வதேச விழாக் களுக்கான தொடர்பு அதிகம் ஏற்பட்டது. இந்தப்படத்தை சர்வதேச படவிழாக் களுக்கு அனுப்பும் நோக்கத்துடன் தொடங்கவில்லை. படத்தை முடிக்கும் போது திரைப்பட விழாக்களுக்கு அனுப் பும் தன்மை இருந்தது. இப்படம் வெனிஸ் திரைப்படவிழாவுக்கு தேர்வானது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திரைப்பட விழாவில் இதற்குமுன் இயக்குநர் மணிரத்னத்தின் படங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு அங்கே வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்திருக்கிறார்கள். போட்டிப்பிரி வில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்பட மாக ‘விசாரணை’ தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனுஷ் போன்ற முன்னணி நாயகர்கள் உங்கள் படங்களில் நடிக்க தயாராக இருக் கும்போது இந்தப்படத்துக்கு நாயகனாக தினேஷை தேர்வு செய்தது ஏன்?
படத்தைப் பார்க்கும்போது உங்களுக் குத் தெரியும். இந்த ரோலுக்கு இவர்தான் சரி என்பது புரியும். படத்தில் நடித்த தினேஷ், ஆனந்தி, சமுத்திர கனி, கிஷோர், முருகதாஸ் உள்ளிட்ட ஒவ்வொருவரது கதாபாத்திரத்தையும் இன்னொருவர் மீது பொருத்திப் பார்க்க முடியாது. இவர் களைத் தவிற வேறு யாரும் இதைச் செய்ய முடியாது என்பது என் அபிப்ராயம்.
‘ஆடுகளம்’ படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள்?
ஒரே ஒரு விஷயம்தான். ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு எனக்கு காலம் தேவைப்படுகிறது. அதேபோல அந்த படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரவும் காலம் தேவைப்படுகிறது. இதி லிருந்து வெளியே வந்து அடுத்ததாக புதிய விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் காலம் தேவைப்படுகிறது. இப்போது எடுத்திருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் சந்திரகுமார் என்பவரது வாழ்க்கையில் நடந்த விஷயம். அதை ‘லாக் - அப்’ என்ற பெயரில் நாவலாக அவர் எழுதியிருந் தார். நண்பர் தங்கவேல் மூலம் அறிந்து அந்த புத்தகத்தை படித்தேன். அடுத்து இதை தொடலாமே என்று அதன்மீது பாதிப்பு ஏற்பட்டதால் இந்தப்பட வேலை களை தொடங்கி முடித்திருக்கிறேன்.
திரைப்பட விழாக்களுக்கு மட்டுமாக எடுக்கப்பட்டு வணிகம் செய்யப்படும் திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக உள்ளன. இங்கும் அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு வாய்ப்புண்டா?
அது இங்கே தேவையா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. என்னு டைய ஆசை ஒரு வெகுஜன சினிமாவை நல்ல தரத்தோடு எடுக்கவேண்டும் என்பது தான். அப்படி எடுக்க முடியும் என்பது என் நம்பிக்கை. வெகுஜன பார்வையாளர்களை தவிர்த்துவிட்டு ஒரு படத்தை எடுப்பது பற்றி யோசிப்பதற்கு தனி பக்குவம் வேண்டும். அது எனக்கு இன்னும் வரவில்லை. வந்ததும் பார்க்கலாம்.
உங்க நண்பர் தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படம் புறா பந்தயத்தை களமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததே. நீங்கள் 200-க்கும் மேலான புறாக்களை வளர்த்து வருகிறீர்கள். அந்தப் படத்துக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா?
அவர் அந்தப்படத்தின் கதையை என் னிடம் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் ஒருமுறை புறாக்களை மையமாக வைத்து ஒரு லைனை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஏற்கனவே இந்தப் பின்னணியில் ஒரு கதையை ஒருவர் சொல்லியிருக்கிறார்’ என்று தனுஷ் கூறினார். ‘சரியாக இருந்தால் பண்ணுங்க’ என்று நானும் சொன்னேன். அவ்வளவுதான்.
இயக்குநர் அட்லி வசனத்தில், புதிய இயக்கு நர் இயக்க உங்கள் கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கப்போகிறாராமே? ஒரு இயக்குநரான நீங்கள் உங்கள் கதையை மற்றவர்கள் எழுத, இயக்க அனுமதித்தது ஏன்?
ஜி.வி.பிரகாஷ் எனக்கு பிடிக்கும். இதற்கு பதில் அவ்வளவுதான்.
சேனல் பிரச்சினை, புதுவித சேட்டிலைட் விற்பனை என்று சினிமாவில் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லாமே சரியாகும். ஒவ்வொரு சமயத்திலும் சினிமா புதிய வடிவம் எடுக்கும் அவ்வளவுதான். நெகடிவ் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்றார்கள். டிஜிட்டலில் இன்று எடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் எல்லாமும்.
‘விசாரணை’ எப்போது ரிலீஸ்?
அக்டோபர் மாதத்தில். அதற் கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்தது தனுஷ் படம்தானே?
ஆமாம். இரண்டு மாதத்தில் அந்தப் படத்துக்கான பணிகளை தொடங்க உள்ளோம்.


