spoiler alert
சம்பவம் 2 - ஒரு சீக்ரெட் ஏஜெண்ட் , அவரைப்பிடிக்க அவரது மகனைப்பிடித்த வில்லன் க்ரூப் மகனை கொடூரமா கொலை பண்ணிடறாங்க . அவங்களையும் பழி வாங்கனும், அவங்க கிட்டே இருந்து பேரக்குழந்தையையும் காப்பாற்றனும்
சம்பவம் 3 - 2 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கேங்க்ஸ்டர் க்ரூப்ல இருந்து மீட்கப்பட்டு ஒரு இடத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கு .அதை மீட்க கேங்க்ஸ்டர் க்ரூப் , போலீஸ் , போலீஸ் ல இருக்கும் கறுப்பு ஆடு என மூன்று தரப்புக்குள் நடக்கும் மோதல்
மேலே சொன்ன 3 சம்பவங்களும் ஒரு மையப்புள்ளியில் இணைவதுதான் திரைக்கதையின் சாராம்சம்
முதல் பாதி படத்தில் ஹீரோவா ஃபகத் ஃபாசில் அதகளம் பண்ணி இருக்கார் . காருக்குள் ஒருவரை விசாரித்து பின் அவரை துவம்சம் செய்து சிரிக்கும் காட்சியில் செம அப்ளாஸ்.. காதலியிடம் நான் என்ன வேலை செய்றேனு மட்டும் கேட்காதே என கண்டிசன் போடுவதும் , வில்லன் க்ரூப்பால் அவர் பிடிபட்டபோது பதை பதைப்பதும் அருமை
கமல் ஹீரோவா நடிச்ச படங்களிலேயே அவரோட டாமினேஷன் இல்லாம கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும் கேரக்டரில் கமல் . அழுத்தமான நடிப்பு . பிரமாதமாகப்பேசப்பட்ட பத்தல பத்தல சாங் எடுபடவில்லை . படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தம் இல்லாததால் அதை ஓப்பனிங் சீனாக வெச்சு சமாளிச்சாலும் ஒட்டல ஒட்டல
வில்லனாக விஜய் சேதுபதி . மாஸ்டர் பட சாயல் தெரியுது. அது தெரியக்கூடாதுனு ஒரு ட்ரெய்னர் வேற .. பல இடங்களில் மிரட்டலான நடிப்பு . க்ளைமாக்ஸ் ஃபைட்டில் அரங்கம் அதிரும் கைதட்டல்
அனிரூத் பிஜிஎம் அதகளம். இண்டர்வெல் பிளாக் கில் ஷாக் சர்ப்பரைசாக வரும் பழைய விக்ரோம் தீம் மியூசிக் வரும்போது கமல் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்
ஃபகத் ஜோடியாக வரும் காயத்ரி கச்சிதமான நடிப்பு , வில்லன் விஜய் சேதுபதிக்கு ஜோடிகளாக வரும் மகேஷ்வரி , மைனா நந்தினி , ஷிவானி நாராயினி எல்லாம் எதுக்கு வர்றாங்கனு தெரியல . கமலுக்கு ஜோடி இல்லை என்பது கமல் ரசிகர்களுக்கு மட்டுமில்லை கமலுக்கே அதிர்ச்சியான விஷயம் தான். கமல் கடந்த 25 வருடங்களில் ஜோடி இல்லாமல் லிப் கிஸ் இல்லாமல் நடித்த முதல் & கடைசி படம் இதுவாகத்தான் இருக்க முடியும்
கமல் தலையீடு அதிகம் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு இயக்குநர் படமாக வந்திருக்கு மாநகரம் , கைதி , மாஸ்டர் என தன் முந்தைய படங்களை விட இதில் விறுவிறுப்பு ஆக்சன் சீக்வன்ஸ் அதிகமா போட்டுத்தாக்கி இருக்கார் லோகேஷ் கனகராஜ். நிச்சய வெற்றி ஃபார்முலா
செம்பன் வினோத் ஜோஸ் மிடுக்கான போலீஸ் ஆஃபீசர் நடிப்பு , நரேன் ஆக்டிங் , சூர்யாவின் மிரட்டலான கிளைமாக்ஸ் ஆக்டிங் எல்லாம் செம
சபாஷ் டைரக்டர்
1 படத்தோட ஓப்பனிங் சீன்லயே ஹீரோ கொலை செய்யப்படுவது போல் காட்டுவது , இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் போல முதல் பாதியை விறுவிறுப்பாகக்கொண்டு போன சாமார்த்தியம்
2 ஒரு லேடி ஏஜெண்ட் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் அவருக்கு அட்டகாசமான ஃபைட் சீன் வைத்தது அவரது பாத்திர வடிவமைப்பு
3 பங்களாவில் பாம் இருக்கு என தெரிந்ததும் வில்லன் க்ரூப் தன் ஆட்களுடன் வெளியேறும் காட்சி அட்டகாசம் . எந்தப்பொருள் மேலயும் கை வைக்காம வெளியேறனும் என விஜய் சேதுபதி கூறுவதும் அதைத்தொடர்ந்து வரும் ட்விஸ்ட்டும் செம
4 இழவு வீட்டில் அழுகை சத்தம் வராமல் அவர்களை வெளியேற்றும் காட்சி , பேரக்குழந்தைக்கு சத்தம் ஆகாது என்பதை பல காட்சிகளில் மெயிண்ட்டெயின் செய்வது டைரக்சன் டச்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்ஸில் வில்லனாக வருபவர் இத்தனை நாட்களா என்ன பண்ணிட்டு இருந்தார்?இவ்ளோ கொடூரமான ஆள் இவ்ளோ சம்பவங்கள் நடந்தும் வேடிக்கையா பார்த்துட்டு இருப்பார் ? என்பது நெருடுது
2 தான் என்ன வேலை பார்க்கிறோம் என்பதை காதலியிடம் சொல்லாத ஃபகத் தான் விசாரிக்கும் ஆளை காதலி கண் பார்வையில் படும்படி விட்டு விட்டு செல்வது எப்படி ?
