1. நடிகை - என் பர்சனல் லைஃப் பற்றி யாரும் எந்த கேள்வியும் கேக்காதீங்க..
ஓக்கே மேடம்.. படத்துல திறமையைக்காட்டாம இளமையைக்காட்டறீங்களே?அது ஏன்?
----------------------------------
2. தலைவரே.. ஊழல் ஒழிப்பு பற்றி என்ன நினைக்கறீங்க?
அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் ஒழிச்சிட முடியாது..
-----------------------------
3. வாக்கு எண்ணிக்கை நடக்கறப்ப தலைவர் மகளிர் அணித்தலைவி செல்வியை கைத்தாங்கலா பிடிச்சிருக்காரே..ஏன்?
தோல்வியைத்தாங்கும் மன வலிமையும் உண்டு..செல்வியைத்தாங்கும் தேக வலிமையும் உண்டுன்னு ரைமிங்கா சொல்லிக்கத்தான்..
------------------------
4. தலைவரே..வாக்கு எண்ணிக்கை தொடங்கிடுச்சு.
ஹூம்.. இனி தோள்ல இருக்கற துண்டை எடுத்து தலைல போட்டுக்க வேண்டியதுதான்..
--------------------------------
5. தலைவர் கவிதை எழுதற நேரம் எப்போ?டில்லி போறது எப்போ?
ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனைன்னா கவிதை எழுதுவார்.. தன் குடும்பத்துக்கு பிரச்சனைன்னா டில்லி போவார்..
--------------------------
6. தலைவரே.. 87 வயசானவருக்கு சி எம் சீட் தேவையா?ன்னு ராகுல் பேசி இருக்காரே கேரளாவுல?
ச்சே ச்சே அது என்னை பாதிக்காது.. எனக்கு 94 வயசு தானே ஆகுது.
------------------------
7. கூட்டணிக்கட்சித்தலைவர்களை பேஸ் பண்ணி படம் எடுக்கறீங்களாமே..
என்ன டைட்டில்?
மோசக்கார நண்பர்கள்.
---------------------
8. நான் ஒரு வார்த்தை சொன்னா தமிழ்நாடே பற்றி எரியும்..
தலைவா.. அது என்ன வார்த்தை?
கொடும்பாவிகளை எரியுங்கள் தொண்டர்களே..
-------------------------
9. இதுவரைக்கும் யார்ட்டயும் கதை சொல்லாத நான் முதல் முறையா அந்த ஹீரோயிண்ட்ட 4 மணீ நேரம் கதை சொன்னேன்..
இப்போ 2வது தடவையா என் கிட்டே கதை சொல்றீங்க..
-------------------------
10 . சீனா, தமிழ்நாடு. என்ன வித்தியாசம்?
சீனாவுல குங்க்ஃபூ ஃபேமஸ்.. இங்கே குஷ்பூ ஃபேமஸ்