Showing posts with label விக்ரம் (2022) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் ரிவஞ்ச் கேங்க்ஸ்டர் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label விக்ரம் (2022) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் ரிவஞ்ச் கேங்க்ஸ்டர் த்ரில்லர் ). Show all posts

Friday, June 03, 2022

விக்ரம் (2022) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் ரிவஞ்ச் கேங்க்ஸ்டர் த்ரில்லர் )


spoiler  alert

சம்பவம் 1 - போலீஸ் ஆஃபிசர்கள்  3  பேர்  அடுத்தடுத்து  முகமூடி  போட்ட  நபரால்  கொலை  செய்யப்படறாங்க .  அந்த  சீரியல்  கில்லர்    யார்? என  கண்டுபிடிக்கும்  பொறுப்பில்  அண்டர்  கவர்  ஆபரேஷன்  ஆ ஃபீசர்  இறங்குகிறார், அவர்  தன்  டீமுடன்  களம்  இறங்கி  போதைப்பொருள்  தயாரிக்கும்  கேங்க்ஸ்டர்கள்  இதன்  பின்னணியில்  இருப்பதைக்கண்டுபிடிக்கிறார்


சம்பவம் 2  - ஒரு  சீக்ரெட்   ஏஜெண்ட்   , அவரைப்பிடிக்க   அவரது  மகனைப்பிடித்த  வில்லன்  க்ரூப்  மகனை  கொடூரமா  கொலை  பண்ணிடறாங்க . அவங்களையும்  பழி வாங்கனும், அவங்க  கிட்டே  இருந்து  பேரக்குழந்தையையும்  காப்பாற்றனும் 


 சம்பவம் 3  -   2  லட்சம்  கோடி  மதிப்புள்ள  போதைப்பொருள்  கேங்க்ஸ்டர்  க்ரூப்ல  இருந்து  மீட்கப்பட்டு  ஒரு  இடத்தில்  ஒளித்து  வைக்கப்பட்டிருக்கு .அதை  மீட்க  கேங்க்ஸ்டர்  க்ரூப் , போலீஸ்  ,  போலீஸ்  ல  இருக்கும்  கறுப்பு  ஆடு  என  மூன்று  தரப்புக்குள்  நடக்கும்  மோதல் 


 மேலே  சொன்ன  3  சம்பவங்களும்  ஒரு  மையப்புள்ளியில்  இணைவதுதான்  திரைக்கதையின்  சாராம்சம்


 முதல்  பாதி  படத்தில்  ஹீரோவா  ஃபகத்  ஃபாசில்  அதகளம்  பண்ணி  இருக்கார்  .  காருக்குள் ஒருவரை  விசாரித்து  பின்  அவரை  துவம்சம்  செய்து  சிரிக்கும்  காட்சியில்  செம  அப்ளாஸ்.. காதலியிடம்   நான்  என்ன  வேலை  செய்றேனு  மட்டும்  கேட்காதே  என  கண்டிசன்  போடுவதும் ,  வில்லன்  க்ரூப்பால்  அவர்  பிடிபட்டபோது  பதை  பதைப்பதும்   அருமை 


கமல்  ஹீரோவா  நடிச்ச  படங்களிலேயே  அவரோட டாமினேஷன்  இல்லாம கதைக்கு  என்ன  தேவையோ  அதை  மட்டும்  கொடுக்கும்  கேரக்டரில்  கமல் .  அழுத்தமான  நடிப்பு .  பிரமாதமாகப்பேசப்பட்ட  பத்தல    பத்தல  சாங்  எடுபடவில்லை . படத்துக்கும்  பாடலுக்கும்  சம்பந்தம்  இல்லாததால்  அதை  ஓப்பனிங்  சீனாக  வெச்சு  சமாளிச்சாலும்  ஒட்டல  ஒட்டல 


வில்லனாக  விஜய்  சேதுபதி . மாஸ்டர்  பட  சாயல்  தெரியுது.  அது  தெரியக்கூடாதுனு  ஒரு  ட்ரெய்னர்  வேற .. பல  இடங்களில்  மிரட்டலான  நடிப்பு .  க்ளைமாக்ஸ்  ஃபைட்டில்  அரங்கம்  அதிரும்  கைதட்டல் 


