Showing posts with label வாயை மூடி பேசவும். Show all posts
Showing posts with label வாயை மூடி பேசவும். Show all posts

Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

 

 கோடம்பாக்க செண்ட்டிமெண்ட்படி முதல் படம் ஹிட் ஆனா அந்த இயக்குநரின் 2 வது படம் ஊத்திக்கும். ஆர் பார்த்திபன் ( புதிய  பாதை மாஸ் ஹிட் , பொண்டாட்டி தேவை அவுட்) , ஆர் பாண்டியராஜன் ( ஆண் பாவம் ஹிட் , மனைவி ரெடி ஓடலை . கன்னி ராசி -னு அவர் ஆல்ரெடி படம் கொடுத்தாலும் ஆண் பாவம்-ல தான் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட்) , விக்ரமன் ( புது வசந்தம் செம ஹிட் , பெரும்புள்ளி ஃபிளாப் ) இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம் . ஆனா முதல் படமான காதலில் சொதப்புவது எப்படி  ? ஹிட்  கொடுத்த இயக்குநர்  பாலாஜி மோகன் அந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்து குவாலிட்டியில்  முதல் படத்தை விட  2 படி தாண்டி இருக்கிறார். இது மாதிரி பரீட்சார்த்தமான புது முயற்சிகளுக்கு ஆதரவு தருவோம் .


பனிமலை அப்டி -னு ஒரு ஊரு.அங்கே புதுவிதமான வைரஸ் நோய் பரவுது. அதாவது யாராவது பேசினா அருகில் இருப்பவருக்கு அந்த  நோய் பரவும் . பேசும் சக்தியை இழந்துடுவாங்க . அரசாங்கம் சுகாதாரத்துறை அமைச்சரை அங்கே அனுப்பி சரி பண்ணப்பார்க்குது. ஆனா நோய் முற்றி ஒரு நபருக்கு மரணம் சம்பவிக்குது.இதனால மக்கள் பீதி ஆகிடறாங்க . யாரும் பேசவே கூடாதுன்னு ஊரில் தடை விதிக்கப்படுது .அதுக்குப்பிறகு என்ன ஆச்சு என்பதே கதை . 

 கேட்பதற்கு ஏதோ சயின்ஸ் சப்ஜெக்ட் மாதிரி சீரியசா இருந்தாலும்  இதை எவ்வளவு காமெடியா சொல்ல முடியுமோ அந்த அளவு  காமெடி ட்ரீட்மெண்ட் ல சொல்லி  இருக்கார் இயக்குநர் . இடைவேளைக்குப்பின் படம்  கமல்-ன் பேசும் படம் மாதிரி வசனமே இல்லாம 1 மணி நேரம். அதை போர் அடிக்காம சொன்னது இயக்குநர் சாமார்த்தியம் 



ஹீரோ புதுமுகம் . துல்ஹர் சல்மான் .மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் .கற்றது தமிழ் ஜீவா +  சிவகார்த்திகேயன் இருவரையும் கலந்து கட்டி அடிச்ச முகச்சாயல் .தமிழ் சினிமாவுக்குக்கிடைத்த நல்ல வரவு . மார்க்கெட்டிங்க் எக்ஸ்க்யூட்டிவாக வரும் இவரது துறுதுறுப்பான நடிப்பு , சிரிச்ச முகம் , பாசிட்டிவான பேச்சு பிளஸ் பாயிண்ட் . பேசியே இவர் எல்லோரையும் வசீகரிப்பது நம்பும்படி  இருக்கு . மலையாள சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்


 ஹீரோயின் நஸ்ரியா நசீம் . பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட மாப்ளை தன் மனம் கவரவில்லை , தன் எண்ணங்களை மதிப்பதில்லை என்ற குறைபாடு முகத்தில் வர படம்  பூரா கடு கடு முகமாக வர வேண்டிய நிர்ப்பந்தம் . ஹீரோவுடனான காட்சியில் மட்டும்  சிரிக்கிறார் .  டாக்டராக வரும்  இவர் டாக்டருக்கான கம்பீரம் இல்லாதது  ஒரு மைனஸ் . ஜவ்வு மிட்டாய்  கண்டதும் விழி விரிய சிரிப்பது இன்னும் கண்ணுக்குள் நிக்குது .பாடல் காட்சியில் கூட லட்சுமிமேணன் மாதிரி இடை காட்ட மாட்டேன் என அடம் பிடிக்கும் கண்ணியம் . அவரை ஏமாற்றி கேமரா அவர் முதுகுக்கு க்ளோசப் வைப்பது தனி டிராக் 

