Showing posts with label வருமான வரி வழக்கு. Show all posts
Showing posts with label வருமான வரி வழக்கு. Show all posts

Tuesday, July 15, 2014

வருமான வரித்துறையுடன் ஜெ திடீர் சமரச மர்மம் என்ன?- கருணாநிதி பர பரப்பு குற்றச்சாட்டு

திமுக தலைவர் கருணாநிதி| கோப்புப் படம்.
திமுக தலைவர் கருணாநிதி| கோப்புப் படம். 
 
 
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் திடீர் சமரச முயற்சி எடுக்கப்பட்டிருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 



இது தொடர்பான அறிக்கையில்: "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன்பிறவாச் சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து, தற்போது முடிவுக்கு வருகின்ற நேரத்தில், நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று கடுமையாக நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், தாங்கள் துறைவாரியாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு ஒன்றினை துறையிடம் தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனு நிலுவையிலே இருப்பதாகவும் தெரிவித்து, அதற்கு வருமான வரித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆட்சேபணை தெரிவிக்காததால், நீதிபதி விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது பற்றி விரிவாக நான் 3-7-2014 அன்று தெரிவித்திருந்தேன். 



இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நிலுவையிலே உள்ளது. 


18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று - அதற்காக நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் 18 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லையா? இந்த வழக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, உச்ச நீதிமன்றத்தின் பொன்னான நேரம் செலவழிக்கப் பட்டதே, அப்போதே துறையின் வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் கூறியிருக்கலாம் அல்லவா? 


துறைவாரியாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் ஏற்கனவே துறையினரிடம் மனுக் கொடுத்தார்களா? அப்படிக் கொடுத்திருந்தால் அந்த மனுவின் கதி என்ன? அப்போது என்ன முடிவெடுக்கப்பட்டது? 



இந்தப் பிரச்சினை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர், விஜயகாந்த் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் எழுதிய கடிதத்தில், இந்த வழக்கு நடைபெறும் 18 ஆண்டுகளில், நீதிபதி பலமுறை உத்தரவிட்டும், ஒரு முறை கூட ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை என்றும், 30-6-2014 அன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் சராசரி இந்தியக் குடிமகன் இதுபோன்று செயல்பட்டிருக்க முடியுமா என்றும், அதற்கு சட்டமும் நீதிமன்றமும் இடம் கொடுக்குமா என்றும், இந்த நிலையில் ஜெயலலிதா வருமான வரித் துறையின் இயக்குனர் ஜெனரலிடம் கம்பவுண்டிங் முறையில் வருமான வரி பாக்கியைச் செலுத்தி சமரசமாக தீர்த்துக் கொள்ளத் தயார் என்று அறிவித்திருப்பது சரிதானா என்றும், ஜெயலலிதாவின் வேண்டுகோளை வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமேயானால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கை அது திசை திருப்பிவிடும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள் என்றும், அதைக் கருத்திலே கொண்டு வருமான வரித் துறை ஜெயலலிதாவின் சமரசம் பற்றி முடிவெடுக்க வேண்டுமென்று தே.மு.தி.க. தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி யிருக்கிறார். இந்தக் கடிதமும், அதன் கருத்துகளும் பிரதமர் மோடி அரசினால் அலட்சியப்படுத்தப்பட்டு விடக் கூடாது. 



வருமான வரித் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமசாமி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதனால் வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்துள்ளார் என்று தெரிவித்திருக்கிறாரே, துறை வாயிலாக அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டா மென்று அறிவுரை வழங்கப்பட்டதா?
ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்களை இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்து விட்டு, அதனை நடத்தாமல் காலம் கடத்தியதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 4-9-2006 அன்று உச்ச நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களை விடுவிக்க வேண்டுமென்று தொடுத்த வழக்கை முடிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். 



அவ்வாறே முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் அவர்கள் விசாரித்து ஜெயலலிதாவின் மனுவினைத் தள்ளுபடி செய்தார். அதாவது 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு தங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டு மென்று குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதே, அப்போதே ஜெயலலிதா தரப்பினர் இந்தப் பிரச்சினையை துறை வாயிலாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கலாம் அல்லவா? அப்போது மத்திய அரசில் தங்கள் கோரிக்கையைக் கேட்கின்ற அரசு இல்லை என்ற காரணத்தால் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லையா? 



எழும்பூர் மாஜிஸ்திரேட்; ஜெயலலிதா தரப்பினரின் விடுவிப்பு மனுவினை தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டனர். அந்த மேல் முறையீட்டு மனுவும் 2-12-2006 அன்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டது. 