அனிரூத்  பிஜிஎம்  அதகளம்.  இண்டர்வெல்  பிளாக் கில்  ஷாக்  சர்ப்பரைசாக  வரும்  பழைய  விக்ரோம்  தீம்  மியூசிக்  வரும்போது  கமல்  ரசிகர்கள்  கொண்டாடுகிறார்கள் 

  ஃபகத்  ஜோடியாக  வரும்  காயத்ரி  கச்சிதமான  நடிப்பு ,  வில்லன்  விஜய்  சேதுபதிக்கு ஜோடிகளாக  வரும்   மகேஷ்வரி  , மைனா  நந்தினி ,   ஷிவானி  நாராயினி  எல்லாம்  எதுக்கு  வர்றாங்கனு  தெரியல . கமலுக்கு  ஜோடி  இல்லை  என்பது  கமல்  ரசிகர்களுக்கு  மட்டுமில்லை  கமலுக்கே  அதிர்ச்சியான  விஷயம்  தான்.  கமல்  கடந்த  25  வருடங்களில்  ஜோடி  இல்லாமல்  லிப்  கிஸ்  இல்லாமல்  நடித்த  முதல் &  கடைசி படம்  இதுவாகத்தான்  இருக்க  முடியும் 

கமல்  தலையீடு  அதிகம்  இல்லாமல்  முழுக்க  முழுக்க  ஒரு  இயக்குநர்  படமாக  வந்திருக்கு மாநகரம்  , கைதி ,  மாஸ்டர்  என  தன்  முந்தைய  படங்களை  விட  இதில்  விறுவிறுப்பு  ஆக்சன்  சீக்வன்ஸ்  அதிகமா  போட்டுத்தாக்கி  இருக்கார்  லோகேஷ்  கனகராஜ்.  நிச்சய  வெற்றி  ஃபார்முலா 


செம்பன்  வினோத்  ஜோஸ்  மிடுக்கான  போலீஸ்  ஆஃபீசர்  நடிப்பு , நரேன்  ஆக்டிங் ,  சூர்யாவின்  மிரட்டலான  கிளைமாக்ஸ்  ஆக்டிங்   எல்லாம்  செம 


 சபாஷ்  டைரக்டர்  


1    படத்தோட  ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோ  கொலை  செய்யப்படுவது  போல்  காட்டுவது  , இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  போல  முதல்  பாதியை  விறுவிறுப்பாகக்கொண்டு  போன  சாமார்த்தியம் 


2   ஒரு  லேடி  ஏஜெண்ட்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்  அவருக்கு  அட்டகாசமான  ஃபைட்  சீன்  வைத்தது அவரது  பாத்திர  வடிவமைப்பு 

3   பங்களாவில்  பாம்  இருக்கு  என  தெரிந்ததும்  வில்லன்  க்ரூப்  தன்  ஆட்களுடன்  வெளியேறும்    காட்சி   அட்டகாசம் . எந்தப்பொருள்  மேலயும்  கை  வைக்காம  வெளியேறனும்  என  விஜய்  சேதுபதி  கூறுவதும்  அதைத்தொடர்ந்து  வரும்  ட்விஸ்ட்டும்  செம 

4  இழவு  வீட்டில்  அழுகை  சத்தம்  வராமல்  அவர்களை  வெளியேற்றும்  காட்சி  , பேரக்குழந்தைக்கு  சத்தம்  ஆகாது  என்பதை  பல  காட்சிகளில்  மெயிண்ட்டெயின்  செய்வது   டைரக்சன்  டச் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


 1  க்ளைமாக்ஸில்  வில்லனாக  வருபவர்  இத்தனை  நாட்களா  என்ன  பண்ணிட்டு  இருந்தார்?இவ்ளோ  கொடூரமான  ஆள்  இவ்ளோ  சம்பவங்கள்  நடந்தும்  வேடிக்கையா  பார்த்துட்டு  இருப்பார் ?  என்பது   நெருடுது 


2  தான்  என்ன  வேலை  பார்க்கிறோம்  என்பதை  காதலியிடம்  சொல்லாத  ஃபகத்  தான்  விசாரிக்கும்  ஆளை காதலி  கண்  பார்வையில்  படும்படி  விட்டு  விட்டு    செல்வது  எப்படி ? 


