நீங்க காரோ,பைக்கோ பிரைவேட் பேங்க்ல லோன்ல வாங்கி இருக்கீங்களா?
அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ நீங்க அவசியம் படிக்க வேண்டிய
விஷயம் இது.
10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆன்லைன் வசதி வராத போது
லோன் வாங்கும்போது முன் தேதி இட்ட காசோலைகள் வாங்குவார்கள்.
PDC (POST DATED CHEQUES) என ஆங்கிலத்தில் சொல்வார்கள்,தவணைத்
தேதியைப்பொறுத்து மாதாமாதம்
1ந்தேதியோ அல்லது 10ந்தேதியோ பேங்க்கில் பணம் கட்ட வேண்டும்.
நாம் கொடுக்கும் செக் பேங்க்குக்கு 2ந்தேதியோ அல்லது 11ந்தேதியோ
கலெக்ஷனுக்கு வரும்.
ஆனால் இப்போது ஆன்லைன் வசதி வந்த பிறகு நிலைமையே தலைகீழ்.
1ந்தேதி உங்களுக்கு தவணைத்தேதி என்றால் அதற்கு முந்தின நாளே
பேங்க்குக்கு செக் அனுப்பப்பட்டு விடுகிறது.1ந்தேதி காலை 9.30
மணிக்கு உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் பண்னி பேலன்ஸ் பார்க்கும்போது
உங்கள் அக்கவுண்ட்டில் பணம் இருக்க வேண்டும்.நீங்கள் சாவகாசமாக
காலை 10 மணிக்கோ 12 மணிக்கோ பேங்க் வந்து பணம் கட்டினால்
ஏற்கனவே செக் ரிட்டர்ன் ஆகி இருக்கும்.
செக் ரிட்டர்ன் சார்ஜ் ரூ 500 வசூலிக்கப்படும்.இது நீங்கள் லோன்
வாங்கிய பேங்க்கில்,அக்கவுண்ட் வைத்த பேங்க்கில் ரூ 200 பெனால்டி
வசூலிக்கப்படும்.
இப்போது நடந்த சம்பவத்தை சொல்கிறேன்.எனது நண்பர் ஒருவர்
ஈரோடு செஞ்சுரியன் பேங்க்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி
36 செக் லீவ்ஸ்ஸை கொடுத்து மாருதி கார் லோனில் வாங்கினார்.
சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் லோன் வாங்கினார்.
மாதாமாதம் 1ந்தேதி அவருக்கு டியூ டேட்.அவருக்கு எந்த மார்க்கட்டிங்க்
எக்ஸ்சிகியூட்டிவ்வும் ஒரு நாள் முன்பாக பணம் கட்ட வேண்டும் என
சொல்ல வில்லை.செக் 1ந்தேதி காலையே ரிட்டர்ன் ஆகி விட்டது.
இவர் காலை 10 மணிக்கு பணம் கட்டி விட்டார்.ஆனா நோ யூஸ்.
சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் 1270 பேர் ஈரோடு பிராஞ்ச்சில்
மட்டும் லோன் வாங்கி இருக்கிறார்கள்.
இது போக ஐ சி ஐ சி ஐ பேங்க்,ஹெச் டி எஃப் சி பேங்க்,சுந்தரம் ஃபைனான்ஸ்,ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ்,மஹேந்திரா &மஹேந்திரா ஃபைனான்ஸ்,இந்தஸ் இந்த் பேங்க்,அசோக் லைலேண்ட் ஃபைனான்ஸ் உட்பட ஈரோட்டில் மட்டும் 17 தனியார் வங்கிகள் உள்ளன.ஒவ்வொரு வங்கியிலும் சராசரியாக 1000 அக்கவுண்ட் என கணக்கு வைத்தாலும் 17000 அக்கவுண்ட் ஆச்சு. செக் ரிட்டர்ன் சார்ஜ் மட்டும் மொத்தம் ரூ எட்டரை லட்சம் வருகிறது.