உயர் நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண் டார்கள். அந்த மேல் முறையீட்டினை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் குறுக்கிடுவதற்கு எந்தவிதமான அடிப்படையான காரணமும் இல்லை; மேல் முறையீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு அந்த வழக்கில் எந்தவிதமான நியாயமும் இல்லை"என்று தெரிவித்ததோடு, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத்திற் குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30-1-2014 அன்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்திலாவது தாங்கள் இப்பிரச்சினையை துறைவாயிலாகத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் சொன்னார்களா என்றால் இல்லை. 



உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில், "குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் தாங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்"" என்று குறிப்பிட்டிருப் பதில் இருந்து, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக் கும்தான் உள்ளது என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.
இதே வருமான வரித் துறை பற்றிய வழக்கு ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில் 



24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் அப்போது ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார். 



அப்போது நீதிபதிகள் "நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?" என்றெல்லாம் கேட்டார்களே, அப்போதாவது நாங்கள் துறை வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது துறையிடம் ஏற்கனவே முறையிட்டு, அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்களா? 



ஏனென்றால் ஏற்கனவே யஷ்வந்த் சின்கா அவர்கள் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதே, அவரை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்து வருமான வரி வழக்கு பற்றிய பரிந்துரையை ஜெயலலிதா கொடுத்தார் என்று அவரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டதையும் மறந்து விடுவதற்கில்லை.
இதுபோலத்தான் "வோடபோன்" நிறுவனத்துக்கு கடந்த கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வருமான வரிச் சட்டத்தில் சலுகை அளித்து, சமரச முடிவு காண முற்பட்ட போது, அதை எதிர்த்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வாஜித் பட்டாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் என்பதும் மனதிலே கொள்ளத்தக்கது. 


கடந்த 18 ஆண்டுக் காலமாக இந்த வழக்கை இழுத்தடித்து, வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி, நீதிமன்றங்களின் பொன்னான நேரத்தையெல்லாம் வீணடித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, கேலிக் கூத்தாக்கி இருக்கிறார்கள். மத்திய அரசும், பிரதமரும், குறிப்பாக வருமான வரித் துறையும் எச்சரிக்கையோடு இந்தப் பிரச்சினையிலே இருக்க வேண்டும். 



ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வருமான வரித் துறை, இந்த வழக்கில் பல ஆண்டுகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிவிட்டு, தற்போது கம்பவுண்டிங் முறையில் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வருமேயானால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து, இதுபோன்ற தவறுகளைச் செய்வோரை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டோர் நினைவிலே கொண்டு, மத்திய அரசும், வருமான வரித்துறையும் இந்தப் பிரச்சினையை அணுகிட வேண்டும்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 


