Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Friday, April 03, 2015

கொம்பனைக்கழுவி ஊற்றிய ட்வீட்டர் வம்பர்கள்

படம்: ட்விட்டர் பதிவுகள்
படம்: ட்விட்டர் பதிவுகள்
சில பல அமர்க்கள அரங்கேற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது கார்த்தி நடித்த கொம்பன். முதல் நாள் முதல் காட்சி பார்த்த கையோடும், தியேட்டரில் இருந்தபடியும் கொம்பன் பற்றிய குறும்பதிவு பார்வைகளை ட்விட்டரில் தெறித்து வருகிறார்கள் ரசிகர்கள். அத்தகைய கொம்பன்தெறிப்புகளின் சாம்பில்கள் இங்கே ட்வீட்டாம்லேட்டில்...
நடிகர் விவேக் ‏@Actor_Vivek - கொம்பன் பார்த்தேன். ஒரு மாமனார் மருமகன் உறவை உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சாதியும் இழிவுபடுத்தப்படவில்லை.
ஷாந்தனு பாக்யராஜ் ‏@imKBRshanthnu - தவறான நோக்கத்தோடு படத்தின் வெளியீட்டை சிலர் தடுத்தனர். கொம்பன் அடைந்திருக்கும் வெற்றி, தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.
சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - நான் மறுபடி மறுபடி கொம்பன் வெளியீட்டைத் தடுக்கக்கூடாது எனச் சொல்வதன் காரணம்... நாளைக்கு மெட்ராஸ் போன்ற படங்களையும் இதே பாணியில் தடுப்பார்கள். :-(
கோபிகாஷேக் ‏@kobikashok - இவங்க சொல்ற மாதிரி சாதிக் கலவரம் வராது என்பது படம் பார்த்தவங்களுக்கு தான் தெரியும். #கொம்பன் ஓர் அருமையான படம்.
கொம்பன் மோக்கியா ‏@Mokiyanew - @gvprakash ப்ரோ கொம்பன் பாடல் & பின்னணி இசை சூப்பர். ஒரே வருத்தம் என்னனா? க்ளைமேக்ஸ்ல மங்காத்தா மியூசிக் போட்டுடீங்களே ப்ரோ..
பாரதி ‏@BharathiBigB - ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதான்யா பதற்றமான சூழல் இருந்துச்சி. இப்ப ஒரு சத்தமும் இல்ல #கொம்பன்
முத்து ‏@ViscomMuthu - கொம்பன் படத்துல ஜெயில் கைதிகளுக்கு அதிகபட்ச Punishment டா ஜில்லா படத்த போட்டு காட்றாங்க.
களபிரர் ‏@ponnumanis - கொம்பன் ஓரளவு வசூல் பண்ணினா, அதில கொஞ்சம் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கொடுக்குறது தான் தொழில் தர்மம்.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - ஆக எல்லாருமா சேர்ந்து ஒரு புள்ளப்பூச்சியை அடிச்சிருக்கீங்க... அதுல உங்களுக்கு வெங்கலக் கிண்ணம் வேற வேணுமாக்கும்! #கொம்பன்
தனிக்காட்டு ராஜா ‏@Er_Thameem - உஸ்ஸ்ஸ்! இந்த கொம்பன் படத்துக்கான அரசியல் எங்கூர்ல ஆரம்பமாகுது போல... ஐநூறுக்கும் மேல போலீஸ் குவிப்பு... நல்லா வருவீங்கயா.
clash of clans ‏@thunder - என்னடா கொம்பன் படத்துக்கு இவ்ளோ எதிர்ப்பு வருதேன்னு பாத்தா : )ஓப்பனிங் சீன்ல ஜில்லா படம் + இளையதளபதி என்டராமே?? #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எதற்காக இந்த படத்திற்கு தடை கேட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!
கார்க்கிபவா ‏@iamkarki - கார்த்தி கைல இருக்கிற பச்ச கயித்த தவிர பெருசா ஒண்ணும் சேதாரத்த காணோமே.... கட் பண்ணிட்டானுங்கன்னு முட்டு கொடுப்போம் #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எத்தனை முறை லென்ஸ் வைத்து பார்த்தாலும் ஜாதிச்சண்டையை தூண்டிவிடும்படியான ஒரு காட்சி கூட நமக்கு தெரியவில்லை #Komban
suguna.diwakar@facebook - "முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!"
"ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி"
"என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்"
- இவையெல்லாம் #கொம்பன் படம் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள தத்துவ முத்துகள்.
அதாரு Naveen ‏@mechnaveen1206 - கைதிகளே ஜெயிலில் இருக்கோம்னு சோகத்துல இருப்பானுங்க... அதுல அவைங்கள கூப்டு உக்கார வச்சு ஜில்லா படம் ஓட்டுறானுங்க... உஸ்ஸ் பாவம் யா #கொம்பன்
மதிஇளம்பரிதி.பெ.கொ.ப ‏@ortoncena007 - #கொம்பன் பழைய சோத்தை அழகான தட்டுல வெச்சு பரிமாறி இருக்குறாங்க!!
வாழவந்தார் ‏@Iam_SuMu - ஓஹோ! கொம்பன் படம் எப்படினு சொல்றதை வச்சி சாதி கண்டுப்பிடிக்குறாங்கடோய்!!
Qüëéñ Sāmãñthá ‏@sarath_krrish - கொம்பன் = குட்டிபுலி 2 | நண்பேண்டா = அழகுராஜா 2 | #சகாப்தம் ஏப்புடி???

