Showing posts with label விக்ரம்பிரபு. Show all posts
Showing posts with label விக்ரம்பிரபு. Show all posts

Thursday, April 14, 2022

டாணாக்காரன் (2022) - சினிமா விமர்சனம் ( உலக சினிமா )


 டாக்டர்  ராஜசேகர்  நடிச்ச  இதுதாண்டா  போலீஸ்  படம்  ரிலீஸ்  ஆனப்ப  குமுதம்  எழுதிய  விமர்சனத்தில்  முக்கியமான  வரிகள்  செம  ஹிட்  ஆச்சு. ஒரு  ரஜினியோ , கமலோ  காட்டாத  போலீஸ்  கம்பீரத்தை,டாக்டர்  ராஜசேகர்  காட்டி  இருக்கார்.


தமிழ்  சினிமாவில்  முக்கியமான  போலிஸ்  படங்கள்  லிஸ்ட்  எடுத்தா  எம்ஜிஆர் -  ரகசிய  போலிஸ்115,  சிவாஜி -  தங்கப்பதக்கம் , ரஜினி -  மூன்று முகம் , கமல் -  காக்கிசட்டை ,விஜயகாந்த் - சத்ரியன்,மாநகரக்காவல் ,ஊமை விழிகள் ,சத்யராஜ் - கடமை கண்ணியம்  கட்டுப்பாடு , வால்டர்  வெற்றி வேல் ,,விக்ரம் -சாமி, தில்  சூர்யா - சிங்கம், காக்க காக்க , விஜய  சாந்தி - வைஜயந்தி  ஐபிஎஸ் , விஜய சேதுபதி - தர்மதுரை ,விஜய் - போக்கிரி , தெறி , அஜித் - மங்காத்தா என  பட்டியல்  நீண்டுகொண்டே  இருக்கும்


 ஆனா  மேலே  சொன்ன  படங்களில்  எல்லாம்   போலீஸ்  கம்பீரம், ஆக்சன்  அதகளம்  எனதான்  திரைக்கதை  பயணிக்குமே  தவிர   போலீஸ்காரங்க  படும்  கஷ்டம் ,  போலிஸ்  ட்ரெய்னிங்கில்  நடப்பது  என்ன  என்றெல்லாம்  காட்டவில்லை , அதுக்கு  டைமும்  இல்லை 


 ஆனா இயக்குநர்  வெற்றி மாறன்  பட்டறையிலிருந்து  வந்திருக்கும்  இயக்குநர்  தமிழ்  முழுக்க  முழுக்க  போலிஸ்  ட்ரெய்னிங்  பேஸ்  பண்ணி  அசத்தலா  ஒரு  திரைக்கதை  ரெடி  பண்ணி   கலக்கி இருக்கார் 


ஹீரோ  எம் ஏ  கிரிமினாலஜி  படிச்ட்டு  போலீஸ்  வேலைக்கு  வந்திருக்கார்.. சின்ன  வயசுலயே அவர்  மனசுல  போலீஸ்  வேலைக்குதான்    போகனும்  என  அப்பாவால்   அடிமனசில்  வைராக்ய  விதை  விதைக்கப்பட்டு  ஆழ் மனசுல் அ து    படிஞ்சிடுது .போலிஸ்  வேலைக்கு  செலக்ட்  ஆகறது  பெரிய  விஷயம்  இல்லை , ட்ரெய்னிங்க்  ஒரு  வருசம்  முடிக்கனும்.9 மாசம்  கிரவுண்ட்ல  ட்ரெய்னிங்   3  மாசம்  ட்ரெயினிங்  ட்யூட்டி ட்ரெய்னிங்  வந்த  இடத்தில்  உயர்  அதிகாரியுடன்  மோதல்..  நீ  எப்படி  போலீஸ்  ஆகறே?னு  பார்க்கறேன்னு  அவர்  சவால்  விட  ஹீரோ பதில்  சவால்  எல்லாம்  விடாமல்  கம்முனு  இருந்தே  ஜம்முனு  உலா  வரும்  கதை 


