Showing posts with label வா இந்தப்பக்கம் (1981) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வா இந்தப்பக்கம் (1981) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, April 07, 2024

வா இந்தப்பக்கம் (1981) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி டிராமா ) @ யூ ட்யூப்


ஒளிப்பதிவாளர் பி சி  ஸ்ரீ ராமின்  முதல்  படம்  இதுதான்  என்பது  பலருக்கும்  தெரியாத  ஒரு  விஷயம். எல்லோருமே  பூவே  பூச்சூடவா அல்லது  மவுன  ராகம்  தான்  அவரது  முதல்  படம்  என  நினைத்திருக்கிறார்கள் . முதல்  படம்  கிராமிய  சப்ஜெக் , லோ  பட்ஜெட்  படம்  என்றாலும்  பாடல் காட்சிகளில்  தன்  முத்திரையைப்பதித்திருக்கிறார். இயக்குநர்  மவுலிக்கு  இது  மூன்றாவது  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  லாட்ஜ் கம்    ஹோட்டலில்  ரிசப்ஷனிஸ்ட்  கம்  மேனேஜர்  ஆக  இருக்கிறார். தனக்கு  வரப்போகும்  மனைவி  மாடர்ன்  கேர்ள்  ஆக  இருக்க  வேண்டும்  என்பது  அவரது  விருப்பம், ஆனால்  கிராமத்துப்பெண்  தான்  அமைகிறார்.


 நாயகன்  வீட்டில்  அம்மா, அப்பா , அண்ணன் ,அண்ணி , அண்ணனின்  குழந்தைகள்  இருவர்  என  கூட்டுக்குடும்பம்  ஆக  இருக்கிறார்கள் . ஒரே  ஒரு  பெட் ரூம்  தான்  அந்த  வீட்டில் 


 இப்படி   இருக்கும்போது  புதிதாகத்திருமணம்  ஆகி  வரும்  நாயகி  என்னென்ன  பிரச்சனைகளை    எதிர்கொள்கிறாள்? அதை  எப்படி  தீர்க்கிறார்? என்பதை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்  ஆக  பிரதாப்  போத்தன். அசடு  வழியும்  கேரக்டரில்  அந்தக்காலத்தில்  இவரை  விட்டால்  அப்படி  சிறப்பாக  நடிக்க  ஆள்  இல்லை . அதே  போல  மனைவி  மீது  சந்தேகப்படும்  கேரக்டரில்  இவரும், சிவக்குமாரும்  பல  படங்களில்  சிறப்பாக  நடித்தவர்கள் . 


நாயகி  ஆக உமா  ஜெயதேவி  குடும்பப்பாங்கான  பெண்  ரோலில்  அருமையாக  நடித்திருக்கிறார். மாடர்ன்  டிரசில்  வரும்  காட்சிகள்  கிளுகிளுப்பு 


பக்கத்து  வீட்டுப்பெண்  ஆக  நடித்தவர்  பெயர்  தெரியவில்லை . சிறப்பான  நடிப்பு 


இஷை  ஷ்யாம். 5  பாடல்களில்  2  ஓக்கே  ரகம், 3  செம  ஹிட்  சாங்க்ஸ் . பி சி ஸ்ரீ  ராம்  ஒளிப்பதிவு 90%  கதை  ஒரு  வீட்டுக்குள்ளேயே  நடப்பதால்  சவாலான  பணிதான், ஆனால்  பாடல்  காட்சிகளில்  அவுட்டோர்  ஷூட்டிங்  என்பதால்  தன்  முத்திரையைப் பதித்திருக்கிறார்


 திரைக்கதை , வசனம் , இயக்கம்  மவுலி . இவரது  காமெடி  வசனங்கள்  அந்தக்காலத்தில்  பிரபலம் .  குடும்பப்பாங்கான  கதையைக் காமெடி  கலந்து  சொல்வதில்  வல்லவர் .


 இதில்  ஆச்சரியமாக  டபுள்  மீனிங்  டயலாக்ஸ்  கலந்து  எழுதி  இருக்கிறார்


இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது



சபாஷ்  டைரக்டர்


1   நாயகனின்  அண்ணன்  பட்டப்பகலில்  தன்  பெட்ரூம்  கதவை  சாத்தப்போகும்  முன்  அம்மாவும், அப்பாவும்  வீட்டுக்கணக்கு  பார்க்கப்போறோம், யாரும்  தொந்தரவு  பண்ணக்கூடாது  என்று  சொல்லி  விட்டு  தாழ்  போட  தம்பி  தன்  அண்ணன்  மகனிடம்  ஒரு  ரூபா  கொடுத்து  நீ  போய்  தூங்கு  என திட்டம்  போட்டு  பெட்ரூம்  கதவைத்தட்ட  வைக்க  அதைத்தொடர்ந்து  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  “ஏ” ஒன்  ரகம் 


2   ரேடியோவில்  இரு  குழந்தைகளூக்கு  இடையே  போதிய  இடைவெளி    வேண்டும்  என்ற  விளம்பரம்    வரும்போது  நாயகனின்  அண்ணன்  செய்யும்  செயல்  காமெடி 


3  நவ  நாகரீகம்  என்ற  பெயரில்  பெண்களுக்கு  நிகழும்  பிரச்சனைகளைப்பேசிய  விதம்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  இவள்  தேவதை  , இதழ்  மாதுளை ( ட்ரீம் டூயட் சாங்)


2  ஆனந்த  தாகம் , என்  கூந்தல்  பூக்கள் பூக்குமோ?  


