ஹீரோ கிராமத்தில் இருந்து சென்னை போறார். ஹீரோயின் ஃபாரீன்ல இருந்து சென்னை வர்றார். 2 பேரும் ஒரே அபார்ட்மெண்ட்ல ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழல். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா என்ன ஆகும் ? நயன் தாரா பக்கத்துல யார் போனாலும் என்ன ஆகும் ? பத்திக்குது . ஆனா பாருங்க அந்தப்பொண்ணு ஆல்ரெடி லண்டன் மாப்ளைக்கு நிச்சயம் ஆன பொண்ணு . 1999 கதைல நாம பார்க்காத ட்விஸ்ட்டா ? அந்த மாப்ளையை மீறி எப்படி 2 பேரும் சேர்றாங்க என்பதுதான் கதை
ஹீரோவா சிவா. இவருக்கு காமெடி நல்லா வருது , மொக்கை நல்லா போடறார். ஆனா அவர் முகத்துல காதல் உணர்வு மருந்துக்குக்கூட வர்லை . ரொம்ப சிரமம் . அவர் தன்னை மாத்திக்கனும் இல்லைன்னா ஆடியன்ஸ்க்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடும் , ஆல்ரெடி தமிழ்ப்படம் அளவுக்கு ரசிக்க முடியலைன்னு மவுத் டாக் பரவிட்டு இருக்கு , டான்ஸ் காட்சிகளில் சமாளிக்கிறார்
ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இவர் முகத்தில் ஆயில் எப்போதும் தடவியே இருப்பாரா?என சந்தேகப்பட வைக்கும் சருமம். புன்னகையில் அழகாகத்தெரியும் இவர் சோகக்காட்சிகளில் , கோபக்காட்சிகளில் அந்த அளவு மிளிர வில்லை , ஆனால் காலேஜ் , டீன் ஏஜ் பெண்களைக்கவர்வார் . காதல் உனர்வுகள் இவர் முகத்தில்சரளமாகவருகிறது , சபாஷ்
சந்தானம் இடைவேளைவிடும்போதுதான் எண்ட்ரி ஆகிறார். படத்தில் அவர் அடிக்கும் டயலாக்ஸ் 24, அதில் கவுண்ட்டர் டயலாக்ஸ் 7 , உருவகேலி - 5 , டபுள் மீனிங்க் 2 , மொக்கை காமெடி 6 , ஆல்ரெடி வந்த எஸ் விசேகர் காமெடி டிராமாவில் உருவியது 4 என எப்போதும் போல் ஒரு ரேஷியோ வெச்சு காமெடி டிராக் அமைப்பார் போல. ஆனா ஒரு ஆறுதல் என்னான்னா அவர் இந்தப்படத்தில் அடக்கியே வாசிச்சிருக்கார் , இயக்குநர் சொன்னதை மட்டும் செஞ்சிருக்கார் ( இயக்குநர் யாரு ? மேலிடம் இல்லை?)
ஊர்வசி, நாசர் , ரேணுகா , ராகுல் என நடித்தவர்கள் பட்டியல் இருந்தாலும் பெரிதாக சொல்லும்படி இல்லை .
அனிரூத் . ஆண்ட்ரியா அட்டாக்கர் (@ TALKER) ,மவுத் ஆர்கன் அப்பாடக்கர் , ஒல்லி கில்லி ( இசை அமைப்பதில் தான் ) இசை ஆல்ரெடி மரண ஹிட் . க்ளைமாக்சில் கங்க்ணம் ஸ்டைல் பாட்டுக்கு நடனமும் ஆடுகிறார் .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. உதய நிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி தான் இயக்குநர் , ஒரு பெண் இயக்குநர் என்ற முறையில் அவருக்கு ஒரு பூங்கொத்து . குடும்பத்துடன் பார்ப்பது மாதிரி கண்ணியமான காட்சி அமைப்புகளுடன் ஒரு சராசரிக்காதல் கதை ரசிக்கும் படி தந்ததற்கு
2 சந்தானம் இருந்தும் பெண்களை நக்கல் அடிக்கும் காட்சியோ , ஆபாச டபுள் மீனிங்க் காட்சியோ இல்லாமல் கண்ட்ரோல் பண்ணியது குட்
3 ஓப்பனிங்க் சீனில் டாக்சியில் போகும் ஹீரோயினை டிரைவர் கரெக்ட் பண்ண ஆழம் பார்க்க கமல்-ன் கில்மா பாட்டை ஓட விட உடனே ஹீரோயின் செல் ஃபோனை எடுத்து அப்பாவிடம் பேசுவது போல் டிரைவர் பற்றிய டீட்டெயில் சொல்லி எச்சரிக்கை செய்வதும் உடனே டிரைவர் ரஜினி யின் சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாட்டை மாற்றுவதும் கிளாஸ் , இந்த ஒரு காட்சியில் இயக்குவது ஒரு பெண் என்பதை நிரூபணம் செய்கிறார். அதேபோல் ராத்திரியில் தனியாய் பயணம் செய்யும் பெண் எப்படி ஜாக்கிரதையாக இருக்கனும் என்பதற்கான டிப்சும் ஆச்சு