Saturday, March 16, 2013

66ஏ எது சரி... எது தப்பு? -ஃபேஸ்புக், ட்விட்டர் - 140 பேர் மீது வழக்கு

66ஏ எது சரி... எது தப்பு?
பாரதி தம்பி

ஃபேஸ்புக்கில் யாரோ போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டுவிட்டு ஒரு டீ குடிக்க வந்திருக்கிறீர்களா? எச்சரிக்கை... திரும்பிச் செல்லும்போது உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கலாம். 'ஒரு லைக் போடுறது குத்தமாய்யா?’ என்று நீங்கள் அலறினாலும், இந்தியாவில் இப்போது இதுவே யதார்த்தம். 

கேரளா-சூரியநெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக இருக்கும் மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய; அதை ஷேர் செய்துகொண்ட 140 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரளக் காவல் துறை. சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. 


 இந்தியாவில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும், பொதுச் சொத்தைச் சூறையாடியவர்களும் எந்த வம்பு வழக்கும் இல்லாமல் சொகுசாக இருக்க... ஃபேஸ்புக்கில் தனது கருத்தை வெளியிட்ட ஒரே காரணத்துக்காக வழக்குப் போட்டிருப்பது இணைய உலகை அதிரவைத்திருக்கிறது.


''கருத்துச் சுதந்திரத்துக்கு இதைவிட நெருக்கடியான காலம் இருக்க முடியாது'' என்று ஒரு சாரார் சொல்லிவரும் நிலையில், சமூக வலைதளங்களில் சொல்லப்படும் பொறுப்பற்ற கருத்துகள்குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இரண்டையும் இணைத்து இங்கே விவாதிப்போம்...


முதலில் ஃபேஸ்புக் கருத்துக்குச் சட்டப்பூர்வ நடவடிக்கை என்பது இது முதல்முறை அல்ல; சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பின்னணிப் பாடகி சின்மயி, ட்விட்டரில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் சிலர் சின்மயியை விமர் சித்தனர். இதற்காக சின்மயி போலீஸில் புகார் கொடுக்க, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 


இதன் பிறகு, புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்பற்றி விமர்சிக்க... அதிரடியாக அவரும் கைது செய்யப்பட்டார். இவை மாநில அளவில் நடந்ததால் தேசிய கவனத்தைப் பெறவில்லை. அதன் பிறகு, பால் தாக்கரே மரணம் அடைந்தார். மும்பையே ஸ்தம்பித்தது. இதை விமர்சித்து, ''ஒருவரின் மரணம்குறித்து நமக்கு எழும் மரியாதை இயல்பானதாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்திப் பெறக் கூடாது'' என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டார் கள் இரு மாணவிகள். கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் இருவரும் கைது செய்யப்பட்டனர். 



