Showing posts with label வஞ்சகர் உலகம் (2018)- தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வஞ்சகர் உலகம் (2018)- தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, October 03, 2023

வஞ்சகர் உலகம் (2018)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் + கேங்க்ஸ்ட்டர் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


  •      அன்பே சிவம், குணா, ஹே  ராம்  போன்ற  படங்கள்  எல்லாம்  ரிலீஸ்  ஆன  டைமில்  ரசிகர்களால்  சரியாகக்கொண்டாடப்படாமல்  இப்போது  பல  வருடங்கள்  கழித்து  பாராட்டு  மழையில்  நனைவது  போல 2018ல்  ரிலீஸ்  ஆன  ஒரு  படம்  சில  வருடங்கள்  கழித்துக்கொண்டாடித்தீர்க்கும்  படமாக  இருக்கும்  என  கணிக்கிறேன். எதேச்சையாக  இதைப்பற்றிக்கேள்விப்பட்டுப்பார்த்தேன்.  இது  உலக  சினிமா  தரத்தில்  இருக்கிறது

  •     ஸ்பாய்லர்  அலெர்ட்

  • சம்பவம்  1 - போலீஸ் ஒரு  கேங்க்ஸ்டர்  லீடரை  தேடுகிறது . அவனது  வலது  கை  , இடது  கை  என  அழைக்கப்படும்  இருவரை  கண்காணிக்கிறது . இந்த  இருவரில்  யாராவது  ஒருவரை  மடக்கி  விசாரித்தால்  அந்த  லீடரைப்பற்றிய  துப்பு  கிடைக்கும்  என  நினைக்கிறது. அந்த  இருவருக்குள்ளும்  ஈகோ  கிளாஸ்  ஆல்ரெடி  இருக்கிறது. போலீஸ்  , அந்த  வலது  கை , இடது  கை  மூன்று  தரப்புக்கும்  இடையே  நிகழும் ஆடு புலி  ஆட்டத்தில்  கேங்க்ஸ்டர்  லீடர்  யார்  எனத்தெரிய  வரும்போது  எல்லோருக்கும்  ஒரு  அதிர்ச்சி

சம்பவம் 2  - திருமணம்  ஆன  இளம்பெண்  கொலை  செய்யப்படுகிறாள் . அவளது  முன்னாள்  காதலன் , எதிர்  வீட்டில்  குடி  இருக்கும்  இந்நாள்  காதலன், கணவன்   இந்த  மூன்று  பேரும்  சந்தேக  வளையத்துக்குள்  இருக்கிறார்கள்  போலீஸ்  விசாரிக்கிறது. கொலை  செய்யப்பட்ட  பெண்ணின்  கணவன்  சம்பவம்  1ல்  குறிப்பிடப்பட்ட  கேங்க்ஸ்டர்  லீடரின்  வலது  கை  நபரின்  நெருங்கிய  நண்பன். அதனால்  அந்த  கேங்க்ஸ்டர்  லீடருக்கும், அல்லது  கேங்க்ஸ்டர்  குழுவிற்கும்  இந்தப்பெண்ணின்  கொலைக்கும்  சம்பந்தம்  இருக்கலாம்  என போலீஸ் சந்தேகிக்கிறது



இந்த  இன்வெஸ்ட்டிகேஷன்  பிராசஸ் , கேங்க்ஸ்டர்  குழுவிற்குள்  நிகழும்  அடிதடிகள்  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  கேங்க்ஸ்டர் குழுத்தலைவனின்  வலது  கையாக  குரு  சோமசுந்தரம்  அசாதாரண  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார். நான்  சைக்கோவா  மேடம்  என  டாக்டரிடமே  கேட்கும்  இடங்கள் , போலீஸ்  ஆஃபிசரை  டீல்  செய்யும்  இடம்  என  பல  இடங்களில்  அட்டகாசமான  நடிப்பு. பல  இடங்களில்  அண்டர்ப்ளே  ஆக்டிங் , சில  இடங்களில்  ரகுவரன் , பிரகாஷ்ராஜ்  போல  சைக்கோ  நடிப்பு  என  பின்னி  இருக்கிறார் 