நன்றி - த இந்து


வெற்றி மாறன் வெற்றி வெற்றி வெற்றி என்று குவிபார் எனபதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லை .....இவர் படங்கள் மிக அழுத்தமாக பார்பவர்கள் மனத்தில் பதிந்து விடுகிறது ....வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது......நமக்கு எல்லாம் பெருமையை தேடி கொடுத்து இருக்கிறார் ........டிவி பேட்டியில் மற்றும் சில பேட்டியில் (you tube ) இல் பார்த்ததில் அவர் மிக தெளிவாக நிதானமாக இருக்கிறார் .....என்ன செய்ய வேண்டும் ....அதற்கு கள மற்றும் கால சூழ்நிலை ஒத்து வந்தால் இதை இதை செய்யலாம் ....அல்லது அதற்கு வாய்ப்பு இல்லை என்று திடமாக .....தெளிவாக உள்ளார் .......பிடிவாதமாக இதை செய்ய வேண்டும் என்று இல்லாமல் ...யதார்த்த உலகுக்கு ஏற்றார் போல இருபது ....நிஜம் ஜெயிக்கும் என்று தெளிவாகுகிறது ..........உங்கள் வெற்றி தொடர வாழ்த்துகள் சார் ........சமுதாயத்தில் நடக்கும் பல விசயங்களை உங்கள் பாணியில் திரை படமாக கொடுத்தால் ......நன்றாக இருக்கும் .....எல்லாம் வல்ல சூட்சம சக்தி அதற்கு அருள் புரியும்

Thursday, March 01, 2012

கூடங்குளம் கட்டுரையால் முடக்கப்படும் அபாயத்தில் கீற்று இணையதளம்?

 http://natpu.in/wp-content/uploads/2011/03/keetru-ramesh-bala-cartoons.jpg

'ஜெயலலிதா ஆட்சியில் கருத்துரிமைக்கு இடம் இல்லையா?’ என்று கொதிக்கிறார்கள், சட்ட உரிமை ஆர்வலர்கள். 'கீற்று’ இணையதள ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணைதான் இந்தக் கொதிப்புக்குக் காரணம். 


சிறு வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட சமூக அக்கறையுள்ள சிறு பத்திரிகைகளை, தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம், உலக அளவிலான கவனத்தைப் பெற்றது 'கீற்று’. இட ஒதுக்கீடு, தலித்மக்கள் மீதான வன்கொடுமைகள், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகள் இதில்அதிகம் வெளியிடப்பட்டன. சூடு கிளப்பும் சர்ச்சையான விவாதங்களும் அவ்வப்போது  இதில் இடம்பெறும்.