நன்றி - த இந்து


  • murugan  from WASHIM
    ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச்சொன்னார் ஏசுநாதர்! அது ஏன்? கொஞ்சம் சிந்தித்தால் அவனால் மறு கன்னத்தைக்காட்டும் போது அதே கையால் அவனால் அறைய முடியாது என்ற தைரியத்திலும் அதே சமயம் அவன் திருந்தி விடுவான் என்ற நம்பிக்கையிலேயேயும் அவ்வாறு கூறியிருப்பார்!
    Points
    170
    about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • ram  
    இப்போ ஒருத்தரும் வாய் திறக்கவில்லை ... மற்ற கட்சினா எல்லாரும் பெரிய பிரச்சனையாக பேசுவார்கள் .. அவர்கள் கோர்ட்ல ஆஜர் ஆகிறார்கள் ... அனா இவர்கள் ஆஜரானதில்லை... இதற்காவே தண்டனை தரவேண்டும் ...
    Points
    200
    about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)   
  • murugan  from HUBLI
    கண்ணன் இப்போது நடப்பதை கலியுகம் என்றாராம்! கைமேல் பலன் கிடைத்து விடுகிறது! இந்த நாட்டில் பயந்து அடியெடுத்து வைத்தார்களானால் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள்!சுழட்டி எடுத்தாலும் மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்! ஒரு முதல்வர் ஒரு 440 வோல்ட் மாக்னெடிக் பவருடன் கூடிய நிர்வாகத்திறமையோடு தான் இனி இந்நாட்டில் உருவெடுக்க வேண்டும்! கட்சிக்கு நிதி சேர்ப்பதெல்லாம் ஜனநாயகத்தில் ஒரு கலாச்சாரமாகி உள்ளது! காலப்போக்கில் அது மாறிவிடும்! இவர்கள் இருவருக்கும் உள்ள பவர் எப்படி இருந்தது என்பதை இவர்கள் இல்லாத பொது இந்த நாடு உணர்ந்து விடும்! ஜெயாவிற்குத் தெரியாமலே ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்கலாம்! இவருக்கும் கூட அதன் ஆழம் எப்படியிருக்கும் என்று தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது! அவர் சினிமாவில் உழைத்து சம்பாதித்தை விடவா.......பாவம்! .
    Points
    170
    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • ram  
    இந்த விவகாரத்தில் மற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மேலும் "திரு. சுப்ரமணிய சுவாமி" கருத்து தெரிவிக்கவில்லை காரணம் ஏன் என்று தெரியவில்லை ? ...
    Points
    200
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • murugan  from HUBLI
    டியர்! அதுவெல்லாம் அந்தக்காலம்! மறு கண்னத்தைக்காட்டும் மனோநிலை எல்லாம் கடந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது! சுதாரித்துக்கொண்டு சிந்திக்க ஆரம்பித்து விடுவேன்! சூழ்நிளைகேற்றவாறு நடந்து கொள்வேன்!
    Points
    170
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • R.M.Manoharan Manoharan  from ANAIMALAI
    50 லட்சம் புதிய வாக்காளர்களில் 5% கூட திமுகவிற்கு கிடைக்காது என்று ஒரு நண்பர் தீர்க்கமாக கணித்திருக்கிறார். ஜெவின் ஈவீஎம் தில்லுமுல்லுகளை அப்பஷ்டமாக கணித்ததற்கு அவருக்கு என் நன்றி. ஆர் எம் மனோகரன்,கொல்கத்தா . .
    Points
    2875
    about 17 hours ago ·   (2) ·   (3) ·  reply (0)   
  • ram  
    18 வருட கோர்ட் செலவீனகளையும் சேர்த்து மற்றும் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் ...
    Points
    200
    about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0)   
  • ram  
    நீதித்துறை சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் பாரபட்சமின்றி ... நீதி மன்றத்தை அவமதிப்பது , அதிகார துஸ்பிரயோகம் ...கோர்ட் ல ஆஜராகாமல் இருப்பது ... நேரத்தை வீணடிப்பது .... "நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?" - இப்படி நீதிபதியே வருத்தப்படும் அளவிற்கு நடந்துகொள்வது ... சராசரி நபராக இருந்தால் இதுபோன்று நடந்து கொள்ள நீதிமன்றம் அனுமதிக்குமா ?.... --- இப்படிக்கு இந்திய குடிமகன்.
    Points
    200
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)   
  • ram  
