1. தலைவர் சரியான சிக்கன் பிரியரா இருக்கார்னு எப்படி சொல்றே?
ரைட்டர் வாமு கோமுவை தெரியுமா?ன்னு கேட்டா ஈமு பிராய்லர் வேணா தெரியும்கறாரே?
------------------------------------------
2. எல்லா மட்டத்துலயும் எனக்கு ஆளுங்க இருக்காங்க..
எல்லாரும் மட்டமான ஆளுங்கனு சொல்லுங்க./.
---------------------------------
3. சாமியார்க்கு 2 செட்டப்னு எப்படி சொல்றே?
மங்களம் உண்டாகட்டும், ஜெயம் உண்டாகட்டும்னு 2 லைனையே திருப்பி திருப்பி சொல்றாரே?
--------------------------------------
4. ஈ என் டி ஸ்பெஷலிஸ்ட் ஏன் அலறி அடிச்சுட்டு ஓடறார்?
நான் பேசறது எனக்கே கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்
----------------------------------
5. பால் எத்தனை வகைப்படும்?
ஆண்பால், பெண்பால், அமலா பால், லோக்பால் என 4 வகைப்படும் டீச்சர்..
-------------------------------------
6. மவுனகுரு படத்துக்கு தடை வருதாமே? ஏன்?
டைட்டில்ல ஒரு நாட்டோட பிரதமரையே நக்கல் அடிச்சா சும்மா விட்ருவாங்களா?
-------------------------------------
7.அர்ஜெண்ட்டினா - சிறு குறிப்பு வரைக..
அவசர புத்தி உள்ளவர்கள் அதிகம் இருக்கும் நாடு டீச்சர்.
--------------------------------------------
8. லோக்பால் சட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியுமா தலைவரே?
ராஸ்கல், கட்டம் கட்ட என் கிட்டேயே ஐடியா கேட்கறியா?
------------------------------------------
9. ஜட்ஜ் - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துடறதா உங்க மேல குற்றச்சாட்டு
நடிகை - ஸாரி யுவர் ஆனர், எங்கப்பா தூக்க மாத்திரை டிஸ்ட்ரிபியூட்டர் . அவர் தொழிலுக்கு ஹெல்ப் செஞ்சேன்.
--------------------------------------------------------
10. நம்ம எல்லோருக்கும் மேல ஒரு பவர் இருக்குன்னு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது தப்பா போச்சு..
ஏன் தலைவரே?
நன்றி-ன்னு பவர் ஸ்டார் சீனிவாசன் மெசேஜ் அனுப்பி இருக்கார்..
-------------------------------------
11. எனக்கும், அந்த ஹீரோவுக்கும் எந்த கனெக்ஷனும் கிடையாது
பொய், 2 பேருமே ஏர்செல் கனெக்ஷன் தான் வாங்கி இருக்கீங்க..
---------------------------------
12. மேடம், எதுக்காக கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தங்குனீங்க?
காதலனுடன் ஒரே அறைல தங்க ஹோட்டல்ல ரூம் கிடைக்கலை
---------------------------------------
13. தலைவரே, ஊர்ல கலவரம் நடக்குது , என்ன பண்ன?
வேடிக்கை மட்டும் பாருய்யா.. நாளைக்கு நான் வந்து ஆறுதல் சொல்லிக்கறேன்..
--------------------------------------
14. தலைவர் திடீர்னு கூடன் குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாரே?ஏன்?
அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்க்கு வெளி நாட்ல இருந்து பணம் வருதுன்னு ஒரு நியூஸ் வந்ததாம்..
------------------------------------------
15. பத்திரிக்கை சுதந்திரத்தை தலைவர் ஏன் கண்டிக்கறாரு?
அவர் மேல ஏகப்பட்ட குற்றபத்திரிக்கை வந்தாச்சாம்..
-------------------------------------------
16. ஸாரி சார்.. கால்ஷீட் ரொம்ப டைட்டா இருக்கு, டேட்ஸ் தர முடியாது..
மேடம், பக்கத்துல தானே இருக்கு, குனிஞ்சு லூஸ் பண்ணிக்குங்க
---------------------------------------
17.ஸாரி சார், ஃப்ளைட்ல இடம் இல்லை.. ஆல் டிக்கெட் ஃபுல்..
நோ பிராப்ளம் சார்.. ஸ்டேண்டிங்க்ல வந்துக்கறேன்
---------------------------------------
18. தலைவர் ரொம்ப வெளிப்படையானவர்னு எப்படி சொல்றே?
உண்ணா விரதம் இருக்கும் நேரம் காலை 9 டூ 12 , மதியம் 3 டூ 7 , இரவு 10 டூ 7 என போர்டு வெச்சிருக்காரே..
----------------------------------------
19. தலைவரே! மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கு?
மத்திய அரசின் செயல்பாடு எங்கே இருக்கு?
---------------------------------------
20. போலீசார் மீது கல்வீச்சு நடத்தி இருக்கீங்களே, ஏன்?
பாறாங்கல் வீச்சு நடத்தி இருக்கனும் , கைக்கு சாதா கல் தான் சிக்குச்சு
-----------------------------------
-----------------------------------