Showing posts with label வசந்த ராகம் (1986) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வசந்த ராகம் (1986) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, June 22, 2023

வசந்த ராகம் (1986) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ யூ ட்யூப்


இயக்குநர்  எஸ்  ஏ சந்திர  சேகர் + கேப்டன் விஜயகாந்த்  காம்போ படங்கள்  பெரும்பாலும்  சட்டம்,  பழி வாங்கல் , ஆக்சன்  படங்களாகவே  இருக்கும். ஒரு  மாறுபட்ட  ஃபேமிலி  மெலோடிராமாவாக  இப்படம்  ரிலீஸ்  ஆன  டைமில்  நல்ல  வரவேற்பு  விமர்சன  ரீதியாகவும் , வசூல்  ரீதியாகவும். மயூரி  மெகா  ஹிட்டுக்குப்பின்  சுதா  சந்திரனுக்கும்  நல்ல  மார்க்கெட்  இருந்த  நேரம்   .இளைய  தளபதி  விஜய்  இந்தக்கால  கட்டத்தில்  நாயகன்  ஃபிளாஸ்பேக் காட்சிகளில்  சிறுவனாக  நடித்து  வருவது  வழக்கம் . எஸ்  ஏ  சி  படங்களில்  பெரும்பாலும் நாயகன்  பெயர்  விஜய்  என்றே  இருக்கும்   . 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  பிரபல  பாடகி . அவரது  கச்சேரி  எங்கே  நடந்தாலும்  பிளாக்கிலாவது  டிக்கெட்  வாங்கி  கச்சேரியில்  முதல்  வரிசையில்  அமர்ந்து  அவரையும், பாடலையும்  ரசிப்பவர்  நாயகன். தனது  கையில்,  நெஞ்சில்  எல்லாம்  நாயகியின்  பெயரை  பச்சை  குத்தி  இருப்பார்  நாயகன்.


 அடிக்கடி  ஆட்டோகிராஃப்  வாங்கி  பழக்கம்  ஆகும்  நாயகன்  ஒரு  கட்டத்தில்  தன்  காதலை  வெளிப்படுத்தும்போது  நாயகி  ஒரு  அதிர்ச்சியான  தகவலை  சொல்கிறார். நாயகிக்கு  ஏற்கனவே  திருமணம்  ஆகி விட்டது . கணவனை  இழந்தவர். 


ஆனாலும்  நாயகன்  தன்  முடிவில்  விடாப்பிடியாக  இருக்க  நாயகி  திருமணத்துக்கு  சம்மதம்  தெரிவிக்கிறார். நாயகன், நாயகி  இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது 


 இப்போதுதான்  கதையில்  ஒரு  திருப்பம். இறந்ததாகக்கருதப்பட்ட  கணவன்  உயிருடன்  வருகிறான். இப்போது  நாயகிக்கு  பெரிய  குழப்பம். தாலி  கட்டிய  முதல்  கணவனோடு  வாழ்வதா? . தன்  மீது  உயிரையே  வைத்திருக்கும்  ரசிகன்  கம்  காதலன்  கம் லேட்டஸ்ட்   க்ணவனுடன்  வாழ்வதா? இந்த  சிக்கலுக்கு  நாயகி  எப்படி  விடை  காண்கிறார்  என்பதே  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக  ரகு  என்கிற  ரகுமான். க்ளீன்  ஷேவ்  முகத்துடன்  மீசை  இல்லாத  அமுல்  பேபி  கேரக்டரில்  பெண்களை  எளிதில்  கவரும்  தோற்றத்தில்  வருகிறார். ரொமாண்டிக்  ஹீரோ  ஆக  முதல்  பாதியில்  நாயகியின்  பின்னாலேயே  சுற்றும்போதும்  சரி , பின்  பாதியில் முன்னாள்  கணவனை  டீல்  செய்யும்  இடத்திலும்  சரி  கண்ணியமான நடிப்பு 


 நாயகி  ஆக  சுதா  சந்திரன் . குடும்பப்பாங்கான  முகம் , தமிழ்  சினிமா  உலகில் 80s    நாயகிகளில்  ரேவதி , சுஹாசினி ,  நதியா  வரிசையில்  சுதா  சந்திரனுக்கும்  ஒரு  இடம்  உண்டு கண்ணியம் ஆன  நடிப்பு . பின்  பாதியில்  ஏற்படும்  மனப்போராட்டாங்களை  அழகாக  முகத்தில்  காட்டி  இருக்கிறார்