நாயகி  ஆக  சாந்தினி துணிச்சல்  மிக்க  நடிகை  என்பதை  இந்த கேரக்டரை  ஏற்று  நடித்ததன்  மூலம்  நிரூபித்து  இருக்கிறார். மேலோட்டமாக  முதலில்  பார்க்கும்போது    வழி  தவறிய  பெண்  என்பது  போல  தோன்றினாலும்  அதற்கான  காரணம்  தெரிய  வரும்போது  மதிப்பு  மிக்கவர்  ஆகி  விடுகிறார். அவரது கண்களும் , சிரிப்பும்  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 

வில்லன்  ஆக  கேங்க்ஸ்டர் லீடரின்  இடது  கையாக  ஜான்  விஜய் . தெனாவெட்டான  நடிப்பு . ஆனால்  இதே  போல்  பல  படங்களில்  நடித்து  விட்டார் . அவர்  பாணியை  மாற்றிக்கொள்வது  நல்லது 


அழகம்  பெருமாள்  முக்கிய  வேடத்தில்  வருகிறார். போலீஸ்  ஆஃபீசர்  ஆக  எம் ஆர்  வாசு  கச்சிதமாக  நடித்திருக்கிறார். 

 நாயகியின்  எதிர்  வீட்டுக்காதலர்  ஆக  வரும்  சிபி புவணாசந்திரன்  கச்சிதம்

 122  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  இருந்தாலும்  நான்  லீனியர்  கட்  ஸ்க்ரீன்ப்ளே  நம்மை  சில  இடங்களில்  சலிப்புத்தட்ட  வைக்கிறது , மூன்று  மணி  நேரம்  படம்  ஓடுவது  போல  இழுக்கிறது 

 சாம்  சி எஸ்  பின்னணி  இசையில்  கலக்கி  இருக்கிறார். கேங்க்ஸ்டர்  தீம்  மியூசிக் , த்ரில்லர்   தீம்  இசை  என  கலந்து  கட்டி  இசை  அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு  டார்க்  ஷேடில்  தரமாக  இருக்கிறது 

 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மனோஜ்  பீதா . இவருக்கு  இது  முதல் படமாம், நம்ப  முடியவில்லை 
  • சபாஷ்  டைரக்டர் (  மனோஜ்  பீதா)
1   வடிவேலு  ஒரு  படத்தில்  போலீசாக  வருவார். அப்போது  ஒரு  காதல்  ஜோடி  அவரிடம்  அடைக்கலம்  வருவார்கள்   அந்தப்பெண்ணின்  முதல்  கணவன், இரண்டாவது  காதலன், மூன்றாவது  கள்ளக்காதலன்  என  வரிசையாக  வருவார்கள் , அந்த  காமெடி  டிராக் கை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  நாயகியின்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டது  போலத்தோன்றினாலும்  நாயகியின்  குணத்துக்கு  நியாயம்  சேர்த்த  விதம்  அருமை 


2   யார்  கொலை  செய்திருப்பார்கள்  என்ற சந்தேக  வித்தை  நான்கு  பேர்  மீது  தூவி  சரியாக  காட்சிகளை  அடுக்கிய  விதம் 


3    குரு  சோம சுந்தரத்தின் கேரக்டர்  டிசைன் , அவரது  நடிப்பு



  •   ரசித்த  வசனங்கள் 

  • 1  ஏதாவது  கெட்டது  நடந்தா  அது  நாய்க்கும் , பெண்ணுக்கும்  தான்  முதல்ல  தெரியுமாம், மோப்ப  சக்தி  ஜாஸ்தி 

  • 2  போலீஸ்  நாங்க  நல்லவிதமா, நம்பற  மாதிரி  பேசறவங்களையே  நம்ப  மாட்டோம், நீ  என்னடான்னா  பொய்  பேசிட்டு  நம்பச்சொல்றே? 

