26 வருடங்களுக்கு முன் ஹீரோவோட அப்பா சொந்தக்காரனை ஒரு பகைல வெட்டிடறாரு. பழி வாங்கக்காத்திருக்கு வெட்டு வாங்குன குடும்பம். ஆனா அவங்க கிட்டே ஒரு விநோதமான பழக்கம் .அவங்க வீட்டுக்குள்ளே யாரையும் வெட்ட மாட்டாங்க . சினிமா நடிகைங்க எல்லாம் கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிருக்கற மாதிரி கத்தி குத்த இவங்களும் ஒரு எல்லை வெச்சிருக்காங்க .
பழி வாங்கும் பகைமை குடும்பத்தில் ஹீரோயின் . பலி ஆகப்போகும் ஆடு ஹீரோ . 26 வருசம் கழிச்சு அவங்க வீட்டுக்கு வர்றாரு. வந்த பின் தான் அவருக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியும் . வீட்டை விட்டு வெளில போனா காத்திருக்கு கண்டம் . ஆகிடுவார் கண்ட துண்டம். அவர் எப்படி சமாளிக்கறார் என்பதை 144 நிமிடங்கள் மொக்கை காமெடியா சொல்லி இருக்காங்க .
தெலுங்கு ல மெகா ஹிட் ஆன மரியாதை ராமண்ணா என்ற படத்தின் ரீ மேக் தா இது . ஆந்திரா மக்களை விட தமிழ் மக்கள் ரசனைல பல படி உயர்ந்தவர்கள் என்பதை இந்தப்பட ரிசல்ட் சொல்லும் .
ஹீரோவா சந்தானம் . ஓப்பனிங்க் சாங்கில் அவர் விஜய் , ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் தர்றார் . முடியலை . எம் ஜி ஆர் மாதிரி கருத்துள்ள வரி எல்லாம் பாடறார் . பொதுவா சந்தானத்தின் பிளஸ் பாயிண்ட்டே அவர் ஹீரோவை கலாய்ப்பதும் , கவுண்ட்டர் டயலாக் கொடுப்பதும் தான் . இந்தப்படத்தின் திரைக்கதை அதுக்கு கை கொடுக்கலை . அதையும் மீறி அவர் பல இடங்களில் பஞ்ச் கொடுக்கறார் . ஆனா பேசிக்கா திரைக்கதைப்படி அவர் பயந்து ஓட வேண்டிய கேரக்டர் என்பதால் வடிவேல் மாதிரி பாடி லேங்குவேஜை நம்ப வேண்டிய கட்டாயம் . அதுதான் அவருக்கு வரவில்லை . ஆனால் முதல் பட ஹீரோ என்ற அளவில் பாஸ் தான் ( அறை எண் 305 இல் கடவுள் படத்தில் 2 ஹீரோவில் இவர் ஒருவர் . இதில் தான் சோலோ ஹீரோ )
ஹீரோயின் ஆஷ்னா சவேரி . (சவுரி அல்ல)பாந்தமான முகம் . திருத்தப்படாத, ஆனா திருத்தப்பட வேண்டிய அடர்த்தியான புருவங்கள் .அவரது நாசியும் , உதடுகளும் கனகச்சிதம் .அகல நெற்றி என்பதால் ஓவர் ஆல் ஃபேஸ் கவர்ச்சி கொஞ்சம் கம்மிதான். ஆனாலும் லட்சுமிகரமாய்த்தான் இருக்கார் .
பவர் ஸ்டார் ஒரு சீனில் வர்றார் . இதெல்லாம் பத்தாது . சோலார் ஸ்டார் வேற . ஆனா படத்தில் மனம் விட்டு சிரிக்கும் காட்சிகள் குறைவு .