  காதலில் சொதப்புவது எப்படி படத்தில் வந்த காமெடியன் அர்ஜூன் காதல் டிராக் கலக்கல் .  அவருக்கு  ஜோடியாக வரும் ஃபிகர் கூட  வேடந்தாங்கல்க்கு வந்த வெண்ணிறப்பறவை போல் ஜொலிக்கிறார். 


 


குடிகாரர் சங்கத்தலைவராக வரும்  ரோபோ சங்கர்  கேப்டனை பாடி லேங்குவேஜில் பிரதி எடுத்து கலக்கல் காமெடி பண்றார் , அவர் நாக்கை மடிச்சு டயலாக் பேசும் ஸ்டைலில் தியேட்டர் அதிருது கை தட்டலால் 


 மொக்கைப்படங்களாக நடித்து ஹிட் ஆகும்  ஹீரோவாக ஜான் விஜய் . அப்ளாஸ் அள்ளுகிறார் . இவர் நடிகர் விஜயைத்தான் நக்கல் அடிக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி 

சுகாதாரத்துறை அமைச்சராக வரும் ஆர் பாண்டியராஜன்  செம கலக்கல் செலக்‌ஷன் . அவரும் , அவர் பி ஏ வும் வரும் காம்பினேஷன் காட்சிகள்  அற்புதமான நகைச்சுவை தருணங்கள் 


இத்தனை பேர் காமெடி பண்ணுவது போதாது என்று அனைத்துக்கும் சிகரம் வைக்கும் விதமாக பட இயக்குநரே  டி வி செய்தி வாசிப்பாளராக வந்து செம கலாய் கலாய்ப்பது பிளஸ் .  டெம்ப்ளேட்டான நியூஸ் ரீடர் கேரக்டர்களையே பார்த்துச்சலித்த நமக்கு அவர்  நியூஸ் வாசிக்கும் டயலாக் டெலிவரி  வசீகரிக்கிறது 


நாயகியின் சித்தியாக வரும்  மதுபாலா   (ரோஜா புகழ் ) காமாலை நோய் வந்த  பூமாலை மாதிரி இளைச்சு சோபை இழந்து  இருக்கார் . அவர் ஜாக்கெட் லூஸ்  ஃபிட்டிங்கே அவர் இளைப்பை பறை சாற்றுகிறது . தனது நாவல் பாராட்டப்படும்போது அவர் காட்டும் ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ்  சோ  க்யூட் 

 வினுச்சக்ரவர்த்திக்கு  ஒரு செண்ட்டிமெண்ட்  ரோல்









இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  முற்றிலும்    புதிய களத்தை தேர்வு செய்தது . சீரியசான கதையில் நகைச்சுவையாக  திரைக்கதை எழுதியது .பாத்திரத்தேர்வுகள் கன கச்சிதமாக செய்தது


2  ஹீரோவைப்பார்த்ததும்  ஹீரோயின்  டக் என தன் கை விரலில்  இருக்கும்   நிச்சயதார்த்த மோதிரத்தைக்கழட்டி மறைப்பது . படிப்படியாக அவர்  ஹீரோ மேல் காதலில்  விழுவது 


3 ரோபோ சங்கர் -  ஜான்  விஜய் காம்பினேஷன் காட்சிகள் படத்துக்குப்பெரும் பலம்  . ஏழாம் அறிவு , கில்லி படங்களை கிண்டல் அடிக்கும் ஆரோக்யமான காமெடி  கலக்கல் ரகம் 


4 நஸ்ரியா   ரோஸ் கலர்  மிடியில் வரும் காட்சியில்   கேமராமேன்  தரையோடு தரையாகப்படுத்து கேமராவை  ஜூம் செய்தது  ஹெலிகாப்டரில் மம்மி  வானில்  போகும்போது நம்ம அமைச்சர்கள் சாஷ்டாங்கமாய் மண்ணில் விழுவது போல் 


