Showing posts with label வடகறி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வடகறி - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, June 19, 2014

வடகறி - சினிமா விமர்சனம்

  

ஹீரோ  ஒரு மெடிக்கல்  ரெப் . சாதா பேசிக் மாடல்  மொபைல் வெச்சிருக்கார் . கூட இருக்கும் ஃபிரண்ட்ஸ் எல்லாம்  ஐ ஃபோன் வெச்சிருந்தாத்தான் ஃபிகர் உஷார்ப்படுத்த  முடியும்னு  உசுப்பேத்தி  விடறாங்க . ஆனா அவரால வாங்க  முடியலை. அப்போ அநாமத்தா ஒரு ஐ ஃபோன் இவர் கை ல மாட்டுது . அந்த ஃபோனை கமுக்கமா ஆ ராசா கணக்கா அமுக்கிடறாரு . அதனால அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருது என்பது தான் திரைக்கதை . 

நாட்ல  இப்போ  பெருகி வரும்  போலி மருந்து  தயாரிக்கும் கும்பல் பற்றிய  விழிப்புணர்வு கதையை  த்ரில்லர்  மூவியா கொடுத்திருக்காங்க . 

ஹீரோவா  ஜெய் . அவருக்கு அப்பாவியான  மிடில் கிளாஸ் இளைஞன்  வேடம் அட்டகாசமாப்பொருந்துது . அவரது   டயலாக்  டெலிவரி  , ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம்  டபுள்  ஓக்கே .  அடுத்த  கட்டத்துக்கு  தயார் ஆகிட்டார் . சபாஷ்  பாஸ் . 

  ஹீரோயின்  பலாச்சுளை க்கு ரோஸ் பவுடர்  போட்டு விட்ட  கோவைபழ உதட்டு அழகி ஸ்வாதி . தெத்துப்பல் தெரிய அவர் சிரிக்கும்போது  உங்க  டூத் பேஸ்ட் ல  சுண்ணாம்பு அதிகமா இருக்கா?னு கேக்கத்தோணுது . வழக்கம்  போல் ஆடை வடிவமைப்பு  கண்ணியம் . பாடல் காட்சிகளில் பாந்தம் . 


 ஹீரோயினுக்குத்தோழியாக  யாரோ  ஒரு புதுமுகம் . அடடே சொல்ல வைக்கிறார் . நாம எந்தக்காலத்தில்  பொண்ணுங்களை அடச்சே என சொல்லி  இருக்கோம் ? 

ஹீரோவின்  நண்பராக ரேடியோ  ஜாக்கி  ஆர் ஜே பாலாஜி   நல்ல  எண்ட்ரி .  லோ பட்ஜெட் சந்தானம் ஆக வாய்ப்பு  உண்டு . அவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகளைப்புரிந்து  கொள்ளவே  ஒரு பயிற்சி தேவை .  ஆனாலும்  ரசிகர்கள்  ஒரு குத்து மதிப்பா சிரிச்சு  வைக்கறாங்க . 


ஹீரோ  ஹீரோயின்  தோழியை   லவ்வுவது ,  பின்  தோழியை ஃபாலோ பண்ணுவது , பின் பல்டி அடிச்சு  ஹீரோயின் க்கு ரூட் விடுவது  , இதனால்  தோழிகளுக்கிடையே   ஈகோ வருவது என கலகலப்பான  காதல் கா மெடி  டிராக் படத்தின்   முற்பாதியை   மிகச்சுலபமாக நகர்த்தி  விடுகிறது 

பின் பாதியில்   கதை  த்ரில்லர்  மூவி , சேசிங்க் காட்சிகள் என பர பரப்புக்குத்தாவும் போது    விறு விறுப்பு 

பின் பாதியில் பாடல் காட்சிகள்      தேவையே இல்லை . கட் பண்ணி  ட்ரிம் பண்ணி இருக்கலாம்


 கஸ்தூரி   ஹீரோவுக்கு அண்ணியா பரிதாபமா வர்றார் . அய்யோ பாவம் . வில்லனுக்கு  எல்லாம்  பெரிதா  வேலை இல்லை

 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.    டைட்டிலுக்கும் , படத்துக்கும் சம்பந்தமே  இல்லை என அவங்களே படத்தில் வாக்குமூலம்  கொடுத்து  விட்டாலும்  அவர்கள்  சூசகமாக  யாரைச்சொல்கிறார்கள் என  புரிகிறது . சன்னிலியோனின்  குத்தாட்டம்   படத்துக்கு   நல்ல பிளவுஸ் சாரி  பிளஸ் . 