4 மிலிட்ரி மேன் நாசர் போலீஸ் ஆஃபீசர் ஊர்வசியை தாங்கிப்பிடிக்கும் காட்சியில் அவரது அவதாரம் படப்பாடலான தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாட்டை ஓட விட்டது தியேட்டரில் செம அப்ளாஸ் . கதையில் இன்னும் ரிலாக்ஸ் தேவைப்படும் பட்சத்தில் இந்த காமெடி டிராக்கை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்
5 ஏ பெண்ணே பாடல் காட்சிக்கு அமோகவரவேற்பு . மரங்களுக்கு லைட்டிங்க் பண்ணி இருந்தது ரசிக்க வெச்சுது . ஆர்ட் டைரக்ஷன் அட்டகாசம் , பின்னிட்டாங்க , எல்லாப்பாடல்களுமே நல்லாருக்கு , 3 பாடல்கள் செம ஹிட் ஐலேசா, காற்றில் , ஒசக்க , ஏ பெண்னே , சென்னை என 5 பாட்டு
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. மனோபாலாவிடம் புகார் கொடுக்கவரும் சிவா முதல் ஷாட்டில் திருநீறு ஒரு வரிதான் வெச்சிருக்கார் , அடுத்த ஷாட்டில் 3 வரி இருப்பது போல் பட்டை அடிச்சிருக்கார் . கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் அது எதுக்கு தேவை இல்லாம ? அந்த ஒரு சீன் தவிர வேறு எந்தக்காட்சியிலும் அவர் ஒரு பக்தன் எனவோ , ஆன்மீகப்பிரியன் என்பதோ வரவே இல்லை . அபார்ட்மெண்ட்டில் இருவரும் சண்டை போட்டுட்டு போலீஸ் ஸ்டேஷன் ல புகார்கொடுக்க வ்ர்றவர் எதுக்கு மெனக்கெட்டு திருநீறுப்பட்டை அடிச்சுட்டு வரனும் ?
2 ஹீரோயின் ஃபோன் நெம்பரை ஹீரோ கேட்டு வாங்கி தன் ஃபோன் ல ஸ்டோர் பண்றார் . பின் ஹீரோயின் கால் பண்ணும்போது ஹீரோவின் செல் மானிட்டர்ல் +91 944--------- என வருவது எப்படி ? ஹீரோயின் மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது ரிசீவ்டு காலோ இருந்து பின் ஹீரோ அதை ஸ்டோர் பண்ணி இருந்தால் தான் அப்படி +91 என வரும் , இல்லைன்னா 944.... என தானே வரும் ?
3 ஹீரோயின் ஒருஷாட்டில் ஏரியில் மீன் பிடித்து தூண்டிலை இழுக்கும் காட்சியில் ஆல்ரெடி பிடிச்சு செத்த மீனை தூண்டிலில் மாட்டியது நல்லாத்தெரியுது
4 ஹீரோகிராமத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு ஹீரோயினை அழைத்து வர்றார் . ஒரு தேயிலைத்தோட்டத்தில் இறங்கி இதுக்கு மேல் வண்டி போகாது நாம நடந்து போலாம்னு ஹீரோயினை நடக்க வெச்சு கூட்டிட்டுப்போறார். பின் ஹீரோயின் கிளம்பும்போது வீட்டு வாசலுக்கே ஜீப் வருவது எப்படி ?
5 லண்டன் மாப்ளை நிச்சயதார்த்தத்துக்கு ஹீர்ரோயின் விரல் ல எங்கேஜ்மெண்ட் ரிங்க் போட்டிருக்கார் . அதை ஹீரோ வாங்கிஅடமானம் வெச்சாச்சு . ரிட்டர்ன் வந்த மாப்ள எங்கே நான் போட்ட மோதிரம்?னு கேட்கவே இல்லை ? விரலைக்கூடப்பார்க்காத கண்ணியமான மாப்ளையோ ?
6 நிச்சயிக்கப்பட்ட லண்டன் மாப்ளை சென்னை வந்து ஹீரோயினைப்பார்த்துப்பின் அவர் தங்கி இருப்பது எங்கே?ன்னு கேட்கவே இல்லை , அவர் வீட்டுக்கும் வர முயற்சிக்கவே இல்லை
7 . சந்தானம் லண்டன் மாப்ளையை சந்தித்து ஹீரோ காதலைச்சொல்லிடறார். அதை மாப்ளை ஏன் ஹீரோயினிடம் சொல்லவில்லை? அட்லீஸ்ட் வெரிஃபிகேஷன் கூடப்பண்ணலை ? க்ளைமாக்ஸில் மட்டும் எதுக்கு சம்பந்தமே இல்லாம அதை சொல்றார்?
