Showing posts with label லைக்கா. Show all posts
Showing posts with label லைக்கா. Show all posts

Monday, October 20, 2014

கத்தி தீபாவளி க்கு ரிலீஸ் ஆவது உறுதி ;-))

வருமா... வராதா?- 'தலைவா' பாணியில் சர்ச்சையில் தொடரும் 'கத்தி'

 

'தலைவா' பட வெளியீட்டின்போது ஏற்பட்ட சிக்கல் போலவே 'கத்தி' படமும் வெளியாகுமா, ஆகாதா என்ற சர்ச்சை தொடர்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனமான 'லைக்கா' தான் 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது என்று பட ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்த உடன், தற்போது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் 'கத்தி' படத்தை வெளியிட்டால் போராட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், 'கத்தி' வெளியானால் பிரச்சினை என்றவுடன் தயாரிப்பாளர்கள் நேற்று (அக்.19) போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு சென்று பேசியிருக்கிறார்கள். அப்போது, "இப்படத்தின் கதையிலோ, தலைப்பிலோ பிரச்சினையில்லை. தயாரிப்பு நிறுவனத்தில் தான் பிரச்சினை. ஆகையால் நீங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தான் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும்" என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
அதற்கு 'கத்தி' படக்குழு தரப்பில், "பணம் கொடுத்தது லைக்கா நிறுவனம் என்றாலும், தயாரித்தது ஐங்கரன் நிறுவனம் தான்" என்று கூறவே, "இத்தகவல் எல்லாம், நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் தான் பேச வேண்டும். ஆகையால், அங்கு பேசிவிட்டு வாருங்கள்" என்று போலீஸ் தரப்பில் பேசி அனுப்பி இருக்கிறார்கள்.
இன்று (திங்கள்கிழமை) தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசிய பிறகு தான், இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
இப்பிரச்சினை குறித்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் "'கத்தி' படம் குறித்து இருதரப்பினர் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது. படம் வெளியாவது குறித்த இறுதி முடிவு இன்று மாலை 3 மணிக்கு தெரியும்" என்று கூறியிருக்கிறார்.
'தலைவா' படத்தைப் போலவே 'கத்தி'யும் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. 'தலைவா' படத்தில் TIME TO LEAD என்ற தலைப்பு வாசகம் நீக்கப்பட்டதும் படம் வெளியானது. அதே போல், 'கத்தி'யும் லைக்கா நிறுவனம் என்ற பெயர் நீக்கத்திற்கு பிறகு வெளியாகுமா என்பது இன்று மாலை தெரியும். அவ்வாறு நீக்கினால், இதுவரை அக்.22 முதல் என்று அடித்து வைத்துள்ள போஸ்டர்களின் நிலைமை..? 


'கத்தி' ட்ரெய்லரில் விஜய்
'கத்தி' ட்ரெய்லரில் விஜய்
'கத்தி' படத்துக்கான எங்களது எதிர்ப்பு தொடர்கிறது என்று மீண்டும் அறிவித்துள்ளது, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு.
'கத்தி' தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கும் வேளையில், படத்தை எதிர்த்து வரும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் இன்று (திங்கள்கிழமை) மாலை சந்திப்பு நடைபெற்றது.
அந்தச் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் வேல்முருகன் பேசும்போது, "லைக்கா நிறுவனம் என்ற பெயர் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இது தொடர்பாக பெயர் எடுக்கிறோம் என்று ஐங்கரன் நிறுவனம் ஒப்புக் கொண்டாலும், லைக்கா நிறுவனம் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால், எங்களது எதிர்ப்பு தொடரும். இது தொடர்பாக சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் இருவருமே "உங்களுடைய ஆதரவு இல்லாமல், படத்தை திரையிட மாட்டோம். எங்களுக்கு திரையரங்க பாதுகாப்பு தான் முக்கியம்" என்று கூறினார்.
அதுமட்டுமன்றி பெப்சி சிவாவும், "இனிமேல் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பணியாற்ற போவதில்லை" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வேறு எந்தொரு நிறுவனத்தின் பெயரில் வேண்டுமானால் படம் வெளியிடட்டும்" என்று கூறினார். 


இதனால், தீபாவளிக்கு 'கத்தி' படம் வெளிவருவதில் சிக்கல் வலுத்துள்ளது.
இதனிடையே, சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனிடம் தொடர்புகொண்டு பேசினேன். "தயாரிப்பு நிறுவனம் படத்தைக் கொடுத்தால் ரிலீஸ் செய்வோம். கொடுக்கவில்லை என்றால் படம் ரிலீஸாவாது" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார் அவர்.


thanx - the  hindu



கத்தி படம் சம்பந்தமாக கமிஷனரை சந்தித்த கருணாமூர்த்தி!

விஜய் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. படத்தின் ஆடியோ மற்றும் செல்பி புள்ள பாடலை வெளியிட்டவர்கள். முன்பாக படத்தை சென்சார்போர்டுக்கு அனுப்பி யு சான்றிதழை பெற்று விட்டனர்.

அதோடு, கத்தி படத்தின் டிக்கெட் புக்கிங்கையும் நேற்று முதல் ஆரம்பித்து விட்டார்கள். நேற்றைய தினம் விளம்பரங்கள் வெளியானதை அடுத்து தமிழகமெங்கிலும் கத்தி வெளியாகும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அதனால் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட சில ஏரியாக்களில் டிக்கெட் கவுண்டரை திறந்த சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம்.


இதற்கிடையே, கத்தியை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்களும் ஐங்கரன் பிலிம்சில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே சில அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் கத்தி திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு போராட்டங்களை நடத்துவோம் என்று அறிவித்திருப்பதால், அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நேற்று சென்னையில் போலீஸ் கமிஷனரை சந்தித்து கத்தி படத்துக்கு பாதுகாப்பு தருமாறு மனு கொடுத்துள்ளாராம் கருணா மூர்த்தி.


 thnx - dinamalar