2023 ஃபிப்ரவரி 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது . மாநாடு செம ஹிட் ஆனதால் டைம் லூப் கான்செப்ட்டில் ஒரு படம் பண்ணலாம் என இயக்குநர் நினைத்திருக்கக்கூடும் . அது எடுபட்டதா? இல்லையா? என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஐ டி துறையில் பணீயாற்றும் திறமையான ஊழியன் /. டீம் லீடர் . . மல்ட்டி டாஸ்க்கிங்க் பர்சனாலிட்டி . இவருடைய திறமைக்கு இவர் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை . ஆனால் ஐ டி டிபார்ட்மெண்ட்டில் இவருக்கு ஏகப்பட்ட மெண்ட்டல் பிரஷர் , டிப்ரஷன். தூக்கம் கூட இல்லாமல் , குடும்பத்தைக்கூட கவனிக்க நேரம் ஒதுக்காமல் எப்போதும் பிராஜக்ட் பற்றியே சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்
இவர் லீவ் போட்டு விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் நல்லது என டாக்டர் பரிந்துரைக்கிறார். இதனால் நாயகன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு காரில் டூர் போகிறார். ஒரு டூயட் பாடி விட்டு டூர் முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் வசந்த முல்லை என்னும் ஒரு பழங்கால லாட்ஜில் தங்குகிறார். அங்கே அவருக்கு மர்மமான சம்பவங்கள் நிகழ்கின்றன . ஒரே சம்பவம் டைம் லூப்பில் சிக்கியது போல மீண்டும் மீண்டும் நிகழ்கிறது . இதை நாயகன் எப்படி சமாளித்து வந்தார் என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக பாபிசிம்ஹா . கச்சிதமான நடிப்பு , ஆனாலும் வில்லனாக , கேரகடர் ஆர்ட்டிஸ்ட் ஆக பரிமளித்த அளவு நாயகனாகப்பிரகாசிக்க முடியவில்லை
நாயகி ஆக காஷ்மிரா அழகிய முகம்.கண்ணியம் காக்கும் கிளாமர். தமிழ் சினிமாவுக்கு எற்ற நாயகி
ஒன்றே முக்கால் மணி நேரப்படத்தில் பாத்திரங்கள் அறிமுகம் ஆகி கதைக்குள் போகவே அரை மணி நெரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து இடைவேளை வருகிறது . இடைவேளைக்குப்பின் 12 நிமிடக்காட்சிகள் மூன்று முறை ரிபீட் ஆகிறது . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் 10 நிமிசம். அவ்ளோ தான் படமே முடிஞ்சுது
ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லாமல் ஏதோ தக்காளி சாதம் மட்டும் சாப்பிட்ட உணர்வுதான் வருகிறது
சபாஷ் டைரக்டர்
1 ஏதோ மிகப்பெரிய த்ரில்லர் படம் பண்ணப்போறோம் என்ற நம்பிக்கையை ஊட்டி பாபிசிம்ஹாவிடம் கால்ஷீட் வாங்கியது
2 ஒரே ஒரு லாட்ஜ் செட்டிங் . நாயகன் , நாயகி இருவரை மட்டுமே வைத்து ஒரு முழுப்படத்தை முடித்த விதம்
3 ஸ்டார் அட்ராக்சன் வேண்டுமே என்பதற்காக ஆர்யாவை புக் செய்தது
ரசித்த வசனங்கள்
1 டெய்லி காலைல எழுந்திருக்க அலாரம் வைக்கிறோம், ஆனா தூங்கப்போகும் நேரத்துக்கு யாராவது அலாரம் வைக்கிறோமா?
2 பணம் இருந்தா போதும் அதுலயே நான் திருப்தி அடைஞ்சிடுவென்னு நீ எப்படி நினைச்சே? உன் சமீபம் எனக்கு வேணும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மாநாடு படத்தில் டைம் லூப் ஒவ்வொரு முறையும் சுவராஸ்யமாக இருந்தது. இதில் ஒரே காட்சிகள் ரிப்பீட் ஆவதால் கடுப்படிக்கிறது
2 டைம் லூப் கான்செப்ட் தவிர்த்து சுவராஸ்யமான சம்வங்களை அந்த லாட்ஜில் நிகழ்த்தி இருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கண்ட்டெண்ட்டும் இல்லை , அடல்ட் கண்ட்டெண்ட்டும் இல்லை , காலி டப்பா
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பாபி சிம்ஹாவின் அம்மா, அப்பா , காதலி , மனைவி ஆகிய நால்வர் மட்டுமே பார்க்கத்தகுந்த படம், டைம் வேஸ்ட் , ரேட்டிங் 1.5 / 5
Vasantha Mullai | |
---|---|
Directed by | Ramanan Purushothama |
Written by | Ramanan Purushothama |
Screenplay by |
|
Produced by |
|
Starring | |
Cinematography | Gopi Amarnath |
Edited by | Vivek Harshan |
Music by | Rajesh Murugesan |
Release date |
|
Country | India |
Language | Tamil |