வனயுத்தம்' படத்திற்காக சொந்த வீட்டையும் இழந்துவிட்டேன்: டைரக்டர் ரமேஷ் கண்ணீர்
போன
வாரத்தில் ‘விஸ்வரூபம்’ படத்திற்காக கமல் கண்ணீர் விட்டார். இப்போது
டைரக்டர் ரமேஷ் கண்ணீர் விட்டுள்ளார். அப்படி என்னதான் படத்தில் பிரச்னை?
சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து இயக்கி இருக்கிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
இவர், ஏற்கனவே ‘குப்பி’ என்ற பெயரில், ராஜீவ்காந்தியின் வாழ்க்கையை படமாக்கியவர்.தற்போது தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாரான ‘வனயுத்தம்’ படம், திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடித்து இருக்கிறார். போலீஸ் அதிகாரி விஜயகுமார் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமி நடித்து இருந்தார். (படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.)இந்த படத்தை எதிர்த்து வீரப்பனின் மனைவி

முத்துலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த
நீதிபதிகள், முத்துலட்சுமிக்கு பட தயாரிப்பு நிறுவனம் ரூ.25 லட்சம் வழங்க
வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், ‘‘வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு பணம்தான் குறிக்கோள். முதலில் என்னிடம் ரூ.1 கோடி கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால், தன்னையும், தனது மகள்களையும் பாதிக்கும் என்று கூறி, படத்தில் இருந்த 32 காட்சிகளை நீக்கும்படி கூறினார். அவர் ஆட்சேபித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
முத்துலட்சுமி அதோடு விடவில்லை. எனக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை தூண்டி விடுகிறார். தமிழ்நாட்டு போலீசை உயர்வாகவும், கர்நாடக போலீசை தாழ்வாகவும் காட்டியிருப்பதாக கன்னட அமைப்புகள் என்னை கண்டித்துள்ளன.
பெங்களூரில் எனக்கு சொந்தமாக 3 வீடுகள் இருந்தன. ‘குப்பி’ படத்துக்காக ஒரு வீட்டை விற்றேன். ‘காவலர் குடியிருப்பு’ படத்துக்காக இன்னொரு வீட்டை விற்றேன். ‘வனயுத்தம்’ படத்துக்காக நான் குடியிருந்த மற்றொரு வீட்டையும் விற்று விட்டேன். இப்போது நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன்.கடன்பட்டாவது முத்துலட்சுமிக்கு நான் பணம் கொடுத்து விடுவேன். அப்படி கொடுத்தால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் சேர்ப்பதற்கு அனுமதிப்பாரா?
‘வனயுத்தம்’ படத்தில் நான் உண்மையில் நடந்த சம்பவங்களைத்தான் படமாக்கியிருக்கிறேன். வீரப்பனை நல்லவராக காட்டவில்லை என்று முத்துலட்சுமி என்னை மிரட்டுகிறார். 2 மாநில மக்களிடையே கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். நீதிமன்றத்தில் என்னை முத்துலட்சுமி அடிக்க வந்தார். வழக்கறிஞர்களும், போலீசாரும் அவரை தடுத்திருக்காவிட்டால், என்னை அவர் அடித்திருப்பார்.
எல்லாதுறையை சேர்ந்தவர்களும் அவர்கள் தொழிலில் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. சினிமா கலைஞர்களுக்கு மட்டும் தொழில் சுதந்திரம் இல்லை. உண்மையை சொன்னால், மிரட்டுகிறார்கள். எல்லோருக்கும் இருக்கும் உரிமை எங்களுக்கு மட்டும் ஏன் இல்லை?’’என்றார்

thanx - vikatan