சம்பவம் நிகழ்ந்தது மும்பை என்பதால், இது தேசியச் செய்தியானது. எக்கச் சக்கக் கண்டனங்கள் எழவே, கைது உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம் செய்யப்பட்டார். கைது செய்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிர அரசைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இதுவரை இணையதளக் கருத்துகளுக்காக நடவடிக்கை எடுத்திருக்கும் மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு, இந்த வழக்கின் நிலவரம் என்ன ஆனது என்று தெரியவில்லை; இப்போது கேரளாவில் 140 பேர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.


இந்த வழக்குகள் அனைத்தும் 66ஏ என்ற சட்டப்பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இணையதளம் வழியாக வெளியிடப்படும் கருத்து ஒருவரை அச்சுறுத்தினால்; தொந்தரவு செய்தால்; சங்கடம் ஏற்படுத்தினால், புகார் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம் அளிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டம் அரசியல் சட்டம் வழங்கும் சுதந்திரக் கருத்துரிமைக்கு எதிரானதாக இருப்பதால், இதை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ். அந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. அரசின் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.



ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வாசலை மக்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு சமூகப் பிரச்னைகுறித்த தனது கருத்தை ஒருவர் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனில், பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மட்டுமே ஒரே வழி. அதேபோல 'கருத்து சொல்வதற்கு’ நீங்கள் 'வி.ஐ.பி’-யாக அல்லது குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் இந்த இரண்டு எல்லைகளையும் உடைத்துவிட்டன. யாரும், எதைப் பற்றியும் கருத்து வெளியிடலாம். அந்தக் கருத்து சரியானதாகவோ, தவறானதாகவோ, முட்டாள்தனமாகவோ, விஷமத்தனம்கொண்டதாகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அதை எழுத முடியும். பல்லாயிரம் பேர் அதைப் படிக்க; பகிர முடியும். புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மனித மனதின் ஆசைகளுக்கு மேடை அமைத்துத் தந்து 'நீங்களும் வி.ஐ.பி-தான்’ என்று ஒவ்வொருவரையும் திருப்தியடையவைக்கின்றன சமூக இணையதளங்கள்.



குறிப்பாக, அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், காரியவாதமும் ஃபேஸ்புக்கில் தயவுதாட்சண்யம் இன்றி விமர்சிக்கப்படுகிறது. அதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படி செல்வாக்கு மிக்கவர் களைத் துணிவுடன் விமர்சிப்பது, இப்போது உள்ள சூழலில் சமூக இணையதளங்களில் மட்டுமே சாத்தியம். மன்மோகன் சிங் பற்றிய ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்களைத் தொகுத்தால், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடலாம்.



உண்மையில் சமூக வலைதளங்கள் மனிதகுலத்தின் மகத்தான வரம். இவை மாபெரும் அறிவுச் சுரங்கத்தைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால், இன்னொருபுறம் இந்தக் 'கட்டற்ற வெளி’ பொறுப்பின்மையைப் பொதுப் பண்பாக வளர்க்கிறது. மனதின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்துத் தருகிறது. விலைவாசி உயர்வு முதல் விலைஇல்லா அரிசி வரை; காஷ்மீர் அடக்குமுறை முதல் காவி பயங்கரவாதம் வரை பற்றி எரியும் மக்கள் பிரச்னைகள்குறித்து எந்தத் தெளிவும் அக்கறையும் இல்லாமல் மேலோட்டமாகக் கிண்டல் செய்து நகர்ந்து செல்வதற்கு சமூக இணையதளங்கள் கற்றுத்தருகின்றன.


 இதன் மூலம், ஆளும் சக்திகள் செலுத்தும் அடக்குமுறையை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்றுவிக்கின்றன. ஃபேஸ்புக்கில் இரண்டு வரி ஸ்டேட்டஸ் எழுதிவிட்டு, சமூகத்துக்காகப் போராடிவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொள்பவர்கள் அநேகம் பேர். இது அரசாங்கத்துக்கு வசதியானது. நாட்டைச் சுரண்டு பவர்களுக்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடாமல், பெயருக்கு நாலு வரி எழுதிவிட்டு ஒதுங்கிக்கொள்வது அரசுக்குத் தொந்தரவு இல்லாத அம்சம்தானே?