    செல்வி ஜெயலதிதாவின் மனுவை ஏற்றுக்கொண்டால் ,,, மக்கள் நீதி துரையின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும்.. இது முன் உதாரணமாக இருந்துவிடக்கூடாது ... "court" ல ஆஜராகாமல் மற்றும் 18 ஆண்டுகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிவிட்டு, தற்போது கம்பவுண்டிங் முறையில் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வருமேயானால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து, இதுபோன்ற தவறுகளைச் செய்வோரை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டோர் நினைவிலே கொண்டு, மத்திய அரசும், வருமான வரித்துறையும் இந்தப் பிரச்சினையை அணுகிட வேண்டும். -- சரியான தீர்ப்பை எதிர்பார்க்கும் - இந்திய குடிமகன் ...
    Points
    200
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • ssv  from TIRUCHCHIRAPPAL
    இந்த இரு பீடைகளும் தமிழ்நாட்டின் தலைவிதி,இரண்டும் பெரிய ஊழல் கட்சிகள், ஊழல் செய்து கட்சிக்காரர்கள் தலைவர்கள் எல்லாம் பெரிய கோடிஸ்வரர்கள் ஆகி விட்டார்கள் மக்களை ஜாதி, மத ரீதியாக பிரித்து ஓட்டு வாங்கி மக்கள் பணத்தை சுருட்டி விட்டார்கள்.மக்கள் 5க்கும் 10க்கும் கழ்டப்படும்போது இவர்கள் கோடிகளில் புரள்கிறார்கள்,தமிழ்மக்கள் இளிச்சவாயர்கள்,,,,,,,,மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை, எங்கே போய் முட்டிகொள்வது.....உம்.....புலம்பத்தான் முடியும்.......
    Points
    295
    about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)   
  • snatarajan  from NEW DELHI
    புதிய தலைமுறையைச் சேர்ந்த- தற்கால இளைஞர்கள்- மு,க, அவர்களை காந்தி மாதிரி பார்க்கிறார்கள். அவருடைய கடந்த கால வரலாறு இவர்களுக்குத் தெரியவில்லையே என்று நான் வருத்தப்படுவது உண்டு.மு.க பேசும் பேச்சுகள் அவரைப்பற்றி இந்தக்கால இளைஞர்கள் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.நீங்கள் தொடர்ந்து இப்படியே பேசுங்கள்.அதுவே நல்லது.
    Points
    255
    about 21 hours ago ·   (2) ·   (1) ·  reply (2)   
      Down Voted
    • tknithi  from TIRUNELVELI
      காய்த்த மரத்தில்தான் கல்லடி படும்.மலட்டு மரத்தில் யாராவது கல்லால் அடிப்பார்களா?. தமிழகத்தில் இரண்டு அரசியல்வாதிகள்தான் வலிவிழந்தவர்களுக்கு அதிகாரத்தைக்(Empowerment) கொடுத்தவர்கள். ஒன்று காம ராஜர்.1958 இல் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றார். 1989 இல் பெண்களுக்கான சொத்துரிமையை நிலை நாட்டினார்.
      about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)   
      •  from HA DONG
        பெண் சொத்துரிமை வைத்து தானே இன்றுஒரு கூட்டம் கொள்ளை அடிக்க திரிகின்றது . அதை கொடுத்து செய்ய சொன்ன மு.க .காந்தியா ? யாரை யாரோடு ஒப்பிடுவது என்று கூட தெரியவில்லையா ?
        about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
    • vembuvisveswaran  from SINGAPORE
      காந்தி எங்கே!! இந்த வசன கர்த்தா எங்கே!! காந்தியை கேவலபடுத்த வேண்டாம்.
      about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (1)   
      • Murali Gopal  from CHETPUT
        காந்தி-- காமரஜர் இவர்களை தயவு செய்து யாருடனும் ஒப்பிடாதிர்கள் அவர்களுடைய குடும்பத்தின்ர் இன்னும் வறுமையில் தான் இருக்கிறார்கள்.அவர்கள் பகட்டு வெளிநாட்டு கார்களில் பயணம் செய்ததில்லை....குழல்
        about 13 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)   
  • Vaidhyanathan Sankar  from CHENNAI
    விஞ்ஞானபூர்வமான ஊழல் என குறிப்பிடப்பட்டதை mararanthathu ஏனோ?
    Points
    3330
    about 23 hours ago ·   (1) ·   (0) ·  reply (1)   
    • tknithi  from TIRUNELVELI
      இன்று ஜெயலலிதா தண்டனையிலிருந்து தப்பிபதற்காக, வழக்கு மன்றத்தில் இருந்த வழக்கை அமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள, வருமான வரித் துறைக்கு, மத்திய அரசில் உள்ள தனது ஆட்ட்களின் துணை கொண்டு விஞ்ஞான பூர்வமாக மாற்ற வைத்துள்ளார். அவர் செய்தார் என்பதற்காக, இவரும் அதைச் செய்தாரா? இப்படியே எல்லோரும் செய்தால் என்ன ஆகும்? சரி கருணாநிதி அதற்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.அவரை குறை கூறிப் பதவிக்கு வந்த இவரும் அதைச் செய்வதை உங்கள் மனச் சாட்சி எப்படி ஏற்றுக் கொள்கிறது? கருணாநிதி வாயை மூடிக் கொண்டால், ஜெயலலிதா குற்றம் செய்தாலும், அவரைப் புனிதபடுத்தும் உங்கள் போன்றவர்கள்தான் தமிழகத்தில் மிகுதியாக இருக்கும் பொழுது வேறு யார் கேட்க முடியும்.