படம் முழுக்க ஒரே வீட்டில் நடப்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது . காட்சிகள் மிக மெதுவாகவும் , எந்த திருப்பமும் இல்லாமலும் நகர்வதால் ஏதோ மெலோ டிராமா பார்ப்பது போல் ஒரு சலிப்பு வருவதைத்தவிர்க்க முடியவில்லை
நாயகியின் மாமா வாக கட்டிக்கப்போகும் பையனாக வருபவர் அவ்வளவு இளிச்சவாய்த்தனமாய் மாமன் மகளை தாரை வார்ப்பது நம்பும்படி இல்லை
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. அடுத்தவாரம் 16 5 2014 இல் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கோச்சடையான் வராததால் கடைசி நாளில் ரெடி பண்ணி திடீர் என ரிலீஸ் செய்த சாமார்த்தியம்
2 சுடு தண்ணீர் ஊற்ற வரும் மொட்டையனிடம் ஹீரோ என்னப்பா அக்குள்-ல கட்டியா? என கேட்க அவர் இல்லையே என கையை தூக்கிப்பார்க்கும்போது அவர் தலையில் கொட்டும் காட்சி காமெடி களேபரம்
3 சந்தானத்தின் சைக்கிள் டி ஆர் மாதிரி மிமிக்ரி குரலில் பல காட்சிகள் பேசுவது நல்ல கற்பனை . ஆடியன்ஸ் ரசிக்கிக்றார்கள் சிம்பு கடுப்பாகிடுவார் . வளர்த்த கடா
4 ஹீரோ அந்த வீட்டில் மாட்டிக்கொண்டதும் ஏற்படும் 20 நிமிட காமெடி காட்சிகள் சிரிக்கலாம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோ சென்னை செண்ட்ரல் ஸ்டேஷன்ல சைக்கிளை ஸ்டேண்ட் ல விடும்போது அதுக்கு ஒரு நாளுக்கு 50 ரூபா கேட்பது மாதிரியும் அதுக்கு அவர் சைக்கிள் விலையே 150 ரூபா தானே என்பது மாதிரியும் காட்சி வருது . ஆனா ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல பைக் பாசே ஒரு நாள்க்கு 10 ரூபா தான் . சைக்கிள்க்கு 5 ரூபா . சென்னை ல அதிக பட்சம் ரூபா தான் இருக்கும்
2 ஹீரோ தன் பர்சைக்காணோம்னு சொன்னாலே போதுமே. எதுக்கு தன் பர்சை எடுத்து அந்த இடத்தில் ஒளிக்கனும் ?
3 லாஜிக் படி ஹீரோ வீட்டில் இருந்தா கொல்ல முடியாது . அவர் நைட் டைம் தூங்கிட்டு இருக்கும்போது அவரை அலேக்கா த்துக்கிட்டு போய் ஏன் கொல்லலை?
4 ஹீரோ தன் அம்மா ஃபோட்டோவை பார்த்து அது சொந்தக்காரங்க வீடுன்னு கண்டு பிடிக்கறார். அவர் சொந்தக்காரங்களை ஏன் அடையாளம் கண்டு பிடிக்கலை ? அம்மா வீட்டில் ஃபோட்டோக்கள் இருந்திருக்குமே?
5 என்னதான் சினிமான்னாலும் முறைப்பெண்ணை கண்டுக்காமயா ஒரு மாமன் மகன் இருப்பான் ?
மனம் கவர்ந்த வசனங்கள்
1 ஏ ம்மா , நீ ஸ்கூல் படிக்கும்போது யார் ரசிகை?
கமல்
காலேஜ் போறப்ப?
மாதவன்
இப்போ ?
சிம்பு
டேய் , நீ யார் ரசிகன்?
அப்பவும் , இப்பவும், எப்பவும் ரஜினி தான்
பார்த்தீங்களா > மக்களே ! எப்பவும் பொண்ணுங்க தங்கள் ரசனையை, காதலனை மாத்திக்கிட்டே இருப்பாங்க , ஆனா பசங்க எப்பவும் மன்சை மாத்திக்கவே மாட்டாங்க
2.சந் =7 மணி சங்கை 8 மணி நியூஸ் ல கேட்ட மாதிரி ஏன்டா இப்டி கத்திப்பேசறீங்க? # வபுஆ
3.சந் = ரசம் வைக்கறவன் எல்லாம் ரஹ்மான் மாதிரி மியூசிக் போட்டுட்டுப்போறானே.அடேய் # வபுஆ
5.ச = மறியலுக்குத்தான் ரயிலை நிறுத்துவாங்க.பொரியல் கொண்டாரதுக்குக்கூடவா? # வபுஆ
6.நாயகி = உங்க கூட பேசிட்டிருந்தா நேரம் போறதே தெரியல.அதனால உங்களை டைம் பாஸ்னே கூப்பிடறேன் # வ பு ஆ ( விகடன் டைம் பாஸ் க்கு ஐஸ் ?)