பொதுமக்கள் பணம் வீணாக பறிக்கப்படுகிறது,
நேஷனலைஸ்டு பேங்க்கில் ரூ 80ம், சில வங்கிகளில் ரூ 180ம் பிடித்தம் செய்யப்படுகிறது.ஆனால் மற்ற பிரைவேட் பேங்க்கில் ரூ 500 சார்ஜ் போடப்படுகிறது.மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.
நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்
1.நம் கணக்கில் பணம் இருந்தால் மட்டும் செக் குடுக்க வேண்டும்.அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ 1000 மட்டும் வைத்துக்கொண்டு பின் தேதி இட்ட காசோலையாக ரூ.50,000 ,ரூ.75,000 என தருவது தவறு.
2.பிரைவேட் பேங்க்கில் லோன் வாங்கும்போது மாதாமாதம் பணமாக கட்டி விடுகிறேன்.செக் தர மாட்டேன் என கறாராக கூறி விடவும்.
3. அப்போதைக்கு மார்க்கெட்டிங்க் எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் அவர்களுக்கு கிடைக்கப்போகும இன்செண்ட்டிவ்வுக்காக ஏதாவது கதை அளந்து விடுவார்கள்,நம்ப வேண்டாம்,அவர்கள் வாய் மொழியாக என்ன வாக்கு கொடுத்தாலும் அதை பேங்க் லெட்டர் பேடில மேனேஜர் சைன் பண்ணி ரிட்டர்ன் ஃபார்மில் கேட்கவும்.
4.தவணைத்தொகையை மாதாமாதம் நீங்களே பேங்க்கில் நேரடியாக போய்க்கட்டவும்.கலெக்ஷன் எக்சிகியூட்டிவ் வீட்டுக்கு வந்தார் ,கொடுத்தேன் என சொல்ல வேண்டாம்,பின்னால் என் ஓ சி (NO OBJECTION CERTIFICATE) வாங்கும்போது கலெக்ஷன் சார்ஜ் என ஒரு விசிட்டுக்கு ரூ 100 வசூலிப்பார்கள்.நியாயம் கேட்டால் எல்ல கண்டிஷனுக்கும் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணி இருக்கிறீர்கள் என்பார்கள்.
5.லோன் வாங்கும்போது செக்யூரிட்டி செக் லீவ்ஸ் என பிளாங்க்காக 4 செக் லீவ்ஸ் வாங்கி வைப்பார்கள்,நீங்கள் டியூ சரியாக கட்டத்தவறினால் அந்த் பிளாங்க் செக்கில் ரூ 2 லட்சம் ரூ 3 லட்சம் என ஃபில் பண்ணி கலெக்ஷன் போட்டு அது ரிட்டர்ன் ஆனதும் செக் ரிட்டர்ன் கேசில் சிக்க வைப்பார்கள்.
6.தவணைத்தேதி அரசாங்க விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தின நாளே பேங்க்கில் பணம் கட்டி விடவும்.
7.இத்தனை பிரச்சனை எதற்கு என நினைப்பவர்களும் ,கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்வடைக்கு ஏற்ப மானம் மரியாதை உள்ளவர்கள் லோன் வாங்கவும் வேண்டாம்,லோல் படவும் வேண்டாம்,நம்மிடம் என்ன இருக்குதோ அதற்குள் வாழ்க்கையை ஓட்டவும்.
டிஸ்கி 1- டைட்டிலில் உள்ள செக்ஸ் மோசடி என்பது CHEQUES மோசடி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது,SEX மோசடி என எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க
டிஸ்கி 2- தனியார் வங்கிகளைப்பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி பேசறியே,கம்பெனியின் ரூல்ஸ் & ரெகுலேஷன் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று மிரட்ட நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை ,நானும் ஒரு தனியார் வங்கி ஊழியனே..
டிஸ்கி 3 - என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.