      about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)   
  • murugan  from PONDICHERRY
    உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப்பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ரெண்டு கண்ணும் போயிட வேண்டும் நாட்டில் எதிரியே யாரும் இருக்கக்கூடாது !அப்படித்தான் இருக்கிறது உங்களின் கேள்வி தலைவரே !உங்களுக்கு திறமையோ தன்னம்பிக்கையோ அறவே இல்லையா?சந்தர்ப்பவாதம் தான் உங்கள் பிறவிக்குணமா?
    Points
    170
    a day ago ·   (2) ·   (1) ·  reply (1)   
    • tknithi  from TIRUNELVELI
      உங்களை ஒருவர் ஒரு கன்னத்தில் அடித்தால், அவரின் மறு கன்னத்தில், திருப்பி அடிப்பீர்களா? அல்லது உங்களின் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டுவீர்களா?
      about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • R.M.Manoharan Manoharan  from ANAIMALAI
    முதலில் கருணா அவர்களை கமென்ட் அடிப்பத்சி நிறுத்தி ஜெ செய்யும் தவறுகள், தில்லுமுல்லுகள் அனைத்தையும் சரி என்று கூறும் ஜால்ராக்கள் ஒழியவேண்டும். அப்போதுதான் ஜெவின் அனியாயங்கள், அக்கிரமங்கள், தில்லுமுல்லுகள், இ.வி.எம்மில் செய்யும் திருட்டுத்தனங்கள் நாட்டின் பார்வைக்குத்தெரியவரும். தி.முகவின் 2ஜி ஊழலைப்பற்றியே பேசி, அதிமுகவின் ஊழல்களை எத்தனை காலத்திற்குத்தான் இந்த ஜாலராக்கள் மறைக்க முயலுவார்கள் பார்க்கலாம்!
    Points
    2875
    a day ago ·   (13) ·   (2) ·  reply (0)   
    Darwin  ·    Up Voted
  • tamil selvan  from COCHIN
    அந்த அம்மா தவறு செய்திருக்கிறார் என்று ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டால் கூட அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நல்லாட்சி தந்து கொண்டு இருக்கிறார்......! நீரும் உம குடும்பமும் எந்தவித பாடமும் கற்று கொண்டதாக தெரியவில்லை...ஆயிர கணக்கான கோடிகளை சொத்தாக கொண்டிருப்பவர்களே 4 இட்லிக்குமேல் உங்களால் சாப்பிடமுடியுமா? எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் 100 கார்கள் வைத்திருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு காரில் மட்டும் தானே பயணம் செய்ய முடியும்? அந்த அம்மாவை நோக்கி நீர் ஒரு viral நீட்டினால் உம்மை நோக்கி மூன்று விரல் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
    a day ago ·   (5) ·   (2) ·  reply (0)   
    dubuk_u   Up Voted
      Down Voted
  • alaguvel  from CHIKNAYAKANHALL
    appo 2g
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Murali Gopal  from CHETPUT
    வீட்டை நாட்டுக்கு கொடுத்து-நாட்டையே வீட்டுக்கு தந்த நல்லவரே!!...தங்கள் குடும்பமும்-நேரு குடும்பமும் திரண்டுவந்து ஊழலற்ற சமுதாய பணிகள் செய்துவருவது இந்த நாடறியும்...அதனால் (வேறு யாரும்) முறை கேடுகளோ-ஊழலோ செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்....
    Points
    190
    a day ago ·   (2) ·   (1) ·  reply (1)   
    ram   Down Voted
    • tknithi  from TIRUNELVELI
      பெண்களுக்கு எம்போவர்மென்ட் கொடுத்ததே கருணாநிதிதான், பெண்களுக்கு சொத்துரிமையை முழுமையாக ஆக்கியதே இவர்தான்(1989). தமிழ் நாடு அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதம் இட ஒதுக்கீடு செய்ததும் இவர்தான் . டிஎன்.பி.சி. சட்டம் எண் 21, 2007. இது எதை காட்டுகிறது.மனிதர்கள் என்றால் இரண்டு பக்கம் உண்டு.அது உனளுக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும். இங்கு கருத்தரிவிக்கின்ற எல்லோருக்கும் பொருந்தும்.
      about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (2)   
      • Murali Gopal  from CHETPUT
        உண்மை தான்..பெண்கள் முன்னேற்றத்திற்கு தலைவர் செய்த உதவிகளை யர்ரும் ம்றுக்கமுடியாது....சில அரசியல் வாதிகளின் வாரிசுகள் ஊர் பணத்தில் உல்லாசமாக இருக்கும் உலகில் தனக்கென வாழாத உத்தமர் என்பதும் இந்த நாடறியும்.......குழல்
        about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)   
        •  from HA DONG
          யாரங்கே அந்த உத்தமர் கலைஞர் அவர்களா?நெஞ்சு கொஞ்சமா வலிக்குதுடா சாமி .