''அப்படி முழுக்கவே ஒதுக்கிவிட முடியாது. சமூக இணையதளங்கள் என்ற நவீன தொழில்நுட்பத்தை நியாயம் பெறுவதற்கான கருவியாகவும் பயன்படுத்த முடியும். 'மல்லிகைப் புரட்சி’ என்று அழைக்கப்பட்ட துனிஷிய மக்கள் புரட்சிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாகவே மக்கள் திரண்டனர். எகிப்து நாட்டின் மக்கள் புரட்சி அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டபோது, சமூக இணையதளங்கள்தான் மக்களுக்கான ஒரே ஊடகமாக இருந்தன. இன்றைய நிலையில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றால் ஓர் அளவுக்கு மேல் அரசுக்கு எதிராகச் செயல்பட முடியாது. சமூக இணையதளங்கள் அப்படி இல்லை. இங்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதனால்தான் உலகின் பல நாடுகள் சமூக இணையதளங்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கின்றன!'' என்கிறார் கள் இவற்றின் ஆதரவாளர்கள்.



ஆனால், சமூக இணையதளங்களின் நோக்கம் எல்லோரது கருத்தையும் உலகத்துக்குக் கொண்டு சேர்ப்பது அல்ல. அவை இதை ஒரு வியாபாரமாகவே பார்க்கின்றன என்பதோடு, அந்தந்த நாட்டின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே சமூக இணையதளங்கள் இயங்கு கின்றன. தன்னால் கண்காணிக்க முடியாத எந்த ஒன்றை யும் அரசாங்கம் செயல்பட அனுமதிப்பது இல்லை. ஆகவே, இதை ஒரு நிபந்தனையற்ற சுதந்திரமாகப் புரிந்துகொள்வது சரியானது ஆகாது.



குறிப்பாக, இணையதளக் கருத்துக்காக வழக்கு; கைது என்ற அரசின் நடவடிக்கையை எடுத்துக்கொள்வோம். 'கருத்துக்குக் கைது’ என்பதை யாரும் ஆதரிக்கப்போவது இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் எழுதலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுத முடியுமா? அதற்கு என்ன வரம்பு? முதலில், தான் வெளியிடும் கருத்து பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்குச் சென்று சேரப்போகிறது என்ற பொறுப்பு உணர்ச்சி அதை வெளியிடுபவர்களுக்கு வர வேண்டும். எழுதியதை வெளியிடும் முன்பு சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலா னோரிடம் அது இல்லை.



இதற்கு முன்பு சீரியஸான கட்டுரைகள் சில இணையதளங்களில் எழுதப்படும். அரட்டைத் தளங்கள் தனியே இருக்கும். புகைப்படங்கள்; வீடியோக்கள் வெளியிடும் தளங்கள் தனியே செயல்படும். ஃபேஸ்புக் வந்து இவை அனைத்தையும் ஒரே இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. இது ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இங்கு புரட்சியும் கிடைக்கும்; புடலங்காய் கூட்டு செய்முறையும் கிடைக்கும். போர்க் குற்றம்பற்றியும் படிக்கலாம்; போர்னோகிராஃபியும் பார்க்கலாம். 'அனைத்தும் ஒரே இடத்தில்’ என்ற இந்த உத்தி அந்தத் தளத்தின் வியாபார வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் மனதில் 'அனைத்தும் ஒன்றே’ என்ற மனநிலையை இது உருவாக்குகிறது. தனித்தனியே பிரித்துப் பகுத்துப் பார்க்கும் ஆய்வு மனப்பான்மை பலருக்கும் இல்லாத நிலையில் இதன் ஜிகினாத்தன்மையில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் உண்மையான ஆபத்து இதுவே.




'அவன் ஒரு பட்டு வேட்டிபற்றிய கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ஃபேஸ்புக் என்ற பட்டு வேட்டிக் கனவில் இருப்பவர்கள் உஷாராக வேண்டிய தருணம் இது!
thanx - vikatan

Friday, December 07, 2012

ராஜீவ்காந்தி கொலைவழக்கு - X உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.கிருஷ்ணய்யர் பேட்டி

.ஆர்.கிருஷ்ணய்யர்... இந்தியாவின் மிக மூத்த, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. நீதி, அரசியல், எழுத்து, சமூகம் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த ஆளுமை. கடந்த மாதம் 98-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது 'சத்கமய’ இல்லத்தில் சந்தித்தேன்.