5 காதல் நரம்புகள் பாடல் படமாக்கப்பட்ட விதம் , ஆர்ட் டைரக்சன்  குட் 

 6  பின் பாதியில் வசனமே  இல்லை என்பதால் பின்னணி இசைக்கு  கொழுத்த தீனி . வெரிகுட் பிஜிஎம்


7 பஸ் ஸ்டாப்பிங்கில் அடிச்சுக்கொள்ளும்  தம்பதி ,  அந்த காமெடி எப்பிசோடு  இன்னும் 6 மாசத்துக்கு டி வி யில்  ரிபீட்டாகும் கலக்கல் காமெடி 






இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  டாக்டராக வரும்  நாயகி நஸ்ரியா  நாயகனுக்கு சிகிச்சை அளிக்கும்போது கையில்  கிளவுஸ் கூட போடாமல்  இருப்பது எப்படி ? வைரஸ்  நோய் தொற்று நோய் எனத்தெரிந்தும் அவர் முகத்தில் மாஸ்க் இல்லாமல் செக் செய்வது ஏன் ? 


2 ஹீரோ பணி  புரியும் கம்பெனி இந்த  நோய் காரணமா திடீர் என  மூடப்பட்டதாய்  ஒரு காட்சி வருது . அவர் வாட்ச் மேனால் விரட்டப்படறார்., அடுத்த காட்சியிலேயே அவர் தன் கம்பெனி பிராடக்டை சேல்ஸ் பண்ற மாதிரி காட்சி .  கண்ட்டிநியூட்டி  பிராப்ளமா? 

3 நாயகிக்கு  நிச்சயிக்கப்பட்ட மாப்ளை   அப்படி என்ன  பெரிய  தப்பு பண்ணிட்டார்?  நாயகியின்  ரசனைகளை  மதிக்கலை. இது எல்லா ஆண்களுக்கும்  பொதுவான ஒன்றுதானே ?  அந்த  ஒரே ஒரு காரணத்துக்காக நாயகி விலகுவது அழுத்தமாப்படலை 


4  பின் பாதியில்  திரைக்கதை   தடுமாறுகிறது . இன்னும்  பிரமாதப்படுத்தி  இருக்கலாம்.  பி சி செண்ட்டர் ரசிகர்கள்  பின் பாதி படத்தை ரசிப்பது சிரமம் . 


5 தொற்று  நோய் பரவுவது  தெரிந்தும் மக்களிடையே ஒரு  குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட இல்லாமல்   இருப்பது மைனஸ் . அட்லீஸ்ட் எல்லோரும் முகத்தில் மாஸ்க் அணிந்த்ருப்பது போலாவது காட்டி  இருக்கலாம் 

6  அமைச்சர்  வாய்ல வைக்கறேன்னாரு காமெடி  கொஞ்சம்  முகம் சுளிக்க வைக்கும்  டபுள்  மீனிங்க் காமெடி . அதை தவிர்த்திருக்கலாம் . அதற்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அபாரம் என்பது தனிக்கதை 





மனம் கவர்ந்த வசனங்கள்


கணவன் -நீ என் ஒயிஃபை ட்ரை பண்ணியா?

ஹீரோ -இவங்களைப்போய் எப்படி? ச்சே சே!

 மனைவி -யோவ்! எனக்கென்ன குறைச்சல்? # வா மூ பே



2 ரணகளத்துலயும்  ஒரு கிளுகிளுப்பு. ரேடியோ ஜாக்கி பாலாஜிக்கு  குரல் போனதைப்பல சினிமா தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் ஸ்வீட் கொடுத்துக்கொண்டாடினர்



3 நான்   யார்  கிட்டேயாவது   பேசிப்பார்த்திருக்கியா? 


 மத்தவங்களும் நானும் ஒண்ணா?  


மிஸ்! உங்க  மூஞ்சியைப்பார்த்தா  என் பின் மண்டையைப்பார்த்த மாதிரி  இருக்கு . சாரி  பின்னாடி பார்த்த மாதிரி . அய்யோ , சொதப்பிட்டேனே . முன்னாடி எல்லாம் கரெக்டா  இருக்கு

  யோவ் !