          about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
      • Murali Gopal  from CHETPUT
        உண்மை தான்..பெண்கள் முன்னேற்றத்திற்கு தலைவர் செய்த உதவிகளை யர்ரும் ம்றுக்கமுடியாது....சில அரசியல் வாதிகளின் வாரிசுகள் ஊர் பணத்தில் உல்லாசமாக இருக்கும் உலகில் தனக்கென வாழாத உத்தமர் என்பதும் இந்த நாடறியும்.......குழல்
        about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • pugazhendhi s  
    Here most of them comment & critize Thiru M.K only, it means they accept & agree what all mistake Ms. J.J did is correct. According to my view both of them are not innocent, but think is the rules & law for the poor people only and not for this politician?
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)   
  • R.M.Manoharan Manoharan  from ANAIMALAI
    ஊஊழல் வழக்குகள் எல்லாம் ஒன்றே. இதில் 2ஜி வழக்கு, வருமானவரி வழக்கு என்று வித்தியாசம் பார்த்து ஜெ செய்யும் தில்லுமுல்லு வேலைகளுக்கு உடந்தையாகி விடல் கூடாது.ஜெவின் வருமானவரி வழக்கு சிறிய வழக்கென்றால் அது ஏன் 18 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது? எவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பிரதமராக பணிபுரிய மாட்டேன் என்று பிரமானம் எடுத்துக்கொண்ட மோடி இப்படி பகிரங்கமாக ஜெவுக்கு ஆதரவாக பிரதமர் என்ற முறையில் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்வது முறையற்றது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.அதிகாரத்தை அவமதிக்கும் மோடி பிரதமராக நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். இன்று வழக்குகளிலிருந்து விடுவிக்க அதிகார துஷ்பிரயோகம் செய்யும் மோடி, நாளை தனது தனிப் பெரும்பான்மை பலத்தை துஷ்பிரயோகம் செய்து எந்த நிலைக்கும் செல்வார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது நாட்டுக்கே ஆபத்தானது. மோடி தனது அதிகார துஷ்பிரயோகங்கள இனி யாவது நிறுத்திக்கொள்ளுதல் அவருக்கு நல்லது.
    Points
    2875
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • GUNA  from CHENNAI
    அவரது சொந்த விசயம் பற்றி பேசுவது அவ்வளவு நாகரிகம் அல்ல. அவரது நிர்வாக செயல்பாடுகள் குறித்துப் பேசுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. தயவு செய்து தலைவர்களே ஒருவருடைய சொந்த விசயங்களில் தலையிடாதீர்கள். அது உங்கள் பெயரைத்தான் கெடுக்கும். ஒவ்வொருவர் வாழ்க்கையில் சொந்தப் பிரச்சனைகள் இருக்கும். அதையெல்லாம் நோண்டிப்பார்ப்பது அநாகரீகம்.
    Points
    880
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Aravind Anbu at Al Mashooq Est from RIYADH
    நீங்க என்ன தான் பேசினாலும் உங்க குடும்ப ஆட்சிக்கு அந்த அம்மா எவ்ளோவோ தேவலாம் முதல்ல கனி மொழி தயாளு அம்மாவை பாருங்க அப்புறம் மாறன் ராசா வ இந்த தமிழ் மாக்கள் இனி உங்க பேச்சை ஆடு மந்தைபோல் இருக்கமாட்டாங்க அதுக்கு தேர்தல் முடிவுதான் பதில் ...இன்னி உங்கள் பேச்சு எடுபாடாது கலைஞர் அவர்களே.
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Ansel Antony  from MADURAI
    எல்லா குற்றவாளிகளுக்கும் இது போல சமரசம் செய்ய வாய்ப்பினை நீதிமன்றம் கொடுக்குமா? என்ன அநியாயம் இது. 18 வருடமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் எவ்வளவு பொது மக்களின் வரிப்பணம் வீணாக்க பட்டது? கருணாநிதி சொல்வதால் அல்ல இல்லாவிட்டாலும் நீதி பணம் படைத்த அரசியல்வாதிகளின் விளையாட்டோ என எண்ண தோன்றுகிறது. இவ்வளவு நடந்தும் இன்றைய தமிழகத்தில் லஞ்சம் இல்லையா? ஒவ்வொரு துறையிலும் நடக்கத்தானே செய்கிறது. எப்ப லஞ்சம் ஒழிஞ்சி நாடு உருப்புடுறது?
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Jagatheesan  from HYDERABAD
    திமுக ஒன்றை மறந்துவிட்டது. தமிழகத்தில், ஒவொரு ஆண்டும், 10லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்கின்றனர். இதில் 2011இல் இருந்து 2016வரை புதியதாய் 50லட்சம் வாக்காளர்கள். அனைவரும் இன்றைய தலைமுறை. இவர்களில் வெறும் 5% பேர் தான் இவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று தீர்கமாக சொல்ல முடியும், காரணம் இவர்களின் செய்கை அப்படி. செய்கையும் செயலும் மாறினால் எதிர்காலம். இதை அறிவார்களா? அறிவார்ந்த அரசியல்வாதிகள்?