3   தன்னை  குடிகாரனாக , ஸ்த்ரீலோலனாக  கேரக்டர்  அசாசினேஷன்  செய்து  கொள்ளும்  ஹீரோ அவ்ளோ  சுத்தி  வளைச்சு  அதை  மெயிண்ட்டெயின்  பண்ணற  தேவை  என்ன? ட்விஸ்ட்டுக்கு  வேணா  நல்லாருக்கே  ஒழிய  அந்த  போர்சனே  தேவை  இல்லை  என்பது என்  கருத்து 


4  மருமகள்  மாமனாரிடம்  நீங்க  நல்லவரா?  கெட்டவரா?  எனக்கேட்கும்  சீன்... அது  கூட  தெரியாமலா  அவர்  இருப்பார் 


5  காயத்ரி  ஒரு  முக்கியமான  விஷயத்தை  ஃபகத்க்கு  தெரிவிக்க  அவர்  ஃபோனை  கட்  பண்ணிட்டே  இருக்கார் , வாட்சப்  எதுக்கு  இருக்கு  வாய்ஸ்  மெசேஜ்  அனுப்பி தகவல்  சொல்லி  இருக்கலாமே? 


ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  முகமூடியை  கழட்ட  இன்னொரு  முகமூடி  போட்டவானால் தான்  முடியும் 


2   அந்த  பிராத்தல்  ஹவுஸ்  அட்ரஸ்  என்ன? தப்பா  பார்க்காத  , விசாரிக்க 


இதான்  அது


 என்ன  அப்படிப்பார்க்கறே? நானும்  விசாரிச்சுத்தெரிஞ்சுக்கிட்டதுதான் 


3  ஏங்க  எப்போப்பாரு  அவளே  உங்க  ரைட்  சைடில் இருக்கா. இனி  நாந்தான்  ரைட்  சைடுல  இருப்பேன்


  மனுசனுக்கு   ஹார்ட்  எந்த  சைடு  இருக்கு ?


 ரைட்  சைடு


அப்போ  நீ  அங்கேயே  இரு 


4  நாளைல  இருந்து  குடிக்க  மாட்டேன்


 அப்போ  இன்னைக்கு?


 2  பெக்  மட்டும்  போட்டுக்கறேன்’’


 ஒரு  ஆஃப்  போட்டுக்க . உனக்கு  நிரந்தரமா  எந்தப்பிரச்சனையும் வராது


3   ஏங்க , செத்தாக்கூட  4  பேரு  தூக்க  வருவாங்க  நம்ம  மேரேஜ்  அன்னைக்குக்கூட  4  பேர்  இல்லையே? 


4  ஆமா  இன்னைக்கு   ஏழரை  மணிக்கு மேரேஜ்  இப்போ இந்த  மாதிரி  இடத்துல  எங் கூட  இருக்கீங்க ?வேற   லெவல்  நீங்க 


5  சாவு  பயமே  இல்லாத  என்னை  வாழவே  பயப்பட  வெச்ட்டாங்க 


6   விக்ரமை  யாராலும்  கொல்ல  முடியாது,  ஏன்னா  அவரைத்தான்  ஆல்ரெடி  கொன்னாச்சே?  கோஸ்ட்டாதானே இருக்காரு 


7  ஒன் மேன்ஸ்  டெரரிசம்  ஈஸ்  அனதர்  மேன்ஸ்  ரிவல்யூசன் 


தியேட்டரிக்கல்  அப்டேட்டட்  ட்வீட்ஸ் 


1  கமல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி,படத்தோட ஹீரோ கமல் இல்லை,பகத் பாசில் - இடைவேளை #VikramReview


ஷாக் நியூஸ் 2− வில்லன் விஜய்சேதுபதிக்கு 3 ஜோடி, பகத் பாசிலுக்கு ஒரு ஜோடி,கமலுக்கு ஜோடி இல்லை. மெடிக்கல் மிராக்கிள் #VikramReview


இன்ட்டர்வல் பிளாக் சீன் கமல் படங்களில் இது செமயா வந்திருக்கு,பிஜிஎம் பட்டாசு #VikramReview




 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - விக்ரம் 2022 − சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி பரபரப்பான முதல் பாதி ,தெறிக்க விடும் ஆக்சன் ல பின் பாதி,லோகேஷ் கனகராஜின் 4 வது ஹிட்"படம்.கமல் டாமினேஷன் இல்லாத கமல் படம். பகத்,விஜய்சேதுபதி செம ஆக்டிங்.விகடன் மார்க் 46 ரேட்டிங் 3 / 5 # vikram