5  மினிஸ்டர் - இந்த  ஊரை  விட்டு  யாரும் போக வேண்டியதில்லை . எந்த ஆபத்தும்  இல்லை

 அப்போ  நீங்க ?

 அய்யய்யோ . நான்  போயிடுவேன்


6  உதவின்னு  யார் கேட்டு எப்போ என்  கிட்டே வந்தாலும் நான்  முடியாதுன்னு சொல்லிடுவேன்


7  ஏத்தறதும் , இறக்கறதும் என் சவுகர்யம் . இது என் பிராப்பர்டி  ( டபுள்  மீனிங்)


8   எங்க  ஹீரோ டைரக்டர்  சொல்றதையே கேட்க மாட்டார் . நீங்க சொல்றதையா  கேட்கப்போறார்  ?


9 பொதுவாப்பொண்ணுங்க  தான் பாய்சை கண்ட்ரோல் பண்ணுவாங்க , உன் விஷயத்துல  உல்டாவா  இருக்கே?

 யாரும்  யாரையும் கண்ட்ரோல் பண்ணலை



10  இந்த  ஜவ்வு மிட்டாய் மாதிரி நம்ம ஃபிரண்ட்ஷிப்  வளர்ந்துட்டே இருக்கனும்


11 நம்மளை  மீறி நடக்கற விஷயத்தை நினைச்சுக்கவலைப்பட்டுட்டு  நம்ம கண்ட்ரோல்ல இருக்கற விஷயத்தைக்கோட்டை விட்டுடறோம் # வா மூ பே


12  நீங்க  நீங்களாவே இருங்க, அதான் உங்களுக்கு அழகு


13 சார், சிக்னேச்சர் 1 போடனும் .



 சலம்பல் சரக்கு பார்ட்டி ரோபோசங்கர் = ஆல்ரெடி அதான் ( அந்த சரக்குதான் ) போட்டிருக்கேன் # வா மூ பே


14  உன்  பலம்  உன் பேச்சில்  இல்லை . மனசில் . எந்த எதிர்பார்ப்பும்  இல்லாத மனசு



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S



1. படம் ஓடப்போகும் நிமிடங்கள் = ட்விட்டர் லிமிட் = 140 = வாயை மூடிப்பேசவும் @ ஈரோடு VSP

2 புதிய கதைக்களம்.திரைக்கதை ,கேரக்டரைசேசனில் கே பாலச்சந்தர் டச். அபாரமான ஓப்பனிங் #,வா மூ பே


3 ஏ சென்ட்டர் ரசிகர்களின் ஆரவாரமான கை தட்டலுடன் அபாரமான காமெடி ட்ரீட்மென்ட் வசனங்கள் #,வா மூ பே

4    காதலில் சொதப்புவது எப்படி? ,வாயை மூடிப்பேசவும் 2 தொடர் ஹிட் கொடுத்த இயக்குநர் ஃபாலோ பண்றவங்க பண்ணிக்குங்க ;-)










சி பி கமெண்ட் -வாயை மூடிப்பேசவும் -புதிய கதை ,நேர்ததியான திரைக்கதை = கொண்டாடப்படவேண்டிய காமெடிக்கலக்கல் -விகடன் ஆல்ரெடி 50 மார்க் கொடுத்த மூடர் கூடம்  படம் போல் காமெடி, மொழி படம் போல் மனதைத்தொடும் காதல் கதை இரண்டும் கலந்த கலவை.  ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன். இந்தப்படம்  பி சி  யில் சுமாராத்தான்  போகும் . மீடியாக்கள் விமர்சனம் வந்த பின் ஏ செண்ட்டரில்  செம பிக்கப் ஆகி ஓடும் .2014-ன் முக்கியமான காமெடிப்படம்

 இது   மலையாளத்தில் Samsaaram Aarogyathinu Haanikaram  என்ற பெயரில்  ரிலீஸ் ஆகுது .



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 50





குமுதம் ரேட்டிங்க் = நன்று


 ரேட்டிங்  =  4 / 5