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • selvarajan.  from PONDICHERRY
    இந்த அம்மாவாவது வருமான வரி துறையுடன் சமரசம் செய்கிறார்கள். ஆனால் கருணா அந்த காலத்திலேயே இந்திராகாந்தியோடு சமரசம் செய்து தப்பித்தவர் என்பது வரலாறு !
    Points
    300
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)   
  • shan  from THANJAVUR
    இரண்டும் ஒன்றல்ல முதல்வர் ஜெயலலிதா ஆரம்பதுள் இருந்தே மோடிஇடம் நட்புனர்வுடாந்தான் இருந்து இருக்குறார் .இதில் அடக்கிவவாசிக்க எது மில்லை .ஆனால் மோடி' நாசகரசக்தி ,இந்தியாவை மத ரீதியாக பிளவு பிளவு படுத்தும் கோடரி /என்றெல்லாம் தேர்தல் வரை சொல்லிவிட்டு இப்போதுஎப்பாடு பட்டாவது மோடியிடம் நெருக்கம் கொள்ள முயல்வது எதனால் ?2G வழக்கு தான் /2G வழக்குக்கும் வருமான வரித்துறை வழக்கும் நிறைய வித்யாசம் உள்ளது .2G வழக்கு 176000 லட்சம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை இழக்க செய்ததது .இதனால் அரசு மக்கள் நலத்திட்டங்கள் செய்து இருக்கமுடியும் .ஆனால் வருமான வரித்துறை சில் லட்சம் .அதை திருப்பியும் கட்டிவிடலாம் .2G இழப்பு பெரும் இசப்பு திருப்பி வாங்க முடியுமா ,இதுதான் மாபாதகம்
    Points
    5280
    2 days ago ·   (3) ·   (3) ·  reply (2)   
      Up Voted
    • tknithi  from DELHI
      கருணாநிதி பட்ஜெட்டின் ஒரு சில அமசங்களை பாராட்டியும், சில அமசங்களைக் குறை கூறியுள்ளார்.முந்தையதை மட்டும் தன கற்பனைக்குத் தீனி போட எண்ணி எடுத்துக் கொண்டுள்ளிர்கள். நிறையை நிறை என்பதும்,குறையைக் குறையென்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.நல்லதை நல்லது என்று கூறாததும்,கெட்டதைக் கெட்டது என்று கூறாததும், ஒரு மன வக்கிரமே.இந்திய வரலாற்றில் காந்தியடிகள் முதல், இன்று வரை வாழும் அரசியல்தலைவர் தலைவிகளிலும், மற்றவரின் நல்ல செயலைப் பாராட்டதவர்கள் யாரும் கிடையாது.ஆனால் உங்கள் தலைவி யாரையாவது பாராட்டியிருக்கிறாரா? அவரைப் போலவே, கருணாநிதியின் பாராட்டும் குணத்தையும், குறையாக விகாரப் படுத்தமுடிகிறது. எதற்கெடுத்தாலும் 2G.அந்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. உங்களின் மனது உள்வாங்க மறுப்பது ஏன்? அப்படி குற்றம் சுமத்தப் பட்டவர்கள் ஒடி ஒழிய நினைத்தாலோ, அல்லது குறுக்கு வழியில், முதல்வர் போல் , வழக்கு மன்றத்தில் நிலையில் உள்ள வழக்கிலிருந்து , ஒரு துறையின்(வருமான வரித் துறை) மூலமாக தப்பிக்க நினைத்ததால் , அவர்களுக்கு பிரதமரின் தயவு வேண்டும்.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
    • tknithi  from DELHI
      தேர்தலின் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் முஸ்லீம்களின் வாக்குகளைக் குறி வைத்து பி.ஜே.பியையும் ஒரு பிடிதாரே.தேர்தல் ஆரம்பத்திலிருந்தே மதச் சார்பின்மைபற்றி முழக்கமிட்டார். அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் ஒரு அமைப்பை தன்னுடன் வைத்து இருந்தார். மோடி முதலிலிருந்தே நண்பராக இருந்தால்,ஏன் .நண்பருடன் கூட்டுச் சேரவில்லை? சோ.இராமசாமி அவர்கள் தலை கீழாக நின்று பார்த்தார். முடியவிலையே.மோடி பிரதமர் என்று அறிவிக்கப் பட்டதனால், தன்னுடைய பிரதமர் கனவு கலைந்ததால்தான்,கூட்டணியை மறுத்தார். அப்பொழுது மதச் சார்பாளராககவும்,தன போட்டியாளராகத் தெரிந்த மோடி, இப்பொழுது நண்பராகிறார்.அது நாடகமா இல்லை இது நாடகமா?
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • naagai jagathratchagan  from THANJAVUR
    வேதம் யார் ஓதுவது என்பது கூட இப்போது எல்லோரும் மறந்து விட்டார்கள்
    Points
    150
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • murugan  from PONDICHERRY
