சந்தானம்
முதல் சூரி வரை காமெடியன்கள் வந்துகொண்டே இருந்தாலும், இன்றும் காமெடி
சேனல்களில் ஆரவார அப்ளாஸ் வாங்குவது என்னவோ கவுண்டமணியின் காமெடிதானே!
'அவர் காமெடிக்கு முன்னாடி இவங்கள்லாம் நிக்க முடியுமா?’ என்று ஏக்கப்
பெருமூச்சுவிடும் கவுண்டரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி...
கவுண்டமணி
ரிட்டர்ன்ஸ்! 'வாய்மை’ படத்தில் லொள்ளு தில்லு அலம்பல்களுடன் ரீ என்ட்ரி
ஆகவிருக்கிறார் கவுண்டர். ஒதுங்கியிருந்த கவுண்டமணியைக் கைப்பிடித்து
அழைத்து வந்திருக்கும் அறிமுக இயக்குநர் அ.செந்தில்குமாரிடம் பேசினேன்...
''ரொம்ப வருஷமா சினிமாவே வேண்டாம்னு ஒதுங்கியிருந்த கவுண்டமணியை எப்படி உங்க படத்தில் நடிக்கச் சம்மதிக்கவெச்சீங்க?''
''எனக்கே இன்னும் அதை நம்ப முடியலை. படத்தோட
திரைக்கதையில் அழுத்தம் அதிகம். அதைக் கச்சிதமா கொண்டுபோய் ஒவ்வொரு
ரசிகன்கிட்டயும் சேர்க்க ஒரு மாஸ் என்டர்டெயினர் அவசியம். அப்படி யாரு
இருக்காங்கன்னு யோசிச்சா, கவுண்டர் சார்தான் என் ஞாபகத்துல வந்தார். 'அவர்
சினி ஃபீல்டை விட்டு ஒதுங்கிட்டாருப்பா... உன் படத்துல எல்லாம் நடிக்க
மாட்டாரு’னு சொன்னாங்க.
ஆனா, அதெல்லாம் வெளியே இருக்கிறவங்க சொல்றது. நான்
அவரைப் பார்க்கப் போனப்போ, நாலு இயக்குநர்கள் அவர்கிட்ட கதை சொல்லிட்டு
இருந்தாங்க.
நான்
என் படத்தின் கதையை முழுசா சொல்லி, இவ்வளவு அழுத்தமான கதையில நீங்க
இருந்தாதான் நல்லா இருக்கும்னு சொன்னேன். மொத்தமா கால்ஷீட் தேவைப்படும்னு
சொன்னப்பதான் கொஞ்சம் யோசிச்சார். உடனே நான், 'ஷூட்டிங் நடுவுல ஒண்ணு,
ரெண்டு நாள் அப்பப்ப ரிலீஃப் தர்றேன் சார்’னு சொன்னேன். 'இந்தக் கதைல
நான்தானே ரிலீஃப்... அப்புறம் எனக்கு எப்படி ரிலீஃப் தருவே?’னு அவர் பாணில
நக்கல் அடிச்சுட்டு, 'படத்துல நடிக்கிறேன்ப்பா’னு ஓ.கே. சொல்லிட்டார்.
பேசுனதை வெச்சுச் சொல்றேன்... சார் இப்பவும் ஃபுல் ஃபார்ம்லதான்
இருக்கார்!''
''ரீ என்ட்ரிக்கு ஏத்த மாதிரி கதையில அவருக்கு என்ன ஸ்கோப் இருக்கு?''
''படத்தில் கவுண்டர் உலகப் புகழ்பெற்ற இதய சிகிச்சை
நிபுணர். அவர் கேரக்டர் பேர்... டாக்டர் பென்னி. பாகிஸ்தான்ல இருந்து
வந்துலாம் அவர்கிட்ட சிகிச்சை எடுத்துட்டுப் போவாங்க. முல்லைப் பெரியாறு
அணை கட்டுன பென்னி குயிக் மேல இருக்கற மரியாதைல தன் பேரை அப்படி
வெச்சிருப்பார். 'ஐ யம் கம்பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்’னுதான் அறிமுகம்
ஆவார். இன்னும் அவருக்காக நிறைய ஒன் லைனர் பிடிச்சுவெச்சிருக்கோம்.
அதுலாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ். ஆனா, சிரிக்கச் சிரிக்க பஞ்ச் அடிக்கிறவர்
சமயத்துல, சிந்திக்கவைக்கிற கருத்துகளையும் சொல்லுவார். 'இங்கிலீஷ்
பேசும்போது தமிழ் வந்துடக் கூடாதுனு இருக்கற அறிவு... தமிழ் பேசும் போது
இங்கிலீஷ் வந்துடக் கூடாதுனு இல்லையே... ஏம்ப்பா?’ இது அப்படி ஒரு
சாம்பிள்!''
''பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் மூணு பேர் வாரிசுகளையும் உங்க படத்தில் சேர்த்துருக்கீங்கபோல?''
''இந்த மூணு இயக்குநர் களோட படங்களைப் பார்த்துதான்
நான் வளர்ந்தேன். எனக்குள் சினிமா ஆர்வத்தை விதைச்ச வகையில், அவங்க மேல
எனக்கு நிறைய மரியாதை உண்டு. நான் படம் பண்றப்போ என்னால முடிஞ்ச அளவில்
அவங்களுக்கு என் மரியாதையை உணர்த்தணும்னு முன்னாடியே முடிவு
பண்ணியிருந்தேன்.
என் சொந்தத் தயாரிப்பிலேயே இந்தப் படத்தை இயக்குவதால்,
நான் நினைச்சதைப் பண்ண முடிஞ்சது. சாந்தனு நல்ல நடிகர். ஆனா, அவருக்குச்
சரியான ஹிட் அமையலை. இந்தப் படம் அவருக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக்
கொடுக்கும். பாண்டியராஜன் சார் பையன் பிரித்விக்கு சின்ன கேரக்டர் தான்.
ஆனா, ரொம்ப ஷார்ப்பான கேரக்டர். படத்துல வர்ற ஒரு முக்கியமான வசனத்தை மனோஜ்
பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த ஒரு வசனத்துக்காக, நட்புடன்
மனோஜ் நடிச்சுக் கொடுக்கிறார்!''
நன்றி - விகடன்
வாசகர் கருத்து
1. எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு தைரியமாக எல்லோரையும் கிண்டல் செய்த ஒரே
காமெடியன் கவுண்டமணி. ரொம்ப நாள் எங்களைக் காத்திருப்பில் வெச்சுடாதீங்க!
2. கவுண்டமணி என்றால் பெரியவர்களை (அப்பா உட்பட) போடா, வாடா என்று பேசுவது;
தேவை இல்லாமல் அலறுவது; உடற்குறைபாடு உள்ள மனிதர்களை ஏளனம் செய்வது என்று
ஒரு அடிமட்ட "கிண்டல்" இருக்குமே தவிர "நகைச்சுவை" இருப்பது மிகவும்
அபூர்வம். என்ன, சந்தானத்தை விட இவர் தேவலை.
3.