 ''வயதாகிவிட்டதாக உணர்கிறேன். கேட்கும் திறனை வெகுவாக இழந்துவிட்டேன். முன்புபோல எழுத முடியவில்லை. நினைவுகளை மீட்டு எடுப்பதில் பெரும் யுத்தமே நடக்கிறது. நான் எதிர்பார்த்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை. அந்த வகையில் நான் துரதிர்ஷ்டசாலி!'' என்றபடி, எதிரே பிரமாண்டமாக ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்க்கிறார். தினமும் தன் மனைவியின் புகைப்படத்தோடு அரை மணி நேரத்துக்கும் குறையாமல் கிருஷ்ணய்யர் பேசு வதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.




''நீங்கள் அமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பகிரங்க கொலை மிரட்டல்களுக்கும் அரசியல் கொலைகளுக்கும் களம் அமைக்கிறதே... கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்?''




''என் தோழர்கள் கெட்டுப்போய்விட்டார்கள். நம்பூதிரிபாட் போன்ற தோழ‌ர்கள் வாழ்ந்த மண்ணிலா இப்படி ரத்தக் கறை படிய வேண்டும்? எளிமை, தியாகம், நேர்மை, நாணயம் எல்லாம் எங்கே போயின? கொலை... அடிதடி... ரத்தம்... மிரட்டல்!


இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் பலரின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. மார்க்ஸ் இருந்தால் நொந்துகொள்வார். ஆனாலும், சிலர் அத்திப்பூ மாதிரி ஆங்காங்கே பூத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!''



''சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும் இந்தியா குடியரசாகி 62 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கின்றனவே?''



''மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பார்த்துப் பயந்த மக்கள், இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே மலைக்கவைக்கின்றன நீதிமன்ற நடவடிக்கை கள். அதுவும் உச்ச நீதிமன்றம் நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!''




''மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் இன்னமும் பல சந்தேகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்குள் ரகசியமாக அஜ்மல் கசாப்  தூக்கிலிட்டப்பட்டு இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?''




''காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு விரிவான பதிலை நானே விரைவில் எழுதவிருக்கிறேன். நிச்சயம் என் பதிலுக்கு ஆதரவுக் குரலும் விமர்சன அலையும் பெருகும்!''




''ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி... இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் பல நீதிபதிகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருணை மனுக்களுக்கு எந்தப் பதிலும் இல்லையே மத்திய அரசிடம் இருந்து?''




''எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார் கள். அவர்கள் தரப்பில் இருந்து வந்து என்னைச் சந்தித்து இருக்கிறார்கள். நானும் பல சமயங்களில் அவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ராஜீவ் காந்தியின் மனைவியே, 'இவர்களைத் தண்டிப்பதால் என் கணவர் திரும்பவும் வர மாட்டார்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். 



இதை அடிப்படையாக வைத்து உங்கள் வாதங்களை அடுக்குங்கள் என்றேன். அவர்கள் மூவரும் நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டார்கள். இனியும் அவர்களைத் தண்டிப்பது சரியல்ல. தூக்குத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தூக்குத் தண்டனையை ஒழிக்காமல் செத்துப்போனால், நான் தோற்றுப்போனவனாக உணர்வேன். அஹிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில் இப்படி ஓர் அவல நிலை நீடிப்பது வருத்தமாக இருக்கிறது. இது காந்திக்கு இழைக்கப்படும் மாபெரும் அவமானம்!''




''ஓர் அரசியல்வாதி என்ற முறையில் சொல்லுங்கள்... உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று நினைக் கிறீர்கள்?''



''ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பிறகு வேறு யாரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. இதனைச் சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!''




readers views

1. அன்பு4 Days ago
"காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்."------------> கசாப்புக்கு மட்டும் 160 அப்பாவிகளை கொல்லும் உரிமை எப்படி வந்தது? அவன் மனித ஜன்மம் இல்லை என்பதால் தூக்கிலிட்டது சரியானது. வாலி வதைப்படலத்தில் ஒரு மிருகத்தை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் என்று நீதி தர்மத்தை ராமர் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
2. இவரது பெயரிலேயே இரட்டை நிலை மனப்பான்மை பளீரென முகத்தில் அறைகிறது. பெயரிலேயே கிருஷ்ண ஐயர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படி சமத்துவத்தை மார்க்ஸிய தத்துவங்களை இவரால் கட்சிக்குள்ளேயும், பொது மக்களுக்கும் பரப்ப இயலும். சென்ற தலைமுறையை சார்ந்த மனிதர்களை பார்க்கும்போதே வெளிப்படுவது இவர்கள் என்னவோ கலாச்சார ஒழுக்கசீலர்கள போலவும் வளர்ந்து வரும் இளைய தலைமுறை என்னவோ தறிகெட்டு அலையும் தறுதலைகள் போலவும் இவர்கள் காட்டிக்கொள்ளும் பாவ்லா.

பிடித்த தலைவர் என்று நேருவை சொன்னதாலேயே இவர் மேல் எந்த ஒரு உயர்ந்த அபிமானமும் ஏற்படவில்லை. -Kalpana 
3. BALA.S7 Days ago
என்ன செய்தால் நீதித்துறையை மக்கள் தயக்கமின்றி அணுகுவார்கள், அதன் மூலம் லஞ்சம் கொடுக்க மறுக்கும் சூழ்நிலை உருவாகும் என இது போன்றவர்கள் எழுதலாம். பழங்கதை பேசி பயனில்லை. காந்தி கால இந்தியாவில் தூக்கை ஒழிக்கலாம், சோனியாகாந்தி காலத்தில் அது இயலாது என்பதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக வேண்டும்.
 thanx - vikatan

Thursday, November 22, 2012

மங்கையர் திலகம் சோனாவும் , ஆண்கள் பாதுகாப்பு சங்கமும்

நடிகை சோனா மீது ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு

 
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவர் பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் வக்கீல் ஜானகிராமன், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள குற்ற முறையீட்டில் கூறியிருப்பதாவது:- 

ஆம்பளைங்க எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது. 

ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்திற்கும் உள்நோக்கம் கொண்டு அவதூறாக பேசியுள்ளார். 


நடிகை சோனா சினிமா துறையில் பிரபலமானவர் என்பதால் இந்த கருத்துகள் பெண்கள் மத்தியில் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது. பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளளது.  நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200-ன்கீழ் கோப்பில் எடுத்துக்கொண்டு நடிகை சோனாவிற்கு அழைப்பாணை அனுப்பி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 (1) (2), 293, 294, 499, 500, -ன்கீழ் வழக்கை விசாரித்து தகுந்த நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த குற்ற முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்!

சண்டைக்கு தயார்!

ஆண்கள் சங்கத்தினர் மீது நடிகை சோனா புகார்!
















நடிகை சோனா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 21.11.2012 புதன்கிழமை புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆண்கள் சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், ஆண்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.



நடிகை சோனா, வாரப்பத்திரிகை ஒன்றில், ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஆண்கள் செக்சுக்கு மட்டுமே பயன்படுவார்கள் என்றும், கையை துடைத்துவிட்டு, தூக்கி எறியப்படும் டிஷ்யூ பேப்பரை போன்றவர்கள் என்றும் சோனா தனது பேட்டியில் கூறியதாக, பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது. மேலும் நான் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்றும் தனது பேட்டியில் சோனா மேலும் கூறி இருந்தார்.



நடிகை சோனாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், சோனாவின் பத்திரிகை பேட்டியை கண்டித்து போர்க்கொடி தூக்கினார்கள். சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



இந்த நிலையில் நடிகை சோனா 21.11.2012 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.



பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக கொடுத்துவிட்டார் என்றும் கூறி இருந்தேன்.


செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன். 


ஆண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்ததாக நடிகை சோனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது கோர்ட்டில் வழக்க தொடரவும் தயாராகி வருகிறார்கள்.
 
தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக சோனா கூறினார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 
 
நான் ஆண்களை கேவலமாக பேசவில்லை. சொல்லாததை பத்திரிக்கையில் பேட்டியாக வந்துள்ளன. எனக்கு எதிராக ஆண்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அச்சங்கத்தை சேர்ந்த 120 பேர் என் வீட்டில் முற்றுகையிட்டு கோஷம் போட்டார்கள். நான் அப்படி பேட்டி அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டேன். 

சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளேன். அதன் பிறகும் கண்டிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். தொடர்ந்து மிரட்டல்களும் வருகிறது.
 

நான் எங்கு போகிறேனோ அங்கெல்லாம் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி உள்ளனர். இதனால் படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்தினர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். இப்பிரச்சினையில் எனக்கு உதவுவதாக உறுதி அளித்தார்கள். சில பெண்கள் சங்கத்தினரும், மனித உரிமை அமைப்பினரும் என்னிடம் பேசினார்கள். என்னை தொடர்ந்து மிரட்டி வரும் ஆண்கள் சங்கத்தினர் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
 
இவ்வாறு சோனா கூறினார்.




=

இவ்வளவு நடவடிக்கை எடுத்தபிறகும், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம் மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர்.


மேலும் செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில் நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில் போகமுடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது.


எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும் படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.


என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டரீதியான சண்டைக்கு நான் தயார். இவ்வாறு சோனா தெரிவித்தார்.

 நன்றி - நக்கீரன்

Wednesday, November 07, 2012

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு -கலைஞர், வை கோவுக்கும் பங்கா?

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு!

‘‘மாயமான சி.டி. எங்கே? மறைத்தது ஏன்?’’

எஸ். சந்திரமௌலி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுபடியும் ஒரு பரபரப்பு. வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழு தலைமை புலனாவு அதிகாரி கே.ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தி படுகொலை சதி: சி.பி.சி. கோப்புக்களில் இருந்து (Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files) என்ற ஆங்கிலப் புத்தகம் தான் பரபரப்புக்குக் காரணம். இவர் ஏற்கெனவே ராஜீவ் காந்தி படுகொலை பற்றி ஒரு டி.வி.டி. வெளியிட்டவர்.


 ஸ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ மாயமானது ஏன்? சதித் திட்டத்தில் கருணாநிதி, வைகோ போன்ற தமிழக அரசியல் வாதிகளுக்கு உள்ள தொடர்பு? என ஆங்கிலப் புத்தகத்தில் இவர் எழுப்பியுள்ள கேள்விகள்தான் சர்ச்சையின் மையம். அவரிடம் பேசியதில் இருந்து...


இப்போது எதற்காக இந்தப் புத்தகம்?


ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தவர். அவர் சாதாரண விபத்தில் இறக்கவில்லை. விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட சதித்திட்டத்தில் பலி ஆனார். சவாலான அந்தப் புலனாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், விசாரணையின்போது, சில விஷயங்கள் மறைக்கப்பட்டன.


 சிலரை விசாரணை செய்ய அனுமதி இல்லை. சில அரசியல்வாதிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. அதற்கு அனுமதி கிடைத்திருந்தால், விடுதலைப்புலிகளுக்கு இந்த சதித்திட்டத்தில் உதவியவர்கள் யார், யார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும். சி.பி.., அரசியல் நிர்பந்தத்துக்கு எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகம்."


சதி நடந்த அன்று ஸ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, புலனாய்வுக் குழுவின் கைக்கு வராமல், மாயமானதாகச் சொல்லி இருக்கிறீர்களே?

ஆமாம். ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ச்சியை வீடியோ எடுத்தவரிடமிருந்து, மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் வாங்கிச் சென்றிருக்கிறார். அதை தில்லியில் .பி. அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள். அதில் சந்தேகத்துக்குரிய பெண்ணைப் பற்றி அன்றைய .பி.யின் தலைவர், இன்றைய மே.வங்காள ஆளுனர் எம்.கே. நாராயணன் மத்திய உள் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


 அந்த வீடியோ மறுபடியும் சென்னை வீடியோகிராபரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டு அது தமிழ்நாடு வழியாக எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அதில் ராஜீவ் படுகொலை பற்றிய தூர்தர்ஷன் செய்தி கிளிப்பிங்கும் சேர்க்கப்பட்டு இருந்தது. விழா நிகழ்ச்சி எடுக்கப்பட்ட வீடியோவில் தூர்தர்ஷன் செய்தி எப்படி இருக்க முடியும்?