 கணவனாக புரட்சிக்கலைஞர்  விஜய்காந்த் .ஓப்பனிங்  சீன்களில்  பெரும்பாலும்  ஃபைட்  சீனில்  அறிமுகம்  ஆகும்  இவர்  இதில்  மைக்  மோகன்  போல  பாடல்  காட்சியில்  அறிமுகம்  ஆவது  மாறுபட்ட சூழல் . குடிப்பழக்கத்தில்  சோக  ராகம்  பாடும்போது  அனுதாபத்தை  அள்ளுகிறார்


மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல்   செந்தில் - கோவை  சரளா  காமெடி  டிராக்.ஒய்  ஜி  மகேந்திரன்  வழக்கம்  போல  அவரே  ஜோக்  சொல்லி  அவரே  சிரித்துக்கொள்கிறார். டம்மி  வில்லனாக  ராதாரவி .  புரட்சி  பத்திரிக்கையாளராக  எஸ்  ஏ  சந்திர  சேகர் . அந்தக்காலத்தில்  எஸ்  ஏ  சி  க்கு  பி  சி  செண்ட்டர்களில்  ஏகப்பட்ட  ரசிகர்கள்  உண்டு , அவர்  வசனம்  பேசும்  காட்சிகளில் நாயக்னுக்கு  இனையாக  கை  தட்டல்  வாங்குவார் 


இசை  எம் எஸ்  விஸ்வநாதன். ஐந்து  பாடல்களில்  3  பாடல்கள்  ஹிட் .


சபாஷ்  டைரக்டர்


1  படத்தில்  நாயகன்  ரகுமான்  என்றாலும்  போஸ்டர்  டிசைன்களில் , விளம்பரங்களில்  விஜய்காந்த்  தான்  மெயின்  ஹீரோ  மாதிரி  ப்ரமோ  பண்ணிய  புத்திசாலித்தனம் 


2  கேப்டனின்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  தாய்  மாமனாக  அவரும், நாயகியும்  வருவதை புத்திசாலித்தனமாக  தன்  மகன்  விஜயை  வைத்து  எடுத்துக்கொண்டது 


3  ரொமாண்டிக்  ஸ்டோரியில்  கூட  சைடு  டிராக்கில்  ஒரு  மினிஸ்டர்  கேரக்டரை  புகுத்தி  அதில்  தனக்கும்  ஒரு  முக்கிய  கேரக்டர்  ஏற்படுத்திக்கொண்டது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1கண்ணன்  மனம்  என்னவோ கண்டு  வா  தென்றலே  (  நாயகி  ஓப்பனிங்  சாங் ) 


2  ஒரு  தெய்வம்  நேரில்  வந்தது ,அது  என்னைப்பாட  வைத்தது  (  நாயகன்  கொண்டாட்டப்பாடல் )

3  சோகம்  தானோ  (  சோகப்பாடல் )


4  ஒரு  தெய்வம்  நேரில்  வந்தது  (  ரிப்பீட் மோட்)


5 இதுவரை  பாட்டைப்பிரிந்த  பாடகன்  எனக்கு  பல்லவி  கிடைத்தது (கேப்டன்  இண்ட்ரோ  சாங் ) 


6  நான் உண்மையை  சொல்லட்டுமா?  ஊரறிய  பாடட்டுமா?  ( சோக  சாங்) 


 ரசித்த  வசனங்கள் 


1  ஊழலை  ஒழிக்கறேன்  , ஊழலை  ஒழிக்கறேன்-னு  காலம்  காலமா   சொல்லிட்டிருக்காங்க , ஆனா   யாரும்  ஊழலை  ஒழிக்கலை  அவங்கதான்  ஒழிஞ்சாங்க 


2   ஆண்டவனுக்கு  முன்   ஆடுவதை  விட  ஆண்டு  முடிந்தவன்  முன்  ஆடு 


3 காதல்  என்பது  எதிரொலி  மாதிரி  , நீ மட்டும்  சத்தம்  போட்டா  போதாது  எதிர்  தரப்பும்  பதில்  தரனும்’


4  ராஜா  காலத்துல  இருந்து  ரஜினி காந்த்  காலம்  வரை  பெண்களுக்கு  வீரமான  ஆண்களைத்தான்  பிடிக்கும், ஆக்சன்  ஹீரோக்களுக்குத்தான்  இங்கே  மதிப்பு 


5 சுடுகாட்டுக்குப்போன  பிணம்  உயிரோட  திரும்பி  வந்தா  எந்த  வீட்லயும்  ஒத்துக்க  மாட்டாங்க 