7.சந் = பொண்ணுங்க ஏன் லவ் பண்றாங்க? எப்படியும் பேரன்ட்ஸ் பிரிச்சு வெச்சுடுவாங்கங்கற தைரியத்தில் தான் # வபு ஆ
8.என்னது? உன் சொந்த ஊரு காக்காத்தோப்பா?
ஆமா.அதுக்கேண்டா பஸ் ஸ்டேன்ட் பாத்ரூம்க்குள்ளே போறவன் மாதிரி மூஞ்சியை சுளிக்கறே? # வபுஆ
9.யோவ் மொட்டை.மொட்டை அடிச்ட்டு குளிக்க மறந்துட்டியா? உடல் பூரா இவ்ளோ முடி?
அது என் உடம்புல இயல்பா வளரும் முடிங்க # வ பு ஆ
10.ச = இவ்ளோ வாயில்லா ஜீவன் களை வாழை இலைல ஒரு சேர இன்னைக்குத்தாங்க பாக்கறேன் ( கறி விருந்து) # வ பு ஆ
12.ச= அவனை சிரிக்கவேணாம்னு சொல்டா.அசிங்கமா இருக்கு.
அவன் சிரிக்கறதே உன்னை அசிங்கப்படுத்தத்தான்
.
அவன் மூஞ்சி சிரிக்கும்போது அசிங்கமா இருக்கு
13.சேட்டு = காசில்லாம எதுவுமே வாங்க முடியாது
சந்தானம் = ஏன்? கடன் வாங்கலாமே?
14.கல்யாணம் பண்ணிக்கத்தான் பசங்க லவ்வே பண்றாங்க.ஆனா கல்யாணம் ஆனவனைத்தான் பொண்ணுங்க லவ் பண்றாங்க # சந்தானம்
15.நீ என் ஒரு முகத்தைத்தான் பாத்திருக்கே.எனக்கு இன்னொரு முகமும் இருக்கு
சந்தானம் = அந்த மூஞ்சியாவது பாக்கற மாதிரி இருக்குமா?
16.எந்த அட்ரஸ் சொலரதா இருந்தாலும் டாஸ்மாக்கை லேன்ட்மார்க்கா வெச்சு சொல்லனும் - சந்தானம்
1 7 நம்ப முடியாத சில விஷயங்கள் நம்ம வாழ்க்கைல நடக்கும்போது வாழ்வு அழகாகிடும் # வபுஆ
actress-ashna-zaveri-
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1.பாடிலேங்குவேஜில் காமெடி செய்யவேண்டிய இந்தக்கதை வடிவேலுக்கே பொருத்தம்.டைமிங் பஞ்ச் அடிக்கும் சந்தானத்துக்கு பொருந்தலை# வபுஆ
2.சந்தானத்தின் 18 டைமிங் பஞ்ச் ,6 மொக்கை ஜோக் உடன் இடை வேளை வரை படம் சராசரி தான் # வபுஆ
3.சென்னை எக்ஸ்பிரஸ் ல வர்ற மாதிரி முதல் 40 நிமிசம் ஹீரோ ஹீரோயின் ரயில் பயணம் லயே படம் போகுது # வ பு ஆ
4 .விஜய்க்கு இணையான ஓப்பனிங் சாங் டூ சந்தானம்.ஆனா எடுபடலை
5 .வ பு ஆ =144 நிமிடங்கள் @ ஈரோடு அபிராமி.
சி பி கமெண்ட் -வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் = பி சி சென்ட்டர் ரசிகர்களுக்கான மொக்கைக்காமெடி மெலோ டிராமா = விகடன் மார்க் =40 ,ரேட்டிங் = 2.25 / 5. வடிவேலுவின் தெனாலி ராமன் க்கு இது மோசம் இல்லை., ஆனாலும் இன்னும் நல்லாப்பண்ணி இருக்கலாம்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங்
டிஸ்கி - காமெடி த்ரில்லர் மூவி - யாமிருக்க பயமே - சினிமா விமர்ச்னம்
http://www.adrasaka.com/2014/ 05/blog-post_7181.html
டிஸ்கி - காமெடி த்ரில்லர் மூவி - யாமிருக்க பயமே - சினிமா விமர்ச்னம்
http://www.adrasaka.com/2014/