 ஹீரோ  படும்  சிரமங்கள்  தான்  படத்தின்  திரைக்க்தை 


ஹீரோவா  விக்ரம்  பிரபு . கேரியர்  பெஸ்ட்  படம்னு  அசால்ட்டா  சொல்லலாம், மனுசன்  அடக்கி  வாசிச்சு  இருக்கார் .மகாநதி ,  தில் , சத்ரியன் படத்துக்குப்பின்  ஹீரோவுக்கு  சம்மர்  கட்  கலக்கலாப்பொருந்துவது  இதில்தான்.வில்லனிடம்  மாட்டிக்கொண்டு  விழிப்பது ,நாயகியிடம்   முறைப்பது , சித்தப்பாவிடம்  பாந்தமாய்  பழகுவது  என   கிடைத்த    இடங்களில்  எல்லாம்  சிக்ச்ர்  அடிக்கிறார்


ஒரு  படம்  ஹிட்  ஆகனும்னா  படத்தில்  வில்லனின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  பக்காவா  உக்காரனும் . உதா  கேப்டன்  பிரபாகரன்  மன்சூர்  அலிகான். கனா  கண்டேன்  பிருத்விராஜ். இந்தப்படத்தில்  மலையாள  நடிகர்  லால்  தான்  மெயின்  வில்லன்.  நிஜத்தில்   63  வயசான  இவர்  காட்டி  இருக்கும்  போலீஸ்  வில்லத்தனம்  குலை  நடுங்க  வைக்கும் . ஹீரோ  பேரு  கூட  நினைவில்  இல்லை  ஆனா  வில்லனின் பேரு  ஈஸ்வரமூர்த்தி   அப்டியே  மனசுல  தங்கிடுச்சு 


எம் எஸ்  பாஸ்கர்  இந்த  வருடத்தின்  சிறந்த  குனச்சித்திர  நடிகர்  விருது  இப்பவே  ரெடி, மனுசன்  அசத்தி  இருக்கார் , போஸ்  வெங்கட்  நல்ல  போலிசாக  வந்து  கலக்கறார்

 நாயகியா  நெடுநெல்வாடை  நாயகி  அஞ்சலி  நாயர் . இந்தக்கதைக்கு  நாயகி  கேரக்டரே  தேவை  இல்லை .,    சும்மா  வெய்யில்லயே  நடந்துட்டு  இருந்தா  நமக்கு  மயக்கம்  வரும்  அப்பப்ப  நிழலா  குளிர்ச்ச்யா  ரிலாக்ஸ்  பண்ணிக்க  நாயகி  +  காதல் 


இசை  ஜிப்ரான். ஒரே ஒரு  பாடல்   இதம்,  பிஜிஎம்  பக்கா . ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  , முழுக்க  முழுக்க    முதல்  பாதி  படம்  பூரா  கிரவுண்டில்  நடக்கும்  பெரேடுகள்  தான்  காட்சிகள் . பின்னி  இருக்கார்  ஒளிப்பதிவில் 



நச்  டயலாக்ஸ் 


1  அட்டென்சன்ல  நிக்கறப்போ  பாம்பே  கடிச்சாலும்  பொசிஷன்  மாறக்கூடாது 


சார்


ஏண்டா?  ஏன்  பொசிசன்  மாறுய்னே?


  கொசு  க்டிச்சிடுச்சு  சார் 


2   போலீஸ்  ட்ரெய்னிங்கில்  குறை  இருக்கத்தான்  செய்யும் ,  குறை  இருந்தாத்தான்  அது போலீஸ்  ட்ரெய்னிங்


3    சில  விசயங்களை  பழக்கப்படுத்தித்தான்  ஆகனும்

 சார் ,  கட்டுப்படுத்த  முடியாத  விஷயங்களை பழக்கப்படுத்தி  என்ன  பண்ணப்போறோம்?


4  புரட்சிக்காரனுக்கு  போலீஸ்  வேலை  ஒத்து  வராது  , நேர்மையா  இருக்கறவனுக்கு  இங்கே  வேலை  இல்லை 


5  நீ  ஏன்  போலிஸ்  ஆக  ஆசைப்பட்டே?


