Showing posts with label வானம் கொட்டட்டும் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வானம் கொட்டட்டும் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, February 10, 2020

வானம் கொட்டட்டும் - சினிமா விமர்சனம்

Image result for வானம் கொட்டட்டும்


இயக்குநர் மணிரத்னம் இயக்கிய மவுன ராகம் கதையை அவர் கிட்டேயே சொல்லி  மணி தயாரிப்பாக காபிபேஸ்ட் இயக்குநரான அட்லி ராஜாராணியாக பிள்ளையார் சுழி போட்டு தமிழ் சினிமாவில் ஒரு புதிய திருட்டு கலாச்சாரத்தை ஆரம்பிச்சு வைத்தார். இப்போ அதே மணிரத்னம்  ராமராஜன் நடித்து வி அழகப்பன் இயக்கி 

28/10/1989 ல  ரிலீஸ் ஆன தங்கமான ராசாவை பட்டி டிங்கரிங் பண்ணி கதை வசனம் எழுதி தன் பேர் ரிப்பேர் ஆகக்கூடாதுனு வேற ஒருவர் டைரக்சன்ல ரிலீஸ் பண்ணி இருக்கார்


பகை காரணமா 2 கொலை பண்ணிய ஹீரோ 16 வருசம் ஜெயில்ல இருந்துட்டு ரிலீஸ் ஆகி வர்றப்போ கொலையான ஆளின் மகன்கள் 2 பேர் அவரை பழி வாங்க துடிக்கறாங்க . ஹீரோவும் , அவரோட மகனும் எப்படி அதை ஃபேஸ் பண்றாங்க என்பதே இந்த திருட்டுக்கதையின் சாராம்சம்


ஹீரோவா  சரத்குமார் . கம் பேக் மூவி . நட்புக்காக படத்துல நடிச்ச ஓல்டு கெட்டப் அனுபவம் அவருக்கு கைகொடுக்குது, குறை சொல்ல முடியாத நடிப்பு


 அவருக்கு இணையா நிஜ வாழ்வில் இணையான சித்தி ராதிகா . பாந்தமான நடிப்பு . இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி கிருக்கு

 இருவருக்குமான காம்போ காட்சிகள் திரையில் வரும்போது ஆடியன்சின் சலசலப்பு  முணூமுணுப்பு   கேட்கிறது . எல்லாம் வரவேற்பான கமெண்ட்ஸ் தான்


மகனாக விக்ரம் பிரபு , மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ். இருவரது கேர்கடர் ஸ்கெட்சும் அருமை

 ஐஸ்வர்யா ராஜேஷின் பாய் பெஸ்டியாக சாரி பாய் பெஸ்டிகளாக  இருவர் , இருவரில் ஒருவர் சாந்தனு. வந்தவரை சிறப்பான நடிப்பு


நாயகியாக மடோனா செபாஸ்”டீன்”. அழகு பொம்மை . காதல் வயப்படுவதை பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் காட்டவேண்டிய இடங்களில்  ம”டாண்” சபாஷ் டின்



 இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒரு கேரக்டர் ரோல் பண்ணி இருக்கார் , பண்பட்ட நடிப்பு . பொதுவாக இயக்குநர்களே நடிகர்களாக மிளிரும்போது பொறுப்பு உணர்ந்து நடிப்பார்கள்

இசை சுமார் தான், ஒரே பாடு ஹம்மிங்க்கை படம் பூரா வலம் வர விட்டா ஹிட் ஆகிடும்னு யாரோ அடிமனசுல ஆழ விதைச்சிருக்காங்க .

 ஒளிப்பதிவாளர்ட்ட இது மணி படம் , அவர் படம் மாதிரியே கேமரா ஆங்கிள் இருக்கனும், லைட்டிங் இருக்கனும்னு சொல்லி வெச்சு கூட்டிட்டு வந்த மாதிரி இருக்கு


90ஸ் கிட்ஸ் தவிர மத்தவங்க தங்கமான ராசா பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் இது ஹிட் அடிச்சிடும்


நச் வசனங்கள்

பெரிய மனுஷங்க தப்பு பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா பெரிய தப்பாதான் பண்ணுவாங்க #VaanamKottatum


2  புத்தி வேணாம்னு சொல்லும்,மனசு வேணும்னு சொல்லும்,அப்போ நீ யார் பேச்சைக்கேட்பே?
மனசு சொல்றதைக்கேட்டு நடந்தா வாழ்க்கைல ஜெயிக்கலாம் #VaanamKottatum


நல்லது,கெட்டது ல எனக்கு நம்பிக்கை இல்லை,எனக்கு இருக்கற ஒரே நம்பிக்கை நான்தான்,என்னை மட்டும்தான் நான் நம்பறேன் #Vaanamkottattum





தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

வழக்கமாக வேறு ஒருவர் தயாரிப்பில் படம் இயக்கும்போது பிரம்மாண்டமாக செலவு செய்யும் ஷங்கர் தனது"சொந்தத்தயாரிப்புன்னா லோ பட்ஜெட்ல எடுக்கற மாதிரி ரத்தினசுருக்கமா தான் இயக்கும் படங்களில் வசனம் வைக்கும் மணிரத்னம் தன் தயாரிப்பு படத்தில் முழம் நீளத்துக்கு வசனம் #VaanamKottatum


மேகம கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு பாடல் பல்லவி ல இருந்து டைட்டில் எடுத்திருக்காங்க,ஆனா கதைக்கு பொருத்தம் இல்லாத"டைட்டில். என் மனசுக்கு தோன்றிய டைட்டில்
வாழையடி வாழை , பகை #VaanamKottatum






சபாஷ் டைரக்டர்


1 சரத் ராதிகா காம்போ காட்சிகள் லேடீஸ் செண்ட்டிமெண்ட் டச்

2   கேர்க்டர் ஸ்கெட்ஸ் அருமை .