    எப்ப நாம ஆட்சிக்கு வரலாம் என்ற கொள்கையினை இன்னும் நீங்கள் மாற்றிக்கொள்ளவேயில்லை என்பது நன்றாகவே வெளிச்சம் போட்டு கா ட்டிவிட்டது உங்களின் அறிக்கை! அண்ணா இறந்த போது எம்ஜிஆர் தயவால் சில மூத்தவர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலமைச்சரானீர்கள்! பிறகு எம்ஜிஆர் மறைவுக்குப்பின்னால் அப்பாடா இனி நமக்கு யாருமே எதிரிகள் இல்லை என்று முதலமைச்ச்ரானீர்கள்! பிறகு ரஜினி காந்தின் தயவால் ஒருமுறை முதலமைச்சரானீர்கள்! அப்பறம் காங்கிரசின் வலுவான கூட்டணியால் ஒரு முறை மைனாரிட்டி கவருமெண்ட்டு அமைத்து முதமைச்சரானீ ர்கள்! உங்களுக்கு குறுக்கு வழி குறுக்குப்புத்தி சந்தர்ப்பவாதம் இதைத்தவிர வேறு எந்த தனித்தன்மையோ தன்நம் பிக்கையோ எதுவும் கிடையாதா?
    Points
    170
    2 days ago ·   (1) ·   (3) ·  reply (0)   
  • Thahir  from CHETPUT
    எல்லாம் தண்டனைக்கு பயந்து தான்
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • tknithi  from TIRUNELVELI
    டான்சி வழக்கில், " அரசு ஊழியர்கள், அரசின் சொத்தை வாங்கக் கூடாது என்று விதியுள்ளது(Rule).ஆனால் சட்டம்(Act) இல்லை. ஜெயலலிதா விதிப்படி குற்றம் புறிந்தாலும், சட்டம் இல்லையென்பதால், அவர் மனச் சாட்சிப்படி நடந்து கொள்ளட்டும்" என்று ஒரு தீர்ப்பை, இந்தியப் பெருமை மிகு உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த சலுகை சாதாரண மக்களுக்குக் கிடைக்குமா? இதிலும் ஜெயலலிதாவை நான் குற்றம் கூறவில்லை. ஒரு திருட்டுத் தனம்,வெற்றியடந்து இருக்கிறது நீதி மன்றத்தின் உதவியால். கட்டபொம்மன் படத்தில், தன்னுடைய தானவதிப் பிள்ளையே, ஸ்ரீவைகுண்டம் நெற்களஞ்சியம் கொள்ளையடிப்பில் பங்கு பெற்றார் என்றவுடன், "நமது நீதி அங்கே செத்துவிட்டது " என்று அவரை ஆங்கிலேயரின் விசாரணைக்கு ஒப்புவிக்கத் துண்கிறான் . மன்னராட்சி காலத்தில் இருந்த, நீதி இப்பொழுது படித்த கூட்டத்தினரால் கொலை செய்யப் பட்டுகொண்டிருக்கிறது.
    Points
    1555
    2 days ago ·   (3) ·   (0) ·  reply (1)   
    • dubuk_u  from CALICUT
      //அரசு ஊழியர்கள், அரசின் சொத்தை வாங்கக் கூடாது என்று விதியுள்ளது(Rule).// மன்னிக்கவும், ,வாங்குவதை தவிர்க்கவும் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு,
      about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)   
      • tknithi  from TIRUNELVELI
        அது உங்கள் மொழிபெயர்ப்பு போலும்.விதியென்பது வரையறுக்கப் பட்டது.அது இரண்கெட்டானக, புத்தி கூறுவதாக அமைக்கபட்டிருக்கக் கூடாது.அப்படி இருந்தாl, அதற்குப்பெயர் வழிகாட்டுதலாக இருக்கும். IPC.169 என்பது Indian Penal Code என்பதாகும்.அதன்படி எந்த அரசு ஊழியர்களும் அரசுச் சொத்தை வாங்கவோ, தனது சொத்தை அரசுக்கு விற்கவோ கூடாது என்பதுதான். அதில் எங்கே இருக்கிறது வழிகாட்டுதல்.இதை நீதி மன்றம் Indian Penal Code 169 படி தவறாக இருந்தாலும், ஜெயலலிதாவைத் தண்டிக்க தனியாகச் சட்டம் இல்லை என்றும், ஆகவே அவரின் மனச் சாட்சியின் படி நடக்கவும் என்றுதான் அறிவுறுத்தியுள்ளது. மேலும் G.O No.1350, dated 26.7.1968 யை வேண்டுமானால் வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்லலாம். மேலும் அரசின் ஆணையின் வழிகாட்டுதலையும் மீறினாலும் தண்டனை உண்டு. அதன் படியும் படியும் ஜெயலலிதாவுக்குத் தண்டனையுண்டு.நீதிமன்றம் IPC க்கும், சட்டத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.ஆனால் இந்த அணுகு முறையை மக்களுக்கு அந்த நீதிமன்றம் கையாளுமா? இதை உங்கள் மனச் சாட்சிப்படி சிந்தியுங்கள்.
        about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • du  from LONDON
    மு. க. அவர்களே உங்களுக்கு காங்கிரஸ், அந்த அம்மாவுக்கு பா .ஜ.பா. ஆக இந்த விசயத்தில் நீங்கள் இருவரும் சமார்த்தியமாக இரண்டு பெரிய கட்சிகளை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் . உங்களுக்கு சர்காரியா போன்ற சமாச்சாரங்களில் காங்கிரஸ் உதவியது, இந்த அம்மாவுக்கு முதலில் கர்நாடகாவில் பா .ஜ.பா அரசு உதவி செய்தது இப்போது மத்திய அரசு (பா.ஜ.பா)அதை முடித்துவைக்கப் போகிறது. மொத்தத்தில் உங்கள் இருவருக்கும் நல்ல அதிர்ஷ்டம், 40 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் இருவருக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் ஒரு புறம், நீங்கள் செய்யும் தில்லு முல்லுகளில் இருந்து உங்களை காப்பாற்ற இரண்டு தேசிய கட்சிகள். ஆனால் நீங்களோ உங்கள் காரியம் முடிந்ததும் மக்களுக்கும், அந்த இரண்டு கட்சி களுக்கும் போடுவது நாமம். என்ன அதிர்ஷ்டம் உங்கள் இருவருக்கும்.