1. ஒரே மேடைல 2 பேரை தாலி கட்டி மேரேஜ் பண்ணப்போறீங்களா?
ஆமா, இதுக்காக 2 மேடையா ரெடி பண்ண முடியும் >?
-----------------------
2. 1000 கிராம் = ஒரு கிலோ கிராம்
1000 கிராமம் = ஒரு கிலோ கிராமம்? # கி கி
----------------------
3.டியர் , உன் உதடு பள பளனு மின்னுதே , என்ன விசேஷம்?
விழாக்கால சிறப்பிதழ்
-------------------------
4. பிரிமியர் கார் நிறைய எதுக்கு நிறுத்தி வெச்சிருக்கீங்க?
பட ரிலீஸ்க்கு முன் பிரிமியர் ஷோ பார்க்கனும்னு நச்சரிக்கும் வி ஐ பி ங்களை இங்கே கூட்டிட்டு வந்துடுவோம்
------------------------------------
5. அத்தான்! இனிமே உங்களை அடிக்க மாட்டேன்னு உங்க தலை மேல சத்தியம் செய்யச்சோன்னீங்களே? அதான்
மேடம். யார் நீங்க? நான் எங்கே இருக்கேன்? என் தலைல ஏன் இவ்ளவ் ரத்தம் ?
----------------------------
6. கட்சில தலைவரை கட்டம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க போல
எப்படி சொல்றே?
ப்ளெயின் சட்டை போட்டவர் இப்போ கட்டம் போட்ட சட்டை போட்டிருக்காரே?
-------------------
7.டாக்டர், சின்ன வயசுலயே எனக்கு இள நரை வந்துடுச்சு
அப்டியா? என்ன வயசு உங்களூக்கு ?
67
------------------
8. மூடு வர வைக்க என் கிட்டே ஒரு மந்திரம் இருக்கு, ஆனா அதை நான் சொல்ல மாட்டேன் .
ம் ம் ஒரே மூடு மந்திரமா இருக்கே உன் பேச்சு
-----------------------
9. எனக்கு வயசாகிடுச்சோன்னு டவுட்டா இருக்கு.
ஏன்?
குழந்தை பெத்துக்கலாமா?ன்னு கேட்டா சங்கூதற வயசுல சைல்டு கேக்குதா?ங்கரா
--------------
10. வீட்டோட மாப்ளையா இருப்பதால் பலகாரம் நான் தான் சுடுவேன், முறுக்கு சுட்டிருக்கேன் , எப்டி?ன்னு சாப்டு சொல்லுங்க
ஓஹோ! இதுதான் மாப்ளை முறுக்கா?
--------------------
11. டாக்டர் ! வாக்கிங்க் போனா கால் வலிக்குது
இதை ஏன் என் கிட்டே சொல்றே?
நீங்க தானே கால்நடை டாக்டர்?
----------------------------
12. நரியை வெட்டுனதா ப்ளூ கிராஸ்ல புகார் கொடுத்திருக்காங்க
விலையாடாதீங்க யுவர் ஆனர் , நான் வெட்னரி டாக்டர் , ஆபரேஷன் பண்றப்ப வெட்னது தப்பா?
-------------------
13. நீங்க எந்த கட்சிலயும் இல்லை, ஏன் கட்சிக்கரை வேட்டி கட்டி இருகீங்க?
கரை நல்லதுன்னு சொன்னாங்களே?
------------------
14. மாப்ளை ரயில்வே ல டி டி ஆரா இருக்கார்
கண்டக்டரா? சாரி
---------------
15. தலைவர்க்கு சினிமா நாலெட்ஜ் இல்லைன்னு எப்டி சொல்றே?
ஹாலிவுட் படமான அன்ன கரீனாவுல ஹீரோயின் கரீனா கபூரா?ன்னு கேட்கறாரே?
------------------