அண்மையில், 'அணுஉலைப் பிரச்னை’ தொடர்பாக விஞ்ஞானி​கள், சூழலியலாளர்கள், படைப்பாளிகள் என பல தரப்பினரும் எழுதிய 200 கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான், கடந்த 8-ம் தேதியன்று, 'கீற்று’ இணைய​தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான ரமேஷிடம், க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சட்ட உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கீற்று நந்தன் என்ற ரமேஷ் கூறியது''-கடந்த 7-ம் தேதி மதியம் வீட்டுக்கு வந்தபோது, 'கீற்று இணைய தளம் பற்றி விசாரிக்க வேண்டும். க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்கு நாளை வாருங்கள்’ என்று, அங்கு காத்திருந்த போலீஸ்காரர்  சொன்னார். மயிலாப்பூரில் உள்ள க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு, டி.எஸ்.பி. நிலையில் உள்ள ஓர் அதிகாரி, கீற்று தளம் பற்றி விசாரித்தார். 'பல இயக்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுகிறீர்கள். நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்? 

நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் உங்களுக்கு உதவி செய்கிறார்களா? வேறு யாராவது நிதிஉதவி செய்கிறார்களா?’ என்று இரண்டு மணி நேரம் பல விவரங்களைக் கேட்டார். என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் விசாரித்தார்கள். சமூகநீதி, முற்போக்குக் கருத்துக்களை வெளியிட்டு வரும் என்னுடைய இந்த முயற்சி முழுவதும் என்னுடைய சொந்த செலவில் நடக்கிறது. 

பொருளாதாரப் பிரச்னை வரும்போது, கீற்று வாச​கர்கள் உதவுகின்றனர். எங்கள் தளத்தின் செயல்​பாடுகள் முழு​வதும் வெளிப்படையானது. சமூக அக்கறையுடன் கருத்துகளை வெளியிடுவதைத் தடுப்பது, அடிப்படை சுதந்திரத்தை மறுப்பதாகும்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமேஷ்.


தீவிர அரசியல் தளமான 'வினவு’ இணையதள செய்தித் தொடர்பாளரான பாண்டியன், ''கீற்று ஆசிரியரிடம் க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியதை, கருத்துரிமை பேசும் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது ஒரு வகை மிரட்டலும்கூட. இதை இப்படியே விட்டுவிட்டால், மக்கள் நலன் சார்ந்து எழுதுவதே தடைசெய்யப்படும் நிலை உருவாகும். எனவே, இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்'' என்றார் ஆவேசத்துடன்.


இது ஒரு புறம் இருக்க... சென்னையைத் தலை​மை இடமாகக்கொண்ட 'தி வீக் எண்ட் லீடர்’ ஆங்கில இணையதளம் திடீரென முடக்கப்பட்டது, கருத்துரிமையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழகத்துக்கு எதிராக கேரளத்தினர் தகவல்களைப் பரப்புவது தொடர்பாக, இந்த இணையதளத்தில் கடுமையான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த மலையாள ஆதரவுத் தரப்பினர் பிரச்னையைக் கிளப்பினார்கள். அது பின்னர் அமுங்கிப்போனது. விமர்சனங்கள், மிரட்டல்கள் எனத் தொடர்ந்த எதிர்வினைகள், இணையதளத்தை முடக்கிப்போடும் அளவுக்குப் போனது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcZSfMkd-GDEqsKQP8BjtOWdXYFvy3tX9gmtYPXjuD6Ovjfly8qFjrfEkhL3gBBgTPfhIor2DOw_6WYdz7uib-t4RK64WgsTWrMhDh0Qm7cxlG3m1ftOoGaYtpWuxMEl1r8U6SD-y0Oy4/s640/keetru.jpg


இது பற்றிப் பேசும் 'தி வீக் எண்ட் லீடர்’ஆசிரியர் வினோஜ் குமார், ''எங்கள் இணையதளத்தின் பெயரைப் பதிவு செய்த நிறுவனம், இந்த மாதத் தொடக்​கத்திலேயே தளத்தை முடக்கிப்போட்டது. 15 நாட்களுக்​கும் மேல், தளத்தை வழக்கம்போல பார்வை​யிட முடியாதபடி சிக்கல் உண்டானது. பெரியாறு அணை விவகாரத்தில், மலையாள இனவெறி​யுடன் தமிழகத்தில் செயல்படுபவர்கள், எங்களின் கட்டுரைக்குப் பழி வாங்கும் விதத்தில் இதைச் செய்திருக்கலாம் என்று நம்புகிறோம்'' என்கிறார்.


இது, இணையத் தளங்களுக்குச் சோதனைக் காலமோ?