6 ஒரு  சரித்திரத்தை  எழுத  ஆரம்பிச்சவனுக்கு  அதை  திருத்தவும்  உரிமை  இருக்கு 


7  ஒருவன்  வசந்த  ராகம்  பாட  வேண்டும்  என்றால்  இன்னொருவன்  சோக  ராகம்  பாட  வேண்டும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மடத்தனமான  க்ளைமாக்ஸ்  அந்தக்காலத்தில்  கே  பாலச்சந்தர்  உட்பட  பல  இயக்குநர்கள்  இப்படி  முட்டாள்  தனமா  க்ளைமாக்ஸ்  வைத்தார்கள் . இரண்டு  ஜோடி  நெருக்கடியைத்தீர்க்க  ஏதோ  ஒரு  ஆளை  விபத்து , அல்லது  தற்கொலை  மூலம்  ஆளைக்காலி  பண்ணுவது . இது  ஒரு  எஸ்கேபிசம் 


2  ஓப்பனிங்  காட்சிகளில்  நாயக்ன்  நாயகி பெயரை  பச்சை  குத்தி  இருப்பதாஅ  க்ளோசப்  காட்சிகளில்  காட்டுவார்கள் , திருமணம்  முடிந்த  பின்  சில  காட்சிகளில்நாயகன்  கையிலோ  நெஞ்சிலோ  அந்த  பச்சை  இருக்காது 


3  பல  வருடங்கள்  கழித்து  மனைவியைக்காணும்  சோகக்கணவன்  ஓடிப்போய்  மனைவியை  நலம்  விசாரிப்பாரா/  பாடிக்கொண்டு  இருப்பாரா??


4   ஒரு  சீனில்  கரண்ட்  கட்  ஆனதும்  இருட்டில்  நாயகி  தன்  முன்  நிற்பதாக  நினைத்து  நாயகன்  ரகுமான்  முன்  கேப்டன்  ஒரு  டயலாக்  பேசுவார். அருகில்  நிற்பது  பெண்  என்பது  பூ  வாசத்தில்  தெரியுமே?  என்னதான்  இருட்டு  என்ராலும்  அவுட்  லைன்  ல  அது  ஆணா? பெண்ணா?  என்று  கூடவா  தெரியாமல்  போகும் ?


5  இயற்கை , சொர்ணமுகி   உட்பட  பல  படங்களில்   நாயகன்  இறந்ததாக  நினைத்து  பின்  உயிரோடு  வருவதாகக்காட்டுகிறார்கள் . டெட்  பாடியை  நேரில்  பார்க்காமல்  யாரோ  சொன்னதை  வைத்து  இறந்ததாக  எப்படி  தீர்மானிக்க  முடியும் ? 


6  ரகுமான்  ஒரு  காட்சியில்  பாடல்  வரி  மூலம்  இந்த  வீணையை  இதுவரை  தொடவும்  இல்லை , மீட்டவும்  இல்லை  என்று  பாடுகிறார். பாடல்  அழகுக்காக  அப்படி  வர் அமைத்தார்கள்  என்றாலும்  நிஜத்தில்  அப்படி  இல்லை . அதற்கான  தேவையும்  இல்லை 


7  வில்லனான  அரசியல்வாதி  ஒருபபார்ட்டியில்  ஆடிப்பாட  நாயகியை  வலுக்கட்டாயமாக  அழைத்து  வருவது  அபத்தம்.  இந்த  மாதிரி  ஆட்கள்  எல்லாம்  கேபரே  டான்ஸ்  , கிளப்  டான்ஸ்  பார்ப்பார்களா?  பரத  நாட்டியம்  பார்ப்பார்களா? 


8  எஸ்  ஏ  சி  உயிர்  விடும்  காட்சி  படு  செயற்கை . தன்னை  ஒரு  தியாகி  ஆகக்காட்டிக்கொள்ள  எல்லாப்படங்களிலு,ம்  இப்படி  செயற்கையான  காட்சியைப்புகுத்துவார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  ப்டம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விஜய்காந்த்  ரசிகர்கள்  பார்த்தால்  கடுப்பாவார்கள் . மற்றவர்கள்  பார்க்கலாம்  . ரேட்டிங் 2/5 / 5 


வசந்த ராகம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா சந்திரசேகர்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎம்.கேசவன்
படத்தொகுப்புஷியாம் முகர்ஜி
கலையகம்வி.வி.க்ரியேஷ்ன்ஸ்
வெளியீடு1 ஆகஸ்டு 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்