2   ரேடியோஜாக்கி பாலாஜியின்  டைமிங்க் சென்ஸ்  , ஹீரோவின்  சுறு சுறுப்பான நடிப்பு , ஸ்வாதியின் அழகு  பிளஸ் 


3   முன் பாதி   செம ஜாலி  காதல் காமெடி  கலாட்டா , பின் பாதி சேசிங்க் காட்சி என பிரித்து  சரியான கலவையில்   கதை அமைத்த விதம் 


4   செல் ஃபோன் ரிங்க்  டோனை வைத்து அமைக்கப்ட்ட இய்லபான காமெடி டிராக் கதையோடு ஒன்றி கலக்குகிறது 





இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.   15,000  ரூபா சம்பளம் வாங்கும்  மெடிக்கல்  ரெப்  2000  ரூபா  ஃபோனுகே வழி  இல்லாமல்  இருக்கார் , ஓக்கே , ஆனா அவர் 60,000  ரூபா  புது பைக்கில் வர்றார் , போறார் . போட்டிருக்கும்  டிரஸ் எல்லாம் 10,000  ரூபா சர் ட் ,  பேண்ட் . காஸ்ட்லி  லுக் வேற  , எப்படி ?  ரேபான்  கிளாஸ்  எல்லாம் போட்டுட்டு வர்றார் . 


2  ஹீரோ  லபக்கிய   ஃபோன் அவருது இல்லை  என நிரூபிக்க் வழி இருந்தும் அவர் எந்த  முயற்சியும்  ஏன் எடுக்கலை ?  அந்த   சிம் மை வெச்சு அது யார் பேரில் எடுக்கப்பட்டிருக்கு ?  என்ன அட்ரஸ் கொடுக்கப்பட்டிருக்கு என பார்க்கலாமே? 


3 க்ளைமாக்ஸ் ல  ஹீரோயின்  ரயில்வே ஸ்டேஷன் ல வெய்ட்டிங்க் .  குறிப்பிட்ட டைம்க்கு ஹீரோ வர்லைன்னா த்ற்கொலை செஞ்சுக்கறதா மிரட்றாங்க . ஹீரோ வில்லன் க்ரூப் ல இருந்து எஸ் ஆக தாமதம் ஆகிடுது . அவர் பைக்ல வேக வேகமா வர்றாரு . அவர் ஏன் ஹீரோயினுக்கு  ஃபோன் பண்ணி இதோ வந்திட்டிருக்கேன்னு  சொல்லலை ? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ்  கூட அனுப்பலை  ? 

4  பல பேர் எப்பவும்  அப்ரோச் பண்ணிட்டிருக்கும்  அழகு தேவதை  ஹீரோயின்    மிடுக்குடன்  இருக்கார் . திடீர்னு   லூஸ் மாதிரி  பிஹேவ் செய்வது ஏன் ?


 

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. எம் ஜி ஆர் FANனா நேர்மையா இருப்பீங்களா? நான் கூடத்தான் சிம்பு FAN.அதுக்காக அவர் பன்றதை எல்லாம் நான் பண்ணிட்டிருக்கேனா? #வடகறி

2. இந்தக்காலத்துப்பொண்ணுங்க பசங்க வெச்சிருக்கும் ரிச்சான போன் மாடல் பாத்துத்தான் உஷார் ஆவாங்க # வடகறி


ஒரு பிரச்னைனு வந்தா அதுல இறங்கி கேள்வி கேட்பவன் ,அதை தீர்க்க நினைப்பவன் லோ க்ளாசா இருந்தாலும் அவன் தான் ஹை க்ளாஸ்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1 அங்காடித்தெரு அஞ்சலியின் நேற்றைய லவ்வர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் ஜெய் யின் வடகறி ஓப்பனிங் சீனே காமெடி கலக்கல்


2  குணச்சித்திரக்குன்று சன்னி லியோன் ன் குத்தாட்டம்.இதுக்கு யூ சர்ட்டிபிகேட் கொடுத்த கேனயன் யாரோ?

3  செல்போன் காஸ்ட்லியா வெச்சிருந்தா பிகர் செட் ஆகும் கற கேவலமான கான்செப்ட் ல திரைக்கதை போய்க்கிட்டு இருக்கு #,வடகறி


4  தெத்துப்பல் தேவதை அழகி ஸ்வாதி  தான் ஹீரோயின். # வ க


5 ஆர் ஜே பாலாஜி மொக்கை போடறார்.சொந்த ஜோக் போல . தியேட்டர் ல சி செண்ட்டர் ரசிகர்கள் கை தட்றாங்க . அடுத்த சந்தானம் ஆகிடுவார் போல 


6 காமெடி ,மொக்கை,கலாட்டா,காதல் னு போய்ட்டிருந்த திரைக்கதை த்ரில்லர் மூவி ட்ராக் ல் போகுது # வடகறி இடை வேளை






சி பி கமெண்ட் -வடகறி - போலி மருந்து கம்பெனி பற்றிய த்ரில்லர்  மூவி , முன் பாதி காமெடி, பின் பாதி ஸ்பீடு- விகடன் மார்க் = 41 , ரேட்டிங்க் = 2.5 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5 / 5 


விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்  


டிஸ்கி - 

வெற்றிச்செல்வன் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2014/06/blog-post_8644.html

நேற்று இன்று - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/06/blog-post_5435.html

 

 

சூறையாடல் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_7814.html





விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்
Embedded image permalinka