3  சின்னச்சின்ன  இந்த  மதியம் 


4  மேரே  ஆவாஸ்  சுன்


5  ஏய் , வா , இதில்  என்ன  கோபம் :?


  ரசித்த  வசனங்கள் 


1    படிச்சுட்டு  இருக்கியே?  என்ன  எக்சாம் ?


 இண்டியன்  எக்கனாமிக்ஸ்


 தமிழ்  நாட்டின்  ஜனாதிபதி  யார்?


 அதெல்லாம்  கேட்க  மாட்டாங்க   

 ஒரு  வேளை  கேட்டுட்டா?


 எம்  ஜி ஆர்  தானே? 


 கோழி முட்டை , வாத்து  முட்டை 



2    எக்சாம் ல  என்ன  எழுதறதுன்னே  தெரியல 


 கோவிந்தா  கோவிந்தா  கோவிந்தா 


3  மதர்  க்கு  ஸ்பெல்லிங்க் என்ன?


 எம்  ஓ  டி ஹெச் ஈ  ஆர் 


 இவ்ளோ  அதிமகான  ஸ்பெல்லிங்கா  வரும் ?


 அது  ;பெரியம்மா , அதான் 


4   அடுத்த  நிகழ்ச்சி  இன்னும்  சில  மடிகளில்  தொடங்கும் , சாரி இன்னும்  சில நொடிகளில்  தொடங்கும்


5  டேய்  தம்பி, இத்தனை  நாளா  நான்  மட்டும்  தான்  வீட்டுக்கணக்கை  போட்டுட்டு  இருந்தேன்,  இப்போ உனக்கும்  கல்யாணம்  ஆகிடுச்சு , நீயும்  வீட்டுக்கணக்கை  போட  வேண்டி  வரும்,  ஆனா  நம்ம  வீட்ல  இருப்பதோ  ஒரே  ஒரு  பெட்ரூம், அதனால  ஆளுக்கு  ஒரு  நாள்  வீட்டுக்கணக்கை  போடுவோம்,  டீலா?


6  எதுக்காக உன் உடல்  பூரா  இப்படி  சேலையால  மூடி  இருக்கே?


 புருசன்  முன்னால  கை  காலை  எல்லாம்  காட்டக்கூடாதுனு  பாட்டி  சொன்னாங்க 


 இப்போ  அந்தப்பாட்டி  எங்கே?


 செத்துப்போயிட்டாங்க 


7  பைத்தியம்  என்னைப்பார்த்தா  உனக்கு  பயமா  இல்லையா?


 பாவமா  இருக்கு , புலி  வேஷம்  போட்டு  ஆடுபவர்களைக்கண்டா  பயமாவா  இருக்கும் ? 


8  நம்ம  வீட்ல  ஒரு  சாவு  நடந்தாக்கூட  எத்தனை  வேளை  சாப்பிடாம  இருக்க ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  மேன்  ஆன  நாயகன்  நடு  வீட்டு  ஹாலில்  சேரில்  அமர்ந்து  ஷூ  போடுவது  போல்  ஒரு  காட்சி .  பணக்காரங்க  வீட்டில்  வேணா  அபடி  நடக்கலாம்,  ஏழை, மிடில்  கிளாஸ்  ஃபேமிலில  செப்பல்  , ஷூ  எல்லாம்  வீட்டுக்கு  வெளில  வாசல்ல  தானே  இருக்கும்? 


2  நாயகன்  வீட்டிலும் , நாயகன்  வேலை  செய்யும்  ஹோட்டல்  லாட்ஜிலும்  லேண்ட்  லைன்  ஃபோன்  இருக்கிறது . வீட்டில்  எல்லோரும்  வெளியே  போய்  இருக்காங்க   என்பதை  நாயகி  நாயகனுக்கு  ஃபோன்  போட்டு  சொல்ல  மாட்டாரா?  லேட்டாக  வந்த  நாயகன்  நாயகியிடம்  நீ  ஏன்  எனக்கு  ஃபோன்  பண்ணவில்லை  என்று  கேட்க  மாட்டாரா?