8 ஊர்வசி ஹீரோ -ஹீரோயின் அபார்ட்மெண்ட்க்கு நைட் வந்து ஹாலில் சோபாவில் படுத்து தூங்கிடறார்/. அவர் வந்ததால கணவன் - மனைவியா நடிக்கும் அவங்க வேற வழி இல்லாம பெட்ரூமில் போய் படுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மாதிரி சீன் ஒட்டவே இல்லை . நான் வீட்டுக்கு விலக்கு , உங்க கூட ஹால் ல யே படுத்துக்கறேன்னு சொல்லலாம் , அல்லது அதே வீட்டில் இன்னும் 2 ரூம் இருக்கு , அங்கேபோலாம்
9அனிரூத் பிரமாதமான பாட்டு போட்டுக்குடுத்தும் இயக்குநர் அந்த பாடல்களுக்கான லீடு சரியாத்தரலை . சென்னை எக்ஸ்பிரஸ் லுங்கி டான்ஸ் மாதிரி கங்க்னம் பாட்டை க்ளைமாக்சில் வெச்சது உட்பட எல்லாப்பாடல்களுமே ஏனோ தானோ என ஓப்பன் ஆகுது
10 இயக்குநர் ஒரு பெண்ணாக இருந்தும் எதுக்காக ஹீரோயின் வரும் 90% காட்சிகளில் லோ கட் ஆங்கிள் ஷாட் வெச்சு கவர்ச்சி காட்டனும் ?
11 கல்யாண மண்டபத்தில் ஹீரோ , ஹீரோயின் இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்ப நேரமாத்தேடிட்டு இருக்காங்க , 2 பேர் கிட்டேயும் செல் போன் இருக்க , ஒரு கால் அல்லது மெசேஜ் அனுப்பி நீ எங்கே இருக்கே?ன்னு கேட்டாமேட்டர் ஓவர்
12 மேரேஜ்க்கு வரும், ஹீரோயின் கழுத்துல ஒரு செயின் நகை நெக்லஸ் கூட போட்டுக்காமயாவரும் ? கைல வளையல் இருக்கு , காதுல தோடு இருக்கு , வெறும் கழுத்தா வரலாமா? இயக்குநர் ஒரு பெண் வேற
11 கல்யாண மண்டபத்தில் ஹீரோ , ஹீரோயின் இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்ப நேரமாத்தேடிட்டு இருக்காங்க , 2 பேர் கிட்டேயும் செல் போன் இருக்க , ஒரு கால் அல்லது மெசேஜ் அனுப்பி நீ எங்கே இருக்கே?ன்னு கேட்டாமேட்டர் ஓவர்
12 மேரேஜ்க்கு வரும், ஹீரோயின் கழுத்துல ஒரு செயின் நகை நெக்லஸ் கூட போட்டுக்காமயாவரும் ? கைல வளையல் இருக்கு , காதுல தோடு இருக்கு , வெறும் கழுத்தா வரலாமா? இயக்குநர் ஒரு பெண் வேற
மனம் கவர்ந்த வசனங்கள்
1. பாடுபடாம பலாச்சுளை கிடைக்காது
2 பேய்ப்படத்துக்கு தியேட்டர்ல எத்தனை லவ் ஜோடிங்க பார்த்தியா? பேய் வந்தா
பயத்துல கட்டிப்பிடிச்சுக்கலாம்.எல்லாரும் பேய்க்காகத்தான் வெயிட்டிங்
3 எவ்ளவ் காஸ்ட்லி கேமராவா இருந்தாலும் லவ் FEELING கை படம் பிடிச்சுட முடியாது
4 நீ சொன்ன மாதிரி அவ 1ம் அவ்ளவ் குண்டு இல்லையே?
உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்
5 ஒருத்தனைப்பார்த்ததுமே அவன் நல்லவனா? கெட்டவனா?னு பொண்ணுங்க கண்டுபிடிச்சுடுவாங்க.அவங்க அவ்வளவு ஷார்ப்
6 எப் ஐ ஆர் = FEMALE INFORMATION REPORT ,அதாவது பொண்ணுங்க சொல்றதைத்தான் போலீஸ் நம்பும்
படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ்
1. ஹீரோயின் க்கு சந்தானம் வெச்ச பட்டப்பேரு டமுக்கு டப்பா # வ செ .ப்ரியா ஆனந்த்
2 சந்தானம் இடைவேளையில் தான் என்ட்ரி.பார்த்தவரை படம் சுமார் தான் # வ செ
3 வணக்கம் சென்னை இயக்குநர் கிருத்திகா @astrokiru வணக்கம்.உங்க படம் தான் பார்த்திட்டிருக்கேன்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்-40
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே
ரேட்டிங் = 2.75 / 5
சி பி கமெண்ட் -காதலர்கள் , சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம் , பெண்களை கவரும் . போர் அடிக்காம போகுது . ஆண்கள் டி வி யில் பார்க்கலாம். வணக்கம் சென்னை - சராசரி காதல் கதை .சந்தானம் காமெடி அடக்கி வாசிப்பு - விகடன் மார்க் =40 ,ரேட்டிங் 2,75 / 5..ஈரோடு ராயல் ல படம் பார்த்தேன் . கூட்டம் கம்மி தான்
a
டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/
சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும் இருக்கு , அது தனிப்பதிவாக நாளை வரும்
டிஸ்கி - நய்யாண்டி - சி பி எஸ் விமர்சனம் -http://www.adrasaka.com/2013/