போலிஸ்  ஆனா எல்லாரையும்  அடிக்கலாம், லைஃப்ல  செட்டில்  ஆகலாம்


6   இல்லாத  ஏழைக்கு  கடவுள்  தான்  ஒரே  அடைக்கலம் , அதுக்கு  அடுத்ததா  போலீஸ்  கிட்டேதான்  வந்து  நிற்பான் 


7   போலீஸ்  ஒரு  சமூக  மருத்துவன் 


8  போலீஸ்  உத்தரவுக்கு  கீழ்ப்படிஞ்சு  நடந்தாதான்  வேலை  கேள்வி  கேட்டுட்டு  இருந்தா.... ?


9   அவங்க கிட்டே  ஆள்  பலம்  இருக்கு ஜாதி பலம்  இருக்கு, உன்  கிட்டே  என்ன  இருக்கு ? 


10  நம்ம  பலம்  என்ன?னு  எதிரிக்கு  தெரியாம  கூட  இருக்கலாம், ஆனா  நம்ம  பலவீனம்  என்ன?னு எதிரிக்கு  தெரிஞ்சிடவே  கூடாது 


11   செங்கிஸ்கான்  தான்  போர்  வியூகத்துல  இந்த  டெக்னிக் தாண்  யூஸ்  பண்ணினார்.;. அவரா  சில  வதந்திகளைப்பரப்புவார்.அப்படி  பரப்பி  எதிரிகளை  பயம்  கொள்ள  வைப்பது  ஒரு  டெக்னிக்.  அதைத்தான்  நான்  பண்ணப்போறேன் 


12    எதிரிய  பயப்பட  வைப்பதுதான்  வெற்றியின்  முதல்  படி 


13  களத்துல  என்  முன்னால  நிக்க்றதுக்குக்கூட  உனக்குத்தகுதி  இல்லை   நீ  என்னை  ஜெயிக்கப்போறியா? 


 அப்படி  ஜெயிச்சுட்டா...? 



14  போலிஸ்  வேலைக்கு  வர்றவன்  கிட்டே  சிங்கம் , புலி , நரி, நாய்னு  பல  முக  மூடிகளை  மேலிடம்  கொடுத்துடுது , இதுல  எந்த  முக  மூடியை  எப்போப்போடனும்னு   சிந்திச்சே   வாழ்நாள்  போய்டும் 


15  உண்மை , நேர்மை , பயிற்சி , முயற்சி  உழைப்பு  இதெல்லாம்  இருந்தாலே  போலிஸ்  வேலைக்கு  லாயக்குனு  நினைச்ட்டேன் 


16   முரட்டு அரசியல்வாதிக்கும் , முட்டாள்  அதிகாரிக்கும்  பிறந்த  குழந்தைதான்  போலீஸ் 


 17  மக்களுக்கு  ஒரு  பிர்ச்சனைன்னா  அவங்க  சந்திக்கும்  முதல்  நபர்  போலீஸ்  தான் 




சபாஷ்  டைரக்டர் 


1    வில்லன்  லால் ,  போஸ்  வெங்கட் , எம் எஸ்  பாஸ்கர்  இவர்களது  கேரக்டர்  ஸ்கெட்ச் , அவர்களுக்கான  சீன்கள்  எல்லாமே  அற்புதம் 


2   அந்த  வயசான  சித்தப்பா  கேரக்டர்  மனதில்  நிற்குது . ட்ரெய்னிங்கில்  உய்ர்  மூச்சு  உள்ளவரை  ஓடிக்கொண்டே  இருப்பது  பின்  இறப்பது  எல்லாம்  செம 