3 தன்னை குடிகாரனாக , ஸ்த்ரீலோலனாக கேரக்டர் அசாசினேஷன் செய்து கொள்ளும் ஹீரோ அவ்ளோ சுத்தி வளைச்சு அதை மெயிண்ட்டெயின் பண்ணற தேவை என்ன? ட்விஸ்ட்டுக்கு வேணா நல்லாருக்கே ஒழிய அந்த போர்சனே தேவை இல்லை என்பது என் கருத்து
4 மருமகள் மாமனாரிடம் நீங்க நல்லவரா? கெட்டவரா? எனக்கேட்கும் சீன்... அது கூட தெரியாமலா அவர் இருப்பார்
5 காயத்ரி ஒரு முக்கியமான விஷயத்தை ஃபகத்க்கு தெரிவிக்க அவர் ஃபோனை கட் பண்ணிட்டே இருக்கார் , வாட்சப் எதுக்கு இருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தகவல் சொல்லி இருக்கலாமே?
ரசித்த வசனங்கள்
1 ஒரு முகமூடியை கழட்ட இன்னொரு முகமூடி போட்டவானால் தான் முடியும்
2 அந்த பிராத்தல் ஹவுஸ் அட்ரஸ் என்ன? தப்பா பார்க்காத , விசாரிக்க
இதான் அது
என்ன அப்படிப்பார்க்கறே? நானும் விசாரிச்சுத்தெரிஞ்சுக்கிட்டதுதான்
3 ஏங்க எப்போப்பாரு அவளே உங்க ரைட் சைடில் இருக்கா. இனி நாந்தான் ரைட் சைடுல இருப்பேன்
மனுசனுக்கு ஹார்ட் எந்த சைடு இருக்கு ?
ரைட் சைடு
அப்போ நீ அங்கேயே இரு
4 நாளைல இருந்து குடிக்க மாட்டேன்
அப்போ இன்னைக்கு?
2 பெக் மட்டும் போட்டுக்கறேன்’’
ஒரு ஆஃப் போட்டுக்க . உனக்கு நிரந்தரமா எந்தப்பிரச்சனையும் வராது
3 ஏங்க , செத்தாக்கூட 4 பேரு தூக்க வருவாங்க நம்ம மேரேஜ் அன்னைக்குக்கூட 4 பேர் இல்லையே?
4 ஆமா இன்னைக்கு ஏழரை மணிக்கு மேரேஜ் இப்போ இந்த மாதிரி இடத்துல எங் கூட இருக்கீங்க ?வேற லெவல் நீங்க
5 சாவு பயமே இல்லாத என்னை வாழவே பயப்பட வெச்ட்டாங்க
6 விக்ரமை யாராலும் கொல்ல முடியாது, ஏன்னா அவரைத்தான் ஆல்ரெடி கொன்னாச்சே? கோஸ்ட்டாதானே இருக்காரு
7 ஒன் மேன்ஸ் டெரரிசம் ஈஸ் அனதர் மேன்ஸ் ரிவல்யூசன்
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 கமல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி,படத்தோட ஹீரோ கமல் இல்லை,பகத் பாசில் - இடைவேளை #VikramReview
2 ஷாக் நியூஸ் 2− வில்லன் விஜய்சேதுபதிக்கு 3 ஜோடி, பகத் பாசிலுக்கு ஒரு ஜோடி,கமலுக்கு ஜோடி இல்லை. மெடிக்கல் மிராக்கிள் #VikramReview
3 இன்ட்டர்வல் பிளாக் சீன் கமல் படங்களில் இது செமயா வந்திருக்கு,பிஜிஎம் பட்டாசு #VikramReview
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - விக்ரம் 2022 − சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி பரபரப்பான முதல் பாதி ,தெறிக்க விடும் ஆக்சன் ல பின் பாதி,லோகேஷ் கனகராஜின் 4 வது ஹிட்"படம்.கமல் டாமினேஷன் இல்லாத கமல் படம். பகத்,விஜய்சேதுபதி செம ஆக்டிங்.விகடன் மார்க் 46 ரேட்டிங் 3 / 5 # vikram