3 பங்களிப்பார்கள் அனைவரது நடிப்பும் கனகச்சிதம்

4  வாழை மரத்தோப்பு ஏரியல் வியூ , லொக்கேஷன் அட்டகாசம் 


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1− ஹீரோ வாழைக்காய் ஹோல்சேல் பிஸ்னெஸ் பண்றார்.அவரைப்பார்த்து ஒரு கட்டத்தில் கோபமா ருபாக்கு 4 rsக்கு 2 னு வாழைக்காயை கூறு போட்டு விக்கறவன்தானே?னு ஒரு எள்ளல் வசனம்
1 வாழைக்காய் ரீட்டெய்ல் பிஸ்னெஸ் பண்ணலை அவரு; 2 வாழை விலை ரூ 2 லிருந்து ரு 3 வரை #VaanamKottattum


16 வருசம் தண்டனை பெற்ற கைதியான கணவனை ஜெயிலில் பார்க்கச்செல்லும் மனைவியின் வசனம் " நானா இளமையா இருக்கேன்,பாதி"தலைமுடி நரைச்சிருக்கு



ஆனா காட்சில ராதிகாக்கு கமல்"மாதிரி ஸ்டைலிஸா சும்மா 4 முடி மட்டும் நரைச்சிருக்கு. #VaanamKottattum


3 லாஜிக் மிஸ்டேக் 3− பாக்ஸ் ல 15 கிலோ னு பிரிண்ட் பண்ணி இருக்கு.அந்த பாக்ஸ் இருக்கற சைஸ்க்கு 5 கிலோ கூட வாழைக்காய் வைக்க"முடியாது #VaanamKottattum

4 லாஜிக் மிஸ்டேக் 4− சரத்"கிட்டே செல்போன் இருக்கு,ஒரு"டைம் சொல்லாம கொள்ளாம ஆந்திரா போய்டறார்.அவரோட செல்லுக்கு"ட்ரை பண்ணாமயே ஆளாளுக்கு"பதர்றாங்க.ஸ்டேஷன்"ல புகார் பண்ணப்போறாங்க ,அட்லீஸ்ட் செல் நாட் ரீச்சபிள்னு டயலாக்காவது வெச்சிருக்கலாம் #VaanamKottattum


5 லாஜிக் மிஸ்ட்டேக் 5− சரத் ராதிகாவுக்கு ஜவுளிக்கடைல ஒரு பட்டுப்புடவை எடுத்துத்தர்றாரு,இந்த சிவப்புச்சேலை உனக்கு செம மேட்ச்ங்கறாரு,ஆனா அது வாடாமல்லி / டார்க் பிங்க் #VaanamKottattum


6 அப்பா மாதிரியே ஹீரோ முரட்டுத்தனமான கேரக்டர்.சண்டை ,அடிதடி னு இருக்கறவர்,திடீர்னு எந்த"புள்ளில திருந்துனாரு?னு சொல்லவே"இல்லை.மனசை மாத்தற மாதிரி ஒரு சம்பவம் வெச்சிருக்கனுமில்ல?திடீர்னு விக்ரமன் பட ஹீரோ மாதிரி பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணி பெரிய ஆள் ஆகறாரு #VaanamKottatum


7 லாஜிக் மிஸ்டேக் 7 − வில்லன் மனநிலை சரியில்லாதவன்கற டயலாக் படத்துல அடிக்கடி வருது.அந்த டயலாக்கை சொன்னவரே அவன் மட்டும் அந்தக்கொலையை பண்ணிட்டா போலீஸ்ல மாட்டிக்குவான்,ஜெயிலுக்குப்போய்டுவான்கறாரு.மனநிலை பாதிக்கப்பட்டவங்க எப்டி ஜெயிலுக்கு போவாங்க? #VaanamKottatum

8 அப்பாவைக்கொன்னவனை பழி வாங்க 16 வருசம் விரோதத்துடன் காத்திருக்கும் வில்லன் க்ளைமாக்ஸ்ல சரத் "வாடா ,வா வந்து என்னைக்கொல்லு "னு சொன்னதும் திருந்திடறார்.இது சசிகலாபுஷ்பா பாஜக வுக்கு பல்டி அடிச்சதை விட பெரிய கொடுமை #VaanamKottatum

9 ஹீரோ இப்பதான் கடனை வாங்கி தொழில் பண்ண ஆரம்பிச்சிருக்கார்.அப்போ ஹீரோயின்"வந்து "அப்பா ,தொழில் ல நட்டம். 2 கோடி ரூபாக்கு பேங்க்ல ஜாமீன் சைன்"பண்ணுனு கூப்பிடறார். 2 கோடிக்கு அஸ்சூரன்ஸ் தரனும்னா அவர் கிட்ட சொத்து மதிப்பு 3 கோடி இருக்கனும்.ஆனா ஹீரோ எப்டி சமாளிச்சாரு? #VaanamKottatum






 விகடன் மார்க் ( யூகம்)   = 43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)=  3.5 / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்  3/5( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-வானம் கொட்டட்டும் − பெண்களைக்கவரும் கதை அமைப்பு,பிலிம் மேக்கிங் மணிரத்னம் ஸ்டைல், பிரமாதமான கேரக்டர் ஸ்கெட்ச், சித்தி,சித்தப்பாவின் கெமிஸ்ட்ரி,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ரம்பிரபு,சாந்தனு குட் ஆக்டிங் ,சென்ட்டிமெண்ட் டச் ,விகடன் 43 ,ரேட்டிங் 3 / 5 #VaanamKottattum