3    முடிந்த  வரை  ஹீரோயிசம்  எங்குமே  தலை  தூக்காமல்  பார்த்துக்கொண்ட  விதம் 


4   கிட்டத்தட்ட  முழு  திரைக்கதையுமே  ஸ்போர்ட்ஸ்  டிராமா  ஜர்னர்ல  எடுக்கற  மாதிரி  தான்  ரெடி  பண்ணி    இருக்காங்க , கமர்ஷியல்  அயிட்டங்கள்  எனப்படும்  காமெடி  டிராக் ,  டூயட்  என  பொழுத்  போக்கு  அம்சங்கள்  எதுவுமே  இல்லாமல்  டைட்டாக  ஸ்க்ரின்  ப்ளே  அமைத்த  விதம் 

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  நல்லவர்  ,மாதிரி  வரும்  ஒரு  போலீஸ்  ஆஃபிசர்  ஒரு  இடத்தில்  வில்லனிடம்  உங்க  அணி  எத்தனை  டைம்  ஜெயிச்சிருக்கு?னு  கேட்க  வில்லன்   தடவை  என்கிறார்.. க்ளைமாக்சில்  அதே  ஆஃபீசர் “  ஈஸ்வர  மூர்த்தியை  தோற்க  விடுவோமா? அவர்  தான்  ஜெயிப்பார்  என்கிறார்.  பலவருடங்கள்  சர்வீஸ்  உள்ள  வில்லன்  கிட்டத்தட்ட  20  போட்டிகளில்  5  தட்வை  தான்  ஜெயிச்சிருக்கார், மீதி  15  டைம்  தோத்துதானே   இருக்கார் ?


2  வில்லன்  ஹீரோவைக்கண்காணிக்கிறார். ஆனா  ஹீரோயின்  ஒரு  போலீஸ் , அவர்  ஹீரோவிடம்  ரொமான்ஸ்  பண்ணுவது சக  போலீஸ்  எல்லாருக்கும்  தெரியுது , ஆனா  வில்லனுக்குத்தெர்ல   ஹீரோயினை  கேடயமா  வெச்சு  எந்த  மூவும்  அவர்  பண்ணல


3   +2  படிச்சவங்க  வேணா  போலீஸ்   கான்ஸ்டபிள்  வேலைக்கு  வரலாம்,  டிகிரி  முடிச்ச  ஹீரோ  சப் இன்ஸ்பெக்டர்  வேலைக்கு  வராம  ஏன்  போலீஸ்  வேலைக்கு  வர்றார்? 


4  க்ளைமாக்ஸ்  பலரும்  ஏற்றுக்கொள்ளக்கூடியதா  இல்லை . பப்ளிக்  முன்னால  வில்லன்  டீம்  ஃபவுல்  ஆகிடுது, ஆனா  அவர்  ஜெயிச்சதா  அறிவிப்பது  எப்படி? ஜனங்க  யாரும்  கேள்வி  கேட்க  மாட்டாங்களா?  அட்லிஸ்ட்  கேவலமா  நினைக்க  மாட்டாங்களா?  ஈகோ  உள்ள  வில்லன்  தோற்றும்  எப்படி  மெடலை  வாங்க  ஒத்துக்கறான்?

சி.பி ஃபைனல் கமெண்ட் - டாணாக்காரன் − மாமூல்"மசாலா படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ,விறு"விறுப்பான திரைக்கதை..படம் ஏற்படுத்தும்"பாதிப்பிலிருந்து மீண்டு"வரவே சில நாட்கள் ஆகும்.அனைவரின்"நடிப்பும் செம.விகடன் மார்க் 50 ,ரேட்டிங் 4 /5 ( விகடன் மார்க் யுகித்த தேதி 9/4/2022 , விகடன் வந்த தேதி 13/4/2022



https://twitter.com/CpsWriter/status/1512760648161435657


-

@writer_cps சென்னிமலை சி.பி.செந்தில் குமார்

டாணாக்காரன் − மாமூல்"மசாலா படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ,விறு"விறுப்பான திரைக்கதை..படம் ஏற்படுத்தும்"பாதிப்பிலிருந்து மீண்டு"வரவே சில நாட்கள் ஆகும்.அனைவரின்"நடிப்பும் செம.விகடன் மார்க் 50 ,ரேட்டிங் 4 /5