தவிர, படுகொலையை நடத்துவதற்காக சென்னை வந்த விடுதலைப்புலி குழுவினர், உள்ளூர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோடு நெருக்கமாகி, அவர்கள் மூலமாகவே ஸ்ரீபெரும்புதூரில் கூட்ட மைதானத்தில் ராஜீவ் காந்திக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்தத் தகவல் வெளியானால், அது காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று அந்த விஷயத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர விடாமல் தடுத்து விட்டார்கள்."


புத்தகத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர்பு பற்றி விவரித்திருக்கிறீர்களே?

தமிழகத்தின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தினர் புலிகளின் அனுதாபிகள். 20 சதவிகிதத்தினர் ஆதரவாளர்கள். மீதி 20 சதவிகிதத்தினர் தீவிர ஆதரவாளர்கள். எனவே, ராஜீவ் கொலையோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்படும்படி ஆதாரங்கள் இருந்தால் மட்டும், அவர்களை விசாரிக்கலாம் என்று நாங்கள் லட்சுமண ரேகை அமைத்து விசாரணையைத் தொடங்கினோம்.



 சம்பவம் அன்று அதே ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகில் கருணாநிதி கலந்து கொள்ளும் தி.மு.. பிரசாரக் கூட்டத்துக்கும் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தியின் கூட்டம் பற்றிய விவரங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே, தி.மு..வால் முடிவு செய்யப்பட்டு, கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கோரும் கடிதமும் கொடுக்கப்பட்டது. போலீஸ் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், கடைசி நேரத்தில் அந்தக் கூட்டத்தை ஏன் கருணாநிதி ரத்து செய்தார்?  


அன்று நடக்க இருந்த சம்பவம் பற்றி கருணாநிதிக்குத் தெரியாது என்றால், அவருக்குக் கூட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை சொன்னது யார்? என்று விசாரிக்க விரும்பினேன். ஆனால், கருணாநிதியை விசாரிக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக டி.ஜி.பி. கேட்டுக் கொண்டதன் பேரில் கருணாநிதி கூட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும், எனவே விசாரணை தேவையில்லை என்றும் சொல்லி விட்டார் புலனாய்வுக் குழுத் தலைவரான கார்த்திகேயன்."


இந்த வழக்கில் வைகோவை அரசு தரப்பு சாட்சியாகச் சேர்த்திருந்தீர்களே?


வைகோ, அரசு தரப்பு சாட்சியாக கூண்டில் நின்று, ‘நான் பிரபாகரனை நன்றாக அறிவேன்; ஆனால் இந்த சதித்திட்டம் பற்றி எனக்குத் தெரியாதுஎன்று சொன்னார். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு பிரபாகரனுக்குக் காரணம் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக வைகோ பேசிய வீடியோ கேசட் ஒன்றைப் போட்டுக் காட்டியபோது, ‘வீடியோவில் இருப்பது நான்தான்; ஆனால் குரல் என்னுடையது இல்லைஎன்றார். ஆனால், அது அவரது குரல்தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. ஹாஸ்டைல் விட்னஸ் ஆகிவிட்ட வைகோவின் மீது வழக்குத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யாதது ஏன்? என்பதற்கு எனக்கு விடை தெரியவில்லை."


நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?


திறமையான அதிகாரிகள் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் கடமையை ஆற்றினாலும், அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர்கள் கண்டுபிடிக்கும் அத்தனை உண்மைகளும் வெளிச்சத்துக்கு வருவதில்லை."


நன்றி - கல்கி  





ராஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள்
**********************************

இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.



உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.



உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..




என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?



1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.



எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை




 இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.





அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’





சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..




நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.




பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.



நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’



அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?



இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள்.




 படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.



மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.




வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.



என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.




அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’



சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’



சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?



ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.



சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.




மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.




அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.




அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.



இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.



எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.




ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?



அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.



சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!