3  நாயகன்  மெக்கானிக்கிடம்  செகண்ட்  ஹேண்ட்  ஸ்கூட்டர்  வாங்கும்போது  ஆர் சி  புக்  வாங்க  மாட்டாரா?


4 நாயகன்  வரும்  ஸ்கூட்டர்  ஒரு  ஸ்மெக்ளரோடது  என்பதால்  12  பைக்குகளீல்  போலீஸ்  ஆஃபிசர்ஸ் 24 பேர்  வருகிறார்கள். அடுத்த  ஷாட்டில்  ஜீப்பில்  ஏறு  என்றதும்  12    பைக்குகள்  2  பைக்  + 2  ஜீப்  ஆக  மாறியது  எப்படி ? 


5   நாயகன் - நாயகி  இருவரின் பக்கத்து  வீட்டு  பைத்தியப்பெண்ணின்  கதை  மடத்தனமா  இருக்கு . திருமணம்  ஆன  புதிதில்  கணவன்  அந்தப்பெண்  குளிக்கும்போது  பாத்ரூமில்  வந்து  கலாட்டா செஞ்சானாம், அவ  பயந்துட்டாளாம். என்ன  கொடுமை  சார்  இது ? 


6  பக்கத்து  வீட்டுப்பெண்ணின்  கணவன்  ஒரு  சைக்கோவாம், அவனை  ஏமாற்ற  அந்தப்பெண்  ஒரு  பொம்மையை  கீழே  போட்டு  உடைத்து  ஒரு  மாதிரி  சிரித்ததும்  அவன்  நம்பி  விடுகிறானாம், ஆனா  அதை  நாம  நம்பனுமே? 

/

7  பைத்தியமாக  நடிக்கும்  பெண்ணின்  கணவன்  காலை  9  மணிக்கு  ஆஃபீஸ்  போய்  விட்டு மாலை  6  மணிக்கு  வருகிறான். நாயகி  அவளை  சந்திக்க  வேண்டும்  எனில்  காலை  9.15   டூ  மாலை  5  வரை பார்த்திருக்கலாம், பேசி  இருக்கலாம்  சரியாக  அஞ்சே  முக்காலுக்கு  போய்  ஏன்  மாட்டிக்கொள்கிறார்?


8  நாயகன்  தன்  அண்ணன்  மகன்  10  வயது  சிறுவனிடம்  ஒரு  சீட்டைக்கொடுத்து  சித்தப்பாவுக்கு  உடம்பு  சரி  இல்லை , மெடிக்கல்  ஷாப்ல  போய்  இதை  வாங்கிட்டு  வா  என  நிரோத்  என  எழுதித்தருகிறான். என்ன  மடத்தனமான  காட்சி . காமெடிக்கு  என்றாலும்  இப்படித்தான் லூஸ்  தனமா  சீன்  எழுதனுமா? 


9   அடைத்து  வைக்கபப்ட்ட  அந்த  பைத்தியப்பெண்ணுக்கு நாயகி  சாப்பாடு  கொடுக்கிறாள், எப்படி ? ஒரு  ஆறடுக்கு  டிஃபன்  கேரியரில்  அதை  ஜன்னல்  கம்பி  வழியாக  இழுக்க  முடியாமல்    தடுமாறுது , அம்மா, அறிவுக்கொழுந்தே.. ஒரு  தட்டில்  சாப்பாடு  போட்டு  அதில்  சாம்பார்  ஊற்றி  தந்தால்  கம்பி  வழியாக  உள்ளே  போகாதா? 


10   நாயகி  பட்டிக்காடாக  இருந்து  நாயகன்  விருப்பத்திற்கு  இணங்க  நாகரீக  மங்கை  ஆவது  ஓக்கே , ஆனால்  திடீர்  என  ஒரு பார்ட்டியில்  ஹிந்தியில்  பாடுவது  எல்லாம்  ஓவரோ  ஓவர். கர்நாடக  சங்கீதம்  திடீர்  என  கற்றவர்  மாதிரி  வேற  காட்றாங்க  , அவங்க  பிராத்மிக்  எக்சாமே  பாஸ்  பண்ணாம  எம்  ஏ  ஹிந்தி  முடிச்சவங்க  மாதிரி  பாட்டுப்பாடுவது  ஓவர் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  காட்சி  ரீதியாக  யூ  தான், ஆனால்  வசன  ரீதியாக  ஆங்காங்கே  18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பி சி  ஸ்ரீராம் , இயக்குநர்  மவுலி  ரசிகர்கள் , அந்தக்கால  காமெடிப்ரியர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 


வா இந்தப் பக்கம்
இயக்கம்மௌலி
தயாரிப்புதமிழரசி
பொன்மலர் இண்டர்நேஷனல்
இசைஷியாம்
நடிப்புபிரதாப் போத்தன்
உமா
ஜெயதேவி
வெளியீடுமே 291981
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்