  • 3  இவரு  பெரிய  துப்பறியும்  சிம்பு 

  •  சார்,  அது சாம்பு  சார் 

  • 4   அது  எப்படிய்யா  வேலை  வெட்டியே  இல்லாம  டெய்லி  மூணு  வேளை  முழு முழு  குவாட்டரா  முழுங்கிட்டு  இருக்கே? குடல்  எல்லாம்  வெந்திருக்குமே? 

  • 5 போலீஸ்  காரனுக்கு சில  விஷயம்  தான்  தெரியும், பத்திரிக்கைக்காரனுக்குப்பல  விஷயம்  தெரியும்

  • 6  உன்னைக்கொல்வதுதான் உனக்கான  மன்னிப்பு
  •  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    எதிர்  வீட்டில்  குடி  இருப்பது  நாயகி தான், அவர்  தான்  நம்  ஹவுஸ்  ஓனர்  என்பது  காதலனுக்குத்தெரியாமல்  இருப்பது  எப்படி ?


2  நாயகி  திருமணம்  ஆனவர்  என்பது  தெரியாது  என்கிறார்  காதலன், நாயகி  வீட்டுக்கு  அடிக்கடி  செல்பவர்  அங்கே  வீட்டில்    ஹாலில்  தம்பதி  ஃபோட்டோ  இருப்பதைப்பார்க்க  மாட்டாரா? 


3  ஒரு  காட்சியில்  நாயகியின்  கணவன்  நாயகியின்  காதலனிடம்  நான்  தான் உங்க  வீட்டு  ஹவுஸ்  ஓனர்  என  அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஹவுஸ்  ஓனரையும்  தெரியாது  , ஹவுஸ்  ஓனரின்  சம்சாரத்தையும்  தெரியாது  எனும்போது  அவர்  யாரிடம்  வீட்டு  வாடகை  கொடுப்பார் ?  அட்வான்ஸ்  யாரிடம்  கொடுத்தார் ? 

4   நாயகியின்  முன்னாள்  காதலன் , இந்நாள்  கணவன்  இந்த  இரண்டு  ரோலுக்கும்  புகழ்  பெற்ற  நமக்கு  அறிமுகம்  ஆன  நடிகர்களை  நியமித்து  இருக்கலாம் 


5   படம்  முழுக்க  போலீஸ்  ஆஃபிசருக்கு  யாராவது  அட்வைஸ்  பண்ணிக்கொண்டே  இருக்கிறார்கள் 

6  டம்மி  கேரக்டர்  ஆக  வரும் பிரஸ்  ரிப்போர்ட்டர்  போலீஸ்  ஆஃபீசர்  ரேஞ்சுக்கு  எல்லா  வேலைகளையும்  செய்வது  ஓவர் 


  • அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  போதைபொருட்களை  யூஸ்  செய்வது   , தம், தண்ணி  காட்சிகள்  அதிகம் 


  • சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   உலக  சினிமா  ரசிகர்கள்  பார்க்கலாம்  பொறுமை  தேவை . மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர் , ரேட்டிங்  3 / 5 

Vanjagar Ulagam
Poster
Directed byManoj Beedha
Written byManoj Beedha
Vinayak
Screenplay byManoj Beedha
Produced byManjula Beedha
Prasanna JK
StarringGuru Somasundaram
Ciby Bhuvana Chandran
Vishagan Vanangamudi
Anisha Ambrose
CinematographyRodrigo Del Rio Herrara
Saravanan Ramasamy
Edited byAnthony
Music bySam C. S.
Production
company
Labyrinth Films
Release date
  • 7 September 2018
[1]
Running time
122 minutes
CountryIndia
LanguageTamil